எனது நெருங்கிய நண்பன் ஒருவன் தீவிரமான TMK காரன், TMK என்றால் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, டாஸ்மாக் முன்னேற்ற கழகத்திற்கு சொந்தக்காரன், டெய்லியும் சரக்கு அடிக்காவிட்டால் தூக்கம் வராது அவனுக்கு, அவனுடைய வண்டியை சமீபத்தில் விற்றுவிட்டதால் என்னுடைய வண்டியில்தான் தினமும் டாஸ்மாக் கடைக்கு போய் வருவான்
அனைவரிடம் இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கடைக்காரர், இவனிடம் மட்டும் சரியான விலையை மட்டுமே வாங்குவார், சில சமயம் அஞ்சு பத்து கம்மியா இருந்தாலும் சரக்கு கொடுத்து விடுவார், டாஸ்மார்க் கடையிலேயே அக்கவுண்ட் வைத்த பெருமை என்னுடைய நண்பனுக்கே சாரும்
இதனால் சரியாக கட்டிங்குக்கு மட்டும் காசு வைத்து காத்திருக்கும் அன்பர்கள் இவனை கண்டால் சூழ்ந்து கொண்டு பாஸ் சரக்கு வாங்கிக்கொடுங்க என்று அன்பு தொல்லை கொடுப்பார்கள், இன்னும் சிலபேர் 30 ரூபாய் மட்டும் வைத்துகொண்டு சார் கட்டிங் கட்டிங் என்று கூவிக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கும் இவனே துணை, அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பனின் பெருமையை, எப்படியும் தினமும் 70 ரூபாய் தேத்தி விடுவான், அதற்கு மேல் அஞ்சு பைசா வைத்து நான் பார்த்ததில்லை
தினமும் மாலை 7 மணி ஆனால் போதும் எங்கிருந்தாலும் போன் வந்துவிடும், எப்படா வருவ? எப்படா வருவ? என்று, அவனின் தொந்தரவு தாங்காமலே எவ்வளவு வேலை இருந்தாலும் சீக்கிரம் கிளம்பி போய்விடும் நிலைக்கு ஆளாகிவிட்டேன், வழக்கம் போலவே போனவாரம் ஒருநாள் போன் செய்தான், மிகுந்த பரபரப்போடு பேசினான்
டேய் சீக்கிரம் கிளம்பி வாடா, அம்மா ஆட்சியில அம்மாவுக்கு புடிச்ச பச்சை கலர்ல பீர் வந்திருக்காம், இன்னைக்கு அடிச்சு பார்த்தே ஆகணும், சீக்கிரம் கிளம்பி வாடா என்று கூப்பிட்டான், நானும் வழக்கம் போலவே கிளம்பி சென்று அவனை கூட்டிக் கொண்டு வழக்கமான கடையில் புகுந்தோம்
இவனை பார்த்ததுமே கடைக்காரர் குவாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்து வைத்தார், அண்ணே இது வேணாம்னே, ஏதோ பச்சை கலர்ல பீர் வந்துருக்காமுல்ல அதை கொடுங்க என்றான், கடைக்காரர் தம்பி அது 110 ரூபாப்பா என்றார்
அவன் சற்றும் யோசிக்காமல் என்னுடைய பாக்கெட்டில் இருந்த அம்பது ரூபாயை எடுத்து கொண்டான், டேய் காச கொடுத்துருடா, வேற காசில்ல, நாளைக்கு பெட்ரோல் அடிக்கவே அதான் இருக்கு, கடைசி அம்பது ரூபாடா கொடுத்துருடான்னு கெஞ்சினேன், கதறினேன், பயபுள்ள கேட்கவே இல்ல, உனக்கு காலையில கொடுக்கறேண்டான்னு சொன்னான், பல காலைகள் கடந்துவிட்டன, இன்னைக்கு வரைக்கும் கொடுக்கவே இல்லை, இதனால் அடுத்தநாள் காலையில் பஸ்சுக்கு நான் அல்லு பொறுக்கியது தனிக்கதை
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அங்குதான் கதையின் நீதியே உள்ளது, அன்று நான் அணிந்திருந்தது புதிதாக ஒருவருடத்திற்கு முன்பு வாங்கிய புத்தம்புது(?) ரெடிமேட் சட்டை, ரெடிமேட் சட்டையில் வெளியில் நாற்பது பாக்கெட்டுகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் உள்ளே உள்பாக்கெட் ஒன்று கூட வைத்திருக்க மாட்டார்கள்
முன்பெல்லாம் துணி எடுத்து தைக்கக் கொடுப்போம், அப்படி கொடுக்கும் போது கடைக்காரர் உள்பாக்கெட் ஒன்று வைத்துக் கொடுப்பார், அதில் பணமோ முக்கியமான பேப்பர் போன்றவை எதையாவது வைத்துக் கொள்ளலாம், அதனால் பணம் திருடு போவதற்கோ, இல்லை கீழே விழுவதற்கோ சான்ஸ் இல்லாமல் இருந்தது
