ஒரு காலத்துல ஊழல்னா ஆயிரக்கணக்கா இருந்தது, அப்புறம் லட்சக்கணக்கா ஆனது, அப்புறம் கோடிக்கணக்கா ஆனது, இப்ப லட்சக்கணக்கான கோடிகளா ஆகிருச்சு, வருங்காலத்துல கோடிக்கணக்கான கோடிகளை ஊழல் பண்ணுவானுங்க, இதை தடுங்கன்னு சொல்லி உண்ணாவிரதம் இருந்தா போலீஸ்ஸ வச்சு அடிச்சு விரட்டுறாங்க, என்ன கொடுமை சார் இது, அவரு பகல்ல உண்ணாவிரதம் இருந்தா போலீசு ராத்திரி சொல்லாம கொள்ளாம போய் அடிச்சு விரட்டுறாங்க, என்னா வில்லத்தனம்
என்னமோ அன்னா ஹசாரேவும், ராம்தேவும் அவங்க சொந்த பிரச்சனைக்கு உண்ணாவிரதம் இருந்த மாதிரி, எதை எதையோ சொல்லி அவங்க பேரையும், நோக்கத்தையும் கெடுக்க நினைக்கறாங்களே தவிர ஊழல மட்டும் விட்டு கொடுக்க மாட்டானுங்க போல, இந்த அஞ்சு வருசம் முடியும் போது அதிக ஊழல் பண்ணுன அரசாங்கம்னு கின்னஸ் சாதனை பண்ணப் போறாங்க, இன்னும் எத்தனை காலத்துக்குதான் மதசார்பின்மை மதசார்பின்மைன்னு காங்கிரசுக்கே ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க போறாங்களோ தெரியல
இந்த ரெண்டு மூணு மாசமா இதே பிரச்சனையைதான் ஓடிட்டு இருக்கு, இந்தியாவுக்கே தெரியும் இதுக்கு என்ன தீர்வுன்னு ஆனா இவங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனைக்கே முடிவு கிடைக்கல, இதுல மக்கள் பிரச்சனைகள எங்க பார்க்க போறாங்க
கோயம்புத்தூர்ல ஒரு எட்டு வயசு மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவங்க அப்பாவும் அம்மாவும் விட்டுட்டு போயிட்டாங்க, இப்ப அந்த சிறுமியை 72 வயசு பாட்டிதான் பார்த்துகிட்டு இருக்காங்க, அவங்க காலத்துக்கு பிறகு அந்த சிறுமியை பார்த்துக்க ஆளில்லை, பொதுவா புத்தி சுவாதீனம் இல்லாத குழந்தைகள் அதிகமா சாப்பிடுவாங்களாம், ஆனா இந்த பாட்டிக்கு எந்த வருமானம் இல்லாததால சாப்பாட்டுக்கே கஷ்ட ஜீவனம் நடத்திட்டு இருக்காங்க, ஏதோ பக்கத்து வீட்டுல இருக்கறவங்க கொடுக்கற உதவியினாலதான் உயிர் வாழ்ந்திட்டு இருக்காங்க, அதனால இவங்களுக்கு உதவ நினைக்கறவங்க உதவலாம், இந்த மாதிரி உள்ள குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போக பெத்தவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ, இந்த நியூஸ் தினமலர்ல படிச்சது, மேல் விபரங்களுக்கு இந்த லிங்க்ல போய் பாருங்க
சென்னையிலிருந்து திருப்பூருக்கு வந்துட்டு இருந்த KPN ஆம்னி பஸ் காவேரிப்பாக்கத்துல விபத்துக்கு உள்ளாகி அதுல பயணம் செஞ்சவங்க எல்லாரும் தீயில உடல் கருகி செத்துட்டாங்க, ஒருத்தர் மட்டும் உயிர் பிழைச்சு இருக்காரு, இறந்தவங்க அனைவரது ஆத்மா சாந்தியடையவும், உயிர் தப்பியர் அதிர்ச்சியில் இருந்து மீளவும் பிரார்த்தனை செய்து கொள்வோம், இதுல பொள்ளாச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்துகாரங்க 5 பேரும் பலியாகிட்டாங்க
