எந்திரன் படத்தை பற்றி ஏறக்குறைய அனைத்து பதிவர்களும் எழுதிட்டாங்க, ரஜினி ரசிகனா இருந்துட்டு நான் மட்டும் எழுதலன்னா வரலாறு என்னாகிறது?
படம் ஆரம்பிச்சப்போ ஸ்டில் எப்படா வரும்னு இருந்துச்சு, ஒவ்வொரு ஸ்டில்லா வரும்போது எதிர்பார்ப்பு ஆரம்பமாயிருச்சு, ஒவ்வொரு ஸ்டில்லும் சூப்பரா இருந்துச்சு. இப்ப நெறய ஸ்டில் வெளிவந்து எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்குது.
நான் எப்ப ரஜினி ரசிகனா மாறினேன்னு எனக்கே தெரியாது, நான் சின்ன வயசா இருக்கும் போது வீட்டுல எல்லாரும் சினிமா பார்க்க கூப்பிடுவாங்க, நான் சினிமா பார்க்க வரல அதுக்கு பதிலா காச குடுங்கன்னு சொல்லி மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒருமுறை எங்க பக்கத்து வீட்டு அண்ணன் கண்டிப்பா சினிமாவுக்கு வாடான்னு கூப்பிட்டுட்டு போனார். அது மன்னன் படம், சரியான கூட்டம் டிக்கட் கிடைக்கவே இல்லை, அப்பவும் கூட்டம் கலையல, மத்தியானம் வரைக்கும் ஜனங்க அப்படியே நிக்கறாங்க, நாங்களும் நின்னோம், மத்தியானமும் டிக்கட் கிடைக்கல, மறுபடியும் நின்னு சாயங்காலம் படம் பார்த்தோம், இத்தனைக்கும் எங்க ஊர்ல ரீலீஸ் எல்லாம் பண்ன மாட்டாங்க, படம் ரீலீஸ் ஆகி 3 அல்லது 4 மாசம் கழித்து தான் போடுவாங்க, இப்படி கஷ்டப்பட்டு படம் பார்த்தேன். படம் செமையா இருந்துச்சு, அதிலிருந்து ரஜினி படம் ஒன்னுவிடாம பார்த்திருக்கேன்.
அதுவும் படம் ஆரம்பிக்கும் போது ஹே,ஹேன்னு பேக்ரவிண்டு மீயூசிக்கோட புள்ளி புள்ளியா SUPER STAR னு போடுவாங்க பாருங்க சும்மா புல்லரிக்கும், எனக்கு தெரிஞ்சு வேற எந்த நடிகருக்கும் இப்படி போட்டதா நினைவில்லை.
ஆனா எந்திரன் படத்து டிரைலர் பார்த்தேங்க, அதுல SUPER STAR னு வேற மாதிரி போட்டாங்க, அது நல்லாவே இல்லைங்க, அதே மாதிரி எந்திரன்கற டைட்டில் டிசைனும் எனக்கு புடிக்கலங்க, எனக்கு சன் பிக்சர்ஸ்ல புடிச்ச ஒரே விஷயம் , அவங்க ஒவ்வொரு டிரைலர்லயும், படத்துல டைட்டில்லயும், எழுத்து போடும்போது டிசைன் டிசைனா போடுவாங்க , அது ரொம்ப நல்லாயிருக்கும். அவங்களோட முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தோட டைட்டிலில் ரயில் தண்டவாளத்தோட மேலே டிக்கட் பறக்கற மாதிரி போட்டு எழுத்து போடுவாங்க ரொம்ப நல்லாயிருந்தது. அதே மாதிரி எந்திரன் படத்திலயும் மாத்தனும்னு நினைக்கிறேங்க.
