பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேருடைய தூக்கு தண்டனையையும் சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது, அது நிரந்தரமாகவும் ஆகி தூக்கி தண்டனையிலிருந்து தப்பி விடுவார்கள் என நம்பலாம், அதே போல் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும் நன்றி.
எந்த பிரச்சனையானாலும் ஒரு உயிரை பறிப்பதால் எந்த தீர்வும் வந்துவிட போவதில்லை, மனித வாழ்க்கையே தூக்கு தண்டனையை விட கொடுமையாக இருக்கும் இக்காலத்தில் குற்றம் செய்தது முழுமையாக நிரூபிக்கபடாமல் தூக்குதண்டனை விதிப்பது மிகவும் கொடுமையானது.
எது எப்படியோ சீக்கிரமே இந்த பிரச்சனை நல்லபடியாக முடியும் என நம்புவோம், இதற்காக உயிரை நீத்த செங்கொடியின் முடிவு அபத்தமானதாக இருப்பினும், அன்னாரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்.
எப்படியோ ஜன் லோக்பால் ஏற்க்கப்பட்டு, அண்ணா ஹசாரேவின் போராட்டம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது, டிவியில் பார்க்கும் போது நாட்டு மக்கள் எல்லாரும் கொண்டாடி தீர்த்துவிட்டனர், நாடே சந்தோசமா இருக்கும் போது நம்ம வீடு மட்டும் எழவு வீடு மாதிரி இருக்கனும்கறதுதான் மத்திய அரசோட விருப்பம் போல, இங்கு மட்டும் இறுக்கமான சூழ்நிலை.
பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்துல பேசும் போது, லோக்பால் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற தீர்மான குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும், தேவைப்படும் போது அமல்படுத்தப்படும்னு அறிவிச்சாரு, தேவைப்படும் போது அமல்படுத்தப்படுமா? அரசியல்வாதிகளுக்கு இது எப்படி தேவைப்படும்? அப்ப மறுபடியும் நாமதான் அவுட்டான்னு தோணுச்சு, சரி பார்ப்போம், என்ன ஆகப்போகுதுன்னு.
ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க ராம்லீலா மைதானத்துக்கு வந்தவங்க எல்லாம், வேலை முடிஞ்சதும், தண்ணி பாட்டல், சாப்பாட்டு பொட்டலம்னு கண்ட எடத்துல போட்டு நாறடிச்சிட்டு போயிட்டாங்க, அங்க அவ்வளவு குப்பைத்தொட்டி இருந்தும், என்ன பண்ணுனாலும் இந்த விசயத்துல மட்டும் நம்மாளுகள திருத்தமுடியாது போல.
சில பேக்கரி, கடைகள்ல எல்லாம் பார்த்திருப்பீங்க, கலர்கலரா விதவிதமா லேசர் ஷோ மாதிரி லைட் எரியற ஸ்டேண்ட் மாதிரி ஒன்னை வச்சிருப்பாங்க, அது பொதுவா சீலிங்க பார்த்துதான் இருக்கும், அத போட்டு பார்த்தா செவுத்துல அழகா இருக்கும், ஆனா இங்க ஒரு புண்ணியவான் இருக்காரு.
அந்த லைட்ட ரோட்டுல தெரியறமாதிரிதான் போட்டு வச்சிருப்பாரு, நாம வண்டி ஓட்டிட்டு போகும் போது திடீர்னு விதவிதமா லைட்டெல்லாம் நம்ம மேலயும் ரோட்டுலயும் தெரியும், எங்கிருந்துடா லைட் வருதுன்னு ஒரு நிமிசம் கண்டிப்பா திரும்பி பார்த்துதான் ஆகணும், வேகமா போய்கிட்டு இருக்கற ரோட்டுல திடீர்னு கவனம் திரும்பினா என்ன ஆகும்? கண்டிப்பா ஒருநாள் இல்லைன்னாலும் ஒரு நாள் ஆக்சிடெண்ட் ஆக சான்ஸ் இருக்கு,
நிறைய தடவை அந்தாளுகிட்ட சொல்லி இருக்காங்க, ரெண்டு நாள் திருப்பி வச்சா மூணாவது நாள் மறுபடியும் ரோட்டுக்கே திருப்பி விட்டுடுடறான், ஒருநாள் இருக்குடி உனக்கு, யாராவது இதுமாதிரி லைட்ட போட்டு வண்ணஜாலம் காட்டறவங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்களா இருந்தாங்கன்னா தயவுசெஞ்சு நிறுத்த சொல்லுங்க, அவங்களுக்கு வண்ணஜாலம் காட்டுற லைட்டு யாருக்காவது கருப்பு கொடி காட்டிட போகுது.