பொதுவா ஆம்னி பஸ்காரங்க அதிவேகத்துல வண்டி ஓட்டுவாங்க, வேகத்துல போகும் போது கண்டிப்பா கண்ட்ரோல் பண்ண முடியாது, அதிவேகம் ஆபத்தாதான் முடியும்னு மறுபடியும் நிரூபணமாகி இருக்கு, அரசாங்கம் இந்த ஆம்னி பஸ்காரங்களையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்
பிரண்டு ஒருத்தர் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தாரு, கீழ இருக்குற ஜோக்க படிச்சு பாரு சிரிச்சு சிரிச்சு உனக்கு வயிறு வலிக்கும்னு, நானும் கீழ கீழ போய் பார்க்குறேன் ஒன்னுமே இல்லை, அப்புறம் காண்டாகி அவருக்கு போன போட்டு என்னடா இந்த ஜோக்க படிச்சா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும்னு சொன்னே ஜோக்கயே காணலியேன்னு கேட்டேன், அதுக்கு அவன் சொன்னான் உனக்கு வயிறு வலிக்க வேண்டாம்னுதான் அனுப்பலைன்னு, எல்லாம் என் நேரம்…
அதுக்காக ஜோக் சொல்லாம இருக்க முடியுமா? அதனால SMS ஜோக்
ஒரு நண்பன் இன்னொரு நண்பனிடம்
நண்பன் 1 : மச்சி நீயும் நானும் சேர்ந்து அமெரிக்காவ சுத்தி பார்க்குற மாதிரி கனவு கண்டேண்டா
நண்பன் 2 : அப்படியா மாப்ள? சரி எங்கெல்லாம் போனோம்?
நண்பன் 1 : ங்கொய்யால நீயும்தான கூட வந்த அப்புறம் எதுக்குடா என்கிட்ட கேட்குற?
ஒரு பேட்டியில்
அம்பானி : நானும் வாழ்க்கையில ஒருதடவையாவது கஷ்டப்படுறவனா வாழனும்னு ஆசைபடுறேன்
நிருபர் : அப்படின்னா விஜய்ய வச்சு ஒரு படம் எடுங்க சார்
அம்பானி : யோவ் நான் கஷ்டப்படுறவனாத்தான் வாழனும்னு நினைக்கிறேன்னு சொன்னேன், நீ என்னை பிச்சக்காரனா வாழ வெச்சிருவ போலிருக்கு
இது SMS ஜோக், விஜய் ரசிகர்கள் டென்சனாக வேண்டாம்
டிவில ரெஸ்லிங்க் பார்த்திருக்கீங்களா? ஒருதடவை பார்த்தீங்கன்னா போதும் அப்புறம் உங்களயும் அந்த ஆர்வம் தொத்திக்கும், அதுல ஜான் சீனாதான் சேம்பியன், அவரோட சண்டைக்குக்கும் ஸ்டைலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு, இந்த வீடியோல பாருங்க ரெண்டு பசங்க அச்சுஅசலா ஜான் சீனா மாதிரியே சண்டை போடுறானுங்க, பார்க்க ஆச்சரியமா இருக்குற அதே வேளையில் எந்த அளவு ரெஸ்லிங் சண்டை சிறுவர்களை பாதிச்சு இருக்குன்னு பாருங்க, இதே ரேஞ்சுல போனாங்கன்னா ஸ்கூல்ல ஒரு பையன விட மாட்டானுங்க, எல்லாரோட மண்டையையும் உடச்சிருவானுங்க,
இதனால பசங்களுக்கு சண்டை போடுற ஆர்வமும் அதிகமாகலாம், உங்க வீட்டுல சில்வண்டு பசங்க ரெஸ்லிங் ஆர்வமா பார்த்தாங்கன்னா, முடிஞ்சளவு தடுக்கவும் தவிர்க்கவும் பாருங்க.
