பேஸ்புக், டிவிட்டர், சமூகவலைதளங்கள் எல்லாத்துலயும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஸ்டேட்டஸ் போட்டு கிழிகிழின்னு கிழிக்கறாங்களே எதுக்கு? இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து திருந்திருவாங்கன்னா? அய்யய்யோ நம்மள இவ்வளவு பேரு திட்டி இருக்காங்களே நாம இனிமே இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு மாத்திக்குவாங்கன்னா? இல்லை நாம போடுற ஸ்டேட்டஸ் பார்த்து தப்பு பண்றவங்க திருந்திருவாங்கன்னுதான் எல்லாரும் நம்புறமா என்ன?
ஒன்னும் கிடையாது, நமக்கு தேவை டைம் பாஸ், அவங்களுக்கு அவங்க பண்றதுல பாஸ்(BOSS), நாளைக்கே எல்லாரும் திருந்தி நல்லவங்களா ஆகிட்டாங்கன்னு வச்சுக்கங்க, நீங்க எல்லாம் ஸ்டேட்டஸ் போட என்ன பண்ணுவீங்க? அதனால அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஒவ்வொருத்தனையா தேடி தேடி திட்டி ஸ்டேட்டஸ் போடுறதுக்கு பதிலா உருப்படியான விசயங்களா, பேங்க் சலான் பில்லப் பண்றதுல இருந்து இந்திய ஜனாதிபதியா ஆகற மேட்டர்வரைக்கும் மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய, தெரியாத விசயங்களை ஸ்டேட்டசா போட்டு நாலு பேருக்கு தெரிஞ்சுக்க வச்சா கொஞ்சமாவது உருப்படியா இருக்கும், நானும் டிரை பண்றேன் J முடியல.
வெளம்பர தொல்லை
டிவில புதுசா ஒரு பேர் அண்ட் லவ்லி விளம்பரம் பார்த்தேன், மூஞ்சில டேமேஜ் வந்த பொண்ணு ஸ்கின் டாக்டர்கிட்ட போய் என்ன பிரச்சனைன்னு கேட்குது, அந்த டாக்டரம்மாவும் இததெல்லாம் இருக்குதுன்னு சொல்லிட்டே வர அந்த பொண்ணும் பேர் அண்ட் லவ்லி பின்னாடி எழுதி இருக்கறதயும் சரிபார்க்குது, கடைசியா டாக்டர் டிரீட்மெண்டுக்காக பிரிஸ்கிரிப்சன் எழுதட்டுமான்னு கேட்க, அந்த பொண்ணு அதெல்லாம் வேணாம் அதுக்கெல்லாம் தீர்வு இந்த பேர் அண்ட் லவ்லியிலயே இருக்குது, நான் சும்மா செக் பண்ண வந்தேன்னு சொல்லிட்டு போகுது, கட் பண்ணா வலதுபக்கம் ஒரு ஷாட், இடது பக்கம் ஒரு ஷாட், நேரா நிக்க வச்சு ஒரு ஷாட், அடடே ஆச்சரியக்குறி அந்த பொண்ணு மூஞ்சில இருக்கற கரும்புள்ளி செம்புள்ளியெல்லாம் காணாம போயிருது, எதிர வர அந்த டாக்டர பாத்து உங்களுக்கும் வேணும்னான்னு கேட்குது.
அடேய் நாதாரிகளா அதென்னடா செவத்த புள்ளைய மாடலா போட்டு பேர்னஸ் கிரீம் விளம்பரம் எடுக்கறீங்க? உண்மையிலயே உங்க பேர்னஸ் கிரீம் போட்டு செவப்பா மாறுமுன்னா எங்க ஊரு அருக்காணி யாராவது வெச்சு செவப்பா மாத்தி காட்டுங்க பாப்போம்? சும்மா ஆறு வாரத்துல சிவப்பழகுன்னு பிலிம் காட்டுரது, எங்க பக்கத்து ஊட்டு அக்கா பதினாரு வருசமா பேர் அண்ட் லவ்லியதான் யூஸ் பண்ணுது, இன்னும் செவக்கலையே, வீட்டுக்கு டிஸ்டம்பர் ரெண்டு கோட்டிங் எக்ஸ்ட்ராவா அடிக்கிறமாதிரி முதல்ல ஒருதடவை பூசி அதுக்கு மேல பவுடர பூசி மறுபடியும் ஒருக்கா பேர் அண்ட் லவ்லி போட்டு அதுக்குமேல இன்னொருக்கா பவுடர பூசி ஈவில் டெட் படத்துல வர பேய்கணக்காதானடா நெறய பொண்ணுங்க சுத்திகிட்டு இருக்காங்க, மூஞ்சிக்கு கீழ முழங்கைய பாத்தாதான் தெரியும் நெய்வேலில வெட்டி எடுத்த நிலக்கரி கணக்கா ஒரிஜினல் கலர் இருக்கறது.
