ஒரு காமெடி சீன பார்த்து ஏமாந்து படத்துக்கு போய் அழுதுட்டு வந்தது அனேகமா நானாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன், விமர்சனம் எல்லாம் எழுத முடியலைங்கோ, மனசுல தோணுனத கொஞ்சம் புலம்பலாமேன்னுதான் இங்க கொட்டறேன், முழு விமர்சனமெல்லாம் நம்ம பதிவுலக சீனியர்கள் யாராச்சும் எழுதுவாங்க, எழுதுவாங்களா???
வேலை வெட்டிக்கு போகாம குடிச்சிட்டு வீட்டுக்கு அடங்காம திரியற ஹீரோ, பையன் என்ன பண்ணுனாலும் பாசம் காட்டுற அம்மா, அடிக்கடி அண்ணனோட சண்டை போடுற தங்கச்சி, சொந்தங்களுக்குள்ள குடும்ப பகை, ஹீரோயின பார்த்தவுடனே ஹீரோவுக்கு வர காதல், கொஞ்சம் மொக்க காமெடி, ரெண்டு பைட்டு, அடபோங்கப்பா, இதே கதையதான் நீங்களும் எவ்வளவு நாளைக்கு எடுப்பீங்க, நாங்களும் எவ்வளவு நாளுதான் வலிக்காத மாதிரியே நடிக்கறது
மேல சொன்ன அதே கதைதான் பிள்ளையார் கோவில் கடைசி வீதி படக்கதையும், வழக்கமான காதல் கதைதான் ஆனா படத்துல ஒரு சின்ன டிவிஸ்ட் வச்சிருக்காங்க, அதுதான் இந்த படத்த கொஞ்சம் வித்தியாசபடுத்தி காட்டுது, நல்லா வரவேண்டிய கதைதான், ஆனா காட்சிபடுத்திய சீன்கள் எல்லாம் 1985 லயே வந்த சீன்களா இருக்குறதால நம்மாள உட்காரமுடியல
அது என்ன டிவிஸ்டு, அப்படி என்ன படம் எடுத்துருக்காங்கன்னு பார்க்க ஆவலா இருக்குறவங்க எல்லாம் எல்.ஐ.சியில அஞ்சு லட்ச ரூபாக்கு பாலிசி எடுத்து வீட்டுல குடுத்துட்டு படத்துக்கு போங்க, சத்தியமா முடியலைங்க
இடைவேளை வரைக்கும் கூட சமாளிச்சிரலாம், ஆனா அதுக்குமேல என்னால அழுகாம இருக்க முடியல, சும்மா செண்டிமெண்ட கழுவி கழுவி ஊத்தியிருக்காங்க, என்னா செண்டிமெண்டுடா சாமி, படத்துக்கு வந்தவனெல்லாம் நொந்து போய் கத்த ஆரம்பிசிட்டாங்க, பாதி வசனம் ஆடியன்ஸ்தான் பேசினாங்க, பேசுனாங்கலா இல்ல இல்ல அழுதாங்க, நானும் கதறி அழுதுட்டேன்க, கொஞ்சம் படத்த பார்த்ததுனாலயும், கொஞ்சம் என் நிலைமைய நினைச்சதாலயும்
படத்துல உருப்படியா பார்க்ககூடிய மாதிரி இருந்த ஒரே விசயம், கதாநாயகிதாங்க, மூஞ்சி சுமாரா இருந்தாலும் அனுஷ்கா ஹைட்டுல சூப்பரா இருந்தாங்க, ஆனா என்ன பிரயோஜனம் படம் முழுக்க ஒரே கிரையிங்தான்
வீட்டுல அடிவாங்கி நொந்து போய் இருக்கற புருசன்காரங்க எல்லாம் தாராளமா பொண்டாட்டிய கூட்டிட்டு போய் படத்த காட்டுங்க, அப்படியாவது அவங்க அழுகறதை பார்த்து ஜென்ம சாபல்யமடையலாம், என்னால இதுக்கு மேல எழுத கூட முடியல, என்ன விட்டுடுங்க, ஒரே அழுகை அழுகையா வருது..!
பிள்ளையார் கோவில் கடைசி வீதி – வீடா வீதியான்னு சரியா தெரியல, அழுவாச்சி காவியம், அந்த பிள்ளையார்தான் அருளணும்..!
