Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும் - A Film Must be Watched

எங்கேயும் எப்போதும் நடக்கும் விசயங்கள் இரண்டு, ஒன்று காதல், மற்றொன்று விபத்து.

இரண்டு விசயத்தையும் அழகாக கோர்வையாக்கி ஒரு நல்லதொரு சினிமா படைப்பினை ரசிக்கும்படி கொடுத்து விபத்து பற்றிய நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி கமர்சியலாகவும் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன்.

படத்தின் தொடக்கமே இரண்டு பேருந்துகள் பயங்கரமாக மோதி பலபேரை பலி கொள்ளும் விபத்துதான்.

அந்த விபத்துக்கு முந்தைய நான்கு மணி நேரமே படம்.

ஒரு விபத்தை பற்றிய தெளிவான பார்வையையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், அந்த விபத்தினை எதிர்கொள்ளுவோரின் மனநிலையையும், விபத்தினால் உயிர் இழப்பவர்களின் குடும்பங்களும் படும்பாட்டினையும் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.


காதலை பற்றி ஜெய், அஞ்சலி, சரவ்,அனன்யா ஜோடி மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்கள், இரண்டு ஜோடிகளில் அதிகம் கவர்வது ஜெய், அஞ்சலி ஜோடிதான், இவர்களின் காதல் காட்சிகள் அனைத்தும் செம கியூட், அஞ்சலிக்கு இந்தபடம் மற்றுமோர் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் இயக்குனர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர், கிராமத்து பெண்ணின் பார்வையில் நகரம், ஐடியில் வேலை செய்யும் இளைஞன், சென்னையை பற்றி தவறான கண்ணோட்டம் பற்றிய பார்வை, ஒரே நேரத்தில் இரண்டு பேரிடம் கடலை போடும் நாகரீக பெண், புது மனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே பயணம் செய்யும் இளைஞர், பேருந்தில் பார்க்கும் கல்லூரி மாணவியை கரக்ட் செய்ய நினைக்கும் கல்லூரி இளைஞர், ஜெய்யின் சொந்த ஊர்க்காரர், அனன்யாவின் சொந்தக்கார பெண், ஐடி பஸ்ஸில் வரும் நண்பர்கள், விளையாட்டில் ஜெயித்து ஊர்திரும்பும் பெண்கள், பஸ்ஸில் பயணம் செய்யும் சமையல்காரர், வெகுளித்தனமாக பேசும் சுட்டிப்பெண், பஸ்ஸில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள், இன்னும் இன்னும்………… எத்தனையோ கேரக்டர்கள்

எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஒவ்வொரு கேரக்டரின் மூலமும் ஒரு எதார்த்த வாழ்க்கையினையே பிரதிபலித்து இருக்கிறார் இயக்குனர் கூடவே வசனகர்த்தாவும், படம் முழுக்க ஏகப்பட்ட குறியீடுகளால் நிரம்பி வழிகிறது.


படத்தின் இசை அறிமுகம் சத்யா, பாடல்களும், பிண்ணனி இசையும் அருமை, பேருந்து அதிவேகத்தில் செல்லும் போதெல்லாம், நம் இதயமும் பதறுகிறது, ஒளிப்பதிவு இயக்குனர் வேல்ராஜ் பெரும் பாராட்டுக்குரியவர், அவரின் கேமரா கோணத்தில் அனைத்து காட்சிகளுமே அருமை அதிலும் விபத்துக்குரிய காட்சிகள் அனைத்தும் பதறவைக்கிறது.

ஏ,ஆர், முருகதாசின் முதல் படைப்பே மிகச்சிறந்ததாக அமைந்ததில் சந்தோசம், இயக்குனருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது,

எங்கேயும் எப்போதும் – கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

டிஸ்கி : படத்தில் இயக்குனர் சொல்ல வருவதே விபத்து பற்றிய எச்சரிக்கைதான், ஆனால் அதை எத்தனை பேர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என தெரியவில்லை, ஏனெனில் அதையும் மீறி ரசிகர்களை கவர்வது அஞ்சலிதான் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும், படம் முடிந்தபிறகு விபத்தை பற்றிய பரிதாப உணர்வுக்கு பதில் அஞ்சலியின் இளமையை பற்றிய விவாதமே வந்திருந்த இளைஞர்களின் பேச்சில் தெரிந்தது,
படத்திற்கு அதிகமாக வந்திருந்தவர்கள் கல்லூரி மாணவர்கள்தான் ஒருவேளை காரணம் அதுவாக கூட இருந்திருக்கலாம், மற்றபடி புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொண்டு நல்ல விசயங்கள் நாலு பேரை சென்றடைந்தால் நல்லதுதான்.

12 comments:

  1. சார், நீங்களும் நல்லா இருக்குன்னு சொல்லீட்டீங்க! ஸோ படம் கண்டிப்பா ஹிட்டுதான்! முருகதாஸ் சாருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சரவணன் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி வென்றதில் மகிழ்ச்சியே.
    இயக்குனர் சரவணனுக்கு வாழ்த்துகள்..
    சூடான விமர்சனத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நல்ல படம் தவறாமல் பார்க்கும்படியாக
    விமர்சனம் செய்துள்ளீர்கள்
    அவசியம் பார்த்துவிடுகிறேன்
    சங்கரைப்போல முருகதாஸ் அவர்களும்
    இதுபோல் தங்கள் தயாரிப்பில்
    நல்ல படங்களைக் கொடுத்தால்
    நமக்கு கொண்டாட்டமே த.ம 5

    ReplyDelete
  4. விமர்சகர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. படம் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  5. எல்லோருமே நல்ல படம் எனச் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

    பார்த்திடுவோம்.

    ReplyDelete
  6. நல்ல படம் போல .அப்ப பார்த்திடுவோம்

    ReplyDelete
  7. A Film Must be Watch

    அண்ணே இங்கிளிபீசுலாம் பேசுறாரு , ஆனா என்னன்னு தான் புரிய மாட்டேங்குது , அப்பறம்னே ஓணம் பண்டிகை நல்ல கொண்டாடுனீங்களா ,எத்தன புல்லு ஓடுச்சு

    ReplyDelete
  8. தவறாமல் பார்க்கும்படியாக
    விமர்சனம் செய்துள்ளீர்கள்...
    அவசியம் பார்த்துவிடுகிறேன்
    ...

    A Film Must be Watch
    ... Pl fix the title

    ReplyDelete
  9. nice review.....

    visit my review for this film at....

    http://feelthesmile.blogspot.com/2011/09/blog-post_17.html

    ReplyDelete
  10. அழகிய விபத்தும், மரண விபத்தும்....!!!

    ReplyDelete
  11. சார், படம் நன்றாகவே இருந்தது, ஞாயிறு மாலை தூத்துக்குடியில் நான் படம் பார்த்தேன் பெண்கள் கூட்டமும் இங்கு அதிகமாக இருந்தது. நான் ஜெய் இப்படி நடிப்பார் என்று நினைக்கவில்லை. அவ்வளவு அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், மேலும் இந்த படத்தை ஓட்டுனர்கள் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  12. அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் படமாக இது அமைந்துள்ளது..நல்ல விமர்சனம் நைட்!

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!