பொருள் தரமானதா, உண்மையானதா இருக்க வேண்டிய அவசியமே இல்லை போல, கோடிக்கணக்குல கொட்டிகொடுத்து விளம்பரம் பண்ணி பிராண்ட் நேம் மக்கள் மனசுல பதிய வச்சிடராங்க, சோப்புன்னா லக்ஸ், பேஸ்டுனா கோல்கேட், கிரீம்னா பேர் அண்ட் லவ்லின்னு, உண்மையா நல்ல பொருள உற்பத்தி பண்ணக்கூடியவன் இவனுங்க அக்கபோருக்கு நடுவுல நிக்க கூட முடியாம போயிடரது வருத்தப்படகூடிய விசயம்.
படித்ததில் பிடித்தது
உலகத்தில் எத்தனையோ மொழிகள் தோன்றி இருக்கிறது, காலப்போக்கில் காணமலும் போய் இருக்கின்றது, ஆனால் பல்வேறு விதமான தாக்குதலுக்கு உட்பட்டாலும் தக்கிமுக்கி இன்றைக்கு வரை தமிழ்மொழி தாக்குபிடித்து கொண்டு இருக்கிறது, கொஞ்சமாவது தமிழைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் அதுக்கு காரணம் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சேகரித்து வைத்த ஓலைச்சுவடிகளால்தான், இன்னும் பலநூற்றாண்டுகள் கடந்தும் தமிழை காக்க வேண்டும், உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு நூலகங்கள் தேவை, இணையத்திலும் பதிய வேண்டியது மிக அவசியம், அதுவே தலைமுறை கடந்து தமிழை கொண்டு செல்லும்.
இந்த வேலையை புதுக்கோட்டையில் இருக்கும் ஞானாலயா ஆய்வுநூலகம் என்னும் குழு செய்துகொண்டு இருக்கிறார்கள், தாய்மொழி என்பது தலைமுறையை தாண்டி செல்லும் பந்தம், அதற்கு நீங்கள் எதாவது, எவ்வழியாவது உதவ வேண்டும் என நினைத்தால் மேலதிக விபரங்களுக்கு திரு. ஜோதிஜி அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பதிவினை படியுங்கள், உதவுங்கள்..!
நட்பு
நான் பதிவெழுத வந்த புதுதில் சாய்கோகுலகிருஷ்ணா என்கிற நண்பர் அறிமுகமானார், அவருடைய வலைப்பூவில் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை மட்டுமே பெரும்பாலும் எழுதுவார், அவ்வப்பொழுது விழுப்புணர்வு சம்பந்தமான பதிவுகளையும் எழுதுவார், நாட்டின்மேல் பற்றுகொண்ட உருப்படியாக மட்டுமே எழுதனும்னு நினைக்கற பிளாக்கரில் அவரும் ஒருவர், ஒருநாள் அவருடைய பிளாக்கயும் யாரோ ஹேக் பண்ணிவிடார்கள், அப்புறம் வேறொரு தளம் ஆரம்பித்து வந்துகொண்டு இருந்தார், அப்புறம் அதையும் காணோம், நண்பர் பெங்களூர்காரர், அப்பொழுது அவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், சமீபகாலமாக அவரை கூகிளில் தேடி வருகிறேன், கண்டுபிடிக்க முடியவில்லை, உங்களுக்கு தெரிந்திருந்தாலோ அல்லது அவரின் வலைப்பூ முகவரி தெரிந்தாலோ தெரிவிக்கவும், இப்பதிவினை படிக்க நேர்ந்தால் என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் கோகுலகிருஷ்ணா.
எதிர்பார்க்கும் மொக்கைபடம்
மொக்கை படம் என்றாலே சம்திங் ஸ்பெசல்தான், டிரைலரை பார்த்தாலே தெரிகிறது படம் செம மொக்கை என்று, வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம், வினய் போலீசாம், சந்தானத்தை நம்பி இறங்கி இருக்கிறார்கள், வினய் வேறு டேம்999 படத்தில் நடித்து எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார், ஆகஸ்ட் 2 ரிலீஸ், ஆவலோடு எதிர்பார்க்கிறேன் மிரட்டலை.
கிச்சு கிச்சு
கல்யாணம் ஆன நிறைய பேரு பொண்டாட்டிக மேல காண்டாத்தான் இருப்பாங்க போல, நம்மனால முடியல, அடுத்தவன் ஆவது அடிக்கட்டுமேன்னு, வெடிச்சிரிப்புக்கு நான் கியாரண்டி. :)