வீட்டுல அடிவாங்க நொந்து போய் இருக்கற புருசன்காரங்க எல்லாம் தாராளமா பொண்டாட்டிய கூட்டிட்டு போய் படத்த காட்டுங்க, அப்படியாவது அவங்க அழுகறதை பார்த்து ஜென்ம சாபல்யமடையலாம்//
ReplyDeleteஓ.கே.. ரைட்டு ., புரிஞ்சிடுச்சி..
பிள்ளையார் கோவில் கடைசி வீதி - அரைத்த மாவு மீண்டும் அரைக்கப்படுகிறது ...)))
ReplyDeleteட்ரைலர் பார்த்த போதே நினைத்தேன் படம் ஓடாது என்று.
ReplyDeleteபாவம் இவுங்க அப்பா சொத்த இவனே அழிச்சிடுவான் போல
ஹி ஹி ஹி ,உங்களுக்கு நல்லா வேணும் ,
ReplyDeleteஹீரோயின் நல்லா இருக்காங்ள,விடுங்க ( நமக்கு அதான முக்கியம் )
ha ha ha! :-)
ReplyDelete//ஆவலா இருக்குறவங்க எல்லாம் எல்.ஐ.சியில அஞ்சு லட்ச ரூபாக்கு பாலிசி எடுத்து வீட்டுல குடுத்துட்டு படத்துக்கு போங்க, சத்தியமா முடியலைங்க// ஹா..ஹா..நைட்டு, சேதாரம் ரொம்ப ஆயிடுச்சோ?
ReplyDelete//வீட்டுல அடிவாங்கி நொந்து போய் இருக்கற புருசன்காரங்க எல்லாம் தாராளமா பொண்டாட்டிய கூட்டிட்டு போய் படத்த காட்டுங்க, அப்படியாவது அவங்க அழுகறதை பார்த்து ஜென்ம சாபல்யமடையலாம்,// அப்போ மறுபடியும் குடும்பத்தோட போறீங்களா?
ReplyDeleteபாவம் நீங்க ! ஏன் அவசரப்பட்டு போறீங்க?
ReplyDeleteஹீ..ஹீ.. மிக்க நன்றி..
ReplyDeleteசீக்கரம் உதயன் பாருங்க அண்ணே....
பயபுள்ள ரொம்ப அழுதிருக்கு போல....
ReplyDeleteஹா ஹா நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteபுரிஞ்சுடுச்சிங்களா? அப்ப சரி ஓகே ரைட்டு..!
@ கந்தசாமி.
ReplyDeleteஅரைத்த மாவா? இல்ல இல்ல அதுக்கும் மேல சார்
@ THOPPITHOPPI
ReplyDeleteஅதுதான் தம்பி சம்பாதிக்கறாரே தொப்பி
@ நா.மணிவண்ணன்
ReplyDeleteஅதான உலகமே அழிஞ்சாலும் உங்க மேட்டர்ல கரெக்டா இருக்குறீங்களே மணி
@ ஜீ...
ReplyDeleteஓகேங்க
@ செங்கோவி
ReplyDeleteகுடும்பத்தோட வேறயா? வேற வினையே வேணாம்
@ shanmugavel
ReplyDeleteஎல்லாமே ஒரு பாடம்தானே சார்
@ ஜெட்லி.
ReplyDeleteஅண்ணனுக்கு ரொம்ப நல்லென்னம் :-)
@ தமிழ்வாசி - Prakash
ReplyDeleteஹி ஹி ஆமாங்க லைட்டா
@ FOOD
ReplyDeleteரொம்பவேங்க சார்
@ சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteஅப்பவே நினைச்சேன் உங்களுக்கு முன்னாடி போனது தப்புதான் மன்னிச்சிருங்க தல :-)
அப்போ பெரிய திரையில் ஒரு சின்னத்திரை என்று சொல்லுங்கள் பாஸ்
ReplyDeleteபார்க்கணும் என்று இருந்தேன் நல்ல வேளை அதற்க்கு முன் உங்கள் விமர்சனம் படித்தது
ReplyDeleteஹி ஹி
மாப்ள கடத்தேங்காயும் வழிப்புள்ளயாருமா ஹிஹி!
ReplyDelete