Friday, May 20, 2011

கமர்சியல் பக்கங்கள் - 20/05/2011



அப்பாடா எதிர்பார்த்த மாதிரியே ஒருவழியா கனிமொழியையும் கைது பண்ணிட்டாங்க, காங்கிரஸ் முன்னாடி இருந்தே திமுகவ காப்பாத்தனும்னு நினைச்சு டிரை பண்ண மாதிரி தெரியல, அவங்க முன்ன இருந்தே ஸ்பெக்ட்ரத்த திமுக மேல ஒரு ஆயுதமாதான் பிரயோகப்படுத்தி வந்திருக்காங்க, இது கலைஞருக்கும் தெரியும், ஆனா இப்ப கேட்டாலும் காங்கிரசோட கூட்டணி உறவு பலமாத்தான் இருக்கும்னு சொல்லுவாரு, வேற வழி? உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும், அது போல தப்பு செஞ்சவனும் தண்டனை அடைஞ்சே தீரணும், தான் செஞ்ச தப்ப உணர்ந்தாத்தான் அத திருத்திகிட்டு சரியாக முடியும், கலைஞர் குடும்பம் அத உணர்ந்ததாகவே தெரியல, பட்டுத்தான் திருந்தனும் போல இருக்கு, மொத்தத்துல ஊழலால ஆட்சியும் போச்சு, பெத்த புள்ளயும் போச்சு, காங்கிரசை நம்பினோர் கை விடப்படுவார், 

சீக்கிரமே தப்பு பண்ணினவங்க எல்லாத்தையும் பொடனில நாலு அடி விட்டு கட்சிய விட்டு தொறத்திட்டு, கட்சிய ஸ்டாலின் கைல கொடுத்து டெவலப் பண்ண வழி பாருங்க பாஸ், புள்ள கைதானா மட்டும் டெல்லி போனா பத்தாது, மக்கள் பிரச்ச்னைகளுக்கும் போகனும் 


அம்மா ஆட்சிக்கு வந்த நாலாவது நாளே திருப்பூர் சாயப்பிரச்சனையை கையில எடுத்திருக்காங்க, அதுக்கே அவங்களுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ், சீக்கிரமே நல்ல முடிவு கிடைக்கனும், எங்கிருந்து எல்லாமோ பஞ்சம் பிழைக்க இங்கதான் வருவாங்க, இப்ப இங்க இருக்குறவங்களே வெளில பஞ்சம் பிழைக்க போக வேண்டிய நிலைமைக்கு ஆளாயிருச்சு, இந்த ஆறேழு மாசாமா நான் பார்த்த திருப்பூர், திருப்பூரா அது, சுனாமில பாதிச்ச மாதிரி, எப்பவும் பரபரப்பா இருக்குற ஊர், இப்ப ரொம்ப அமைதியா இருக்கு, இது மறுபடியும் பழைய நிலைமைக்கு மாறனும், மாறும்.

திருப்பூர்ல இருக்குற முண்ணனி பனியன் நிறுவனங்கள் எல்லாத்தையும் ஒரு கும்பல் விலைக்கு கேட்டுச்சுன்னும், அதற்கு அவங்க ஒத்துக்க மறுத்துட்டதால சாயபிரச்சனையை தீர்க்க முந்தைய அரசாங்கம் முன்வரலைன்னும் ஒரு வதந்தி இங்க உலாவுது, உண்மையான்னு தெரியல


