Monday, June 25, 2012

வெல்கம் டூ ஆல் இன் ஆல் அல்வா சிட்டி !! சென்னைக்கு மிக அருகில் !!!



சார் சார் எந்திரிங்க நம்ம சைட் வந்திருச்சு

ஆவ்வ்வ், வந்துருச்சா? வண்டில ஏறும் போது தசாவதாரம் படம் போட்டீங்களா முழுப்படமும் பார்த்து முடிஞ்சு அரைமணி நேரம் ஆகியும் நம்ம சைட்டு வரலீங்களா? அதான் அசந்து தூங்கிட்டேன்.

சரி சரி எந்திரிங்க, மூஞ்சிய நல்லா தொடச்சுக்குங்க, டிவில பேட்டி எடுப்பாங்க

ஏஜெண்ட் சொல்ல சொல்லவே வண்டி அந்த மண்பாதையில் ஒரு எஸ் பெண்ட் எடுத்து திரும்பியது

வாசலில் டிவிஸ்டார் தீபக் மைக்குடன் நின்று கொண்டிருந்தார்.

வெல்கம், வெல்கம், இந்த ஆல் இன் ஆல் அல்வாசிட்டிக்கு இடம் வாங்க வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன், வாங்க வாங்க, உள்ள வாங்க

ரொம்ப நன்றிங்க தீபக், நான் உங்க ரசிகன்க. டிவில வர உங்க சீரியல் ஒன்னுவிடாம பாத்துருவேன், ஆமா டிடி எப்படி இருக்காங்க, கூட வரலிங்களா?

ஹி ஹி அவங்க வேற எடத்துல இருக்காங்க, இப்ப வந்துருவாங்க சொல்லுங்க, உங்க பேர் என்ன? எங்கிருந்து வரீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

என் பேரு காத்தமுத்துங்க, சென்னையில இருந்து வரேனுங்க, பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்க,

சரி இப்ப சொல்லுங்க, இங்க ஏன் எடம் வாங்கனும்னு நினைச்சீங்க?


அதுங்களா? எம்பொண்டாட்டி கொஞ்சம் சீரியல் பைத்தியம், நீங்கதான் சும்மா இருக்காம காலையில ஏழுமணிக்கே டிவில வந்து எடம் வாங்குங்க எடம் வாங்குங்கன்னு சொன்னிங்களா? அதுவும் இல்லாம சென்னைக்கு ரொம்ப பக்கத்துலன்னு வெறும் 450 கிலோமீட்டர்தான்னு சொன்னீங்க, அதான் வாங்கலாம் வந்தேன், ஆனா பாருங்க டிவில போட்ட படம் கூட முடிஞ்சு அரைமணி நேரம் ஆகிருச்சு எடம் வரல, அதான் லைட்டா அசந்து தூங்கிட்டேன்

அட சென்னைக்கு ரொம்ப பக்கத்துலதாங்க இருக்கோம், ஐஸ்ட் 450 கிலோமீட்டர்ஸ், வாக்கபுள் டிஸ்டண்ஸ்தான், படம் ரொம்ப சின்னப்படம் போலருக்கு,

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

ஒக்கே காத்தமுத்து, உங்கள சுருக்கமா காத்துன்னு கூப்பிடறேன், இப்போ நம்ம சைட்ட சுத்திப்பாக்கலாமா?

தாராளமா?

அங்க பாத்தீங்களா காத்து கட்சிகொடிகள்?

ஆமாங்க, பொதுவா ரியல் எஸ்டேட்டுனா .நா சபை கணக்கா கலர் கலர் கொடிகளதான பறக்க விட்டுருப்பாங்க, இது என்னங்க வெறும் கட்சிக்கொடிகளா இருக்கு?

அதுதான் நம்ம சைட்டோட ஸ்பெசாலிட்டி, இங்க எல்லா கட்சிக்கும் பிராஞ்ச் ஓப்பன் பண்ணி இருக்கோம், உங்களுக்கு புடிச்ச கட்சியில நீங்க சேர்ந்துக்கலாம், எப்படி எங்க ஐடியா?

வெளங்கிரும், ஆரம்பவே அரசியலா? சரி தண்ணி வசதியெல்லாம் எப்படி?

தண்ணி வசதியா அதுக்கென்ன? நம்ம சைட்டுல மொத்தம் முப்பத்தேழு வீதி, வீதிக்கு ஒன்னா முப்பத்தேழு டாஸ்மார்க் தொறக்கனும்னு அரசாங்கத்துகிட்ட மனு போட்டுருக்கோம், சீக்கிரமே தொறந்துருவாங்க

யோவ் நான் குடிதண்ணி வசதி எப்படி இருக்குன்னு கேட்டா? நீ சாராயகடைய பத்தி சொல்லிட்டு இருக்கிற?

