கங்கை நதிநீர் மாசுபடுவதை தடுக்க கோரியும், கும்பமேளா நடைபெறும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கல்குவாரிகளை அகற்ற கோரியும் 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சாமியார் நிகமானந்தா இறந்து போனார், மருத்துவமனையில் அவருக்கு விஷ ஊசி போட்டு கொன்னுட்டதாகவும் நியூஸ் வருது, அது உண்மையோ என்னவோ இன்னமும் அவரோட உடலை உறவினர்கள்கிட்ட கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க
கங்கை நதியோ எந்த நதியோ நம்ம நாட்டுக்கு நீராதாரம் ரொம்ப முக்கியம், இருக்குற நதிகளை எல்லாம் இப்படியே கண்டுக்காம விட்டுட்டோம்னா எதிர்காலத்துல நீருக்காகவும் வெளிநாட்டுல கையேந்தி நிக்க வேண்டிய நிலைமை வந்துரும், ஏற்கனவே ஓடுற நதிகள்ல சாக்கடை தண்ணியவும், கெமிக்கல் தண்ணியவும் கலந்து விட்டுட்டு இருக்காங்க, நம்ம ஆளுங்க விளக்கெண்ணையை தடவிகிட்டு சோப்பு ஷாம்ப போட்டுட்டு எருமை மாட்டு கூட போட்டி போட்டு குளிச்சி நாறடிச்சிட்டு இருக்காங்க
ஒரு நல்ல விசயத்துக்காக உண்ணாவிரதம் இருக்குற இவர மாதிரியான ஆட்கள கவருமெண்டுதான் கண்டுக்கலைன்னாலும், மீடியாவாவது கண்டுக்கலாம்ல, மக்கள் நாட்டுல நடக்கற விசயங்களை தெரிஞ்சுக்கறதே மீடியாவ வச்சுத்தான், சின்ன சின்ன விசயத்தையெல்லாம் பூதாகரமாக்குற வட இந்தியா மீடியாக்காரங்க எல்லாம் இப்ப எங்க போனாங்க?
மீடியான்னாலே பரபரப்பான செய்திகள மட்டும்தான் போடனும்னு விதி எதாச்சும் இருக்கா? இனிமே பாருங்க குற்றம் நடந்தது என்ன? நிகமானந்தா செத்தது எப்படின்னு போட்டு காசு சம்பாதிப்பானுங்க, கொடுமைங்க
எப்படியோ சமச்சீர் கல்வி பிரச்சனையால ஸ்கூல் தொறக்கறது, பாடம் நடத்துறது எல்லாமே ஜீன் ஜீலைன்னு தள்ளி போய்ட்டே இருக்குது, பசங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம்தான், ஜாலியா ஒரு நோட்டு புக்கோட விளையாண்டுகிட்டு இருக்கானுக, ரொம்ப ஆடாதீங்கடா பசங்களா பிரச்சனை முடிஞ்சதும் மொத்தமா சனி ஞாயிறு ஸ்பெசல் கிளாஸ் வச்சு கொன்னெடுக்க போறாங்க, அப்புறம் மூக்காலதான் அழுகணும், அப்புறம் அம்மாவ திட்டக்கூடாது, அட நான் அவங்க சொந்த அம்மாவ சொன்னேங்க, சனி ஞாயிறு எல்லாம் அவங்க சந்தோசமா இருப்பாங்கல்ல, இருந்தாலும் நான் படிக்கும் போதெல்லாம் இந்த மாதிரி எந்த பிரச்சனையுமே வரலைன்னு கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்குதுங்க L
