Friday, September 16, 2011

கமர்சியல் பக்கங்கள் - 16/09/2011


வழக்கம் போலவே பெட்ரோல் விலையை ஏத்திட்டாங்கப்பா, முன்னையெல்லாம் வருசத்து ஒரு தரம் ஏத்துனாலும் 50 பைசா, ஒரு ரூபாய்னு ஏத்துவாங்க, எதிர்கட்சிக போராட்டம் நடத்துறேன்னு சொன்னதும் ஒரு நாலணா, எட்டணா குறைச்சுருவாங்க, இப்பெல்லாம் அடிக்கடி ஏத்துறானுங்க, அதுவும் ஒரேயடியா ஏத்துறானுங்க, பேசாம லிட்டருக்கு 100 ரூபாய்னு சொல்லிடுங்கப்பா, அப்படியாவது ஒரு மூணு மாசத்துக்கு மறுபடியும் விலையேத்தாம இருக்கலாம்.

பெட்ரோல் விலைதான் இப்படின்னா சிலிண்டர் விலையையும் ஏத்தலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம், அதுவும் வருசத்துக்கு ரெண்டு மூணு சிலிண்டர் மட்டும் மானிய விலையிலும், மத்தபடி வாங்கற சிலிண்டர் எல்லாம் டபுள் ரேட்டுல விக்கவும் அதாவது 400 ரூபாய் சிலிண்டர் 800 ரூபாய்யாம், கூட்டணி கட்சிக எதிர்ப்பு தெரிவிச்சதால இப்போதைக்கு ஆலோசனை கூட்டத்தை ரத்து பண்ணி இருக்காங்க.

அஞ்சு வருசம் ஆட்சி முடியறதுக்குள்ள இலை தலைய திங்க வைக்காம போக மாட்டாங்க போல இந்த காங்கிரஸ்காரங்க.

தமிழகத்தில் எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்கற உள்ளாட்சி தேர்தல் தேதிய இன்னைக்கு அறிவிக்க போறாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் மறுபடியும் ஒரு திருவிழாவுக்கு தயாராகிட்டு இருக்கறாங்க, மத்த எலக்சன விட உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு சம்திங் ஸ்பெசல்தான்.

சட்டசபை எலக்சன், பார்லிமெண்ட் எலக்சன்ல எல்லாம் முகத்தையே பார்த்திருக்காத யாரோ ஒருவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க, அவங்களும் ஐஞ்சு வருசத்துக்கு திரும்பியே வர மாட்டாங்க, ஆனா உள்ளாட்சி தேர்தல் அப்படி இல்ல, நம்ம தெருவையோ பக்கத்து தெருவையோ சேர்ந்தவங்க தான் தேர்தல்ல நிக்க போறாங்க, இப்பவாச்சும் கட்சி வித்தியாசம் பார்க்காம நம்ம வார்டுல உருப்படியா வேலை செய்யுற ஆட்களை தேர்ந்தெடுங்க, எலக்சன் கமிசன் இந்த தேர்தலையும் சரியா நடத்துமான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.


திமுக கட்சியா, திரு.மு.கருணாநிதி கட்சியா, சரி ஏதோ ஒன்னு தலைவர் உள்ளாட்சி தேர்தல்ல கூட்டணி இல்ல நாங்க தனியாத்தான் நிப்போம்னு சொல்லிட்டாரு, காலங்கெட்ட காலத்துல சொன்னாலும் இப்போதைக்கு திமுக தொண்டர்களுக்கு இதவிட பெரிசா சந்தோசத்த கொடுக்க ஒன்னும் இருக்காது.

ஆனா இதுல பெரிய காமெடி என்னன்னா வழக்கம் போலவே நம்ம ஈரோட்டுக்காரரு இவிகேஎஸ். இளங்கோவன், கலைஞர் சொன்னதை வரவேற்கிறாராம், இப்பத்தான் காங்கிரஸ்சோட சுமை குறைஞ்சு போச்சாம், என்னமோ திமுகவ தூக்கி சுமந்துகிட்டு இருந்தமாதிரி, தனிச்சு நின்னு காங்கிரஸ் ஜெயிக்க போகுதாம், வேணும்னா சிறு சிறு கட்சிகளோட கூட்டணி வச்சுக்குவோம்னு வேற சொல்லி இருக்காரு.

