Thursday, April 26, 2012

கமர்சியல் பக்கங்கள் - 26/04/2012ஏழைகள் தோழா வா வா !? எங்கள் தலைவா வா வா !? புரட்சிகலைஞரே வாவா !?
நாக்கை துருத்துனாறு, கண்ண உருட்டுனாரு, கையை மடக்குனாறு, கடிச்சு வைக்க வந்தாருன்னு ஏதோதோ காரணம் சொல்லி எங்க கருப்பு எம்ஜியார படக்குன்னு பத்து நாளு சஸ்பெண்ட் பண்ணிட்டீங்கள்ள?

அந்தம்மா சரியான சேலை கட்டுன வாஷிம்கானா இருந்திருந்தா நேருக்கு நேரா நீங்களும் நாக்கை துருத்திருக்கனும் அதவிட்டுட்டு அது என்னய்யா சஸ்பெண்டு பண்ணுறது? காரை புடுங்குறதுன்னு?

இதோ கிளம்பிட்டாரய்யா எங்க தவசி, நாங்க ஜெயிச்ச எல்லா தொகுதிக்குக்கும் கைக்காச போட்டு தண்ணி வாங்கி தராரய்யா

அப்பக்கூட தண்ணிதானா ஆ ஆ ஆ கேப்ப்டன்ன்ன்ன்ன்ன் யாருய்யா சைடுல சவுண்டு வுடுறது? இது ஒன்னும் ஆம்புளைக குடிக்கற சீமைத்தண்ணி இல்லை, பொம்பளைக புடிக்கற நல்ல தண்ணிதான்

நாங்க எப்பவுமே ஆரம்பிக்கறது தண்ணியிலதான் போகப்போக சைடுடிஷ்ஷெல்லாம் வரும், அதான்யா இந்த ரோட்டு பிரச்சனை, கக்கூசு பிரச்சனை, குப்ப வண்டி பிரச்சனை அதெல்லாம், போகப்போக பார்க்கதான போறீங்க

ஆதாரம்:-
எங்க எம்.எல்.ஏக என்ன காலேஜ் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ணா ஜாயின் பண்ண வந்தாங்களா? அது என்னய்யா ஆவூன்னா ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருக்கான்னு கேட்டு ராக்கிங் பண்ணுறீங்க?

இதோ இப்ப களத்துல இறங்கி ஆறு ஆதாரங்களை சேகரிச்சு வச்சிருக்காரய்யா எங்க கேப்டன், அது என்னய்யா அஞ்சு லிட்டர் மண்ணென்னய்க்கு காசு வாங்கிட்டு நாலு லிட்டர மட்டும் ஊத்துரது? கூட அஞ்சு ரூபாய் சேர்த்து குடுத்துட்டு வாங்கிட்டு போக அது என்ன டாஸ்மாக் சரக்கா?

இந்த ஆதாரத்துக்காண்டி நீங்க நடவடிக்கை எடுக்காம இருங்க? அப்புறம் என்ன நடக்க போகுதுங்கறது இப்போதைக்கு சஸ்பென்சுன்னு கேப்டன் சொல்லி இருக்காப்புல

அடே ரேசன் கடை அப்ரசிண்டுகளா, புயல் அடிச்சு பொழச்சவன் இருக்கான் பூபதி அடிச்சு பொழச்சவன் இருக்கானாடா? மவனே நீங்க செத்தீங்கடா, நாஸ்திதாண்டா, நீங்க பாஸ்கிதாண்டா

பொருளாதாரம்:-
அரசியல்னா அடுத்து பொருளாதாரம்தான? சரி பொருளாதாரத்த பத்தி என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, மாசக்கடைசியா கையில காசே இல்லை, அஞ்சு பத்துன்னு ஏதாச்சும் இருந்திருந்தா கூட ஒக, ஒக பார்த்துட்டு அட தப்பா நினைக்காதீங்க ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்துட்டு ஒரு விமர்சன பதிவாவது தேத்திருக்கலாம்

சரி கேள்விபட்ட வரைக்கும், ஒரே கதைய மட்டும் வேற வேற ஹீரோவ மாத்தி படம் எடுக்கலையாம் ராஜேசு, அந்த கூரியர் சர்வீஸ், கல்யாண மண்டபம், டாஸ்மாக்குன்னு ஒன்னக்கூட விடலயாம், எப்படியோ படம் நல்லாருக்குல்ல, அது போதும்.

