Thursday, June 14, 2012

பஞ்சரு - டிஞ்சரு !!!



இரவு மணி பத்தை எட்டியிருந்தது

வேலை பளுவில் நேரம் போனதே தெரியவில்லை

வீட்டிற்கு செல்ல அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும், வீட்டில் சசி வேறு காத்துக் கொண்டிருப்பாள்

அவசரமாக கிளம்பியதில் வண்டியில் காற்று குறைந்ததிருந்ததை கவனிக்க வில்லை, நூறு அடி ஓடியதும் குஷ்பு இடுப்பை கிள்ளியது போல ஆட ஆரம்பித்தது

இது என்ன கெரெகம்னு தெரியலையே, இறங்கி பார்த்தால் வண்டி பஞ்சர்
ச்சை இதுவேற நேரங்காலம் தெரியாம, இன்னேரத்துக்கு பஞ்சர் கடைக்கு எங்க போறது? வீட்டுக்கு போய் சேர்ந்த மாதிரிதான்

வேறு வழியில்லாமல் வண்டியை தள்ளிக் கொண்டு நடந்தேன், அருகில் ஒரு பஞ்சர் கடை இருக்கும், அதுவும் பூட்டி இருந்தது, வாசலில் போன் நம்பர் இருந்தது, அழைத்தேன்,

பாஸ் வண்டி பஞ்சர், வரமுடியுமா?

பாஸ் கடை சாத்துற நேரம் 10 மணிக்கு கடைய பூட்டிருவான், பாவம் அவருக்கு பெட்ரோல் போடும் நேரம் போல, சரி விதியே என தள்ளிக் கொண்டு நடந்தேன் (வண்டியைதான் பாஸ்)

காலையில யாரு மூஞ்சில முழிச்சேன், பொண்டாட்டி மூஞ்சிலயா? ச்சே இருக்காது அவளுக்கு கோவம் வந்தாதான் உள்ளேயே வச்சு குமுறுவாளே, பின்ன யாரு? ஆங் ஞாபகம் வந்திருச்சு

பக்கத்து வீட்டுக்காரன் மூஞ்சிலதான், காலையில கதவ தொறந்து வெளிய வந்ததும், சிங்கம்புலி போன்ற ஒரு உருவம் பாய்ந்து ஓடியதும் அவரை துரத்திக் கொண்டு வந்த விஷ்ணு சக்கரம் போன்ற குண்டா ஒன்று என் காலை பதம்பார்த்ததும் நினைவில் வந்தது, அடிக்கு தப்பிய புருசனையும், இடையில் வந்து கெடுத்த என்னையும் உஷ்ணபார்வை பார்த்துக் கொண்டு அவன் மனைவி சென்றதும் நினைவுக்கு வந்தது

சரிதான், அவன அடிக்க முடியாத கடுப்புலதான் என்னை சாபம் விட்டுட்டா போலருக்கு, மனசில் சொல்லிக் கொண்டே ஏறக்குறை ஒரு கிலோ மீட்டர் தள்ளிக் கொண்டே ஒருவழியாக ஒரு பஞ்சர் கடையை கண்டுபிடித்துவிட்டேன்.

உள்ளே அரையிருட்டில் ஒரு பல்லி சுவற்றில் ஒட்டிக் கொண்டு சரக் சரக்கென சத்தம் எழுப்பி கொண்டிருந்தது, கண்ணை கசக்கிவிட்டு நன்றாக உத்து பார்த்த போதுதான் தெரிந்தது அது பல்லி இல்லை பஞ்சர் கடைக்காரர்


என்னையா வேணும்? பல்லியின் குரல்

பேக் வீல் பஞ்சராயிருச்சுன்னா

இரு வரேன், கொஞ்ச நேர சத்தத்திற்கு பிறகு எழுந்து வந்தார்.

ஸ்பேனரை வைத்துக் கொண்டு ரொம்ப நேரமாக எதையோ திருகி கொண்டு இருந்தார்

என்னன்னா ஆச்சு?

எப்படி கழட்டுறதுன்னு பார்த்துட்டு இருந்தேன், இப்ப வெளங்கிருச்சு

என்னது இப்பத்தான் வெளங்குதா?