குடிதண்ணி வசதிங்களா? அங்க பாருங்க மேல்நிலை தொட்டி கட்டி வச்சிருக்கோம்.

உள்ள தண்ணி இருக்குங்களா?

இப்ப இல்ல, தண்ணிக்காக போர் போட்டுட்டு இருக்காங்க, இதுவரைக்கும் இரண்டு லட்சம் அடிகள் வரை தோண்டியாச்சு, இன்னும் ஒரு அம்பதாயிரம் அடி தோண்டுனா வந்துரும்னு சொல்லி இருக்காங்க

எது பூமியோட அடுத்த பக்கமா?

சார் ஒரே தமாசு, இங்க ஸ்விம்மிங் பூல் வசதி கூட இருக்கு பாக்கறீங்களா?

வேணாம் வேணாம், மத்த வசதிகள் எல்லாம் எப்படி?


எல்லா வசதிகளுமே இருக்குங்க சார், பத்தடிக்கு எப்படி ரோடு போட்டுக்கோம் பார்ந்தீங்களா?

சைட்டுனு இருந்தா ரோடு போட்டுத்தான்யா ஆகனும்

ரோட்டு சைடுல பூங்கா வச்சிருக்கோம், குழந்தைக வெளையாடறதுக்கு வசதி பண்ணி கொடுத்திருக்கோம், முக்கியமா உங்களுக்கு சேப்டி முக்கியம், அதனால பாதுகாப்பு வசதிகள் பண்ணி கொடுத்திருக்கோம்

என்ன பாதுகாப்பு வசதி?

அங்க பார்த்தீங்களா எவ்ளோ பெரிய காம்பவுண்டு செவுரு? எவ்ளோ பெரிய கேட்டுன்னு இதை தாண்டி யாராச்சும் உள்ள வரமுடியுமா?

க்கும் முன்னாடி மட்டும்தான் செவுரு கட்டி வச்சிருக்கீங்க, மீதி மூணு பக்கமும் வெறுமனே கிடக்கு?

சார் திருடன்னா செவுரு ஏறித்தான குதிப்பான், அங்கதான் செவுரு இல்லியே?

வெளங்கிரும், சரி கரண்டு வசதி இருக்கா?

சார் இங்கிருந்து ஐஸ்ட் 250 கிலோமீட்டர்ல இருக்கற மின்நகர் அப்படிங்கற சைட்டு வரைக்கும் இபி லைன் வந்திருச்சுங்க சார், அப்புறம் என்ன இன்னும் கொஞ்ச நாள்ள இங்கயும் வந்துரும் சார்

நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா ஆஃபர் எதுவும் இல்லையா? மாசத்தவணை இந்தமாதிரி எதுவும்?


சார் சூப்பர் ஆஃபர் ஒன்னு இருக்கு சார், அதுவும் இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான்

சொல்லுங்க

இன்னைக்கே ஒரு பத்தாயிரம் கட்டி முன்பதிவு பண்ணிட்டீங்கன்னா ஒரு கிராம் தங்கம் இலவசம் சார்

ஒரு கிராமே ஐயாயிரத்துக்குள்ளதான வரும்?

அங்கதான் நீங்க தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க, இன்னைக்கு பத்தாயிரம் கட்டி புக் பண்ணிட்டீங்கன்னா அந்த இடம் உங்கபேர்ல ரிஜிஸ்டர் ஆகிரும், அப்புறம் ஒருலட்சம் மட்டும் அட்வான்ஸ் கட்டுனா போதும், அப்புறம் மாதத்தவணை ஐயாயிரம்னு சாகறவரைக்கும் கட்டிடுங்க, காரியம் உங்களுக்கு ச்சீ சீ கிரயம் உங்களுக்கு ப்ஃரீ

ஞே..!

அதுமட்டுமில்லைங்க, நம்ம சைட்ட ஒட்டியே கூடிய சீக்கிரமே மின்மயானமும் வரப்போகுது? நீங்க உங்க குடும்பத்துல இருக்கறவங்கன்னு யாரு செத்துபோனாலும் ஈசியா எரிச்சுக்கலாம், அஞ்சு வருசத்துக்கு உங்களுக்கு திதி பண்ண ஐயர் ப்ஃரீ, அதுக்கப்புறம் மிகக்குறைந்த விலையில ஐஸ்ட் ஃபைவ் தொளசவுண்ட் மட்டும் ஐயருக்கு குடுத்தா போதும்

அடேங்கப்பா

இதுமட்டும் இல்லீங்க, நம்ம சைட்ட சுத்தி பஸ்ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன், போலீஸ் ஸ்டேசன், கார்ப்பரேசன் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ்மார்க்கெட்டுன்னு எல்லாமும் வரப்போகுதுன்னா பார்த்துக்கங்க

இதெல்லாம் எப்படிங்க?