ஆனால் இப்பொழுது உள்ள ரெடிமேட் சட்டைகளில் ஸ்டைல் என்று ஒரு நாற்பது பாக்கெட், எம்ப்ராய்டரி டிசைன்கள், ஜிப்புகள், பட்டன்கள் என்று பிச்சைகாரன் தட்டு போல சட்டை முழுவதும் நிரப்புகிறார்களே ஒழிய அவசியம் தேவையான உள்பாக்கெட் ஒன்றுகூட வைக்கமாட்டேன்கிறார்கள், இதனால்தான் என்னுடைய ஐம்பது ரூபாய் அநியாயமாக பறிபோனது
இந்த பாடாவதி டிசைன்கள் எல்லாம் போட்டு ஆயிரம், ஆயிரத்து ஐந்தூறு என்று சட்டைக்கு காசு வாங்குகிறவர்கள், ஒரு இத்துணூண்டு துணியில் ஒரு உள்பாக்கெட் வைத்து கொடுக்கக்கூடாதா, அதற்குகூட வேண்டுமானால் காசு வாங்கி கொள்ளட்டுமே, மீறிப்போனால் கூட ஒரு ஐம்பது ரூபாய் வருமா? அது கூட வெட்டி வீசும் வீணான துணிகளில் தைத்துக் கொடுக்கலாம்
இது போன்ற நண்பர்களை வைத்திருக்கும் என்னை போன்ற அப்பாவிகள் நலனுக்காகவாவது ரெடிமேட் சட்டைகள் தயாரிப்பவர்கள் பெரிய மனது வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், இதற்காக பெரிய அளவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாமா என யோசித்து வருகிறேன், இதற்கான உங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது
இது ஒரு மொக்கை பதிவு என அலட்சியப்படுத்த வேண்டாம், இது ஒரு சமூக விழிப்புணர்வு பதிவும் கூட என்பதை கவனமுடன் பதிவு செய்ய விரும்புகிறேன், உங்கள் ஆலோசனைகளை கமெண்டில் கொட்டுங்கள், நன்றி.
//இது ஒரு மொக்கை பதிவு என அலட்சியப்படுத்த வேண்டாம், இது ஒரு சமூக விழிப்புணர்வு பதிவும் கூட என்பதை கவனமுடன் பதிவு செய்ய விரும்புகிறேன், உங்கள் ஆலோசனைகளை கமெண்டில் கொட்டுங்கள், நன்றி.//nice
ReplyDeleteவரும் பட்ஜெட்டில் உள் பாக்கட் வைத்த சட்டைகளை வீட்டுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், அம்மாவை.
ReplyDeletePosting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.
ReplyDeletehttp://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html
Thank you.
Anamika
முதல் பிகரு சூப்பர்........ கடேசி பிகர் சூப்பெரோ சூப்பர்
ReplyDeleteடாஸ்மாக்கை வைத்து சூப்பர் பதிவு எழுதிய தங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோ முதற் பாதியில் அரசியல், நடுவில் டாஸ்மாக், இறுதிப் பகுதியில் ஆண்களின் சட்டைக்குப் பாக்கட் அவசியம் எனும் மொக்கை நிறைந்த விழிப்புணர்வு எனப் பல செய்திகளை உங்கள் பதிவு அலசியுள்ளது.
ReplyDeleteஉள்பாக்கெட் சட்டைக்கு மட்டும் போதுமா நைட்டு?..அது ஜட்டிக்கும் வேணும்னு நாம ஏன் போராட்டத்தை பெரிய அளவில் முன்னெடுக்கக்கூடாது?
ReplyDeleteenakum indha madiri dhan nadandhuchu. Ungaluku 50 enaku 200.
ReplyDeleteபதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.........
ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
ReplyDeleteமேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!
நானும் தங்களோடு இணைத்து கொள்கிறேன் .. போராட்டம் மிக பெரிய அளவில் நடதுலாம் ..
ReplyDeleteகொய்யாலே. நண்பனை தண்ணி அடிக்க கூட்டிட்டு போய் விடற சமூகப் பொறுப்பை சரியாகச் செய்வதற்கு கொடுத்த வில்லைன்னு வச்சுக்கோங்கோ. நாலு சாத்து போட்டு வீட்ல விடாம, கூட்டிட்டு போயிட்டு இப்ப புலம்புறது நல்லா இல்லே சொல்லிட்டேன். =))
ReplyDeleteboss athuku thaan purse iruke illena neengale pocket stitch pannikalame inner pocket thaana...
ReplyDelete