தலைவருக்கு உடல்நலம் சரியில்லாம போனது வருத்தமான விசயம்தான், ஆனா அதையே காரணமா வெச்சு சில பேரு அப்படி இப்படின்னு பல வதந்திகள கிளப்பி விட்டுட்டு இருக்காங்க, சில பேருக்கு சிலரை புடிக்காட்டி, அவங்க நின்னா குத்தம், நடந்தா குத்தம்ன்னு குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க, அதுக்காக இப்பவும் ரஜினிய பிடிக்கலைங்கற ஒருகாரணத்துக்காக, ஒரு மனுசன் உடல்நிலை சரியில்லாம இருக்குற இந்த நேரத்துலயுமா இப்படி பண்ணுவானுங்க? ஒரு சில ரஜினி ரசிகர்கள் தலைவர் மேல உள்ள அபிமானத்துல கோவிலுக்கு வேண்டிக்கறதும், பூசை செய்யறதும் அவங்க அவங்க சொந்த அபிமானத்துல பண்றது, என்னமோ ரஜினியே ஆஸ்பிடல்ல இருந்து அதை செய், இதை செய்யுன்னு ஆர்டர் போட்ட மாதிரி என்னமா பில்டப்பு கொடுக்கறாங்க, ஒரு அளவுக்கு மேல யாரோட சுதந்திரத்திலயும் தலையிட முடியாது அத புரிஞ்சுக்குறவங்க புரிஞ்சுக்கலாம், மத்தவங்கள பத்தி நோ கமெண்ட்ஸ்

சாய்பாபா மாதிரி ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கறதாலதான் இவ்வளவு குழப்பமே வருது, அதனால சீக்கிரமே தலைவர கண்ணுல காட்டிடுங்க சாமிகளா, தலைவர் சீக்கிரமே குணமடைய ஒரு ரஜினி ரசிகனாக என்னுடைய பிரார்த்தனைகள்


பிறந்தநாள் என்றால் என்ன?

நீ அழுவதை
பார்த்து
உன் அம்மா
சிரித்த
ஒரே ஒருநாள்..!


நகைச்சுவை

அம்மா : திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
பையன் : தெரியாது
அம்மா : படிப்புல ஒழுங்கா கவனம் செலுத்து
பையன் : பூஜா ஆண்ட்டி யாருன்னு உனக்கு தெரியுமா?
அம்மா : தெரியாது
பையன் : உன் புருசன் மேல நீ ஒழுங்கா கவனம் செலுத்து

( SMS ல் வந்தவை )


திடீர்னு ஒரு மெசேஜ் எனக்கு வந்தது, கூட வேலை பார்க்கும் நண்பர் அனுப்பி இருந்தார், திறந்து பார்த்தால், தேவி உன் நம்பர் கேட்குறா கொடுக்கவா?ன்னு அனுப்பி இருந்தார், யாருடா இந்த தேவி? நமக்கு யாரையும் இப்படி தெரியாதேன்னு யோசிச்சேன், சரி அவருக்கே போன் பண்ணி கேட்கலாம்னா என்கேஜ்டாவே இருந்தது, நானும் ரொம்ப நேரம் டிரை பண்ணி பார்த்தேன், லைன் கிடைக்கவே இல்லை, சுத்தியும் பார்த்தா கூட வேலை பார்க்குற எல்லா நண்பர்களுமே பரபரப்பா இருந்தாங்க, என்னடான்னு கேட்டா, எனக்கு அனுப்புன அதே மெசேஜை எல்லாருக்கும் அனுப்பி இருக்காரு, அன்னைக்கு அவரு லீவு வேற

சரி யாரு அந்த தேவி, அவரு வரட்டும் கேட்கலாம்னு எல்லாரும் காத்திருந்தோம், அடுத்த நாள் அவரு வந்தவுடனே எல்லாரும் அவர புடிச்சு ஏன் இப்படி மெசேஜ் அனுப்புனீங்க, யாரு அந்த தேவின்னு கேட்டோம், அதுக்கு அவரு என்ன சொன்னாருன்னு தெரியுங்களா?

எல்லாரும் யோசிச்சுகிட்டு இருங்க, பதில கடைசியா கீழ கமெண்டுல சொல்றேன் :-)



இது நாடோடிகள் படத்துல வர குத்துபாட்டு, என்னமோ தெரியல இந்த குத்துபாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், எப்ப டிவியில போட்டாலும் சலிக்காம பார்க்க தோணுது, அதிலயும் கடைசியா சசிகுமார் போடற ஸ்டெப் இருக்கே,  ரஜினி படம் ஓப்பனிங்ல ரஜினிய காமிக்கும் போது ஏற்படற இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு இருக்கே, அதே மாதிரி சேம் பீலிங், செம குத்துபாட்டு, நீங்களும் கேட்டு பாருங்க, புடிச்சாலும் புடிக்கும்.

