Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, February 5, 2013

லவ் பண்ணலாமா ??!!



ஏண்டி உனக்கு கேட்கறதுக்கு வேற எதுவுமே தோணலையா ?

ப்ளீஸ்டா ப்ளீஸ்டா எனக்கு இதுதான் வேணும் !

முடியாது வேற ஏதாச்சும் கேளு, மொதல் தடவையா வாங்கி குடுக்கறேன், நல்லதா எதாச்சும் கேளு.

ம்ஹூம் எனக்கு இதான் வேணும், வாங்கித்தா

எதுக்கு என்ன செருப்பாலயே அடிக்கவா ?!!

ச்சீ, அதுக்கு நான் கேட்கல, எனக்கு செருப்புதான் வேணும், வாங்கி தா

சுசியும் சிவாவும் காதலிக்க ஆரம்பித்து ஒரு மாதம் தாண்டியாயிற்று, தன் காதலிக்காக முதல் தடவை பரிசளிக்க விரும்பி என்ன வேண்டுமென்று சுசியிடம் கேட்டதுதான் மேற்கண்ட உரையாடல்.

சரி சரி வேற வழி? முதல் தடவை ஆசையா கேட்டுட்ட, சரி அதையே வாங்கித்தரேன்.

ம்ம்ம் சூப்பரா இருக்கணும், பார்க்குறேன் உன் டேஸ்ட் எப்படி இருக்குன்னு ?

பாரு பாரு சரி சைஸ் சொல்லுடி?

என்ன சைஸ் ?

செருப்பு சைஸ்தான்

நீயெ கெஸ் பண்ணு

நானே கெஸ் பண்றதா? வேற எதாச்சும் கெஸ் பண்ண சொன்னா பண்ணிடுவேன், இத எப்படிடி கெஸ் பண்ண?

ச்சீ போடா

சரி சரி வெட்கப்படாத சொல்லு

சொல்ல மாட்டென், என்ன லவ் பண்ணறல்ல, நீயே கண்டுபுடிச்சி வாங்கிட்டு வா,

டீ என்னால முடியாது, சொல்லு சொல்லு

எனக்கு தெரியாது, கரைக்டா வாங்கி தரலைன்னா உங்கூட ஒரு வாரம் பேச மாட்டேன்.

அய்யோ வேணாம், வேணாம், ப்ளீஸ்மா சொல்லிரு

பேச பேச போன் கட்டாகியது.

ச்சே வச்சுட்டாளே என்ன பண்றது? சரி காதல் விட்ட வழி, குத்து மதிப்பா ஒன்ன வாங்குவோம்.

நல்ல கடையாக தேடிப்பிடித்து அவனுக்கு பிடித்த மாதிரி ஒரு மாடல் செருப்பை கடவுளை வேண்டிக் கொண்டு குத்து மதிப்பாக அவளுக்கு பொருந்தும் என்று நினைத்த சைசில் வாங்கியும் கொடுத்துவிட்டான்.


அடுத்த நாள்

போன் ரிங்கியது

காலிங் சுசி

அய்யோ கடவுளே கரக்டா இருக்கணுமே, இல்லைன்னா பேச மாட்டாளே

ஹலோ

டேய், உன்னோட கிப்ட் கிடைச்சது, ரொம்ப நல்லாருக்கு

பொய் சொல்லாத

உண்மையாத்தான்

ஓக்கே அந்த செருப்பு எப்படி கரைக்டா இருந்துச்சா ?

ம்ம்ம் இருந்துச்சு இருந்துச்சு, கால விட ரெண்டு இஞ்ச் கம்மியா ?

என்னடி சொல்ற ? சரியா இல்லையா ??

ம்ம்ம் ரொம்ப சின்னதா இருக்கு, கஷ்டப்பட்டு காலை நுழைக்க வேண்டியிருக்கு, ஒரு செருப்ப கூட உன்னால ஒழுங்கா பாத்து வாங்க முடியாதாடா ?

சாரிடி செல்லம், என்னால கெஸ் பண்ண முடியல, சரியாத்தான் இருக்கும்னு நினைச்சேன்.

நல்லா நினைச்ச போ

சாரிடி, சாரிடி செல்லக்குட்டி, ஒரு செருப்ப கூட ஒழுங்கா வாங்க முடியலையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு

பரவால்ல விடுடா, கொஞ்சம் டிரை பண்ணா போட்டுக்கலாம்தான்.

இல்ல, நான் சரியாத்தான் இருக்கும்னு நினைச்சேன்.

ம்ம்ம் சரியாத்தான் இருக்கு, பீல் பண்ணாத !!!

பொய் சொல்லாத, பர்ஸ்ட் டைம் ஒன்னு வாங்கி குடுக்கறேன், உருப்படியா வாங்கி குடுக்க முடியலைல்ல

டேய் செல்லம், ரொம்ப பீல் பண்ணாதடா, உன் செருப்பும் உன்ன மாதிரியேத்தான் என் வீட்டுல குடியேற நினைச்சிருக்கு, என்ன உன்னை முந்திருச்சு, அவ்வளவுதான்.

போடி லூசு

போடா

காதலிக்கும் இருவர் இதயங்களும் செருப்பு மாதிரித்தான் ஒன்று இல்லாமல் மற்றொன்றுக்கு உபயோகம் இல்லை, அவ்வகையில் செருப்பும் காதல் பரிசே ..!


