Saturday, June 11, 2011

ஆரண்ய காண்டம் - ஒன்லி பார் ஜெண்ட்ஸ்
படம் ஆரம்பிக்கும் போதே ஆரண்ய காண்டத்திலிருந்து இரண்டு வரிகள் போடறாங்க
எது தர்மம்
உனக்கு எது தேவையோ அதுதான் தர்மம்

மனுசனோட வாழ்க்கையே அவனுக்கு தேவையானதை தேடி அலையறதுதான், அதுக்காக அவன் நல்லது கெட்டது, சரி தவறுன்னு எதையும் பார்க்குறதில்லை, சாதாரண மனிதர்களுக்கே இப்படின்னா கேங்ஸ்டர்ஸா இருக்குறவங்கங்களுக்கு

ரெண்டு கேங்ஸ்டர்சுக்கு இடையில ஏற்படுற பிரச்சனைகளும், அத தீர்க்க அவங்க முயற்ச்சிக்கிறதும், கடைசில என்ன நடக்குதுங்கறதுதான் ஆரண்யகாண்டத்தோட கதை, இதற்கு இடையில இரண்டு கிளைக்கதைகளும் இருக்கு, பரபரப்பான திரைக்கதையில படம் ரொம்ப சுவாரஸ்மாக இருக்குது

ஜாக்கி செராப், கஜேந்திரன்னு இரண்டு கேங்ஸ்டர்ஸ், இதுல கஜேந்திரன்கிட்ட வேலை பார்க்குற குருவி ஒருத்தர் அவங்களுக்கு தெரியாம பொருளை கைமாத்த பார்க்குறார், அதை ஜாக்கி செராப்கிட்ட வேலை பார்க்குற சம்பத் தானே தனிப்பட்ட முறையில கைமாத்திக்கலாம்னு டிரை பண்ணுறார், இதுனால ஜாக்கி சம்பத்த போட்டு தள்ள பார்க்கிறார், கஜேந்திரன் கோஷ்டிகிட்டயும் சம்பத்தான் பொருள தூக்கிட்டார்னு சொல்றார்,

அதனால கஜேந்திரன் கோஷ்டியும் சம்பத்த போட்டு தள்ள பார்க்குது, ஆனா உண்மையில பொருள் வேற ஒருத்தர்கிட்ட மாட்டிக்குது, இடையில சம்பத்தோட பொண்டாட்டியையும் தூக்கிடறாங்க, இந்த ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிகிட்ட சம்பத் எப்படி தப்பிக்கிறார்ங்கறத தியேட்டர்ல போய் பாருங்க

படத்துல கதாநாயகன்னு சொன்னா ஜாக்கியத்தான் சொல்லனும், படத்தோட முதல் சீனே வயசான காலத்துல சின்ன பொண்ண வப்பாட்டியா வச்சுக்கறதும், ஒன்னும் பண்ண முடியலைன்னு அந்த பொண்ண போட்டு அடிக்கறதும், ஈன்னு பல்ல காட்டுற மேனரிசம், வயசான பெரிசுகள் பண்ணுற அட்டகாசம்னு பின்னி பெடல் எடுக்குறார், கடைசியில் நிர்வாண தரிசனம் தந்து அதிர்ச்சியூட்டுகிறார்

அப்புறம் சம்பத் இவருதான் மெயின் கதாநாயகன், ரெண்டு கோஷ்டிகிட்டயும் சிக்கிகிட்டு முழிக்கறதும், தப்பிக்க பிளான் பண்ணறதும்னு படம் முழுக்க ஓடிகிட்டே இருக்கார், இன்னும் கஜேந்திரன், அவரோட தம்பியா வரவர், குருவியா வரவர்னு எல்லாரும் இயல்பான நடிப்புல அசத்தியிருக்காங்க

முக்கியமா அந்த சின்ன பையனும், பெரியவரும் செம, இயலாமை, ஏமாற்றம், அறியாமை, வட்டார மொழியில புலம்பறது எல்லாமே ரொம்ப இயல்பு, எல்லாமே நம்ம அன்றாடம் பார்க்குற பேசுற நிகழ்சிகளா இயல்பா எடுத்திருக்காங்க, அந்த பையன் பேசுற எல்லா டயலாக்குமே சூப்பர், அதுவும் சம்பத்கிட்ட போன்ல பேசும் போது ஒரு டயலாக் பேசுவான் பாருங்க, தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ்

சப்பையா ரவி கிருஷ்ணா, அந்த மாதிரி கேரக்டர்னா ரவி கிருஷ்னான்னு முடிவே பண்ணிட்டாங்க போல, ஆனா அவருக்கு தகுந்த கேரக்டர்தான், கதாநாயகி சுப்புவா யாசின் நடிச்சிருக்காங்க, ஜாக்கிகிட்ட மாட்டிகிட்டு முழிக்கறதும், ரவி கிருஷ்ணா மேல காதல் வயப்படறதும்னு படம் முழுக்க வராங்க,

கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்க முடியாத டர்னிங் பாயிண்ட், படத்தோட வசனங்கள் எல்லாம் ஷார்ப் ஆனா படம் முழுக்க கெட்ட வார்த்தைகள அசால்ட்டா பேசிட்டு போறாங்க, படத்துல நிறைய சென்சார் கட்டுன்னு சொன்னாங்க, அப்படி இருந்துமே இப்படின்னா முழு படத்தோட நிலையை நினைச்சு பார்க்க முடியலை