அன்புடன்

இரவுவானம்

34 comments:

  1. கவிதை சிலிர்த்துவிட்டேன்.

    எனக்கும் இந்த பாட்டு ரொம்பவே பிடிக்கும். சசிகுமார் இடையில் வரும் அந்த நடனத்திற்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்தாராம்.

    முதல் அமைச்சர் பல நல்ல விசயங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக வரிசையாக நண்பர்கள் இன்ப அதிர்ச்சியை தந்தபடியே இருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் முழுமையாக சில விசயங்கள் முடிவுக்கு வந்து விடும் என்று நினைக்கின்றேன்.

    நீங்கள் சொன்ன கும்பல் இப்ப என்ன செய்வார்கள்?

    ReplyDelete
  2. ///புள்ள கைதானா மட்டும் டெல்லி போனா பத்தாது, மக்கள் பிரச்ச்னைகளுக்கும் போகனும்/// உண்மை தான் பாஸ். இதால் தாள் எல்லாம் இழந்து நிற்கிறார்

    ReplyDelete
  3. கவிதை அருமை.. வாழ்த்துக்கள்.அனைத்தும் ருசித்தது.

    ReplyDelete
  4. ////பிறந்தநாள் என்றால் என்ன?

    நீ அழுவதை
    பார்த்து
    உன் அம்மா
    சிரித்த
    ஒரே ஒருநாள்..!// அருமை அருமை

    ReplyDelete
  5. யோவ் எல்லாம் இருக்கட்டும், அந்த தேவி யாருன்னு சொல்லும்ய்யா...?

    ReplyDelete
  6. ok ok கமர்சியல் அப்படின்னு ஒரு கலக்கல் ( டாஸ்மார்க் ஹா பாஸ் )

    ReplyDelete
  7. அம்மா
    கவிதை அருமை.

    ReplyDelete
  8. நாடோடிகள் படத்தில் அந்த பாட்டும் நடனமும் சூப்பர்!

    ReplyDelete
  9. //நீ அழுவதை
    பார்த்து
    உன் அம்மா
    சிரித்த
    ஒரே ஒருநாள்..!//
    அருமை. அழகு கவிதை. ஓரிரு வரிகளில் ஓராயிரம் விஷயம்.

    ReplyDelete
  10. @ ஜோதிஜி

    நன்றி சார், நல்லது நடந்தா சரிதான்

    ReplyDelete
  11. @ கந்தசாமி

    நன்றி கந்தசாமி சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  12. @ மதுரை சரவணன்

    ரொம்ப நன்றிங்க சரவணன், உங்களுக்கு மணிவண்ணன தெரியுமா?

    ReplyDelete
  13. @ MANO நாஞ்சில் மனோ

    ஹி ஹி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், கண்டிப்பா சொல்றேன்

    ReplyDelete
  14. @ bala

    நன்றிங்க பாலா சார்

    ReplyDelete
  15. @ தமிழ் உதயம்

    நன்றிங்க தமிழ் உதயம்

    ReplyDelete
  16. @ செங்கோவி

    நன்றிங்க செங்கோவி

    ReplyDelete
  17. @ FOOD

    ரொம்ப நன்றிங்க சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  18. பதிவு எனக்கு புடுச்சுருக்குங்க அதுனாலாதாங்க ஓட்டு போட்டேன்

    ReplyDelete
  19. தேவி யாருங்க ?

    ReplyDelete
  20. நீ அழுவதை
    பார்த்து
    உன் அம்மா
    சிரித்த
    ஒரே ஒருநாள்..!// கலக்கறீங்க...சூப்பர்..

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  21. கமர்ஷியல் பக்கங்கள் மிக அருமை. தலைவர் விரைவிலேயே மீண்டு வருவார்.

