கடந்த சில நாட்களுக்கு முன்பு
மாலை 5 மணி இருக்கும், வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது
நண்பர் ஒருவர் கூப்பிட்டார்
டேய் செந்திலை பார்த்தியா?
இல்லையே, ஏண்டா?
ஒன்னுமில்லைடா அவங்க அம்மா கூப்பிட்டாங்க, காலையில வீட்டுல ஒரு சின்ன பிரச்சனையாம், கோவிச்சுகிட்டு சாப்பிடாம கொள்ளாம கிளம்பி போயிட்டானாம், இன்னும் வீட்டுக்கு வரலியாம், அவங்க அம்மா போன் பண்ணி கேட்டாங்க
நீ அவனோட போனுக்கு டிரை பண்ணுனியா?
நான் ஒரு மணி நேரமா கூப்பிடரேண்டா போன எடுக்கவே மாட்டேங்குறான், அவங்க வீட்டுல பயப்படுறாங்க
அப்படியா? எங்க போயிருப்பான், சரி நான் சக்தி பேக்கரிகிட்ட வெயிட் பண்றேன், நீ வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்
வண்டியை பேக்கரி முன் நிறுத்திவிட்டு, ஒரு டீ ஆர்டர் செய்துவிட்டு யோசித்தேன்
எங்க போயிருப்பான், ரொம்ப நல்ல பையனாச்சே, வீட்டுல சொல்லாம வெளில காலையே வைக்க மாட்டானே, சின்ன பிரச்சனைக்கா காலையில போனவன் இன்னும் வீட்டுக்கு வராம இருப்பான், போன் பண்ணுனாலும் எடுக்க மாட்டேங்குறானாம், சரி நாம டிரை பண்ணி பார்ப்போம்
திருப்பரம் குன்றத்தில் நீயிருந்தால் முருகா திருப்பணி மலை மீது எதிரொலிக்கும்ம்ம்ம்ம்……….
சே எடுக்க மாட்டேன்றானே, நாலைந்து முறை முயற்சி பண்ணியும் எடுக்காமல் வெறுத்து போய் டீ குடித்து முடிக்கவும் நண்பர் வரவும் சரியாக இருந்தது
டீ சாப்பிடரயாடா?
இல்லைடா வேணாம், இப்பத்தான் குடிச்சிட்டு வந்தேன், சொல்லி முடிக்கவும் அவனுக்கு போன் வந்தது
அவன தேடித்தான் போயிட்டு இருக்கோமா? நான் மட்டும் இல்லை, நாங்க ரெண்டு பேரும்தான், கவலைபடாதீங்க கண்டுபுடிச்சு கூட்டிட்டு வந்துடரோம்
அவங்க அம்மாதாண்டா, பயப்படுறாங்க, பையன பொட்ட புள்ள மாதிரி வளர்த்தா இப்படித்தான்
சரி விடுடா அவங்க கவலை அவங்களுக்கு, சரி முதல்ல பிரண்ட்ஸ் வீட்டுல எல்லா இடத்துலயும் போய் தேடுவோம்
ஒரு மணி நேரத்துக்கு பிறகு
டேய் மணி ஆறாகுது, எங்கயுமே வரலைங்கராங்க, அடுத்து எங்க போறது?
சரி கிரவுண்டுக்கு விடுடா அங்க இருக்கானான்னு பார்ப்போம்
இங்கயும் இல்லை, வேற எங்க போயிருப்பான்?
டேய் மச்சி ஒருவேளை நம்ம ரெகுலர் டாஸ்மாக் கடைக்கு போயிருப்பானோ?
அவனா பகல்லயா? கண்டிப்பா இருக்காது, நம்ம கூட சரக்கடிக்க வந்தாலே கடைக்கு பக்கமும் வரமாட்டான், வீட்டுக்கும் போக மாட்டான், அவனாவது பகல்ல சரக்கடிக்கறதாவது?
இல்லைடா மச்சி எனக்கு என்னவோ டவுட்டா இருக்குது அவன் அங்கதான் இருக்கனும் நேரா டாஸ்மாக் விடு
டாஸ்மார்க்க்க்க்
மாலை நேர தாக சாந்திக்காக குடிமகன்கள் கடையின் கம்பியை பிய்த்து கொண்டு உள்ளே போய் விடுவது போல அடிதடி போட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள்
ஒரு சீனியர் குடிகாரர், டேய் ங்#$%&^& நான் எப்பவுமே ஸ்டடிதாண்டா என்று யாரிடமோ கூறிக் கொண்டிருந்தார்
இன்னொருவர் ஸ்டாண்டு எடுக்காத டிவிஎஸ் 50 இல் ஏறிக் கொண்டு உயிரை குடுத்து மிதித்து கொண்டிருந்தார், ஆக்சிலேட்டரை வேறு புல்லாக முறுக்கியதில் வண்டி ஸ்டார்ட் ஆகி வீல் பயங்கரமாக சுத்திக் கொண்டிருந்தது
டேய் ஓடி வந்துர்ரா, அந்த நாதாரி ஸ்டாண்டு எடுக்காம வண்டி ஓட்டிட்டு இருக்கான், ஸ்டாண்டு கழண்டுச்சு நேரா நம்ம மேலதான் வந்து விட்டுடுவான்
இருவரும் வேகமாக விலகி நடந்தோம், பார் முழுக்க தேடியும் எங்கேயும் அவனை காணவில்லை
எங்கடா இங்கயும் காணலை?