நம்ம ஊருல எல்லா பேங்குகாரனும், டெபிட் கார்டயும், கிரடிட் கார்டயும் எல்லாருக்கும் சல்லிசா கொடுத்தாலும், ஒரு பேங்குகாரனாவது அத எப்படி உபயோகிக்கனும்னு சொல்லி கொடுத்துருக்கானுகலா? இல்லவே இல்லை, எத்தனை ஏடிஎம் வச்சாலும் எப்ப பார்த்தாலும் ஏடிஎம் வாசல்ல ஒரு பெரிய கியூவே நிக்கும், ஏன்னா உள்ள போன ஆளுக்கு எத அமுக்கறது, எத டச் பண்ணுறதுன்னு ஒன்னுமே தெரியாது, ஒரு கால் மணி நேரம் அவரே எதையாச்சும் அமுக்கி பார்த்துட்டு ஒன்னும் வேலைக்காகலைன்னு அப்புறம் வெளில நிக்குறவங்க யாரையாச்சும் கூப்பிடுவாரு, அப்புறம் உள்ள போனவரும் போய் இரண்டு பேரும் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி ஒருவழியா பணம் எடுத்துட்டு வெளில வரதுக்குள்ள வெளில நிக்குறவங்களுக்கு தாவு தீர்ந்துரும்
இதயெல்லாம் பார்த்துட்டுதான் என்னவோ ரஷ்யாவுல பேசும் ஏடிஎம்ம அறிமுகபடுத்த போறாங்களாம், எதையும் அமுக்கி கஷ்டப்பட வேண்டாம், அது கூட பேசியே ஈசியா பணத்தை எடுத்துட்டு வந்துரலாம், அதே மாதிரியே இங்கயும் நம்ம ஊர்ல பண்ணுனா ரொம்ப நல்லா இருக்கும், அப்படியே ஊருக்கு தகுந்த மாதிரி லாங்குவேஜ்ல பேசுனா இன்னமும் நல்லா இருக்கும், உதாரணமா,
சென்னை ஏடிஎம்
டேய் கய்தே, கசுமாலம், என்னடா அப்பாலர்ந்து உள்ள சொருகினே இருக்க, முதல்ல உன் அக்கவுண்டாண்ட பணத்தை போடு, அப்பாலிக்கா கார்ட உள்ள வுடு, சும்மா சும்மா சொருகினு இருந்தே உன் நெஞ்சுல இருக்குற மஞ்சா சோத்தை எடுத்துருவேன், அக்காங்
நெல்லை ஏடிஎம்
யேல செத்த மூதி, யே நானும் காலைல இருந்து பாக்கேன், சும்மா சும்மா உள்ள வுட்டுகிட்டு இருக்கே, யே மக்கா முதல்ல உன் அக்கவுண்ட்ல பணத்தை போடுலே, அப்புறம் இங்க வந்து பணத்தை எடு, யேல காது கேட்கா, போல வெளில
வழக்கம் போல ஆரம்பிச்சிட்டாங்கையா ரஜினிய பத்தின நியூச, அவரு அம்மாவுக்கு வாழ்த்து சொன்னத வச்சு மறுபடியும் ஒரு ஆட்டம் போட்டுட்டாங்க, ஏன் அவரு அம்மாவுக்கு வாழ்த்து சொன்னத பத்தித்தான் தெரிஞ்சதா? அப்புறம் கலைஞர் கூட பேசுன பத்தி தெரியலையாக்கும்? ஏன் எல்லாருமேதான மாற்றம் மாற்றம்னு சொல்லீட்டு இருந்தாங்க, அப்ப இருந்த ஜெ ஆட்சி அப்படி, இப்ப நடந்த ஆட்சி மாற்றம் இப்படி, ஏன் உண்மைய சொல்லக்கூடாதா?