பகிர வேண்டிய தளம் :-
ஐ.ஏ.எஸ் படிக்கறவங்க முக்கியமா தமிழ்ல ஐ.ஏ.எஸ் எழுத நினைக்கறவங்க பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய தளம் கீழ இருக்கற தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ்


CSAT எக்சாம் நடந்திட்டு இருக்கற இந்த நேரத்துல, அடுத்து பிரிலிமினரி, மெயின் எக்சாம்னு படிக்கறதுக்கு இந்த பிளாக் யூஸ்புல்லா இருக்கும், நிறைய மாடல் கொஸ்டீன் பேப்பர், மின் புத்தகங்கள்னு எல்லாமே இருக்கு, புக்மார்க் பண்ண வேண்டிய, நிறைய பேருக்கு பகிர வேண்டிய தளம் இது, இந்த தளத்த ஹரிக்குமார்னு ஒருத்தர் நடத்துறார், அவரும் ஐ.ஏ.எஸ்ஸா இருப்பார்னு நினைக்கிறேன், இங்கிலீஸ்லயும் பிளாக் இருக்கு.

எனவே உங்களுக்கு தெரிஞ்சவங்க, ஐ.ஏ.எஸ் படிக்கறவங்ககிட்ட ஷேர் பண்ணுங்க, நல்லா படிச்சு மாவேஸ்ட்டுக இல்லாத ஊரா பார்த்து போஸ்டிங் வாங்கட்டும்.

கேட்டதில் பிடித்த பஞ்ச் டயலாக்:-

ஹிண்டு பேப்பர முஸ்லீம் படிக்கறதில்லையா?
மொகல் பிரியாணிய இந்து சாப்பிடுரதில்லையா?
உங்க ஜிகாத்த விட எங்க ஜெய்ஹிந்த்தாண்டா பெருசு

# பயணங்கள் திரைப்படத்தில் ஷைனிங் ஸ்டார் பப்லு

கேட்டதில் பிடித்த தத்துவம்:-

வயசு பொண்ணயும் வாழைத்தாரையும் ரொம்ப நாள் ஆத்துல வச்சிண்டு இருக்கக்கூடாது

# படம் அதே பயணங்கள்

எதிர்பார்க்கும் மொக்கைப்படம் :-
கதையே இல்லாம படம் எடுக்க வேண்டியது, அப்புறம் படம் பார்த்து கதை சொல்லுன்னு நம்மகிட்டயே கேட்க வேண்டியது

கண்டுபிடிப்பு :-
கண்டுபுடிச்சிட்டாங்கையா உலக மகா புதிருக்கான விடைய, கன்னித்தீவு கதைக்கும் இந்த கோழி முட்டை கதையும் ஒன்னுதான், இப்போ ஒன்னு முடிஞ்சு போச்சு, இன்னொன்னு எப்பத்தான் முடியுமோ?


அடுத்தது என்ன நாய்வாலை நிமிர்த்த முடியுமான்னுதான? நிமித்தியாச்சு!வீடியோ :-


வானத்தில் பறக்க நினைக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே
தலைக்கனம் புடிச்சவங்களுக்காக தலைவர் பாடுன பாட்டு

சும்மா ஒரு வெளம்பரம் :-
கூடிய விரைவில் எதிர்பாருங்கள், வசீகரன் சினிமா ஹீரோவானது எப்படி?


கடைசியா எழுதி கிளிச்சது :-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~@@@@@@@~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Tuesday, April 24, 2012

டிக்கிலோனா பேஷன்ஸ்ஒரு காலத்தில் பெல்பாட்டம், பெரிய காலர் வைத்த சட்டை, பேகி பேண்ட் போன்றவை பேஷனாக இருந்தன,பாக்கியராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் பழைய திரைப்படங்களில் இது போன்ற உடையணிந்து ஆறுக்கு மூன்று சைசில் ஒரு பெரிய கூலர் அணிந்து கொண்டு பாடும் போதும், ஆடும் போதும் பார்த்தாலே சிரிப்பு வரும்

காலப்போக்கில் பழைய ஆடைகள் மறைந்து புது புது பேஷன்கள் உருவாகிவிட்டன, விவேக்கின் ஆஸ்தான அல்லக்கை செல்முருகன் ஒரு படத்தில் சொல்லுவார் ஜட்டி பட்டி தெரியற மாதிரி போடுறதுதான் இப்போ பேஷன் சார்ன்னு