எ.கொ.சா இது???
படிச்சதில் பிடிச்சது
சமீபத்துல கூகிள் பஸ்ஸுல ஒரு ஆர்ட்டிகிள் படிக்க நேர்ந்தது,
இந்தியனா பிறந்ததுக்கு வெட்கப்படுறேன்னு ராகுல் வின்சி
சாரி சாரி ராகுல் காந்தி உத்திரபிரதேசத்துல
போய் ஒரு பேட்டி கொடுத்தாராம், நீ பொறந்ததுக்கே
நாங்கெல்லாம் வெட்கப்படுறோம்னு நிதின் குப்தாங்கறவரு,
மும்பைல இருந்து ஒரு லெட்டர் எழுதி இருக்காரு,
செமயா இருக்குது, நீங்களும் படிச்சு பாருங்க,
எங்க பக்கத்து வீட்டு குழந்தை ஒன்னு என்னை பார்த்தாலே பயந்து ஓடும், (நான் என்ன அவ்வளவு டெரராவா இருக்கேன்?) அதையும்
மீறிப்போய் புடிச்சா வீல்ல்ல்ன்னு கத்தும், அவ்வளவு பயந்தசுபாவம்
உள்ள குழந்தை, நேத்து நான் படிச்சிட்டு இருக்கும் போது
பின்னாடி வந்து, காஞ்ஞ்ஞ்சனானா முனி பார்ட் டூன்னு கத்துது,
என்னை பயமுறுத்துதாம், சைலண்டா திரும்பி பார்த்தா
மறுபடியும் என்னை பார்த்து கத்திட்டே ஓடுது, ஒருவேளை
குளோசப்புல பார்த்திருச்சோ என்னவோ J
(கேவலப்பட்டுட்டாண்டா பிளாக்கரு)
இதெல்லாம் ஏன் எழுதறேன்னு கேட்குறீங்களா?
அப்பத்தான் பல்சுவைபதிவுன்னு ஒத்துக்குவாங்க J
நாட்டுல பசுமாட்டுக்கு கூட குடிக்க தண்ணி இல்லாம அடிபம்ப அடிக்க வச்சுட்டாங்க நம்மாளுங்க..!
இது பல்சுவைப் பதிவுன்னு ஒத்துக்கறேன்.
ReplyDeleteகலக்கலான பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎப்பூடி இப்படியெலாம்?
தமிழ் மணம் போட்டாச்சு
கலக்கல் பக்கங்கள்...
ReplyDeleteவிஜய்க்கும் எம்ஜிஆர் வேஷம் போட்டாச்சா...
ReplyDeleteவௌங்கிடும்...
//தேவைப்படும் போது அமல்படுத்தப்படுமா? அரசியல்வாதிகளுக்கு இது எப்படி தேவைப்படும்? அப்ப மறுபடியும் நாமதான் அவுட்டான்னு தோணுச்சு, //
ReplyDeleteஅதே தான் எனக்கும்.
//என்னை பயமுறுத்துதாம், சைலண்டா திரும்பி பார்த்தா
ReplyDeleteமறுபடியும் என்னை பார்த்து கத்திட்டே ஓடுது, ஒருவேளை
குளோசப்புல பார்த்திருச்சோ என்னவோ J
(கேவலப்பட்டுட்டாண்டா பிளாக்கரு)..இதெல்லாம் ஏன் எழுதறேன்னு கேட்குறீங்களா?
அப்பத்தான் பல்சுவைபதிவுன்னு ஒத்துக்குவாங்க//
நைட்டுக்கு..ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.
பல்கலை பதிவு நன்றாக இருந்தது.
ReplyDelete@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஇது பல்சுவைப் பதிவுன்னு ஒத்துக்கறேன்.
அப்பாடி ஒருத்தராவது ஒத்துக்கிட்டாரே...
@ அந்நியன் 2
ReplyDelete//எப்பூடி இப்படியெலாம்?//
பொழுது போகலைங்க
//தமிழ் மணம் போட்டாச்சு//
அத விடுங்க பாஸ், அதெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிகிட்டு
நீங்க வந்ததே சந்தோசம் பாஸ்
@ # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவிஜய்க்கும் எம்ஜிஆர் வேஷம் போட்டாச்சா...
வௌங்கிடும்.
என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க???
@ செங்கோவி
ReplyDelete//நைட்டுக்கு..ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது//
ஆமாங்க எனக்கு கூட இருட்டு இருட்டா தெரியுது
@ தமிழ் உதயம் said...