படத்துல பாட்டே இல்லை, யுவன் சங்கர் ராஜா மியூசிக், பிண்ணனி இசை ரொம்ப நல்லாயிருக்கு, படம் முழுக்க ஏறக்குறைய சைலண்டாதான் போகுது, தேவைப்படுற இடங்களில் மட்டும் மியூசிக் போட்டு இருக்காரு, மத்த இடங்கள்ள எல்லாம் பழைய பாட்டுகளை பிண்ணனில ஒலிக்கற மாதிரி போட்டு சரி பண்ணி இருக்காங்க, ஒளிப்பதிவு பிரமாதம், ஏறக்குறைய எல்லாமே இருட்டுலதான் எடுத்திருக்காங்க, அவங்க கூட சேர்ந்து நாமளும் இருக்குற மாதிரி பீலிங் வருது


படம் ஆரம்பத்துல ஸ்லோ மாதிரி தெரிஞ்சாலும் போக போக வேகம் பிடிக்குது, இடைவேளைக்கு அப்புறம் பரபரன்னு ஓடுது, படம் சத்தியமா குடும்பத்தோட பார்க்க கூடாத படம், குறிப்பா பெண்கள் யாரும் தியேட்டர் பக்கமே தலைவெச்சு படுக்க வேணாம், படம் முழுக்க கெட்ட வார்த்தை, வெட்டு, குத்து, கொலை, வன்முறைதான், அதுவும் இல்லாம ஆண்டிகள கரக்ட் பண்ணுறது எப்படி, பொண்ணுகள கரக்ட் பண்ணுறது எப்படி, மேட்டர் பண்ணுறது எப்படின்னு விலாவரியா விளக்கி இருக்காங்க

உலகபடம், வன்முறை படங்கள், இயல்பான படங்கள் புடிக்கறவங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், கண்டிப்பா ஒருவாரம் கூட தியேட்டர்ல ஓடாது.

மொத்தத்துல ஆரண்ய காண்டம் – ஆண்களுக்கு மட்டும்

19 comments:

 1. நல்லா விமர்சனம் செய்யிறிங்க பாஸ் ....

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம் நைட்டு..நல்ல படங்கள் வரிசையில் வரும் போல் தெரிகிறது..பார்ப்போம்.

  ReplyDelete
 3. //கேங்ஸ்டர்ஸா …//இருக்குறவங்கங்களுக்கு

  அது என்னங்க ... இருக்குறவங்கங்களுக்கு???

  //கண்டிப்பா ஒருவாரம் கூட தியேட்டர்ல ஓடாது//

  எஸ்.பி.பி.சரண் கிட்ட உங்க நம்பர் குடுத்திருக்கேன். நீங்க கண்டிப்பா நூறு நாள் ஓடுவீங்க!!

  ReplyDelete
 4. உங்களுக்கும் எனக்கும் நிறைய கருத்து ஒற்றுமைகள் இருக்குமென்று எண்ணுகிறேன்... அது எப்படி ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தது போல நான் பார்க்கும் அதே படங்களை நீங்களும் பார்த்துவிடுகிறீர்கள்...

  ReplyDelete
 5. உங்களுக்கும் எனக்கும் நிறைய கருத்து ஒற்றுமைகள் இருக்குமென்று எண்ணுகிறேன்... அது எப்படி ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தது போல நான் பார்க்கும் அதே படங்களை நீங்களும் பார்த்துவிடுகிறீர்கள்...

  ReplyDelete
 6. plz read charu nivedita's irandam attam book to understand abt family cinema values

  ReplyDelete
 7. விமரிசனம் விமரிசையாத்தான் இருக்கு.

  ReplyDelete
 8. ///உலகபடம், வன்முறை படங்கள், இயல்பான படங்கள் புடிக்கறவங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், கண்டிப்பா ஒருவாரம் கூட தியேட்டர்ல ஓடாது.///

  அப்படினா சுரேஷ் நீங்க என்ன சொல்ல வர்றீங்க

  ஓடாத படமெல்லாம் நல்ல படம் சொல்றீங்களா ?

  ReplyDelete
 9. ///எஸ்.பி.பி.சரண் கிட்ட உங்க நம்பர் குடுத்திருக்கேன். நீங்க கண்டிப்பா நூறு நாள் ஓடுவீங்க!///


  எங்க ஓடுவாரு ?

  ReplyDelete
 10. உங்களுக்கும் எனக்கும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்குமென்று எண்ணுகிறேன் ,அது எப்படி சொல்லி வைத்தாற்போல் நான் பார்க்காத படங்களை நீங்கள் பார்த்துவிடுகிறீர்கள்

  ReplyDelete
 11. அப்பறம் இன்ட்லில ஓட்டு குத்த முடியலைங்க , குத்துனா கண்டமேனிக்க என்னன்னேன்னமோ காட்டுதுங்கோ

  ReplyDelete
 12. @ கந்தசாமி.

  நன்றிங்க கந்தசாமி சார்...

  ReplyDelete
 13. @ செங்கோவி

  நல்ல படம்தான் செங்கோவி, ஆனா பெண்களா கூட்டிட்டு போக முடியாது

  ReplyDelete
 14. @ ! சிவகுமார் !

  எஸ்.பி,சரண்கிட்டயா, கண்டிப்பா கொடுங்க, நான் அவரோட பேன் :-)

  ReplyDelete
 15. @ Philosophy Prabhakaran

  எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது பிரபா, ஏறக்குறைய இருவருமோ ஒரே நாளில்தான் படம் பார்க்கிறோம், என்னவென்று தெரியவில்லை :-)

  ReplyDelete
 16. @ karthik

  டிரை பண்ணுறேன் கார்த்திக்

  ReplyDelete
 17. @ FOOD

  நன்றிங்க சங்கரலிங்கம் சார்

  ReplyDelete
 18. @ N.Manivannan

  அய்யா சாமி முடியலைங்க, ஆள விடுங்க :-)

  ReplyDelete
 19. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!