Friday, June 29, 2012

சகுனி - போவியா நீ ?அய்யோ ராமா நான் பாக்குறது எல்லாமே மொக்கை படமா? இல்ல மொக்கப்படத்த மட்டும்தான் என்ன பாக்க வைக்குறியா? ஆளாளுக்கு ஒருதபா பாக்கலாம், ரெண்டுதபா பாக்கலாம்னு ஏலம் வுட்டத நம்பி போனா???

ஒப்பனிங்லயே கீழ வுழுந்த வடைய தூக்கி காக்கா வாய்ல போடறாரு கார்த்தி, அப்பவே உசாராகி இருக்க வேணாமா? விளைவு? கூடவே நம்ம வாய்ல கொஞ்சம் அல்வாவும், காதுல சரம்சரமா பூவும்.

டைரக்டரு இஸ்கூல்ல சேரும்போதே தலைய சுத்தி காத தொட்ட ஆளு போல, இடைவேளை வரைக்கும் கதைக்கு உள்ளயே வராம கதைய சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவரு, ஒரு சோக்கு, ஒரு டயலாக்கு, ஒரு பாட்டு இது மூணும்தான் பிளாஸ்பேக் பிளாஸ்பேக்கா ஓடுது.

சந்தானம் ரசிகரா இருந்தா இடைவேளை வரைக்கும் உட்கார்ந்துட்டு திரும்பி பார்க்காம ஓடிடுங்க, பிரணிதாவ பார்க்கலாம்னு பராக்கு பார்த்துட்டு உட்கார்ந்தீங்கன்னா பரலோகத்துல பர்மனெண்டா எடம் பார்க்க நேரிடலாம்.


இடைவேளைக்கு அப்புறம்தான் சகுனி ஆட்டம் ஆரம்பம்னு போடறாங்க, சகுனி ஆட்டமும் இல்லை ஷகிலா ஆட்டமும் இல்ல, பிரணீதா ஆட்டமாவது பார்க்கலாம்னா அங்கயும் சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்ல.

நாங்கெல்லாம் கடையில வாங்குற ஜிலேபியிலயே எல்லா சுத்தும் கரக்டா சுத்தியிருக்காங்களான்னு லாஜிக் பாக்குறவங்க, எங்ககிட்டயே என்ன மாமா ரெடியான்னு ஒருவார்த்தை கூட கேட்காம கிலோமீட்டர் கணக்கா ரீல ரியலா சுத்துனா? கவுன்சிலரு, மேயரு, சி.எம்ல ஆரம்பிச்சு கடைசியா பிரைம் மினிஸ்டர் ரேஞ்சுக்கு போறாராம் கிங் மேக்கர் கார்த்தி, விட்டா சங்மாவையே ஜனாதிபதியாக்கிட்டுத்தான் படத்த முடிப்பாங்க போல.

அண்ணன் கோடீஸ்வரன்ல சம்பாதிக்கறாரு, தம்பி கேடீஸ்வரனா நடிச்சு சம்பாதிக்கறாரு, ஆனா எனக்கு டிக்கெடு 70 ரூபா, பார்க்கிங் 10 ரூபா, கூல்டிரிங்ஸ் 20 ரூபான்னு மொத்தமா 100 ரூபா போனதுதான் மிச்சம், நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா வருவ !!! (வேறென்ன என் மைண்ட் வாய்ச நானே கேட்ச் பண்ணிட்டேன்)

சகுனி – மங்குனி

Monday, June 25, 2012

வெல்கம் டூ ஆல் இன் ஆல் அல்வா சிட்டி !! சென்னைக்கு மிக அருகில் !!!சார் சார் எந்திரிங்க நம்ம சைட் வந்திருச்சு

ஆவ்வ்வ், வந்துருச்சா? வண்டில ஏறும் போது தசாவதாரம் படம் போட்டீங்களா முழுப்படமும் பார்த்து முடிஞ்சு அரைமணி நேரம் ஆகியும் நம்ம சைட்டு வரலீங்களா? அதான் அசந்து தூங்கிட்டேன்.

சரி சரி எந்திரிங்க, மூஞ்சிய நல்லா தொடச்சுக்குங்க, டிவில பேட்டி எடுப்பாங்க

ஏஜெண்ட் சொல்ல சொல்லவே வண்டி அந்த மண்பாதையில் ஒரு எஸ் பெண்ட் எடுத்து திரும்பியது

வாசலில் டிவிஸ்டார் தீபக் மைக்குடன் நின்று கொண்டிருந்தார்.

வெல்கம், வெல்கம், இந்த ஆல் இன் ஆல் அல்வாசிட்டிக்கு இடம் வாங்க வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன், வாங்க வாங்க, உள்ள வாங்க

ரொம்ப நன்றிங்க தீபக், நான் உங்க ரசிகன்க. டிவில வர உங்க சீரியல் ஒன்னுவிடாம பாத்துருவேன், ஆமா டிடி எப்படி இருக்காங்க, கூட வரலிங்களா?