அட இது என்னங்க பெரிய விசயம்? நம்ம சைட்டுல இருந்து மூணே மணிநேரத்துல துபாய், மலேசியா, சிங்கப்பூருன்னு எல்லா ஊருக்கும் போகமுடியும் தெரியுங்களா?

எப்படிங்க?

சைட்டுக்குள்ளயே ஏர்போர்டு வரப்போகுது

எல்லாம் சரிதாணுங்க, ஆனா என்னமோ ஒன்னு குறையுதுங்களே?

நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு புரிஞ்சிருச்சு, அட இதோ டிடியே வந்துட்டாங்களே? வாம்மா வாம்மா சாருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லு?

என்ன சார்? உங்களுக்கு என்ன டவுட்டு

ஹி ஹி ஹி டவுட்டே இல்லைங்க, இப்ப முழுசா புரிஞ்சிருச்சுங்கோ, இந்தாங்க புடிங்க அட்வான்ச, அடுத்த தடவை அப்படியே அந்த தென்றல் சீரியல்ல நடிக்கறவங்கள கூட்டிட்டு வாங்க, ரொம்ப நல்ல பொண்ணுங்க அது, பாவம் அத கண்கலங்காம காப்பாத்துங்க தீபக்கு


தீபக் & டிடி : இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கறவரைக்கும் நம்மள யாரும் அசச்சிக்க முடியாது, அசச்சிக்க முடியாது

டிஸ்கி :- இந்த பதிவில் வரும் சம்பவங்கள், பெயர்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே, போட்டோக்கள் மாடல்களே, யாரையும் குறிப்பிடுவன அல்ல [ நம்பவா போறீங்க? ] 

15 comments:

  1. எங்கியோ படிச்சமாதிரி ஞாபகம்!!!!

    #யோவ்... காப்பி அடிச்சா எங்க அடிச்சோம்னு ஒரு லிங்க போடுய்யா... எனக்காவது மூளை இல்ல.. யோசிக்க மாட்டேன்...

    இந்த, சுரேஷு மாதிரி பயலுவ, யோசிச்சு யோசிச்சு மூளை பிதுங்கிடாது?

    :-)

    ReplyDelete
  2. @ வெளங்காதவன்™

    வெளங்காதவன் அண்ணே நான் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லீங்கன்னே, ஏற்கனவே நிறைய பேரு இதுசம்பந்தமா எழுதி இருக்கறாங்கன்னே, அத படிச்சிட்டு நான் காப்பி அடிச்சதா நினைச்சீங்க்ன்னா நான் ஒன்னும் பண்ண முடியாதுங்கன்னே

    முடிஞ்சா கூகிள்ள தேடி அத இங்க எடுத்து போட்டு நான் காப்பி அடிச்சேன்ன்னு நீரூபிங்கன்னே, போற போக்குல வெளங்காதவன்னு காட்டிட்டு போகாதீங்கன்னே

    ReplyDelete
  3. வெளங்காதவன்™ said...
    June 25, 2012 12:16 PM
    எங்கியோ படிச்சமாதிரி ஞாபகம்!!!!

    #யோவ்... காப்பி அடிச்சா எங்க அடிச்சோம்னு ஒரு லிங்க போடுய்யா... எனக்காவது மூளை இல்ல.. யோசிக்க மாட்டேன்...

    இந்த, சுரேஷு மாதிரி பயலுவ, யோசிச்சு யோசிச்சு மூளை பிதுங்கிடாது?

    :-)
    ////////////////
    மாடு மேய்க்கற புள்ளைக்கு மூளையில்லாமையே எம்புட்டு அறிவு!இருந்திருந்தா...?

    ReplyDelete
  4. இரவு வானம் said...
    @ வெளங்காதவன்™

    வெளங்காதவன் அண்ணே நான் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லீங்கன்னே, ஏற்கனவே நிறைய பேரு இதுசம்பந்தமா எழுதி இருக்கறாங்கன்னே, அத படிச்சிட்டு நான் காப்பி அடிச்சதா நினைச்சீங்க்ன்னா நான் ஒன்னும் பண்ண முடியாதுங்கன்னே

    முடிஞ்சா கூகிள்ள தேடி அத இங்க எடுத்து போட்டு நான் காப்பி அடிச்சேன்ன்னு நீரூபிங்கன்னே, போற போக்குல வெளங்காதவன்னு காட்டிட்டு போகாதீங்கன்னே
    ///////////////////
    யோவ்! பேசிட்டே இருந்தா எப்படி சட்டைய கிழிச்சுக்கங்க....வேடிக்கை பார்க்கறேன்..!