அன்புடன்
இரவுவானம்
அன்புடன்
இரவுவானம்
கமர்சியல் பக்கங்கள்...
ReplyDeleteஊழல் மற்றும் லஞ்ச லாண்யத்தை உடனே யாராலும் நிறுத்திவிட முடியது...
ReplyDeleteஒரு கிராம நிர்வாக அதிகாரி 100 ஆரம்பிக்கிறார்...
ஒரு அமைச்சர் அதை கோடியில் முடிக்கிறார்....
இதில் திருத்தம் எங்கிருந்து தொடங்க வேண்டும்..
கீழிருந்தா மேலிருந்தா..?
இது போன்று மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டில் நிறைய உள்ளது இதற்கு அரசு நல்ல திட்டம் தீட்டி அதை செயல்படுத்த வேண்டும்...
ReplyDeleteபஸ் விபத்தை செய்தியில் பார்க்கும் பேர்த மனம் பதைக்கிறது..
ReplyDeleteபொருமை இருந்தால் மட்டுமே விபத்துகள் குறையும்...
மற்றும் நகைச்சுவை, வீடியோ என அத்தனையும் அருமை...
ReplyDeleteகேபிஎன்னுக்கு இன்ஸ்சூரன்ஸ் செத்தவங்களுக்கு?
ReplyDeleteபல முக்கிய செய்திகளை தாங்கிய பதிவு.. கலக்கல்..
ReplyDeleteஅந்த ஜோக் அருமை சகோ..
பல முக்கிய செய்திகளை தாங்கிய பதிவு.. கலக்கல்..
ReplyDeleteஅந்த ஜோக் அருமை சகோ..
பல முக்கிய செய்திகளை தாங்கிய பதிவு.. கலக்கல்..
ReplyDeleteஅந்த ஜோக் அருமை சகோ..
பல முக்கிய செய்திகளை தாங்கிய பதிவு.. கலக்கல்..
ReplyDeleteஅந்த ஜோக் அருமை சகோ..
ஊழல் :@
ReplyDeleteமனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை =((
பஸ் விபத்து :@ & =((
SMS Jokes =))
:@ means angry
ReplyDeleteதரமான பல்சுவைப் பதிவிற்கு நன்றி!
ReplyDeleteசரவண பவனில் மசாலா தோசை விலை அதிகமாக இருந்தாலும், சட்னி நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteதொகுத்த விஷயங்களுக்கு நன்றி மாப்ள! 7th vote me!
ReplyDelete@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteமிகவும் நன்றி செளந்தர் சார் உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு...
@ JOTHIG ஜோதிஜி
ReplyDeleteசெத்தவங்களுக்கு ஒரு லட்ச ரூபா பணம் சார் :-(
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி கருன் சார்...
@ அனாமிகா துவாரகன்
ReplyDeleteவித்தியாசமான பின்னூட்டம் ரொம்பவே நல்லா இருந்ததுங்க மேடம், நன்றி...
@ செங்கோவி
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி நண்பா
@ ! சிவகுமார் !
ReplyDeleteஹி ஹி மெட்ராஸ்பவன் ஹோட்டல் வெச்சிருக்கீங்கங்கறத நிரூபிச்சிட்டீங்க சிவா...
@ விக்கி உலகம்
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி மாம்ஸ்...
நல்ல செய்திகளை உள்ளடக்கிய பதிவு ,...
ReplyDelete@ அரசன்
ReplyDeleteரொம்ப நன்றிங்க அரசன்
அந்த ரெஸ்ட்லிங் வீடியோ சூப்பர்
ReplyDeleteநீங்கள் சரியான முறையிலே பதிவு எழுதுகிறீர்கள் ,அதனாலே உங்களுக்கு ஓட்டு குத்துகிறேன்