அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து நாட்கள் ஆகிறது, திருமணத்தை முன்னிட்டு நண்பர் ஒருவரின் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள், எனவே இருவரும் விருந்துக்கு புறப்பட்டு சென்றார்கள், காலையில் சென்றவர்கள் மாலை வரை நண்பரின் வீட்டில் இருந்துவிட்டு தங்களது வீட்டிக்கு புறப்பட்டனர் புதுமண தம்பதியர்
கணவன் தனது புது பைக்கில் மனைவியை ஏற்றிக் கொண்டு புறப்பட நண்பரின் வீட்டினர் கையசைத்து இருவரையும் வழியனுப்பி வைத்தனர், புதிதாக திருமணம் செய்திருப்பதால் கணவன் மனைவி இருவரும் கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அந்த நெடுஞ்சாலையில் போய் கொண்டிருந்தனர்
இருவரின் சிரிப்பும் கேலியும் பெண்ணின் வெட்கசிரிப்பும், செல்ல சிணுங்கலும் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியை கவனிக்க தவற வைத்தது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி புதுமண தமபதியினர் வந்த பைக்கினை இடித்து சிதறடித்தது,
கணவன் தெறித்து விழ, அந்த பெண்ணும், பைக்கும் அந்த பெரிய கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர், வந்த வேகத்தில் இடித்ததால் பயங்கர சத்தத்தோடு அந்த கண்டெய்னர் லாரி கடந்து சென்றது,
தெறித்து விழுந்த கணவனுக்கு அடி எதுவும் படவில்லை, தனது மனைவி சிதைந்திருப்பாளோ என பயத்தோடு எழுந்து பார்க்க அந்த பெண்ணுக்கும் ஒன்றும் ஆகவில்லை, நெற்றியில் மட்டும் சிறுகாயத்தோடு அந்த பெண்ணும் அதிர்ச்சியோடு உயிர்தப்பினாள்
இந்த சத்தத்தை கேட்டு முன்னால் சென்ற பைக்காரர் ஒருவர் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார், அவ்வளவு பெரிய லாரி இடித்தும் ஒன்றும் ஆகாமல் அந்த பெண் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார், இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, நன்றாகத்தான் இருக்கிறீர்கள், எதற்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்து கொள்ளுங்கள் என கூற கணவனுக்கும் மனைவிக்கும் அவர் சொல்வது சரி என்று பட்டது
சரி மீண்டும் பைக்கில் போக வேண்டாம், ஏதாவதொரு ஆட்டோவை நிறுத்தி அதில் போகலாம் என முடிவு செய்தனர், சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ அவ்வழியே வந்தது, அந்த ஆட்டோவில் டிரைவர் தவிர இரண்டு பேர் பயணம் செய்து வந்து கொண்டிருந்தார்கள், அந்த ஆட்டோவை குறுக்கே நிறுத்தினார் அந்த பைக்காரர், அவர்களிடம் நடந்ததை கூறி இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் இறக்கி விடுமாறு கேட்க அவர்களும் ஏறிக் கொள்ள சொன்னார்கள்
சரி நீங்கள் வண்டியை ஒருபுறம் பிடியுங்கள், நான் ஒருபுறம் பிடிக்கிறேன் இருவரும் சேர்ந்து வண்டியை எதிர்புறம் உள்ள மரத்தடியில் கொண்டு போய் நிறுத்தி விடலாம் என பைக்காரர் சொல்ல, கணவனும் அந்த பைக்காரரும் சேர்ந்து அடிப்பட்ட வண்டியை நகர்த்தி கொண்டு போய் மரத்தடியில் நிறுத்தினார்கள் ,பிறகு அந்த ஆட்டோவில் டிரைவர், பயணம் செய்த இரண்டு பேர்களோடு அந்த புதுமண தம்பதியரும் ஏறிக் கொள்ள ஆட்டோ புறப்பட்டது,
ஆட்டோ புறப்பட்டு சிறிது தூரம்தான் சென்றிருக்கும், பின்னால் வந்த இன்னொரு கண்டெய்னர் லாரி ஆட்டோவின் மீது இடிக்க, அந்த கணவனை தவிர ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் உடல்நசுங்கி இறந்தனர், அந்த கணவன் மட்டும் அடிப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கபட்டு உள்ளார்,
தன் புது மனைவி இறந்தது இன்னும் அவருக்கு தெரியாது.
