ஓம் காமதேவாய அம் அம் கிருஷ்ணாலயா உம் உம் கோபி லோல மம் மம் மாதவப்பிரியா சம் சம் சிவானந்த ரூபா வம் வம் வாசுதேவா என்னைக் கண்ட ......................... வாயடக்கி, கை மடக்கி, கால் மடக்கி எனக்கு வசமாக ஹூ ஹா ....
என்ன பார்க்குறீங்க ஏதோ மந்திரவாதி ஆகிட்டேனான்னா அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஒரு எண்ணெய் இருக்குதுங்களாம் அத ரெண்டு புருவத்திலும் தடவி விட்டுட்டு இந்த மந்திரம் சொன்னீங்கன்னா உங்களுக்கு தேவையான ஆள் அது ஆணோ பொண்ணோ நீங்க வசியம் பண்ணிரலாமாம், இது மட்டும் இல்லைங்க இது போக வசிய அஞ்சனம், வசிய எண்ணெய்னு நிறைய இருக்குது.
அவங்க கிட்ட இருக்குறதுலயே சூப்பர் மேட்டர் ஒன்னு இருக்குது, அதுதான் சக்கரை, சக்கரைன்னா சாதாரணமான சக்கரைன்னு நினைச்சுராதீங்க, அது பண்ர வேலைய பார்த்தீங்கன்னா அசந்துருவீங்க, உங்க வீட்டுல பொண்டாட்டி கிட்ட டெய்லி அடிவாங்க முடியலியா, இல்லை உங்க புருசன போட்டு பிரிச்சு எடுக்கனுமா ஒன்னும் பிரச்ச்னை இல்லை, எப்ப உங்களுக்கு பிரச்சனை வருதோ அப்ப இந்த சக்கரையை கொஞ்சம் சாப்பிட்டீங்கன்னா போதும், சும்மா விஜயகாந்து கணக்கா காத்துலயே பறந்து பறந்து அடிக்கலாம், விலை ஒன்னும் பெரிசா இல்லைங்க வெறும் 1000 மட்டுமே.
அப்புறம் உங்களுக்கு மாமனார், மாமியார், நாத்தனார் இப்படி யாராவது எதிரி இருக்காங்களா, ஒன்னும் பிரச்சனை இல்லை கொஞ்சூண்டு இந்த சக்கரை போட்டு காபி போட்டு கொடுத்தீங்கன்னா போதும் முடிஞ்சது, அட ஆள் இல்லைங்க, மேட்டர் முடிஞ்சது அவங்க டம்மி பீஸ் ஆகிருவாங்க, இதோட விலையும் ஆயிரம்தான்
உங்களுக்கு எது மேலயாவது விருப்பம் அதிகமா இருந்து கிடைக்காம போயிருச்சா, அது வீடு, நிலம், புருசன், பொண்டாட்டி, காதல், கல்யாணம், கத்திரிக்காய், அட எதுவா இருந்தா என்னங்க அதுக்கும் இருக்கு ஒரு சக்கரை இருக்கு, இதுவும் சேம் ரேட்தான்.