ReplyDelete//பல்கலை பதிவு நன்றாக இருந்தது.//
பல்கலை ரேஞ்சுக்கு போயிட்டனா? கேட்கவே சந்தோசமா இருக்குதுங்க சார்
இந்த கமர்சியல் பக்கங்கள் விற்பனைக்கல்லவே..?
ReplyDeleteநல்லாயிருந்தது...தொடர்கிறேன் நண்பரே...
//எந்த பிரச்சனையானாலும் ஒரு உயிரை பறிப்பதால் எந்த தீர்வும் வந்துவிட போவதில்லை, மனித வாழ்க்கையே தூக்கு தண்டனையை விட கொடுமையாக இருக்கும்//
ReplyDeleteஅருமையான வார்த்தைகள் நண்பரே..
பதிவும் அருமை.நாட்டில் இன்றைய சூழலை எண்ணங்களால் படம் பிடித்துள்ளீர்கள்
நட்புடன்
சம்பத்குமார்
பல்சுவைத் தகவல்கள் அருமை.
ReplyDeleteவிஜய படத்தை பார்த்து நொந்நு நூடுல்ஸ் ஆகி...........
ReplyDeleteஆமா? எங்கே எடுத்தீங்க?
நண்பா அந்த டாக்குடர் அண்ணா ஹசாரே பேனரை பார்த்ததும் நான் சொன்னது என்ன கொடுமை சரவணன் இது? நீங்களும் அதையே சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteவணக்கம் நண்பா,
ReplyDeleteநலமா?
தூக்குத் தண்டனையினை ஒத்தி வைத்திருப்பது மனதிற்கு ஆறுதலைத் தருகின்றது.
ReplyDeleteசெங்கொடியின் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் நிலமை மாறும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபொது இடத்தை நாறடிக்கும் நம்மவர்கள் தொல்லை...பூர்வ ஜென்ம குணமாச்சே..
ReplyDeleteஇலகுவில் நம்மளை விட்டுப் போகாது பாஸ்,
இதெல்லாம் ஏன் எழுதறேன்னு கேட்குறீங்களா?
ReplyDeleteஅப்பத்தான் பல்சுவைபதிவுன்னு ஒத்துக்குவாங்க J//
இது செம காமெடி பாஸ்..
அப்புறமா மாடு தண்ணி குடிக்கும் சீன்....சூப்பரா வீடியோ புடிச்சிருக்காங்க.
தமிழகத்தின் அன்னா ஹஜாரே? என்னமா யோசிக்கறாங்க...வாவ்!
ReplyDelete@ ரெவெரி
ReplyDeleteவாங்க சார், மொதமொதலா நம்ம கடைக்கு வந்திருக்கீங்க, டீ காபி எதாச்சும் சாப்பிடறீங்களா???
@ சம்பத்குமார்
ReplyDeleteரொம்ப நன்றிங்க சம்பத்குமார்
@ JOTHIG ஜோதிஜி
ReplyDeleteசார் நீங்களும் நொந்திட்டீங்களா? எல்லாம் பஸ்சுல எடுத்ததுதான்
@ பாலா
ReplyDeleteஹி ஹி நான் சொன்னது என்ன கொடுமை சார் இதுன்னு, பரவாயில்ல சேம் ப்ளட்தான் :-)
@ நிரூபன்
ReplyDeleteநலம் நிரூபன், நீங்க எப்படி இருக்கீங்க? உங்களோட விரிவான கமெண்டுக்கு நன்றிங்க
@ ! சிவகுமார் !
ReplyDeleteஅந்த பதினோரு பேர் கொண்ட குழுவுக்கு நீங்கதான் தலைவர்னு கேள்விபட்டேன்
@ முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteரொம்ப நன்றிங்க குணசீலன் சார், உங்க கமெண்டு தெரியாம ஸ்பேம்குள்ள போயிடுச்சு, அதான் லேட், மன்னிச்சிருங்க
எ.கொ.சா இது???://
ReplyDeleteஎன்னங்க நிலமை இப்புடிப் போயிட்டு இருக்கு!கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்களே!
பல்சுவைப்பதிவுக்கு நன்றிய்யா மாப்ள....
ReplyDeleteரெண்டு விஷயம்....ஒன்னு அந்த என்ன கொடும சார் போட்டவுல இருக்க தம்பி யாரு எங்கயோ உண்ணாவிரத மேடையில பிரயாணி கொடுத்தாப்ல இர்க்காரு......
ரெண்டாவது அந்த வாயில்லா ஜெவனுக்கும் நம்ம ஸ்டைல்ல தண்ணி அடிக்கறது(pump water!) புடிச்சிருக்கு போல ஹிஹி!
நல்ல பதிவு
ReplyDelete