பாபுவின் அப்பாவிற்கு தீராத ஆஸ்துமா வியாதி, வியாதி முத்திப்போய் தினமும் ஊசி போட்டாக வேண்டிய நிலையில் இருந்தார், அப்படி இருந்த ஒருநாள் அவரின் அப்பாவிற்கு பயங்கரமான மூச்சிரைப்பு ஏற்பட்டது, உடனே ஊசி போட்டால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை
அவர்கள் ரெகுலராக ஊசி போடும் கிளினிக்குக்கு கூட்டி சென்றார்கள், அங்கே இருந்த பெண் மருத்துவரிடம்தான் அவர் வைத்தியம் பார்த்து வந்தார், அவர்கள் சென்ற நேரம் பார்த்து அந்த டாக்டரின் கைவசம் அந்த ஊசி மருந்து இல்லை, அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் சென்றால்தான் மெடிக்கல் உள்ளது, எனவே உடனடியாக சென்று மருந்து வாங்கிவரும்படி டாக்டர் கூறினார்
சரி என பாபு கிளம்ப எத்தனித்த வேளையில் அந்த டாக்டரின் அம்மா இவரையும் கூட்டிட்டு போயிடுங்க, பயங்கரமா எளைப்பு இருக்குது, இங்கயே எதாச்சும் ஆகிருச்சுன்னா என்ன பண்றது, கண்டிப்பா கூட்டிட்டு போயிடுங்க என சொல்ல வேறு வழியில்லாமல் அவரையும் கூட்டிட்டு கிளம்பினார் பாபு
ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று மருந்து வாங்கிக் கொண்டு திரும்பினார்கள், அங்கேயே நிறைய மருத்துவமனைகள் இருந்தும் ராசியான டாக்டர் என திரும்ப அதே டாக்டரின் கிளினிக்குக்கே கூட்டி வந்தார்கள், அந்த டாக்டரும் மருந்தினை எடுத்து ஊசி போட முயற்சிக்கும் வேளையில்
அந்த பெரியவரின் வாய் பெரியதொரு சுவாசத்தினை எடுத்துக் கொண்டு ஜீவனை வெளியில் விட்டுவிட்டது.
முதலில் சொன்ன சம்பவம் மூன்று நாட்களுக்கு முந்தைய மலையாள பேப்பரில் படித்தது, அதற்கு முந்தைய நாளில் கேரளாவில் நடந்த சம்பவம், இரண்டாவது எனக்கு தெரிந்த ஒருவர் கூறிய நடந்த உண்மைசம்பவம்
இந்த இரண்டு சம்பவங்களில் இருந்தும் என்ன தெரிகிறது? நீங்கள் என்ன உணருகிறீர்கள்?
நீங்கள் நடந்து செல்கிறீர்கள் அதுவரை சும்மாவே நின்று கொண்டிருக்கும் கார் திடீரென கிளம்பி உங்கள் பாதையில் குறுக்கிடும், நீங்களும் பயந்து திரும்பி விலகுவீர்கள், சைக்கிளிலோ, வண்டியிலோ சென்று கொண்டிருக்கும் போது, அதுவரை சும்மாவே நின்று கொண்டிருக்கும், கார், லாரி, வேன் போன்றவற்றின் கதவினை திறப்பார்கள், நீங்கள் அடிபடுவது போல சென்று தப்பிக்க வேண்டி இருக்கும்
இதுபோல இன்னும் எத்தனையோ சம்பவங்கள் எதிர்பாராமல் நடக்கும், இவையனைத்தும் நமக்கு உணர்த்துவது என்ன? வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கும், அதுவும் நடக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக நடக்கும், ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்பதைத்தானே, இன்னும் சினிமா டயலாக்கில் சொன்னால், இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது
இயற்கை இப்படி எத்தனையோ குறிப்பால் உணர்த்தினாலும் அதை சட்டை செய்யாமல் அசால்ட்டாக இருக்கும் மனப்போக்கு நமக்கு அதிகமாகவே இருக்கிறது, ஒரு விபத்து, ஒரு எழும்பு முறிவு நமது வாழ்க்கையினையே திசைமாற்றி கொண்டு சென்று விடும், அதுவும் ஒரு நொடியில் நிகழ்ந்து முடிந்துவிடும்
அதனை தடுக்க நம்மால் முடிந்த வழியான சாலைவிதிகளை மதித்தல், ஹெல்மெட் போடுதல் போன்றவற்றை தலை களைந்து விடும், காது கேட்காது, சைடு தெரியாது என சில்லியான காரணங்களை சொல்லி புறக்கணிக்கிறோம், இன்னும் நிறைய பேர்கள் வண்டியின் அழகை கெடுக்கிறது என சைடு மிரரை கழற்றி வைத்திருப்பார்கள், பிறகு எங்கே பின்னால் வரும் வண்டி தெரியும்?