நேற்றைக்கு கோயம்புத்தூரில் ஒருவரை பார்க்க நேர்ந்தது, தன் கேர்ள் பிரண்டுடன் சென்று கொண்டிருந்தார், அவரின் ஜீன்ஸ் இப்பவோ, அப்பவோ எப்போ கழண்டு விழப்போகுதோ எனும் அளவில் ஒரு அபாயகரமான கட்டத்தில் வேண்டா வெறுப்பாக பின்னால் தொங்கி கொண்டிருந்தது, அதை பின்னால் பார்த்த எனக்கு பகீர் என இருந்தது, அவர் அதையெல்லாம் லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை, கடமையே கண்ணாக கடலை போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

பாவம் ஒருவேளை கழண்டு விட்டால் மானம் போய்விடுமே என மெதுவாக அவரிடம் சென்று கூறினேன், அதற்கு அவர் பாஸ் இதுதான் இப்போ பேஷன் பாஸ் என்று கூறி விட்டு சென்றுவிட்டார், எதுடா பேஷன்? ஜட்டி தெரியற மாதிரி, ஜட்டி பட்டி தெரியற மாதிரி பேண்ட் போடுற காலம் போயி இப்போ டிக்கி தெரியற மாதிரி பேண்ட் போடுறதா பேஷன்?

அது எப்படி அந்த ஜீன்ஸ் பேண்ட் தொடைக்கும் முழங்காலுக்கும் நடுவே பேலன்ஸ் பண்ணி நிக்குதுன்னு சத்தியமா எனக்கு புரியலை, இதை கண்டுபுடிச்சவனுக்கு நோபல் பரிசே கொடுத்தாலும் தகும் என்றே தோன்றுகிறது, பின்னே புவி ஈர்ப்பு விசைக்கே பல்ப்பு கொடுக்கறதுன்னா சும்மாவா? இவனுக கூட எல்லாம் எப்படித்தான் வெட்கம் இல்லாம பொண்ணுகளும் சுத்துதோ?


பொண்ணுகளுக்கு வேணும்னா விதவிதமா டிரஸ்ஸஸ் இருக்கலாம், ஆனா ஆம்பிளைகளுக்கு நாலே நாலு வெரைட்டிதான், நார்மல், பேகி, டைட்ஸ், பூட்கட்டுன்னு, இதுக்கு மேல என்னதான் டிசைன் பண்ணுனாலும், அதுவும் இந்த நாலுக்குள்ளதான் அடங்கும், ஆனா அதுக்கும் மேல இஅவனுங்க கண்டுபுடிச்சிருக்கானுங்க பாரு டேஞ்சரஸ் ஜீன்ஸ்சுன்னு, போடற அவனுகளுக்கு டேஞ்சரஸ்சோ என்னவோ, பாக்குறவங்களுக்கு கண்டிப்பா டேஞ்சரஸ்தான், பின்னே காலங்காத்தால ஆபிஸ் போறவங்க, நல்ல காரியத்துக்கு போறவங்க இவனுங்க டிக்கியயெல்லாம் பார்த்துட்டு போனா விளங்குமா?

பொண்ணுங்க கிளிவேஜ் காட்டுனா செக்ஸி, அதுவே ஆம்பிளைக கிளிவேஜ் காட்டுனா டர்ட்டின்னு ஏண்டா புரிய மாட்டேங்குது? ராமராஜன் ஒரு தெய்வபிறவி சார், தீர்க்கதரிசி, அவரு ஒரு காலத்துல டவுசர் போட்டாலோ, இல்லை பச்சை மஞ்சள் கலர்ல பேண்ட் சர்ட் போட்டாலோ கிண்டல் பண்ணிகிட்டு இருந்தாங்க, ஆனா இப்போ பேஷன்னு அதைதான் நம்ம பசங்களும் போட்டுகிட்டு திரியறாங்க,

அதுலயும் ஒருத்தன் பச்சை கலர்ல பனியன், மஞ்சள் கலர்ல பேண்ட், கருப்பு கலர்ல பனியனுக்கு மேல சட்டை, வெள்ளை கலர்ல கேன்வாஸ், ஊதா கலர்ல ரோட்டு ஓரத்துல விக்குற கூலிங்கிளாஸ் போட்டு தலையில கிருதாக்கு மேல நாலு கோடு போட்டுட்டு போறான் சார், சொல்ற எனக்கே காண்டாகுன்னா கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் எவ்ளோ கேவலமா இருக்குதுன்னு? தோள்ல பெரிய பேகு ஒன்னு, அதுக்குள்ள என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க, மத்தியானம் குடிக்கற கஞ்சித்தண்ணியாதான் இருக்கும்.

