Tuesday, February 5, 2013

லவ் பண்ணலாமா ??!!



ஏண்டி உனக்கு கேட்கறதுக்கு வேற எதுவுமே தோணலையா ?

ப்ளீஸ்டா ப்ளீஸ்டா எனக்கு இதுதான் வேணும் !

முடியாது வேற ஏதாச்சும் கேளு, மொதல் தடவையா வாங்கி குடுக்கறேன், நல்லதா எதாச்சும் கேளு.

ம்ஹூம் எனக்கு இதான் வேணும், வாங்கித்தா

எதுக்கு என்ன செருப்பாலயே அடிக்கவா ?!!

ச்சீ, அதுக்கு நான் கேட்கல, எனக்கு செருப்புதான் வேணும், வாங்கி தா

சுசியும் சிவாவும் காதலிக்க ஆரம்பித்து ஒரு மாதம் தாண்டியாயிற்று, தன் காதலிக்காக முதல் தடவை பரிசளிக்க விரும்பி என்ன வேண்டுமென்று சுசியிடம் கேட்டதுதான் மேற்கண்ட உரையாடல்.

சரி சரி வேற வழி? முதல் தடவை ஆசையா கேட்டுட்ட, சரி அதையே வாங்கித்தரேன்.

ம்ம்ம் சூப்பரா இருக்கணும், பார்க்குறேன் உன் டேஸ்ட் எப்படி இருக்குன்னு ?

பாரு பாரு சரி சைஸ் சொல்லுடி?

என்ன சைஸ் ?

செருப்பு சைஸ்தான்

நீயெ கெஸ் பண்ணு

நானே கெஸ் பண்றதா? வேற எதாச்சும் கெஸ் பண்ண சொன்னா பண்ணிடுவேன், இத எப்படிடி கெஸ் பண்ண?

ச்சீ போடா

சரி சரி வெட்கப்படாத சொல்லு

சொல்ல மாட்டென், என்ன லவ் பண்ணறல்ல, நீயே கண்டுபுடிச்சி வாங்கிட்டு வா,

டீ என்னால முடியாது, சொல்லு சொல்லு

எனக்கு தெரியாது, கரைக்டா வாங்கி தரலைன்னா உங்கூட ஒரு வாரம் பேச மாட்டேன்.

அய்யோ வேணாம், வேணாம், ப்ளீஸ்மா சொல்லிரு

பேச பேச போன் கட்டாகியது.

ச்சே வச்சுட்டாளே என்ன பண்றது? சரி காதல் விட்ட வழி, குத்து மதிப்பா ஒன்ன வாங்குவோம்.

நல்ல கடையாக தேடிப்பிடித்து அவனுக்கு பிடித்த மாதிரி ஒரு மாடல் செருப்பை கடவுளை வேண்டிக் கொண்டு குத்து மதிப்பாக அவளுக்கு பொருந்தும் என்று நினைத்த சைசில் வாங்கியும் கொடுத்துவிட்டான்.


அடுத்த நாள்

போன் ரிங்கியது

காலிங் சுசி

அய்யோ கடவுளே கரக்டா இருக்கணுமே, இல்லைன்னா பேச மாட்டாளே

ஹலோ

டேய், உன்னோட கிப்ட் கிடைச்சது, ரொம்ப நல்லாருக்கு

பொய் சொல்லாத

உண்மையாத்தான்

ஓக்கே அந்த செருப்பு எப்படி கரைக்டா இருந்துச்சா ?

ம்ம்ம் இருந்துச்சு இருந்துச்சு, கால விட ரெண்டு இஞ்ச் கம்மியா ?

என்னடி சொல்ற ? சரியா இல்லையா ??

ம்ம்ம் ரொம்ப சின்னதா இருக்கு, கஷ்டப்பட்டு காலை நுழைக்க வேண்டியிருக்கு, ஒரு செருப்ப கூட உன்னால ஒழுங்கா பாத்து வாங்க முடியாதாடா ?

சாரிடி செல்லம், என்னால கெஸ் பண்ண முடியல, சரியாத்தான் இருக்கும்னு நினைச்சேன்.

நல்லா நினைச்ச போ

சாரிடி, சாரிடி செல்லக்குட்டி, ஒரு செருப்ப கூட ஒழுங்கா வாங்க முடியலையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு

பரவால்ல விடுடா, கொஞ்சம் டிரை பண்ணா போட்டுக்கலாம்தான்.

இல்ல, நான் சரியாத்தான் இருக்கும்னு நினைச்சேன்.

ம்ம்ம் சரியாத்தான் இருக்கு, பீல் பண்ணாத !!!

பொய் சொல்லாத, பர்ஸ்ட் டைம் ஒன்னு வாங்கி குடுக்கறேன், உருப்படியா வாங்கி குடுக்க முடியலைல்ல

டேய் செல்லம், ரொம்ப பீல் பண்ணாதடா, உன் செருப்பும் உன்ன மாதிரியேத்தான் என் வீட்டுல குடியேற நினைச்சிருக்கு, என்ன உன்னை முந்திருச்சு, அவ்வளவுதான்.

போடி லூசு

போடா

காதலிக்கும் இருவர் இதயங்களும் செருப்பு மாதிரித்தான் ஒன்று இல்லாமல் மற்றொன்றுக்கு உபயோகம் இல்லை, அவ்வகையில் செருப்பும் காதல் பரிசே ..!


டிஸ்கி : படித்துவிட்டு யாராவது செருப்பை கழட்ட விரும்பினால், வீட்டுக்கு வெளியே சென்று விடவும்