சிட்டிக்குள்ளே 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுங்கள் என சொன்னால், அங்கே பைக் ரேசே நிகழ்த்துகிறோம், சாலையில் இருபுறமும் பார்த்து வேகமாக கடக்காததாலும், ஆளிள்ளா ரயில் தண்டவாளத்தை கடக்கும் பொழுதும், பைக் ஓட்டும் போது செல் போன் பேசிக் கொண்டே ஓட்டுவதாலும், சிக்னலை மதிக்காமல் செல்வதாலும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதாலும் உயிரிழப்போர் எத்தனை எத்தனை பேர்கள்
இன்னும் அதிகமாக குறிப்பிடாத மற்றோர் விசயம் உள்ளது, அது சாலையில் போகும் அழகான பெண்களை பார்த்து கொண்டும் ரோட்டின் சைடில் உள்ள சுவற்றில் ஒட்டி இருக்கும் பிட்டு படங்களை பார்த்து கொண்டு வண்டி ஓட்டி மற்றொரு வண்டியை இடிக்க போகும் கடைசி நேரத்தில் பதறி அடித்துக் கொண்டு வண்டியை பிரேக் அடித்து நிறுத்தி பெருமூச்சு விடுவது
அழகான பெண்களை பார்த்தால் கண்கள் ஆட்டோமேட்டிக்காக திரும்புவதை நிறுத்த முடியாத, அதே சமயம் கழுத்தில் போடும் துப்பட்டாவை முகத்தில் சுற்றிக் கொண்டு முகத்தை மட்டும் மறைத்து கொண்டு வண்டி ஓட்டும் பெண்களையும் தடுக்க முடியாது, அவர்களின் உடை சம்பந்தமான விசயங்களையும் நம்மால் தடுக்க முடியாது, எனவே நாம் பயணம் செய்யும் நேரத்தில் நம்முடைய மனக்கட்டுபாடு நமக்கு முக்கியம்,
அரைமணி நேரம் பயணம் செய்தால் அந்த அரைமணி நேரமாவது ஒழுங்காக ரோட்டை பார்த்து வண்டி ஓட்டினால் உசிதம், இல்லையெனில் மொத்தமாக சைட்டடிக்க முடியாத நிலைமைக்கு ஆளாகும் வாய்ப்பும் இருக்கிறது, வீட்டில் போய்ட்டு வருகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, சொன்ன வாக்கையும் காப்பாற்ற வேண்டுமல்லவா
எனவே நடக்க போவதை நம்மால் தடுக்க முடியாது, அதனால் தடுக்க முடிந்தததையாவது தடுத்துக் கொள்வோம், இந்த விசயத்தில் நடந்து முடிந்த பின்பு பாடம் கற்றுக் கொள்வதைவிட, மற்றவர்களின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வோம்
எவ்வளவோ பண்ணுகிறோம், இதை பண்ண முடியாதா, இதையும் கொஞ்சம் சிந்தித்து பார்க்கலாமே..!
Pictures - Thanks to Google Images
தன் உயிரைப்பற்றி நாமே கவலைப்படவில்லை என்றால் எப்படி அரசு விதிகளை மதிப்போம்..
ReplyDeleteகுறைவான வேகத்தில் செல்வோம்..
ஹெல்மெட் அணிவோம்...
அறிவுரைப்பதிவு வாழ்த்துக்கள்..
useful article - but who care??
ReplyDelete:(
ஹெல்மெட் ஒரு சுமை தான் ஒத்துக் கொள்கிறேன். வாகன சத்தம் கேட்காது. பின்னால திரும்பி திரும்பி பார்த்து சிலர் ஓட்டுவதை நான் ஊரில் உள்ள போது பார்த்திருக்கிறேன். மோட்டர் சைக்கிளில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு போனால் அடுத்த நிமிடமே திருட்டு போய்விடும். கையில் தூக்கிக் கொண்டு செல்வதானால் சுமையும் அதிகம். ஆனால், கொஞ்சம் கஷ்டப்படாமல் எப்படி? நீங்கள் சுவிங் என்று பரலோகம் போனபின்னர் கஷ்டப்படப் போவது உங்கள் குடும்பம் தானே. அதுவும் வேலைக்குப் போகாத / வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்த / அதிகம் படிக்காத மனைவி என்றால் அவரது நிலை என்ன. குழந்தைகள் நிலை என்ன. வயதான பெற்றோரின் நிலை என்ன. இதை எல்லாம் புரிந்து கொள்வார்களா இந்த சோமேறிகள்.