எந்திரன் படத்தோட பாட்டும் ஹிட்டாயிடுச்சு, டிரைலரும் நல்லா இருக்கு, தலைவரோட பேட்டி எல்லாம் நல்லாயிருக்கு, படம் கண்டிப்பா ஹிட் ஆயுரும், இது வரைக்கும் அவ்வளவா யாரும் நெகடிவ்வா பேசாததே இதற்கு சாட்சி.
ஒரு சில பேர்தான் இந்த படத்த பத்தி எதிர்மறையா பேசறதையே பொழப்பா வச்சிருக்காங்க, பாட்டு சரியில்லை, படம் சரியில்லை, ரஜினி சரியில்லை, டிரைலர் சரியில்லைன்னு விமர்சனம் எழுதுரதையே வேலையா பண்ணிட்டு இருக்காங்க, நான் கேட்குறேன் உங்களுக்கு புடிக்காதத பத்தி ஏன் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு பார்த்து விமர்சனம் பண்ணறீங்க? சினிமாவே ஒரு பிஸினஸ்தானே, இங்க ஒரு ரூபாய் போட்டா இரண்டு ரூபாய் எடுக்கத்தான இத பண்ணிட்டு இருக்காங்க, அப்புறம் இவ்வள்வு செலவு பண்ணி இது தேவையான்னு ஒரு விமர்சனம் வேற, அவங்க தொழில அவங்க பார்க்குறாங்க, நம்ம தொழில நாம பார்க்கலாம் பாஸ், இவ்வள்வும் எழுதிட்டு படம் பார்க்கத்தானே போறீங்க? இந்த ஒரு படம்தான் உலகத்துலேயே வருதா? வேற நடிகர்கள் யாரோட படமும் ரீலீசாகறது இல்லையா? இதே மாதிரி எல்லா நடிகர்களோட படத்திலயும் அது சரி இல்லை, இது சரி இல்லைனு எழுதுவீங்களான்னு பார்த்தா, எழுதறது இல்லை, இது நடக்கறது எல்லாமே ரஜினி படத்துக்கு மட்டும்தான், உங்களுக்கே யாரு பேமஸ், யார பத்தி எழுதுனா படம் நல்லா ஒடும்னுதான எழுதுறீங்க, கடைசியா ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். படம் பாருங்க, படம் நல்லா இல்லைன்னா விமர்சனம் பண்ணுங்க, காசு குடுத்து படம் பார்த்திருக்கீங்க, அது உங்க உரிமை, அதுக்கு முன்னாடியே சாமி கண்ண குத்திடுச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணாதீங்க!.
ஆ, ஊன்னா கூட்டம், கூட்டமா கிளம்பிர்ராங்க.., எப்படியும் ஒரு வாரத்துக்கு படம் பார்க்க முடியாது, இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு பிளாக் புல்லா எந்திரன் விமர்சனம் - உன் பார்வை, என் பார்வை, மேல்நோக்கு பார்வை, கீழ்நோக்கு பார்வை, உள் பார்வை, வெளி பார்வைன்னு ரொம்ப பிசியா இருக்கும், எனவே சூப்பர் மேட்டரா எழுதி வெச்சுருக்கோம், ஹிட்ஸ் கண்டிப்பா நிச்சயம்னு எழுதி வச்சிருக்கற பதிவர்களே, உங்க பதிவ ஒரு இரண்டு வாரத்துக்கு தள்ளி வச்சிருங்க, இல்லைன்னா இன்னைகே போட்டிருங்க.
சன் டிவில இன்னைக்கு காலையில போட்ட டிரைலர்ல தலைவர் இந்த கெட்டப்புல ரோபோன்னு நக்கலா சொல்லி சிரிச்சாரு, ரொம்ப நல்லா இருந்தது, எனக்கும் நாளைக்கே பார்க்கணும்னுதான் ஆசை, ஹி,ஹி, உங்ககிட்ட ஒரு எக்ஸ்ட்ரா டிக்கட் இருந்தா தாங்களேன், ஒரு வாரம் கழிச்சு திருப்பி குடுத்திறேன்.