சோத்துக்கு வழி இருக்கோ இல்லையோ இங்க பேஷனுக்கு மட்டும் கொஞ்சமும் குறைவில்லை, அப்பல்லாம், கொஞ்சம் முடிய ஒண்ட வெட்டுனாலே சட்டித்தலையான்னு கிண்டல் பண்ணுவாங்க, கொஞ்சம் போலீஸ் கட்டிங் மாதிரி வெட்டுனாலே எலி கரண்டி வச்சிருச்சான்னு கேட்பாங்க, அதுவே காலப்போக்குல அட்டாக் கட்டிங் ஆகி, இப்போ கோடு, ரோடு, சமயத்துல கூகிள் மேப்பு வரைக்கும் வரைஞ்சு வெச்சு விளையாடுறானுங்க

டிவில இந்த எலிபிறாண்டுன மாதிரி ஹேர்ஸ்டைல் வச்சிருந்த ஒரு பையன் சொன்னான், இந்த மாதிரி டிபரண்டா எதுனா பண்ணுனாதான் நாலு பேரு திரும்பி பார்ப்பாங்க சார்னு, இந்த மண்டைய பார்த்துட்டு திரும்பி பார்க்குறவங்க எல்லாம் ரோட்டுல ஏதோ ஜந்து நிக்குதுன்னுதான் பார்த்துட்டு போவாங்க, எதாச்சும் சாதிச்சு நாலு பேரு திரும்பி பார்க்குற மாதிரி பண்ணுவான்னா அத விட்டுட்டு மண்டைய பிறாண்டுறானுங்க, பேசாம எல்.ஐ.சில இருந்து குதிச்சு செத்து போயிருடா நாலு பேரு என்ன நானூறு பேராச்சும் பார்ப்பாங்க

இந்த பேஷன் மண்ணாங்கட்டியெல்லாம் நம்மூரை விடவும், கேரளாக்காரங்ககிட்ட கொஞ்சம் அதிகம், அவங்கள பார்த்துதான் நம்மாளுகளும் ஓவரா போறாங்கன்னு நினைக்கிறேன், நல்லவேளை திருப்பூர் வரைக்கும் இந்த பேஷன் இன்னும் வரலை, ஆனா கூடிய சீக்கிரமே இங்கயும் பல டிக்கிவாலாக்களை பார்க்க நேரிடலாம்னு நிறைய அறிகுறி தெரியுது.

Thursday, April 12, 2012

தனுஷின் 3 படம் - ஒரு பார்வைபடம் வெளியாகி இரண்டு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதாலும், இணையத்திலும், வெளியுகிலும் நண்பர்களின் கொலைவெறி விமர்சனத்தாலும் போகவே கூடாது என நினைத்து தவிர்த்திருந்த படம், வேறு வழியில்லாமல் போக வேண்டிய நிலையில் பார்க்க நேரிட்ட போதுதான் ஒரு நல்ல அனுபவத்தை இழக்க இருந்தோமோ என தோன்றியது

ஸ்ருதி மற்றும் தனுஷின் மாணவப்பருவம், வாலிப பருவம், திருமணத்திற்கு பின்பான காலகட்டம் என மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது.

ஒரு சுபயோக சுபதினமான மழைக்காலத்தில் ஸ்ருதியின் ரிப்பேரான சைக்கிளை சரி செய்திட உதவிடும் போது ஆரம்பிக்கிறது ஸ்ருதியின் மீதான காதல் தனுசிற்கு, ஸ்ருதி பள்ளிக்கு போகும் வழியிலும், டியூசன் செல்லும் வழியிலும், வீட்டிற்கு செல்லும் வழியிலும் பின்தொடர்ந்து வாட்ச்மேன் வேலை பார்த்து, கடைசியில் டியூசனிலும் சேர்ந்து காதலை வளர்க்க தொடங்குகிறார் தனுஷ்