ஒருவழியாக எப்படியோ வீலை கழற்றி, டியூபை வெளியில் எடுத்தார், காற்றை நிரப்பி தண்ணீர் தொட்டிக்குள் வைத்து அமுக்கி பார்க்க, மொத்த டியூபில் ஒரு வழியில் மட்டும் காற்று போய் கொண்டிருந்தது

கொஞ்சநேரம் யோசித்தவர் மீண்டும் ஒருமுறை சோதித்தார், இப்படியே பல்லி விழுந்த டீயை குடிக்கவா வேண்டாமான்னு யோசனை பண்ணுவதை போல யோசித்து கொண்டே இருந்தார்

நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது

என்னன்னா யோசிக்கறீங்க, சீக்கிரம் பஞ்சர் ஒட்டுங்க, டைம் ஆகுது

அது இல்ல தம்பி, இது சாதாரண பஞ்சர் இல்லை, மிகப்பெரிய பஞ்சர், அதான் யோசிக்கறேன்

மிகப்பெரிய பஞ்சரா சின்னாதாதான ஓட்ட விழுந்திருக்கு

அங்கதான் நீங்க தப்பு பண்ணறீங்க, மத்த பஞ்சரெல்லாம் பார்த்தீங்கன்னா முள்ளு குத்தியோ கம்மி கிழிச்சே பஞ்சராகும், ஆனா இது அப்படியில்ல, ஜாயிண்ட்டுல விட்டுருக்கு

அதானால என்ன? சின்ன ஓட்டதான பஞ்சர் போடுங்க

என்ன தம்பி சொல்லறீங்க, இதை சாதாரணமா பஞ்சர் போட்டா சீக்கிரம் விட்டுடும், அப்புறம் டியூபே கிழிஞ்சு போயிரும், அதனால…..!

அதனால?

அதனால நல்ல பெரிய பஞ்சரா போட்டு, மேல ஒரு டியூப வெச்சு வல்கனைசிங் பண்ணிட்டா அப்படியே நின்னுடும், டியூப் ஒன்னும் ஆகாது, ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்

எவ்வளவு?

ஒரு நூத்தி முப்பது ரூபா ஆகும்

ஓகே சனியன் தலைவிரிக்க ஆரம்பிச்சிருச்சு, இனி ஜடை பிண்ணாம விடாது, சுத்தியும் இந்த நேரத்துக்கு பஞ்சர் கடையும் இருக்காது, டயரை வேற கழட்டிட்டான்

இல்லன்னே பரவால்ல, சாதாரண பஞ்சரே ஒட்டிடுங்க, என்கிட்ட அவ்வளவு காசு இல்ல

என்ன தம்பி இப்படி சொல்லறீங்க, நான் எவ்வளவு பெரிய பஞ்சர்காரன் தெரியுமா? சுத்துபத்து உள்ள எல்லாரும் எங்கிட்டதான் பஞ்சர் ஒட்ட வருவாங்க தெரியுமா? சுத்தி பாருங்க எவ்ளோ டயரு குவிஞ்சு கிடக்குன்னு? எல்லாம் நான் ஒட்டுனதுதான்

அடபாவி பஞ்சர் கடைன்னாலே பத்து டயர சும்மாதானடா சுத்தி வச்சிருப்பாங்க

இல்லன்னா நான் என்ன சொல்ல வரேன்னா

தம்பி தொழில் சுத்தம் வேணும் தம்பி , சாதாரணமா பஞ்சர் ஒட்டுனா அப்புறம் பாதிவழில எதாச்சும் ஆனா என்னத்தான் குத்தம் சொல்லுவீங்க, நான் சரியான வேலை மட்டும்தான் பண்ணுவேன், அரைகுறை வேலையெல்லாம் பண்ண மாட்டேன்

விடமாட்டான் போலருக்கே, அடியேய் பக்கத்துவீட்டுக்காரி விஷ்ணு சக்கரத்தை ஏவி விளங்காம பண்ணிட்டியேடி, சரிய்யா ஒட்டி தொலை


ஆ அப்படி சொல்லுங்க, பல்லிக்கு சந்தோசம் வந்திருச்சு, கடகடவென டுயூபை தேய்த்து சொல்யூசன போட்டு, டியூப ஒட்டி வல்கனைசிங்ல மாட்டி சுவிட்ச போட்டு உட்கார்ந்துட்டாரு

அவனுக்கென்ன முப்பது ரூபால முடியவேண்டியது கூட நூறு ரூபா சேர்த்து கிடைச்சா சந்தோசம்தான், மாசக்கடைசியில என்நிலைமை?