ReplyDeleteசாலைவிதிகளை மதிப்பது மிகமிக அவசியம்! நீங்கள் அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்! நன்றி நண்பா
ReplyDeleteநல்ல அறிவுரை, ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க...
ReplyDeleteஇப்போது மிகவும் தேவையான பதிவு..
ReplyDeleteநமக்கு நேரவிருப்பதை நம்மால் தடுக்க முடியாது. முடிந்தவரை நாம் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். அப்படி இருந்தாலே பெரும்பாலான விபத்துக்களை தடுக்க முடியும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteமிக்க நன்றி செளந்தர்...
@ ஷர்புதீன்
ReplyDeleteநம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டியதுதான், நன்றி நண்பரே...
@ அனாமிகா துவாரகன்
ReplyDeleteஉண்மையை உறைப்பாக சொல்லி இருக்கிறீர்கள், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்...
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ReplyDeleteமிகவும் நன்றி ராஜீவன்...
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteம்ம்ம் சொல்லலாம் மனோ சார்...
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி கருன்...
@ பாலா
ReplyDeleteஇவ்வளவு பெரிய பதிவினை சுருக்கமாக தந்துவிட்டீர்கள், நன்றி பாலா...
#எனவே நடக்க போவதை நம்மால் தடுக்க முடியாது, அதனால் தடுக்க முடிந்தததையாவது தடுத்துக் கொள்வோம், இந்த விசயத்தில் நடந்து முடிந்த பின்பு பாடம் கற்றுக் கொள்வதைவிட, மற்றவர்களின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வோம்#
ReplyDeleteநூறு சதவீதம் சரி...
i read the same article today morning atBUZZ
ReplyDeletehttps://mail.google.com/mail/?shva=1#buzz
WT IS THIS?
மிக மிக அவசியமான பதிவு, முதலாவது சம்பவம் மனதிற்கு பாரமாக உள்ளது, இப்படி ஒவ்வொரு சாலை விபத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும்,அவற்றின் பாதிப்பில் பல குடும்பம் சம்பந்தப் பட்டிருக்கும்.விபத்தில் இறந்தவருக்கு பிரச்சினை இல்லை, ஆனால் அவருடன் கூட சென்று காயத்துடன் யாரவது தப்பியிருந்தால் அவர்களுக்கும், இறந்தவரது குடும்பத்தினருக்கும் இது வாழ்வில் என்றுமே ஆறாத் துயர்.
ReplyDeleteதலைக்கவசம், ஓட்டும் வேகம் இரண்டும் முக்கியமானது, 1 நிமிடத்தினை மிச்சம் பிடிக்க வேகமாக சென்று முழு ஆயுளையும் இழந்த ஆயிரக்கணக்கானவர்களின் கதை தெரிந்தும் வயதினதும், முதிர்ச்சி இன்மையினதும் காரணமாக வேகமாக ஓட்டும் இளைஞர்கள் மமரரும் யுவதிகளை என்னவென்று சொல்வது??????????????
இது சம்பந்தமாக (சாலை விபத்துக்கள் எப்படி எதனால் என்பது பற்றி) ஒரு பதிவெழுத நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன், சந்தர்ப்பம் அமையவில்லை, நிச்சயம் எழுதவேண்டும்.....................
வண்டி வாங்கும் போது ஹெல்மெட்டும் சேர்த்து வாங்குகப்பு.
ReplyDeleteவாங்குனா மட்டும் போதாது தலைல மாட்டனும். இன்றைய சுல்ழ்நிலைக்கு தேவையான
பதிவு
---Gopi
@ NKS.ஹாஜா மைதீன்
ReplyDeleteநன்றி ஹாஜா மைதீன் சார்...
@ vinu
ReplyDeleteஎன்னுடைய இந்த பதிவை பஸ்ஸில் நிறைய பேர்கள் ரீஷேர் பண்ணி இருந்தார்கள், அதில் நீங்கள் படித்திருக்கலாம்...
@ எப்பூடி..
ReplyDeleteவிரிவான பின்னூட்டத்திற்கு நன்றி தல, நீங்களும் உங்கள் ஸ்டைலில் எழுதுங்க, படிக்க ஆவலாக உள்ளேன்...
@ gopituty
ReplyDeleteநன்றி கோபி சார்...
ஹல்லோ .. பாஸ், ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணு படத்தை யாரை கேட்டு போட்டீங்க?
ReplyDeleteமாப்ள பகிர்வுக்கு நன்றி......ஏழாவது ஓட்டு என்னோடது!
ReplyDeleteநல்லதொரு பதிவு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
God bless You.