ஆரம்பத்தில் உதவிக்கு வரும் போதே தவிர்க்க நினைக்கும் ஸ்ருதி, விடாப்பிடியான தனுஷின் சேசிங்கால் கொஞ்சம் மனம் மாறுகிறார், இரண்டு நாளாக காணாதவனை திடீரென்று பின்னால் கண்டு புன்னகை பூக்க தொடங்குகிறார், ஸ்ருதியின் புன்னகையையே மூலதனமாக கொண்டு, ஸ்ருதியின் அப்பாவிடம் அடிவாங்கினாலும் அவரின் வீட்டு வாசலிலேயே நின்று காதலை சொல்லி சம்மதம் வாங்குகிறார் தனுஷ்

நான்கு நாள் பின்னால் வருபவன் ஒருநாள் காணவில்லையென்றால் தற்செயலாக திரும்பி பார்ப்பது பெண்களின் இயல்பே, அதற்கே லவ் ஒர்க் அவுட் ஆகிவிடும் என்பது சினிமாவில் மட்டுமே நடக்கும் அதிசயம், உண்மையிலேயே அப்படி நடக்கும் வாய்ப்பிருந்தால் நான் பின்னால் சுற்றிய பதினைந்து பிகர்களில் பத்தாவது செட்டாகி இருக்கும், ஹூம்ம்ம்..

ஸ்கூலில் படிக்கும் போதே காதலை படிக்க ஆரம்பிக்கும் இருவரும், வீட்டின் மொட்டை மாடியிலும், ஆளில்லாதபொழுது தனிமையில் வீட்டிலும் சந்தித்து காதலை வளர்க்கிறார்கள், சும்மா சொல்லக்கூடாது ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்ருதி அப்பா எட்டடி பாய்ந்தால் மகள் முப்பத்தி இரண்டடி பாய்கிறார், கமல் திரையில் தன்னையே பார்ப்பது போல உணர்ந்தேன் என சொன்னதில் தவறே இல்லை, தனுசும் மனைவியாவது மண்ணாங்கட்டியாவது என புகுந்து விளையாடி இருக்கிறார், இருவருக்கும் இடையேயான நெருக்கமான காட்சிகளில், பிசிக்ஸ், கெமிஸ்டிரி, பாட்டனி, ஜீவாலஜி, பொறியியல், மருத்துவம் என இருக்கும் அனைத்து சப்ஜெக்ட்டுகளும் செண்டம் அடிக்கின்றன

தாடி, மீசை இல்லையென்றால் ஸ்கூல் மாணவன், கொஞ்சம் தாடி, மீசை வைத்தால் இளைஞன், தாடியை எடுத்துவிட்டு கோட் சூட் போட்டால் பெரிய மனிதன் என தனுஷின் பாத்திர படைப்பு அவர் போடும் கோட்டை போலவே கனகச்சிதமாக பொருந்துகிறது

ஸ்ருதியின் அப்பா நோஞ்சானாக இருப்பதால், இவர்களின் காதலுக்கு வில்லன் விசா வடிவில் வருகிறது, விசா வந்ததில் இருந்துதான் தனுஷிற்கு பைபோலார் டிஸ் ஆர்டரும் வருகிறது, விசா எடுத்தால் வெளிநாடு போக வேண்டும், அதே போல விசா வந்ததால் தனுஷும் மேலோகம் போக போகிறார் என சொல்லாமல் சொல்லியது டைரக்டர் டச்

விசாவால் காதலில் வில்லங்கம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த ஸ்ருதி தனது பாஸ்போர்ட்டை எரித்து விடுகிறார், அதனை கண்ட அவரது அம்மா ரோகிணி மகளை அறைந்து விடுகிறார், அதனால் டென்சனான ஸ்ருதி தனுஷிடம் உடனே திருமணம் செய்ய வேண்டும் என அவசரப்படுத்துகிறார், அப்பா பேச்சை தட்டாத நல்ல பிள்ளையான தனுஷ்(?!) என் அப்பாவிடம் கேட்டுவிட்டு பிறகு திருமணம் செய்யலாம் என கூறுகிறார்.