சார் நானெல்லாம் எப்படி தெரியுமா சார்? தொழில் சுத்தம் சார், என்கிட்ட ஒருமுறை பஞ்சர் ஒட்டிட்டு போனவங்க மறுக்கா வந்ததே இல்லை சார், அவ்வளவு பக்காவா பண்ணுவேன்

மத்தவங்க எல்லாம் டயர செக் பண்ணவே மாட்டாங்க, நான் அப்படி இல்லை, டயரை தரோவா செக் பண்ணித்தான் விடுவேன், இப்ப பாருங்க என்றபடி, என்னுடைய வண்டியின் டயரை கையில் பிடித்துக் கொண்டு டயரினுள் கையை விட்டு சுத்த ஆரம்பித்தான்

டயருக்குள்ள கைய விட்டு பாஸ்டா சுத்தனும் சார், அப்பத்தான் கல்லு, முள்ளு எதுனாலும் தெரியும், நிறைய பேரு சும்மா ஒப்புக்கு கைய விட்டு பாப்பானுக, உள்ள எதுனா இருந்து குத்திருமோன்னு, நானெல்லாம் அப்படி இல்ல, தைரியமா கைய சுத்துவேன், எத்தினி காயம் ஆகுதுன்னு நினைக்கறீங்க?

மாசத்துக்கு எண்ணூறு காயம் ஆகுது, நான் அவரின் கைகளை பார்த்தேன், சட்டென்று உள்ளிளுத்துக் கொண்டார், அதெல்லாம் உடனே ஆறிடுச்சு சார், இப்ப ஒன்னும் இல்ல

ஒருவழியாக தேடிக் கண்டுபிடுத்து 0.2 MM அளவுள்ள ஒரு தகரத்தை கண்டுபிடித்துக் கொடுத்தார், நான் அப்பவே சொன்னேன் பார்த்தீங்கள்ள, அவர் பார்வையில் எவரெஸ்டை தொட்ட பெருமிதம் வழிந்தது.

நீங்க ஏன் சார் இவ்வளவு கஷ்டப்படுறீங்க, பேசாம டியூப்லெஸ் டயர் வாங்கி போட்டுட வேண்டியதுதான? என்கிட்டயே இருக்கு சார், அந்த பஞ்சர்கூட நான் ஒட்டுவேன், வாங்கிக்கிறிங்களா?

அடுத்த ஆப்பா, சிக்கமாட்டண்டி

டியூப்லெஸ் டயரா? அது வாங்கி மாட்டுனா நான் ஏன் உன்கிட்ட வரேன், அதுக்குதான் பஞ்சர் ஒட்ட ரெடிமேட் கிட் இருக்குதே, அதை வாங்கி நானே ஒட்டிக்க மாட்டனா?

அதுதான் நடக்காது சார், அது ஒன்னும் அவ்வளவு சாதாரணமானது இல்ல, இப்படித்தான் ஒரு கார்க்காரங்க, டியூப்லெஸ் டயரு பஞ்சர் ஒட்ட பார்த்தாங்க, ஆனா அவங்கனால டயர கழட்டவோ தூக்கி ஒட்டவோ முடியல, அதுக்கெல்லாம் தெம்பு வேணும் சார், கடசியில இங்கதான் வந்தாங்க, நான் தான் சரத்கொமாரு மாதிரி பம்பர தூக்கி என் தொடயில வச்சுட்டு பஞ்சரு ஒட்டுனேன்