    ReplyDelete
  22. எல்லாரும் யோசிச்சுகிட்டு இருங்க, பதில கடைசியா கீழ கமெண்டுல சொல்றேன் :-///

    innum padhil varala ...:))

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. எத்தனை தடவைதான் தேவி யாரின்னு பாக்க வாறது :-) ஆர்வ கோளாறை நிவர்த்தி பண்னலாமெல்ல!!!!!!!!!

    ReplyDelete
  25. //நண்பர்களே தங்களின் வருகைக்கு நன்றி, இந்த பதிவினை பற்றிய நிறையோ, குறையோ எதுவாகினும் தங்களது கருத்தை பதியவும்//

    குறைகள் ஜாஸ்தி

    //நண்பர்களின் கருத்துக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு,தவறாக இருந்தால் என்னை மாற்றி கொள்ளும் வாய்ப்பாக அது அமையும் என நம்புகிறேன்//

    நீங்க யாருன்னு போட்டோ கூட தரல. நீங்க உங்கள மாற்றிக்கொள்வது எப்படின்னு எங்களுக்கு எப்படி தெரியும்.

    //அதுபோல இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வாக்களிக்க வேண்டுகிறேன், நண்பன் என்பதற்காக வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன், நன்றி..!//

    அதெல்லாம் முடியாது. ஒரு வரி கூட படிக்காமதான் ஓட்டு போடுவேன். என்ன செய்வீங்க?

    ReplyDelete
  26. //நா.மணிவண்ணன் said...
    தேவி யாருங்க ?//

    மணி...கூலிங் கிளாசை கழட்டிட்டு பாருங்க. உங்க டீச்சரா இருக்கு போவுது.

    ReplyDelete
  27. @ நா.மணிவண்ணன்

    நன்றி மணி

    ReplyDelete
  28. @ குணசேகரன்..

    நன்றி குணசேகரன்

    ReplyDelete
  29. @ பாலா

    நன்றிங்க பாலா

    ReplyDelete
  30. @ karthikkumar

    நில்லுய்யா சொல்றேன் :-)

    ReplyDelete
  31. @ விக்கி உலகம்

    எதுக்குங்க வாழ்த்து???

    ReplyDelete
  32. @ எப்பூடி.

    கண்டிப்பா சொல்றேன் தல, உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல போறேன் :-)

    ReplyDelete
  33. @ ! சிவகுமார் !

    மொட்டையா சொன்னா எப்படிங்க, என்ன குறைகள்னு சொல்லுங்க, யோவ் பதிவ பத்தி கருத்து சொல்ல சொன்னா என்னை பத்தி ஏய்யா நோண்டி நோண்டி கேட்குறீங்க

    ReplyDelete
  34. @ To All

    அந்த தேவி யாருன்னு அவருகிட்ட கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுங்களா?

    அடப்பாவிகளா நானும் உங்ககூடத்தான மூணு வருசமா வேலை பார்க்குறேன், ஒருநாளாவது ஒரு போனோ மெசேஜோ பண்ணி இருப்பீங்களாடா, தேவின்னு ஒரு பொண்ணு பேர் போட்டு நம்பர் குடுக்கட்டுமான்னு மெசேஜ் அனுப்புனதுக்கு எத்தனை போன் கால்சு, மெசேஜு, நீங்கல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடான்னு சாபம் விட்டுட்டாரு, உண்மையில தேவிங்கறது அவரோட சொந்தகாரங்க, அவங்க நம்பர இன்னொரு சொந்தக்காரங்களுக்கு குடுக்குறதுக்காக மெசேஜ் பண்ணி இருக்காரு, அது தவறுதலா கம்பெனி நண்பர்கள் பேர் இருக்குற குரூப்புக்கு தெரியாம அனுப்பி வச்சுட்டாரு,அதுதான் இத்தனை அக்கப்போருக்கும் காரணம், இதுதாங்க தேவி நடந்தது என்ன? கதை :-)

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!