தனிஷின் அப்பா பிரபுவும் இருவரும் எங்கேயோ போய் திருமணம் செய்து கொள்ளுங்கள், நான் பிளாட் வாங்கி தருகிறேன் என கூறிவிட, இருவரும் திருமணம் செய்ய தேர்ந்தெடுக்கும் இடம் பணக்காரர்கள் குடிக்கும் பஃப்,  அடுத்தவனின் ஐந்தாவது மனைவியை தள்ளிக்கொண்டு போய் திருமணம் செய்ய நினைப்பவன் கூட ஒரு கோயிலிலோ, ரிஜிஸ்டர் ஆபிசிலோ, அட்லீஸ்ட் வீட்டில் உள்ள சாமிபடத்தின் முன்போதான் தாலிகட்ட நினைப்பான்

ஆனால் இங்கு பாரில் தாலிகட்டி திருமணம் செய்வதாக காட்டப்படும் போது இருவருக்கும் இடையேயான அதுவரையான காதலே கேலிக்கூத்தாக்கப்படுகிறது, இவ்வகையில் டைரக்டர் ஐஸ்வர்யா, கலாச்சார காவலர்கள் மீது மட்டுமல்லாமல், திருமண மண்டப அதிபர்கள், புரோகிதர்கள், கோயில் பூசாரிகள், திருமண பொருட்கள் விற்பவர்கள், பூ கட்டுபவர்கள், சமையல்காரர்கள், நகைக்கடைக்காரர்கள், திருமணம் சம்பந்தமான இன்னபிற அனைவர்கள் மீதும் அம்பு தொடுத்திருக்கிறார், பின்னே இதனையே முன்னுதாரனமாக கொண்டு நம்மவர்கள் ஆரம்பித்துவிட்டால் மேற்சொன்னவர்களின் பாடு என்னாவது? ஏற்கனவே அலைபாயுதே எபக்ட் அலைபாய்ந்து கொண்டிருப்பது போதாதா?

இதுவரையேயான மூன்று படம் என்னுடைய விமர்சனம் போல் அல்லாமல் நன்றாகத்தான் சொல்கிறது, ஆனால் இதற்கு பிறகு வருவதுதான் தனுஷின் பைபோலார் டிஸ்ஆர்டர் எனும் மனவியாதி, அதில் ஆரம்பிக்கிறது ஸ்ருதியின் அழுகையும், படம் பார்ப்பவர்களின் மண்டைகாய்ச்சலும், அதிலும் ஸ்ருதி குளோசப்பில் அழுகையில் பதினேழாம் அறிவு பளீரென்று எரிகிறது.

இந்த பைபோலார் டிஸ்ஸார்டர் தனுஷை போலவே படம் பார்ப்பவர்களையும் குழப்ப, அவரை போலவே என்னவென்று புரியாமல் மக்களும் குழம்ப, இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கும் பைபோலார் டிஸ்ஸார்டர் வந்துவிடும் அபாயகட்டம் நெருங்கும் போது, நம்மை முந்திக்கொண்டு கழுத்தறுத்து சாகிறார் தனுஷ், அத்துடம் படம் முடிவடைகிறது.

படத்தில் மூன்றில் இரண்டு பாகம் ஓகேவாக இருப்பதால் இடைவேளைக்கு பிறகான காட்சிகள் சோதனை ஏற்படுத்தினாலும் மெஜாரிட்டி அடிப்படையில் இப்படம் தப்பி பிழைக்கிறது, கொலைவெறியின் பாடலின் மேல் எனக்கு பெரிதாக அபிப்ராயம் இல்லாமல் இருந்தததால் அதன் படமாக்கல் குறித்தும் ஒன்றும் தோன்றவில்லை, ஆனால் கண்ணழகா பாடலும், நீ போ பாடலும், அதனை படமாக்கிய விதமும் அருமையாக இருந்தது.

பிண்ணனி இசையும், ஒன்றிரண்டு பிஜிஎம்களும் ரொம்பவே ரசிக்க வைத்தன, கண்ணாடி போட்ட சிவப்பு தனுஷ் என்று யாரும் காதல் கொண்டேன் இரண்டாம் பாகம் எடுக்க நினைத்து ஹீரோவாக போடாமல் விட்டால், ஜிவி, பிரகாஷிற்கு அடுத்து நல்லதொரு இடம் அனிருத்திற்கு கண்டிப்பாக இருக்கிறது, வருங்காலத்தில் நல்லதொரு இசையமைப்பாளராக வருவார் என நம்புகிறேன், ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தில் தவறவிட்ட இடங்களையும் சரிசெய்து நல்லதொரு டைரக்டராக மிளிர்வார் என நம்புகிறேன்.