ஒருவேளை பின்னால இருப்பானோ? நினைப்பை செயல்படுத்த பின்னால் நடந்தோம்
அங்கு நாங்கள் கண்ட காட்சி, திகைப்பை ஏற்படுத்தினாலும் கூடவே சிரிப்பும் வந்தது
அங்கு செந்தில் பாதி சாக்கடையில் உடல் நனைத்து ஒரு சின்ன பன்னிக்குட்டியை கட்டிபிடித்து படுத்திருந்தான்
அடப்பாவி எப்படி கிடக்கறான் பாருடா, சரி வா போய் தூக்குவோம்
டேய் செந்தில் செந்தில், எழுந்துருடா?
…………………………..
ஒரு பதிலும் காணவில்லை
முழிக்கறானா பாரு, டேய் கொய்யாலே சரக்கடிச்சாலும் டிச்சுக்குள்ளயாடா வந்து படுக்குறது, எழுந்துருடா வெண்ணை
நாங்கள் திட்டியதை கேட்டு அந்த பன்னிக்குட்டி ரோசப்பட்டு ஓடியது, ஆனால் இந்த பன்னி எழுந்திருப்பதாக தெரியவில்லை
டேய் இது வேலைகாவுறதில்ல, நான் போய் தண்ணி வாங்கிட்டு வரேன், நீ இவனை புடிச்சுக்கோ
சரி நான் புடிச்சிக்குறேன், நீ போயிட்டு வா
அவன் போனபிறகு செந்திலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன், சே எப்படி இருந்த பையன், ஈபில வேல, கவருமெண்டு ஜாப்பு, அப்பா வாத்தியாரு, அம்மா டீச்சரு, சின்னதான் ஒரு இமேஜ் பிராப்ளம்னாலே துடிச்சு போயிருவான், பிரண்டு கூட பேசும் போது லேசா வார்த்தை விட்டுட்டாலே கேவலமா நினைப்பானே, ஏதோ ஒரு பிரச்சனைக்காக இங்க வந்து தண்ணியடிச்சு இப்படி சாக்கடைல விழுந்து கிடக்கறானே
மப்பு எறங்கி முழுச்சு தன்னோட நிலைமைய பார்த்தான்னா எவ்வளவு கேவலமா பீல் பண்ணுவான், ம்ஹும்ம்ம்
என் யோசனையை நண்பன் கலைத்தான், டேய் தண்ணி கொண்டு வந்துட்டேன், முடிஞ்சளவு அவன வெளில தூக்கு
ம்ம்ம்ம் முடியலைடா, நீயும் வாடா
இரண்டு பேரும் சேர்ந்து அவனை இழுத்து வெளியில் கிடத்தினோம், அப்படியும் முட்டிங்கால் வரை சாக்கடைக்குள் இருந்தது
நண்பன் செந்தில் தலையில் தண்ணீரை ஊற்றினான், இப்படியே நாலைந்து முறை ஊற்றியபிறகு, செந்தில் மெதுவாக கண்ணை திறந்தான்
டேய் கண்ணு முழிச்சிட்டான், இன்னும் கொஞ்சம் ஊத்து
ஒரு வழியாக செந்தில் சுயநினைவுக்கு வந்தான், தன்னை சுதாரித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான், சாக்கடைக்குள் கிடந்த தன்னுடைய காலை பதறியடித்து தூக்கினான்
அய்யோ பாவம், தன்னோட பொசிசன பார்த்து ரொம்ப பீல் பண்ணுவான் போலருக்கு, சும்மாவே இமேஜ் பாக்குறவன், என்ன சொல்ல போறானோ என நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது
செந்தில் எங்களை பார்த்து ஒருவார்த்தை சொன்னான்
அது என்னவென்றால்
-
-
-
டேய் மச்சி நான் அடிச்ச சரக்கு செம சரக்குடா, சும்மா ஜிவ்வுன்னு தூக்கிருச்சு, இனிமே இதே சரக்க வாங்கி அடிப்போம்டா..!
டிஸ்கி 1 : இது ஒரு மொக்கை கதை, சத்தியமாக சொந்த அனுபவம் இல்லை, எனவே சொந்த அனுபவமா என கேட்பதை தவிர்க்கவும், சில விசயங்கள் உண்மையாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது
டிஸ்கி 2 : ஐயா இண்ட்லிகாரங்களே உங்களோட பதிவு இணைக்கும் பகுதியில மொக்கைன்னு ஒரு பிரிவ தயவு செஞ்சு உருவாக்குங்க, இந்த கதைய எல்லாம் படைப்புகள் பிரிவுல சேர்க்க எனக்கே அவமானமா இருக்குது