இளங்கோவன் சார் நீங்களே சிறு கட்சிதானே, இதுல மறுபடியும் எங்க போய் சிறு கட்சிகள பிடிச்சு கூட்டணி வைக்க போறீங்க, வரவர காமெடில சந்தானத்துக்கு டஃப் காம்படீசன் கொடுக்குறீங்க சார்.

அம்மா மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, எல்லாத்தையும் இலவசமா கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க கூடவே லேப்டாப்பும் கொடுக்கறாங்க, வீட்டுல நெட் கனெக்சனும் ஃப்ரீயா கொடுத்துட்டா இன்னும் பசங்க சந்தோசப்படுவாங்க.

பதிவர்களே நோட் பண்ணிக்கோங்க, இனிமேல் மாணவர்களுக்கும் பிடிக்கற மாதிரி பதிவெழுதுங்கோ, இன்னும் நிறைய ஹிட்ஸ், ஓட்டு எல்லாம் கிடைக்கும்.


அசாரூதீன் அவரோட சன் அயாஹூத்தீன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போய் விட்டார், எதிர்காலத்துல ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரா வர வேண்டியவர் இப்படி அநியாயமா இறந்து போனது வருத்தப்பட வேண்டிய விசயம்தான், ஆனாலும் வண்டில அதிக வேகத்துல போனா மேலயும் வேகமா போயிட வேண்டியதுதான்கறது மறுபடியும் நிரூபணமாகி இருக்குது,

வேகம் எப்பவுமே விவேகமா இருக்காது, பாதுகாப்பான வேகம்னு எதுவுமே கிடையாது, அதனால மெதுவா போங்க, பார்த்து போங்க, அயாஹூத்தீன் ஆத்மா சாந்தியடையட்டும்.


திரைப்படங்களுக்கு 100% கேளிக்கை வரியை அரசாங்கம் அறிவிச்சு இருக்கு, இதனால அதிர்ச்சியடைஞ்சு போயிருக்காங்க சினிமாக்காரங்க, என்ன ஆட்டம் போட்டீங்க சாமிகளா, இவங்க தமிழ்ல பேரு வைப்பாங்களாம் அரசாங்கம் வரியவே ரத்து பண்ணிருமாம், ஆனாலும் தியேட்டர்ல டிக்கெட்டு விலைய நூறு இருநூறுன்னு அதிகமா விப்பாங்களாம், யாரும் கேட்க்க மாட்டாங்களாம், என்ன அநியாயம்பா இது. 

அதுக்குதான் இப்ப சரியான ஆப்ப வச்சிருக்காங்க, வரி விதிச்சதோட மட்டுமில்லாம டிக்கெட் விலைய கண்டிப்பா கூட்டக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க, மாசத்துக்கு ஒரு பாராட்டு விழா நடத்துனா போதும் என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு நடந்தா இப்படித்தான், ஆட்சி மாறின உடனே பழைய படத்த தூக்கிட்டு புது படத்த போட்டு ஓட்டுறாங்கப்பா, இப்ப ரீலு அந்து போச்சுல்ல.

கூட்டமா வந்து கோரிக்கை வைக்கறோம்னு கால்ல விழுந்தாலும் இதுல மட்டும் தமிழக அரசு விட்டுக் கொடுக்க கூடாது ஏன்னா நம்மளுக்கு சரக்கும், சினிமாவும் ரொம்ப முக்கியம்.


நானும் மங்காத்தா படம் பார்த்துட்டேன், இடைவேளை வரைக்கும் கொஞ்சம் போரடிச்சிருச்சு, ஆனாலும் இடைவேளைக்கு அப்புறம் படம் செம விறு விறு சுறு சுறுதான், என்ன அஜீத் இப்படி கெட்டவார்த்தை பேசுறாரு, குடிக்கறாருன்னு பக்கத்துல இருந்தவங்க சொல்லிட்டு இருந்தாங்க, அட போங்கப்பா அதான் ஸ்டிரிக்ட்லி நோ ரூல்ஸ்னு முதல்லயே சொல்லிட்டாங்களே அப்புறம் என்னத்துக்கு லாஜிக் பார்த்துகிட்டு?



அப்புறம் படத்துல அஜீத்தோட ஹேர் ஸ்டைலுக்கு பேரு சால்ட் அண்ட் பெப்பராம், எனக்கென்னவோ அப்படித் தெரியல, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு உதாரணமா கீழ ஒரு ஸ்டில்லு போட்டு இருக்கேன் பாருங்க, என்ன பெப்பர்தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்.