மொத்தத்தில் இப்படம் எனக்கு பிடித்திருந்தது, ஏற்கனவே பாதி சைக்கோ, பாதி மெண்டலாகி திரிவதால் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு இந்த கொலைவெறி மூன்றும் பிடித்திருந்தது, நாளைக்கே ”கீழ்ப்பாக்கம்: “ நீ பைத்தியம்” என யாராவது படம் எடுத்தால் அதுவும் எனக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
  

Saturday, April 7, 2012

ராம்சரணின் ரகளை - தெலுங்குல ரச்சாமாவீரன் படத்த தமிழ்ல பார்த்ததுல இருந்து ராம்சரண் ஃபேனாகி ரகளைக்கு முதநாளே போனேன், ஆனா இப்படி அநியாயத்துக்கு ரகளையா இருக்கும்னு தெரியாம போச்சே சாமி.

ஆந்திரகாரங்களுக்கு மசாலா பிடிக்கும்னு கேள்விபட்டுருக்கேன், அதுக்காக இப்படி கூடவா கொலயா கொன்னு படமா எடுப்பாய்ங்க, நம்மூருல நம்மாளுங்க ஏற்கனவே வாந்தி எடுத்த குருவி, காக்கா, கொக்குன்னு எல்லாத்தையும் கலந்து கட்டி மினி முனியாண்டி விலாஸ் மத்தியான சாப்பாட்டையே ரகளையா படமாக்கி வச்சிருக்காங்க

இந்த ரகளை படத்தோட கதை என்னன்னா? நம்ம இந்திய சினிமா ஏன் உலக சினிமா வரலாற்றுலயே பார்க்க முடியாத கதைங்க இது, ஒரு ஊருல இரண்டு உயிர் நண்பர்கள் இருக்கறதும், அவங்க ஊருக்கே நல்லது பண்ண நினைக்கறதும், அத கெடுக்கறதுக்காகவே சொந்தத்துல வில்லனுக இருக்கறதும், அவங்களுக்கு இரண்டு சில்வண்டு பசங்க இருக்கறதும், அதுல பிஞ்சுலயே டைட்டானிக் டைரக்டருக்கே ரொமான்ஸ் சொல்லிதர அளவுக்கு வெவெரமா இருக்கறதும்,

வில்லனுக சதி செஞ்சு நண்பர்கள கொலை பண்ணுறதும், சில்வண்டுல பெரிய வண்டாகி லவ் பண்ணுறதும், அதுகளுக்கு ஒரு பிளாஸ்பேக்கு வைக்கிறதும், உண்மை தெரிஞ்சு கிளைமேக்ஸ்ல ஒரு அம்பது அறுபது பைட் மாஸ்டர்சுகள கேப்டன் பாஸ்கர மகாராஜன் ஆக்குனது மாதிரி ஆக்கி கண்டமாக்குறதும் ம்ம்ம்ம்ம்ம், போதுங்க, இதுலயே நம்ம விஜய் படம் முதக்கொண்டு கேப்டன் படம் வரைக்கும் எல்லா படத்தோட கதையும் இருக்கு

என்னடா படம் ஆரம்பிச்சதுல இருந்து ஹீரோ பேரு கூட போடலியே பயங்கர புரட்சிகரமான படமா இருக்கும் போலன்னு நினைக்கயிலயே ஒரு ஓஓஒடடறற டிரையினுல இருந்து அடுத்த டிரெயின் மேல தாவி ஸ்லோமேசன்ல திரும்பி குடுத்தாரு பாருங்க ஒரு எண்ட்ர்ரி ராம்சரண், பேக்கிரவுண்டுல இடி மின்னல் பிளாஸ் எல்லாம் அடிச்சு மெகா பவர்ஸ்டார்னு போட்டாங்க பாருங்க டைட்டிலு, அப்படியே கண்ண கட்டிடுச்சு,

ஏற்கனவே நம்ம ஊருல ஒரு பவர்ஸ்டார் பண்ணுற அலும்பு போதாதா? இவரு வேற மெகா பவர் ஸ்டாராமே? அப்பவாச்சும் நாம சுதாரிச்சிருக்க வேணாமா? படம் முழுக்க அடிக்கடி அடிக்கறாரு பாருங்க பஞ்சு, படம் பார்க்குறவங்களுக்கு உடம்பு புல்லா பஞ்சருதான், உதாரணத்துக்கு ஒரு டயலாக் - டேய் நீ பேசுனா கூச்சலு, நான் பேசுனா மின்னலு, இது எதுக்குன்னு நினைக்கிறீங்க, போன்ல வில்லன் சவுண்டா பேசுனதுக்கு நம்ம ராம்சரண் அடிக்கற பஞ்சுதான் இது, பின்னாடி கிராபிக்ஸ்ல மின்னல் வேற, இது மாதிரி ஏகப்பட்ட பஞ்சரு