    ReplyDelete
  5. @ வீடு சுரேஸ்குமார் said...

    ஹி ஹி யாரு சட்டைய மாம்ஸ், இன்னைக்கு உங்க சட்டையத்தான் கிழிக்கலாம்னு இருக்கோம் :-)

    ReplyDelete
  6. யோவ்! வாய்தா கொடுய்யா!

    அப்பாலிக்கா நிரூபிக்கிறேன் மை லார்ட்!

    ReplyDelete
  7. //இரவு வானம் said...

    @ வெளங்காதவன்™

    வெளங்காதவன் அண்ணே நான் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லீங்கன்னே, ஏற்கனவே நிறைய பேரு இதுசம்பந்தமா எழுதி இருக்கறாங்கன்னே, அத படிச்சிட்டு நான் காப்பி அடிச்சதா நினைச்சீங்க்ன்னா நான் ஒன்னும் பண்ண முடியாதுங்கன்னே

    முடிஞ்சா கூகிள்ள தேடி அத இங்க எடுத்து போட்டு நான் காப்பி அடிச்சேன்ன்னு நீரூபிங்கன்னே, போற போக்குல வெளங்காதவன்னு காட்டிட்டு போகாதீங்கன்னே////

    அண்ணேன் சார்! இதுக்கு வெளக்கம் கொடுத்தே என்னோட வயிரெல்லாம் பெருத்துப் போச்சு சார்!

    ஆதலால், ரெண்டு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொல்கிறேன்!!!

    புரிதலுக்கு நன்னி!

    :-)

    ReplyDelete
  8. //வீடு சுரேஸ்குமார் said...

    இரவு வானம் said...
    @ வெளங்காதவன்™


    ///////////////////
    யோவ்! பேசிட்டே இருந்தா எப்படி சட்டைய கிழிச்சுக்கங்க....வேடிக்கை பார்க்கறேன்..!///

    அண்ணேன்! ஜார்!!!
    வேணும்னா, சட்டை, வேட்டி, உள்ள போட்டிருக்க டவுசரு வரைக்கும் கொரியர் அனுப்பி வைக்கிறேன்!!!

    நீங்களே தேவையான அளவு கிழித்துக்கொள்ளவும்!

    ReplyDelete
  9. @ வெளங்காதவன்™ said...
    யோவ்! வாய்தா கொடுய்யா!

    அப்பாலிக்கா நிரூபிக்கிறேன் மை லார்ட்!//

    உனக்கில்லாத வாய்தாவா எத்தனை வாய்தா வேணாலும் எடுத்துக்கய்யா

    ReplyDelete
  10. @ வெளங்காதவன்™ said...
    //அண்ணேன் சார்! இதுக்கு வெளக்கம் கொடுத்தே என்னோட வயிரெல்லாம் பெருத்துப் போச்சு சார்!

    ஆதலால், ரெண்டு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொல்கிறேன்!!!

    புரிதலுக்கு நன்னி!//

    ரெண்டு நாள் மட்டும்தான்யா மூணாவது நாள் கண்டிப்பா ஆஜராகனும்

    :-)

    ReplyDelete
  11. @ வெளங்காதவன்™ said...
    அண்ணேன்! ஜார்!!!
    வேணும்னா, சட்டை, வேட்டி, உள்ள போட்டிருக்க டவுசரு வரைக்கும் கொரியர் அனுப்பி வைக்கிறேன்!!!

    நீங்களே தேவையான அளவு கிழித்துக்கொள்ளவும்!//

    மாம்சு கிழிகிழின்னு கிழிப்பாரு எதுக்கும் ரெண்டு செட்டா அனுப்புங்க தல

    ReplyDelete
  12. பதிவுலயும் சரி, கமெண்ட்டுலயும் சரி.. கலக்குறிங்க பாஸ்...

    ReplyDelete
  13. வாய்தா குடுக்குறது, வாங்குறது எல்லாம் சரிதான், கடைசியா நீதிபதிய மாத்தனும்னு சொல்லப்படாது!!!

    ReplyDelete
  14. @ Robert said...
    வாய்தா குடுக்குறது, வாங்குறது எல்லாம் சரிதான், கடைசியா நீதிபதிய மாத்தனும்னு சொல்லப்படாது!!!///

    ரொம்ப நன்றிங்க ராபர்ட்டு கண்டிப்பா நீதிபதிய மாத்த மாட்டோம், கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல, நம்மகூட விளாடறதே வேலையா போச்சு

    ReplyDelete
  15. நிறைய ரியல் எஸ்டேட்டை சுற்றிப் பார்த்த அனுபவம் போல!!!

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!