இந்த வார கமர்சியல் ஹிட்டு வீடியோ நம்ம சக்சேனா அண்ணன் அழுகற இந்த வீடியோதான், என்னதான் பணம் இருக்கும் போது ஆடுனாலும், ஒரு சான்சுல சறுக்கிட்டா அதோ கதிதான், அதுவும் போலீஸ்காரங்ககிட்ட சிக்குனா நோண்டி நொங்கெடுத்துடுவாங்க, ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா பாட்டுக்கு இப்போதைக்கு சரியான உதாரணம் சக்சேனா அண்ணந்தான், பார்ப்போம் அண்ணன் சக்சஸ்ஸா வெளிய வருவாரான்னு.



20 comments:

  1. எல்லா செய்திகளும் நன்று சார்!

    ReplyDelete
  2. அவர் ஏன் படத்துல அப்படி கைய விரிக்கிறார்..சிம்பலிக்கா என்னதோ சொல்றாரோ..கமர்ஷியல் கலக்கல்...

    ReplyDelete
  3. கலக்கல்யா..பெப்பர் & சால்ட் சூப்பர்.

    ReplyDelete
  4. அசத்தலான தகவல் நக்கல், அறிவுரை ஆப்புன்னு சூப்பரா கலந்த கலவை....!!!

    ReplyDelete
  5. யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி ஏறுமுகமாகத்தான் இருக்கும்... இதில் காங்கிரஸ் என்ன பா.ஜ.க என்ன...?

    விஜயகாந்தை கலாய்க்காம இருக்க முடியாதே...

    ReplyDelete
  6. ரொம்ப பிரயோஜனமா இருந்தது சுரேஷ். குறிப்பா இந்த சன் காணொளியை நான் பார்க்க முடியலைன்னு வருத்தத்தில் இருந்தேன். பரிதாபமாக இருந்தாலும் இருவரைப் பற்றியும் நான் கேள்விப்பட்ட விசயங்களைப் பார்க்கும் போது பரிதாபம் வரமாட்டேன் என்கிறது. ஆமா சன் நினைத்தால் அவர்களை வெளியே கொண்டு வர முடியாதா?

    ReplyDelete
  7. கலக்கல் பாஸ்!
    அது சால்ட் அண்ட் பெப்பரா? சால்ட் அண்ட் தக்காளி சோஸ் மாதிரில இருக்கு? :-)

    ReplyDelete
  8. @ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

    நன்றி சார்

    ReplyDelete
  9. @ ரெவெரி

    நடித்தெருவுக்கு வந்துடுவோம்னு சிம்பாலிக்கா சொல்றாரோ???

    ReplyDelete
  10. @ Rathnavel

    நன்றிங்க ஐயா

    ReplyDelete
  11. @ செங்கோவி

    நன்றி நண்பா

    ReplyDelete
  12. @ MANO நாஞ்சில் மனோ

    ரொம்ப நன்றிங்க மனோ சார்

    ReplyDelete
  13. @ Philosophy Prabhakaran

    இப்போதைக்கு காங்கிரஸ்தான ஆட்சி பண்ணுது, யாரு விலையேத்தறாங்களோ அவங்களதான சொல்ல முடியும் பிரபா? அது சரி இன்னைக்கு மைனஸ் ஓட்டு போடலை :-)

    ReplyDelete
  14. @ JOTHIG ஜோதிஜி

    இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது போலத்தான் தெரியுதுங்க சார்

    ReplyDelete
  15. @ ஜீ... said...

    //அது சால்ட் அண்ட் பெப்பரா? சால்ட் அண்ட் தக்காளி சோஸ் மாதிரில இருக்கு? :-)//

    ஹி ஹி நாந்தான் தப்பா சொல்லிட்டனோ

    ReplyDelete
  16. பல தகவல்களை சொல்லிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது.அசாருதீன் மகன் இறந்தது பரிதாபம்.

    ReplyDelete
  17. வீடியோவை காணும்..
    பார்க்கமுடியலை.மீண்டும் வந்து பார்க்கிறேன்

    ReplyDelete
  18. நன்றி நைட்ஸ்கை..... அந்த அழுகை சீன் பார்க்கமுடியலேன்னு வருத்தமா இருந்தேன்........

    ReplyDelete
  19. சுவரஷ்யமான பதிவு சகோ.

    வாழ்த்தும் ஓட்டும்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!