அக்மார்க் தெலுங்கு படம்கறதுக்கு இன்னொரு உதாரணம், ஏகப்பட்ட டபுள் மீனீங்ஸ், ஆந்திராவுல சென்சார்காரங்க நல்லவைங்க, நம்மாளுக அப்படியில்ல அதனாலயோ என்னவோ நம்மூருல ரசிகர்கள்கிட்ட செம ரெஸ்பான்ஸ், அதுலயும் ராம்சரண் தமன்னாகிட்ட லவ்வ புரோபோஸ் பண்ணுவாரு பாருங்க, ரைட்ல திரும்பு, லெப்ட்ல திரும்பு, ஓகேம்மா வண்டில, ரைட்டு லெப்ப்டு, ஹெட்டு, இண்டிகேட்டரு, ஹாரனு, பம்பரு, டிக்கி வரைக்கும் ஓகே, நான் உன்ன லவ் பண்ணுறேன்னு, முடியல

தமன்னாவ பத்தி என்ன சொல்ல, பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி இருக்கறாங்க, நம்மாளுங்க ஏற்கனவே நனைய வெச்சு பார்த்துட்டாங்க, ஆந்திராங்காரங்கள்ள கூடவே கொஞ்சம் தெளிய வச்சும் பார்க்கறாங்க போல, தமன்னாவுக்கு நல்ல டிஸ்டெம்பர் பெயிண்ட் விளம்பரம் நல்ல சாய்ஸ்,

படத்துலயே உருப்படியான ஓரே விஷயம் பிரம்மானந்தம் காமெடிதான், நம்மாளுங்க் கஷ்டப்பட்டு வசனம் பேசி, கஷ்டப்பட்டு நெளிஞ்சு வளைஞ்சு காமெடி பண்ண கஷ்டப்படும் போது, ஜஸ்ட் லைக் தட்டா போற போக்குல காமெடி பண்ணிட்டு போயிடறாரு. அமெரிக்கன் ரங்கீலாவா வர பிரம்மானம்தான் படத்தோட ஹைலைட்டே, அதுலயும் ஏர்போட்டுல இருந்து வெளிய வந்ததும் நம்மாளுங்க பார்த்துட்டு சொல்லுவாரு பாருங்க “ ஆல் ஒன் ரூபீஸ் காயின்பாக்ஸ் - சில்லற பசங்க”

நீங்கல்லாம் யாருடா இந்தியன் ருபீஸ், நான் அமெரிக்கன் டாலர், ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நாற்பத்து ஏழுங்க,  

அட்லீஸ்ட் நாற்பத்தி ஏழு செண்டிமீட்டராவது டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுங்கடான்னு

நம்ம ஊரு பார்த்திபனும், நாசரும், ஆந்திராவுல குணசித்திர ரசத்த புளிஞ்சு ஊத்திட்டு இருக்கறத பார்த்தா ஒருபக்கம் பெருமையாவும் இருக்கு, ஆனாலும் இந்த மொக்க மசாலா படத்தையும் நம்ம ஆளுங்க ரசிச்சு ருசிச்சு பார்க்குறத கண்ணுல தண்ணியே வருது,


அதுலயும் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்தவரு, தியேட்டரோட பால்கனிக்கும் புளோருக்கும் எகிறி, உருண்டு புரண்டு, பீலிங்க கொட்டி படம் பார்த்துகிட்டு இருந்தாரு, சந்தேகமா பார்த்த என்கிட்ட படம் சூப்பரா இருக்கல்லன்னான்னு கேட்டாரு, உங்களயெல்லாம் பார்த்தா புளகாங்கிதம் ச்சே புளகந்தரகோலம் அடைறேண்டா சாமின்னு மனசுல நினைச்சுகிட்டேன்.

இந்த படம் பாக்குற காசுல குவாட்டர் அடிச்சு குப்புற படுத்து தமன்னாவ கனவுல “கண்டுகிட்டீங்கன்னா” சேஃப், இல்லையின்னா கர்த்தருக்குள் நித்திரை அடைய நேரிடலாம், மத்தபடி ஆல் குருவீஸ் படத்த என்சாய் பண்ணலாம்.