ஆஹா இவனும் உலகநாயகன் கோஷ்டி போல, இவங்கிட்ட வாய குடுத்தா நாமதான் மூடிக்கனும்

அய்யோ சாமி ஆளவிடு, இன்னும் எவ்ளோ நேரம் ஆகும், நான் கிளம்பனும், டைம் ஆச்சு

இதோ இப்ப முடிஞ்சிரும் சார், மாட்டிடலாம்

ஒருவழியாக வல்கனைசிங்கில் இருந்து டியூபை எடுத்து டயரில் மாட்டி வண்டியில் பொருத்த ஆரம்பித்தார், வேலை முடிந்ததும், நான் நூற்றைம்பது ரூபாய் கொடுக்க

சில்லறை இல்லையா சார்? இருங்க பாக்கி எடுத்துவரேன் என்று சொல்லிவிட்டு கடைக்குள் போனார்.

அப்போது சர்ரென்று இருவர் ஒரு வண்டியில் வந்து இறங்கினர், கையில் ஒரு டயரோடு, இறங்கியவுடனே ஒருவர் கத்த ஆரம்பித்தார்

டேய் ங்@#$%^&*, அவனே, இவனே, உனக்கெல்லாம் பஞ்சர் ஒட்ட தெரியுமாடா? இல்ல ஊர்ல பன்னி மேய்ச்சிட்டு இருந்தியா? ரெண்டு நாளா இதே டயருக்கு பஞ்சர் ஒட்டறேன் பஞ்சர் ஒட்டறேன்னு சொல்லி பணம் புடுங்குனயே, கடைசியா வல்கனைசிங் கூட பண்ணி காசப்புடுங்கிட்டியேடா ?

வாங்குன காசுக்கு கொஞ்சமாவது வேலை பார்த்திருக்கியா?

மிச்ச காசை கொடுக்க வந்த பஞ்சர் கடைக்காரர் மூஞ்சி வெளிறி போயிருந்தது, மிக்க தயக்கத்துடன் மீதி காசை கொடுத்தார்.

இருங்க பார்த்துட்டு சொல்றேன், அவசரப்பட்டு சத்தம் போடாதீங்க

என்னடா ம#$%று சத்தம் போடாத? #$%^& போடாதன்னு, வந்தவர் அர்ச்சனையை கண்டினியூ செய்து கொண்டிருந்தார்.

மீதியை வாங்கி பாக்கெட்டில் போட்டுவிட்டு வண்டியை கிளப்பி ஸ்டார்ட் செய்தேன்

கண்ணாடியில் தெரிந்த என் முகம் பஞ்சர் கடைக்காரரை விட கேவலமாக வெளிறி போயிருந்தது

வீடு போய் சேருவமா?   


18 comments:

  1. //குஷ்பு இடுப்பை கிள்ளியது போல//

    இதுக்கு ஒரு பதிவு போடணும் போல

    ReplyDelete
  2. //சனியன் தலைவிரிக்க ஆரம்பிச்சிருச்சு, இனி ஜடை பிண்ணாம விடாது,//

    இதை படிச்சதுமே புரிஞ்சிடுச்சி என்ன நடந்து இருக்கும்னு - சரி விடு மாப்ளே ஒரு கட்டிங் போச்சி

    ReplyDelete
  3. @ மனசாட்சி

    மாம்ஸ் இவ்ளோ பெரிய பதிவ பார்த்தாலே எல்லாரும் ஓடிருவாங்களே? அப்புறம் எப்படி மாம்ஸ் வரிக்கு வரி ஆராய்ச்சி பண்ணி குஷ்பு இடுப்ப பத்தி ஒரு பதிவு போடனும்னு முடிவு பண்ணீங்க?