ஹி ஹி அவங்க வேற எடத்துல இருக்காங்க, இப்ப வந்துருவாங்க சொல்லுங்க, உங்க பேர் என்ன? எங்கிருந்து வரீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

என் பேரு காத்தமுத்துங்க, சென்னையில இருந்து வரேனுங்க, பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்க,

சரி இப்ப சொல்லுங்க, இங்க ஏன் எடம் வாங்கனும்னு நினைச்சீங்க?


அதுங்களா? எம்பொண்டாட்டி கொஞ்சம் சீரியல் பைத்தியம், நீங்கதான் சும்மா இருக்காம காலையில ஏழுமணிக்கே டிவில வந்து எடம் வாங்குங்க எடம் வாங்குங்கன்னு சொன்னிங்களா? அதுவும் இல்லாம சென்னைக்கு ரொம்ப பக்கத்துலன்னு வெறும் 450 கிலோமீட்டர்தான்னு சொன்னீங்க, அதான் வாங்கலாம் வந்தேன், ஆனா பாருங்க டிவில போட்ட படம் கூட முடிஞ்சு அரைமணி நேரம் ஆகிருச்சு எடம் வரல, அதான் லைட்டா அசந்து தூங்கிட்டேன்

அட சென்னைக்கு ரொம்ப பக்கத்துலதாங்க இருக்கோம், ஐஸ்ட் 450 கிலோமீட்டர்ஸ், வாக்கபுள் டிஸ்டண்ஸ்தான், படம் ரொம்ப சின்னப்படம் போலருக்கு,

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

ஒக்கே காத்தமுத்து, உங்கள சுருக்கமா காத்துன்னு கூப்பிடறேன், இப்போ நம்ம சைட்ட சுத்திப்பாக்கலாமா?

தாராளமா?

அங்க பாத்தீங்களா காத்து கட்சிகொடிகள்?

ஆமாங்க, பொதுவா ரியல் எஸ்டேட்டுனா .நா சபை கணக்கா கலர் கலர் கொடிகளதான பறக்க விட்டுருப்பாங்க, இது என்னங்க வெறும் கட்சிக்கொடிகளா இருக்கு?

அதுதான் நம்ம சைட்டோட ஸ்பெசாலிட்டி, இங்க எல்லா கட்சிக்கும் பிராஞ்ச் ஓப்பன் பண்ணி இருக்கோம், உங்களுக்கு புடிச்ச கட்சியில நீங்க சேர்ந்துக்கலாம், எப்படி எங்க ஐடியா?

வெளங்கிரும், ஆரம்பவே அரசியலா? சரி தண்ணி வசதியெல்லாம் எப்படி?

தண்ணி வசதியா அதுக்கென்ன? நம்ம சைட்டுல மொத்தம் முப்பத்தேழு வீதி, வீதிக்கு ஒன்னா முப்பத்தேழு டாஸ்மார்க் தொறக்கனும்னு அரசாங்கத்துகிட்ட மனு போட்டுருக்கோம், சீக்கிரமே தொறந்துருவாங்க

யோவ் நான் குடிதண்ணி வசதி எப்படி இருக்குன்னு கேட்டா? நீ சாராயகடைய பத்தி சொல்லிட்டு இருக்கிற?

குடிதண்ணி வசதிங்களா? அங்க பாருங்க மேல்நிலை தொட்டி கட்டி வச்சிருக்கோம்.

உள்ள தண்ணி இருக்குங்களா?

இப்ப இல்ல, தண்ணிக்காக போர் போட்டுட்டு இருக்காங்க, இதுவரைக்கும் இரண்டு லட்சம் அடிகள் வரை தோண்டியாச்சு, இன்னும் ஒரு அம்பதாயிரம் அடி தோண்டுனா வந்துரும்னு சொல்லி இருக்காங்க

எது பூமியோட அடுத்த பக்கமா?

சார் ஒரே தமாசு, இங்க ஸ்விம்மிங் பூல் வசதி கூட இருக்கு பாக்கறீங்களா?

வேணாம் வேணாம், மத்த வசதிகள் எல்லாம் எப்படி?


எல்லா வசதிகளுமே இருக்குங்க சார், பத்தடிக்கு எப்படி ரோடு போட்டுக்கோம் பார்ந்தீங்களா?

சைட்டுனு இருந்தா ரோடு போட்டுத்தான்யா ஆகனும்

ரோட்டு சைடுல பூங்கா வச்சிருக்கோம், குழந்தைக வெளையாடறதுக்கு வசதி பண்ணி கொடுத்திருக்கோம், முக்கியமா உங்களுக்கு சேப்டி முக்கியம், அதனால பாதுகாப்பு வசதிகள் பண்ணி கொடுத்திருக்கோம்

என்ன பாதுகாப்பு வசதி?