அடுத்த சக்கரை வசூல் சக்கரை, வசூல பத்தி உங்களுக்கு சொல்லவே வேணாம், வட்டிக்கு விடுறவங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும், பேங்க் காரங்க வேணாலும் மொத்தமா மூட்டை கணக்கா ஆர்டர் கொடுக்கலாம் டிஸ்கவுண்ட் பண்ணாலும் பண்ணுவாங்க, விலை அதுவேதான் ஒன்லி தவுசண்ட் ரூப்பீஸ்
நெக்ஸ்ட் திருமணதடை நீக்கும் சக்கரை, உங்களுக்கு யாருக்காவது கல்யாணம் ஆகலேன்னு பிரச்ச்னை இருக்கா, நோ பிராப்ளம் இருக்கவே இருக்கு சக்கரை டெய்லியும் இரண்டு வேளை கொஞ்சம் சாப்பிடுங்க, நீங்க மட்டும் சாப்பிட்டா போதாதுங்க, உங்க அப்ப அம்மாவும் சாப்பிடனும், அது மட்டும் இல்லை பொண்ணு பார்க்க வர வீட்டுக்காரங்களுக்கு காப்பி கொடுப்பீங்கல்ல அதுலயும் கலந்து கொடுங்க அப்புறம் பாருங்க வெளங்கிரும், ச்சீ கல்யாணம் நல்ல படியா விளங்கும்னு சொல்ல வந்தேங்க, விலை எது எடுத்தாலும் 1000 மட்டுமே
அடுத்து வரது முக்கியமான சக்கரை வியாதி நீக்கும் சக்கரை, உங்களுக்கு வேண்டியவங்க யாராவது ஆஸ்பத்திரியில சீரியசா இருக்காங்களா, அவங்க குணமாகனும்னு வேண்டி நீங்க ரெண்டு வேளை சாப்பிட்டீங்கன்னா போதும் உடனே குணமாகிடுவாங்க, விலையும் அதேதான்
யப்பா சொன்னா சொல்லிட்டே போக வேண்டியதுதான் அதுனால மிச்சம் இருக்குற சக்கரைகளை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன்,
உங்களுக்கு வேலை கிடைக்கலையா அதுக்கு இருக்கு வேலை உத்யோகம் கிடைக்கும் சக்கரை
படிப்பு வரலியா டோண்ட் வொர்ரி அதுக்கு இருக்கு கல்வியில் உயர்நிலைக்கான சக்கரை
நீங்க கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலியா அதுக்கு சாப்பிடுங்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் சக்கரை, இதுல ரெண்டு வகையான சக்கரை இருக்கு ஒன்னு சாதா இன்னொன்னு ஸ்பெசல்
உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது காணாம போயிட்டாங்களா அதுக்கு சாப்பிடுங்க காணாமல் போனவர்கள் திரும்பி வரும் சக்கரை
கல்யாணம் ஆகியும் குழந்தை பொறக்கலியா அதுக்கும் இருக்கு குழந்தை பாக்கிய சக்கரை
இன்னும் இருக்கு விற்காத பொருள் விற்கும் சக்கரை, செல்வாக்கு சக்கரை, செய்வினை தீர்க்கும் சக்கரை, இந்த சக்கரை எது வாங்கினாலும் விலை ஆயிரம் ரூபாய் மட்டுமே,
இது எதுவும் காமெடி இல்லைங்க, முழுக்க முழுக்க உண்மை தயவுசெஞ்சு சந்தேகப்படாதீங்க, அப்படி சந்தேகப்பட்டீங்கன்னா அதுக்கும் இருக்கு சந்தேகம் நிவர்த்தி செய்யும் சக்கரை, மேற்கண்ட அனைத்து சக்கரைகளையும் கண்டுபுடித்து மக்களுக்காக சேவை செய்பவர் பரிகார செம்மல் சித்தர் ஞானகுரு அவர்கள், மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தினை பார்க்கவும்.
(படத்தினை கிளிக்கி பெரிதாக பார்க்க்வும்)
நன்றி - வாராந்தரி ராணி
எனவே நண்பர்களே இந்த அற்புதமான விளம்பரத்தினை ராணி வார இதழில் பார்த்தேன், பாவம் எத்த்னை அற்புதமான பொருட்களை விற்பனை செய்பவர் காசு கொடுத்து வார இதழில் விளம்பரம் செய்திருக்கிறார், எனவே அவரின் புகழை இலவசமாக பரப்புவதற்காக நான் என் தளத்தில் வெளியிட்டுள்ளேன், இவரை மற்ற வைத்தியர்களை போல லாட்ஜ் வைத்தியர் என்று நினைத்து விடாதீர்கள், சார் மேன்சனில் குடியிருக்கிறார் மறந்து விடாதீர்கள், ஆகவே நண்பர்களே முந்துங்கள் உங்களுக்கு தேவையான சக்கரை வாங்கி அருந்தி பயனடையுங்கள்.
பொது நலன் கருதி வெளியிடுவது நானேதான் .......
நன்றி
அன்புடன்
இரவுவானம்