Wednesday, June 20, 2012

முரட்டுக்காளை - முட்டுது ஆளை !!!ரொம்ப நாளா சான்ஸ் கிடைக்காத கடுப்புல இருந்த இயக்குனர் செல்வபாரதியும், சுந்தர்.சி படம்னாலே ஜனங்க மட்டுமில்லாம தியேட்டர்ல இருக்கற சிப்சு பப்ச கொறிக்க வர ஈ. கொசு, காக்கா கூட தியேட்டர் பக்கம் ஒதுங்குறது இல்லைங்கற கடுப்புல இருக்கற சுந்தர்.சியும் ஜனங்கள பழிவாங்க கையில எடுத்திருக்கற பயங்கர ஆந்த்ராக்ஸ் ஆயுதம்தான் இந்த முரட்டுக்காளை , யப்பா இதுக்கே மூச்சுவாங்குது.

படத்தோட கதை என்னன்னா சூப்பர்ஸ்டார் நடிச்ச பழைய முரட்டுக்காளையோட ரீமேக்தான், பழைய படத்த ரீமேக் பண்றவங்கள பரலோகத்துக்கு அனுப்பனும்னு முதல்ல சட்டம் கொண்டு வரணும்க, தாங்க முடியல


காளையனா சுந்தர்.சி அப்டினா எவ்வளவு காமெடியா இருக்கும்னு நீங்களே நினைச்சுக்கோங்க, வழக்கமா சுந்தர்.சி சுப்பாரியா பாக்குதலையில வந்து கலக்குவாரு, இதுல நல்லா பிளீச்சிங் பண்ணி வடிவேலு கணக்கா ரொம்ப அழ்கா இருக்காரு, ஆனா என்ன? குஷ்பு இடுப்ப எவனோ கிள்ளிட்டான்னு கடுப்புல இருந்திருப்பாரு போல, சண்டை காட்சிகள்ள கிழியோ கிழின்னு கிழிக்கறாரு, வேற யாரு நம்மளத்தான்

தமிழ்சினிமா ரொம்பகாலாமா மறந்திருந்த பண்ணையாரு வேஷத்துல சுமன், அவருக்கு ஆல் இன் ஆல் அல்லக்கையா அரவாணி வேஷத்துல விவேக், விவேக்குகெல்லாம் எவன்யா பத்மஸ்ரீ கொடுத்தது, மொதல்ல அத புடிங்கி கிழிக்கனும் போல ஆத்திரம் வருது, தமிழ்சினிமால சமீபகாலத்துல பார்த்த ஆகச்சிறந்த மிக கேவலமான காமெடி காட்சிகல்ல நடிச்சிருக்காரு விவேக், அதுலயும் பாத்ரூமுல குளிக்கற மாதிரி ஒரு சீன் இருக்குது பாருங்க, உவ்வே


தன்னோட பேர கெடுத்தது மட்டுமில்லாம அரவாணிகள் பேரையும் சேர்த்து கெடுத்துட்டு, இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்ங்கற விவேக் எங்கே, சொம்பு நசுங்கிருச்சுன்னு சொல்ற இன்னைக்கு விவேக் எங்கே, வரலாற்றுல விவேக் காமெடியனா இல்லாம காமநெடியன் அப்படிங்கற பெயரைத்தான் சம்பாதிக்க போறாரா?

படத்துல உருப்படியான ஒரே விசயம் (உருப்படியான அப்படின்னா பிரயோஜனமான அப்படின்னு அர்த்தம் கொள்ளவும்) சினேகாக்காதான், எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு (வேற யாரு பிரசன்னா அண்ணாச்சிதான்) கடைசியா நடிச்ச படம்தானேன்னு கொஞ்சம் காட்டிட்டு போயிட்டாங்க


படம் போரடிச்சா ஜனங்க படுத்தாவது தூங்குவாங்க, தூங்கிருவீங்களாஆஆஆ??? விட்டுருவமா??? அப்படின்னு நம்ம ஸ்ரீகாந்த் தேவான்னு நினைக்கிறேன், சுந்தர்,சிய குளோசப்புல பார்த்த கடுப்போ என்னவோ பழைய ஜெய்சங்கர் படத்துல வில்லன தொறத்தும் போது ஒரு மியூசிக் போடுவாங்களே டகடகடக, குடுகுடுகுடு, டான் டான் டான் அப்படின்னு அந்த மியூசிக்கயெல்லாம் சண்டை நடக்கும் போது டிடிஎஸ்ல போட்டு இம்சை பண்றாருங்க, ஏற்கனவே சண்டைய பார்த்து கண்ணு அவிஞ்சு கிடக்கறவனுக்கு, காதயும் சேர்த்து அப்புன மாதிரி காதுல சும்மா குய்யின்னு சவுண்டு கேட்குதுங்க இன்னமும்