அங்க பார்த்தீங்களா எவ்ளோ பெரிய காம்பவுண்டு செவுரு? எவ்ளோ பெரிய கேட்டுன்னு இதை தாண்டி யாராச்சும் உள்ள வரமுடியுமா?

க்கும் முன்னாடி மட்டும்தான் செவுரு கட்டி வச்சிருக்கீங்க, மீதி மூணு பக்கமும் வெறுமனே கிடக்கு?

சார் திருடன்னா செவுரு ஏறித்தான குதிப்பான், அங்கதான் செவுரு இல்லியே?

வெளங்கிரும், சரி கரண்டு வசதி இருக்கா?

சார் இங்கிருந்து ஐஸ்ட் 250 கிலோமீட்டர்ல இருக்கற மின்நகர் அப்படிங்கற சைட்டு வரைக்கும் இபி லைன் வந்திருச்சுங்க சார், அப்புறம் என்ன இன்னும் கொஞ்ச நாள்ள இங்கயும் வந்துரும் சார்

நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா ஆஃபர் எதுவும் இல்லையா? மாசத்தவணை இந்தமாதிரி எதுவும்?


சார் சூப்பர் ஆஃபர் ஒன்னு இருக்கு சார், அதுவும் இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான்

சொல்லுங்க

இன்னைக்கே ஒரு பத்தாயிரம் கட்டி முன்பதிவு பண்ணிட்டீங்கன்னா ஒரு கிராம் தங்கம் இலவசம் சார்

ஒரு கிராமே ஐயாயிரத்துக்குள்ளதான வரும்?

அங்கதான் நீங்க தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க, இன்னைக்கு பத்தாயிரம் கட்டி புக் பண்ணிட்டீங்கன்னா அந்த இடம் உங்கபேர்ல ரிஜிஸ்டர் ஆகிரும், அப்புறம் ஒருலட்சம் மட்டும் அட்வான்ஸ் கட்டுனா போதும், அப்புறம் மாதத்தவணை ஐயாயிரம்னு சாகறவரைக்கும் கட்டிடுங்க, காரியம் உங்களுக்கு ச்சீ சீ கிரயம் உங்களுக்கு ப்ஃரீ

ஞே..!

அதுமட்டுமில்லைங்க, நம்ம சைட்ட ஒட்டியே கூடிய சீக்கிரமே மின்மயானமும் வரப்போகுது? நீங்க உங்க குடும்பத்துல இருக்கறவங்கன்னு யாரு செத்துபோனாலும் ஈசியா எரிச்சுக்கலாம், அஞ்சு வருசத்துக்கு உங்களுக்கு திதி பண்ண ஐயர் ப்ஃரீ, அதுக்கப்புறம் மிகக்குறைந்த விலையில ஐஸ்ட் ஃபைவ் தொளசவுண்ட் மட்டும் ஐயருக்கு குடுத்தா போதும்

அடேங்கப்பா

இதுமட்டும் இல்லீங்க, நம்ம சைட்ட சுத்தி பஸ்ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன், போலீஸ் ஸ்டேசன், கார்ப்பரேசன் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ்மார்க்கெட்டுன்னு எல்லாமும் வரப்போகுதுன்னா பார்த்துக்கங்க

இதெல்லாம் எப்படிங்க?

அட இது என்னங்க பெரிய விசயம்? நம்ம சைட்டுல இருந்து மூணே மணிநேரத்துல துபாய், மலேசியா, சிங்கப்பூருன்னு எல்லா ஊருக்கும் போகமுடியும் தெரியுங்களா?

எப்படிங்க?

சைட்டுக்குள்ளயே ஏர்போர்டு வரப்போகுது

எல்லாம் சரிதாணுங்க, ஆனா என்னமோ ஒன்னு குறையுதுங்களே?

நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு புரிஞ்சிருச்சு, அட இதோ டிடியே வந்துட்டாங்களே? வாம்மா வாம்மா சாருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லு?

என்ன சார்? உங்களுக்கு என்ன டவுட்டு

ஹி ஹி ஹி டவுட்டே இல்லைங்க, இப்ப முழுசா புரிஞ்சிருச்சுங்கோ, இந்தாங்க புடிங்க அட்வான்ச, அடுத்த தடவை அப்படியே அந்த தென்றல் சீரியல்ல நடிக்கறவங்கள கூட்டிட்டு வாங்க, ரொம்ப நல்ல பொண்ணுங்க அது, பாவம் அத கண்கலங்காம காப்பாத்துங்க தீபக்கு


தீபக் & டிடி : இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கறவரைக்கும் நம்மள யாரும் அசச்சிக்க முடியாது, அசச்சிக்க முடியாது

டிஸ்கி :- இந்த பதிவில் வரும் சம்பவங்கள், பெயர்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே, போட்டோக்கள் மாடல்களே, யாரையும் குறிப்பிடுவன அல்ல [ நம்பவா போறீங்க? ]