    ReplyDelete
  4. //போச்சி

    //@ இரவு வானம்



    மாம்ஸ் இவ்ளோ பெரிய பதிவ பார்த்தாலே எல்லாரும் ஓடிருவாங்களே? அப்புறம் எப்படி மாம்ஸ் வரிக்கு வரி ஆராய்ச்சி பண்ணி குஷ்பு இடுப்ப பத்தி ஒரு பதிவு போடனும்னு முடிவு பண்ணீங்க?//

    மாப்ளே, எல்லோரும் வேற மனசாட்சி வேற

    ReplyDelete
  5. சரி இன்னைக்கு யாரு முகத்தில் விழித்தீரோ

    ReplyDelete
  6. நம்ம சசி முகத்துல மாம்ஸ் :-)

    ReplyDelete
  7. //இரவு வானம் said...
    நம்ம சசி முகத்துல மாம்ஸ் :-)
    //

    வெளங்கிடும்

    ReplyDelete
  8. மனசாட்சி™ said...
    //இரவு வானம் said...
    நம்ம சசி முகத்துல மாம்ஸ் :-)
    //

    வெளங்கிடும்//

    அதான் வெளங்கல மாம்ஸ்

    ReplyDelete
  9. //உள்ளே அரையிருட்டில் ஒரு பல்லி சுவற்றில் ஒட்டிக் கொண்டு சரக் சரக்கென சத்தம் எழுப்பி கொண்டிருந்தது,//

    //அவரை துரத்திக் கொண்டு வந்த விஷ்ணு சக்கரம் போன்ற குண்டா //

    //குஷ்பு இடுப்பை கிள்ளியது போல ஆட ஆரம்பித்தது// என்ன ஒரு இலக்கிய பதிவு உவமைகளும் உவமானங்களும் அடிவயிற்றில் அமிலம் கொட்டியது போல பதற வைக்கிறது .................சும்மா சொல்லகூடாது ..............வயிற்றில் வலி ஏற்படும் அளவிற்கு கண்கள் குளமாக இடியாய் சிரித்ததில் ..............இன்றைக்கு இயல்பே பாதிக்கப்பட்டுவிட்டது ..............பதிவு என்றால் இதுதான் .

    ReplyDelete
  10. நல்ல அனுபவம் சார் ,நானும் அனுபவித்துளேன் .வரிகள் யதார்த்தம் .

    ReplyDelete
  11. மாப்ள! அவனேதான்....அந்த நாதாரிதான்...என் வண்டிக்கும் பஞ்சா் ஒட்டினான்...என்ன டயர்க்குள்ள ஸ்பேனரை உள்ள வச்சு மாட்டி கொடுத்துட்டான்..!

    ReplyDelete
  12. எனக்கும் இதே நடந்தது ஆனா கடைசில வந்து கத்துனவன் எடத்துல நான் இப்போ என்ன நடந்ததுன்னு பாக்கலாம்

    நான் : டேய் @#$@ என்னாட நொ!#@$@$ குடுத்துருக்க வெ!$#@#$..

    அவன் : அதான் நான் சொன்னேன்ல டீப் மாததனும்னு

    நான் : அது டீப்பில்லடா ட்யூப் #@$@#$@$ நீ ஒரு $#$%#%$ %##@$@#$@$ வேண்டாம் காச திருப்பிக்குடுடா $@$%%*

    ஆனா வெளிரிப்போனது இன்னொருத்தர் முகம்

    எங்க அப்பா!!!!

    நான் அவன திட்டும்போது பின்னாடி தான் நின்னுட்றுந்தாரு:)

    ReplyDelete
  13. @ கோவை மு.சரளா

    நன்றி அக்கா

    ReplyDelete
  14. @ sakthi

    மிக்க நன்றி சக்தி சார்

    ReplyDelete
  15. @ வீடு சுரேஸ்குமார் said...
    மாப்ள! அவனேதான்....அந்த நாதாரிதான்...என் வண்டிக்கும் பஞ்சா் ஒட்டினான்...என்ன டயர்க்குள்ள ஸ்பேனரை உள்ள வச்சு மாட்டி கொடுத்துட்டான்..!//

    அய் மாம்ஸ் ஒரு ஸ்பேனர் லாபம் உங்களுக்கு

    ReplyDelete
  16. @ மௌனகுரு

    வீட்டுக்கு வந்ததும் உங்கள வெளுத்திருப்பாரே :-)

    ReplyDelete
  17. வீடு போய் சேருவமா????///வூட்டுக்கு வந்து தானே பதிவு(பஞ்சர்?)போட்டிருக்கீங்க?

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!