என்னமோ ரஜினி மட்டும்தான் பாசத்தலைவர் பாராட்டு விழாவுல கலந்துக்கிட்ட மாதிரியும், வேற எந்த நடிகருமே கலந்துக்காத மாதிரியும் அல்லவா பேசுறாங்க, முடிஞ்சா முன்னாடி கலைஞர் ஆட்சியில நிகழ்சிகள்ள பங்கேற்ற நடிகர்கள்ள யாரெல்லாம் இப்ப அம்மாவுக்கு வாழ்த்து சொன்னாங்கலோ எல்லாரையும் விமர்சியுங்க, அதுதான் நடுநிலைத்தனம், அத விட்டுட்டு ரஜினிய மட்டும் விமர்சனம் பண்ணுனா அது ரஜினி மேல உள்ள காழ்ப்புணர்ச்சியே தவிர வேற எதுவும் இல்லை
என்னமோ அந்தர்பல்டி அடிச்சாராம், ஏன் கமல் கூடத்தான் கெளதமியோடவும் புள்ள குட்டியோடவும் ஜெ வீட்டுக்கே போய் பாராட்டு தெரிவிச்சிட்டு வந்தாரு, அவரெல்லாம் கலைஞர் கூட பேசுனதே இல்லையா? இல்லை ரஜினி அளவுக்கு கமல் வொர்த் இல்லைன்னு உங்களுக்கு தோணுதா? அப்படி தோணுனா தாராளமா ரஜினிய பத்தி விமர்சனம் பண்ணுங்க, இன்னமும் விஜய், அவங்க அப்பா, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்னு எல்லாரும் இருக்காங்க, அவங்களையும் விமர்சனம் பண்ணி நடுநிலைவாதின்னு நிரூபியுங்க
படிச்சதில் பிடிச்சது
சமீபத்துல நான் படிச்ச பதிவுகள்ளயே ரொம்ப பிடிச்சது நண்பர் முத்துசிவா கலைஞர வச்சு எழுதிய எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பதிவுதான், படிச்சு சிரிச்சு சிரிச்சு போதும் போதும்னு ஆகிருச்சு, நான் கலைஞர் சிம்பு மாதிரி டிரஸ் போட்டு ஆடுன மாதிரி வேற நினைச்சு பார்த்தேன்
திருவிளையாடல் படத்துல தனுஷ் வளர்மதி வயசுக்கு வந்துட்டான்னு பேனர் வச்சு பங்சன் நடத்தி கொண்டாடுவாரு, இப்பவெல்லாம் பசங்க யாரும் அப்படி பேனர் வைக்க வேண்டியது இல்லை, பொண்ண பெத்த அப்பன்காரங்களே அப்படி வச்சிடுறாங்க, திருப்பூர்ல பயர் சர்வீஸ் ஆபீஸ் பக்கம் ஒரு சின்ன மண்டபம் இருக்கு, அங்க மாசத்துல ஒரு பத்து சீராவது நடக்கும், அது மெயின் ரோட்டுல இருக்கறதுதானால அந்த வழியா போறவங்க எல்லாரும் கண்டிப்பா பார்த்துட்டுதான் போயாகணும்,
அப்படித்தான் ஒரு சின்ன பொண்ணு போட்டோ போட்டு பிளக்ஸ் போர்டு செஞ்சு வெளிய வச்சிருந்தாங்க அத பார்த்துட்டு ரெண்டு பேர் ஆபாசமா கமெண்ட் அடிச்சிட்டு இருந்தாங்க, அந்த காலத்துலதான் பொண்ணு பெரிய மனுசியாகிட்டான்னு சொந்தகாரங்களுக்கு தெரியனும்னு விழா கொண்டாடுனாங்க, சரி அதே மாதிரி இப்பவும் விழா கொண்டாடுறது தப்பில்லை, ஆனா இந்த மாதிரி பிளக்ஸ் போர்டு கலாச்சாரம் வேணுமா?
ரோட்டுல போறவங்க யாராச்சும் ஆபாசமா கமெண்ட் அடிக்கறதை கேட்டா பெத்தவங்க மனசு சங்கடப்படாதா? அப்படியே பிளக்ஸ் போர்டு வச்சுத்தான் ஆகணும்னா போட்டோ போடாம வெறும் பேர் மட்டும் போடுறதோட நிறுத்திக்கணும்
இந்த வீடியோவில் பெண்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ளனும்னு சொல்லி தராங்க, நல்லா பார்த்து டிரைனிங் எடுத்துக்கோங்க, டிரைனிங் மெட்டீரியல் வேணும்னா உங்க தம்பியவோ அண்ணனையோ யூஸ் பண்ணிக்கோங்க, அவங்க திருப்பி அடிச்சாங்கன்னா நான் பொறுப்பில்லை, மத்தபடி ஆண்கள் மன்னிச்சூ...
அன்புடன்
இரவுவானம்