மொக்கை படம் கூட பார்த்திரலாம், ஆனா இது படு சூரமொக்கை, டிவில படம் என்ன டிரைலர் போட்டா கூட பார்த்துராதீங்க, பவர்ஸ்டார் படம் கூட பத்துதடவை பார்த்திரலாம், சுந்தர்.சி படம்னா சுட்டு போட்டாகூட பார்த்திராதீங்க, காது ஜவ்வு கிழிஞ்சு ரெண்டு நாளாச்சு.

கடைசியா கிறுக்குனது

22 comments:

 1. King of Mokkai pada rasigan suresh returns...

  ReplyDelete
 2. அட இம்புட்டுதானா இவிங்க ஒர்த்...?!!!

  ReplyDelete
 3. பழைய படத்தையே ஒருக்கா கூட பார்க்கலாம் போல...!

  ReplyDelete
 4. இந்தப்படத்துக்கெல்லாம் போனீங்க பாருங்க! உங்களுக்கு ரொம்பத் தில்லு பாஸ்! :-)

  ReplyDelete
 5. சூரமொக்கை படம் பார்த்து காது பஞ்சரான எங்க தல சுரேஷ்க்கு சுந்தர் சி அன்ட் குஸ்பு நஷ்டஈடாக....இதே மாதிரி இன்னோரு படம் எடுக்கவும்!டிக்கட் பிரீயா கொடுக்கவும்.......(நல்ல வேலை மக்களே படத்துக்கு என்னையும் கூப்பிட்டாரு...)

  ReplyDelete
 6. சினேகாவுக்காக பாக்கலாம்னாவது சொல்லப்படாதா?

  ReplyDelete
 7. @ ! சிவகுமார் ! said...
  King of Mokkai pada rasigan suresh returns...//

  உங்கள விடவா சிவா

  ReplyDelete
 8. @ MANO நாஞ்சில் மனோ said...
  பழைய படத்தையே ஒருக்கா கூட பார்க்கலாம் போல...!//

  ஆமாண்ணே

  ReplyDelete
 9. @ ஜீ... said...
  இந்தப்படத்துக்கெல்லாம் போனீங்க பாருங்க! உங்களுக்கு ரொம்பத் தில்லு பாஸ்! :-)//

  எல்லாம் ஒரு பொதுநலம்தான் பாஸ்

  ReplyDelete
 10. @ வீடு சுரேஸ்குமார்

  மாம்ஸ் இந்ததடவை தப்பிச்சிட்டீங்க, அடுத்த தடவை சுந்தர்.சி படத்துக்கு கூட்டிட்டு போகாம விடமாட்டேன்

  ReplyDelete
 11. @ வெளங்காதவன்™ said...
  :-)//

  :-) :-)

  ReplyDelete
 12. @ னசாட்சி™ said...
  ங்ஞே//

  ஆஹா இதுவல்லவோ கமெண்டு

  ReplyDelete
 13. @ ஹாரி பாட்டர் said...
  SUPER REVIEW ANNAA..//

  ரொம்ப நன்றி தம்பி

  ReplyDelete
 14. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சினேகாவுக்காக பாக்கலாம்னாவது சொல்லப்படாதா?//

  அண்ணே சினேகா அக்கா இந்த படத்துல நடிக்கல

  ReplyDelete
 15. இந்த படம் பாக்குற அளவு தைரியசாலியா நீங்க??

  ReplyDelete
 16. பவர்ஸ்டார் படம் கூட பத்துதடவை பார்த்திரலாம்,//

  ரொம்ப தைரியசாலி பாஸ் நீங்க...

  ReplyDelete
 17. சினேகாக்காதான், எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு (வேற யாரு பிரசன்னா அண்ணாச்சிதான்) கடைசியா நடிச்ச படம்தானேன்னு கொஞ்சம் காட்டிட்டு போயிட்டாங்க//

  என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க... மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சி போங்க....

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!