டிஸ்கி : படித்துவிட்டு யாராவது செருப்பை கழட்ட விரும்பினால், வீட்டுக்கு வெளியே சென்று விடவும்

Friday, February 25, 2011

காதல் நடந்தது என்ன? - அதற்கு பிறகு...


முன்கதை சுருக்கம்
கதையே இல்லை, இதுல எங்கிருந்து முன்கதை சுருக்கம் வேற சொல்றது, சரி இருந்தாலும் சொல்றேன், அதாவது நடந்தது என்னன்னா நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒரு பத்து பதினஞ்சு பிகருகள சைட்டடிச்சிட்டு ஜாலியா திரிஞ்சுகிட்டு இருந்தேன், அப்ப என்னோட நண்பன் ஒருத்தன் ஒரு ஐயரு பொண்ணு என்ன லுக்கு விடுதுன்னு ஏத்தி விட்டுட்டான், நானும் அத நம்பி இருக்குற பொண்ணுங்க எல்லாத்தையும் டீல்ல உட்டுட்டு அந்த ஒரு பொண்ணு பின்னாடி மட்டும் லவ் பண்ணலாம்னு சுத்திகிட்டு இருந்தேன், சும்மா சுத்திகிட்டே இருந்தா எப்படி சரி ஐ லவ் யூ சொல்லி அடுத்த கட்டத்துக்கு போலாம்னு நினைச்சு பேச போனா தம்பின்னு சொல்லிட்டா, இதுதான் முன்கதை சுருக்கம், இந்த பாழா போன கதைய டீடெய்லா படிக்கனும்னா கீழ இருக்குற அஞ்சு லிங்கயும் படிச்சிட்டு வந்துடுங்க


படிக்க விரும்பாதவங்க அப்படியே கண்டினியூ பண்ணுங்க


அவ என்னை பயங்கரமா திட்டிட்டு போயிட்டா
எனக்கு பயங்கர கோவம் வந்தது, இருக்குற கோபமெல்லாம் தலைக்கேறி தலை பயங்கர சூடாகிருச்சு, சரி நம்ம பசங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்னு திரும்பி பார்த்தா இரண்டு பேரையும் காணோம், அவ திட்டுன திட்டுல இரண்டு பேரும் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிட்டானுக,
என்னோட குளோஸ் பிரண்டு ஒருத்தன் மட்டும் ஒரு அரை கிலோ மீட்டருக்கு அந்தப்புறம் நின்னுகிட்டு சிரிச்சுகிட்டு இருந்தான்,
மொட்டையன கண்ணுக்கு எட்டின தூரம் மட்டும் காணல, எனக்கு பயங்கர கோவமா வந்திருச்சி, சும்மா விளையாண்டுகிட்டு இருந்தவன கூப்பிட்டுட்டு வந்து திட்டு வாங்கி வச்சிட்டானுங்க, நான் பாட்டுக்கு பேசாம போய்ட்டு இருந்தேன்,
என் பிரண்டு ஓடி வந்தான், நில்லுடா நில்லு நானும் வரேன்,
நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம், நாந்தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னனல்லடா, தேவையில்லாம கூட்டிட்டு வந்து திட்டு வாங்கி வச்சிட்டீங்களேடா, அதுவுமிலலாம அவ திட்டுனதும் ஓடி வேற போயிட்டீங்க
அது இல்லடா எனக்கு என்ன தெரியும் அவ திட்டுவான்னு, அவ திட்ட ஆரம்பிச்சதும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு, அதான் ஓடிட்டேன்னு சொல்லி மறுபடியும் சிரிச்சான்
மரியாதையா போயிடு, அவன் எங்க போனாண்டா மொட்டையன்?
அவன் நீ திட்டு வாங்க ஆரம்பிச்சதுமே சைக்கிள எடுத்துட்டு ஓடியே போயிட்டாண்டா
அவன் மட்டும் என் கண்ணுல சிக்குனான் செத்தாண்டா நாயி
அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் மொட்டையன நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் பிரண்டு மட்டும் ஒரு தடவை அவன பார்த்தா சொன்னான்
சே இப்படி ஆயிருச்சே, அவ இப்படி சொல்லுவான்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல, மனசு பூராவும் ஒரு ஆற்றாமை புயலா ஓடிட்டு இருந்தது, தனியா புலம்பிட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்
என் பிரண்டு என்னை பார்த்து சிரிச்சுகிட்டே இருந்தான்
டேய் மூடிட்டு வாடா, இன்னொரு தடவை சிரிச்சே, காதோட அப்பிருவேன்
கிழிப்ப, பேச தெரியாம பேசி திட்டு வாங்கிட்டு என்னை சொல்றியா?
நானா போய் பேசறேன்னு சொன்னேன், நீங்க ரெண்டு பேருதாண்டா என்னை கூட்டிட்டு போய் சிக்க வச்சிட்டீங்க
ஆமா எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு, நீதாண்டா அவ கூட பேசினேன், சிரிச்சேன்னு பீலா உட்டுகிட்டு இருந்தே
நான் எதுக்குடா பொய் சொல்லனும் உண்மையிலேயே அவகூட இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை பேசி இருக்கேன், நல்லாத்தான் பேசினா
அப்ப எதுக்கு இப்ப திட்டிட்டு போனா?
தெரியலியேடா, சே எப்படி எல்லாம் லவ் பண்ணேன் அவள, இப்படி சொல்லிட்டாளே
சரி விடுடா, இந்த பொண்ணுங்களே இப்படித்தான், சரக்கு அடிச்சா சரியாகிரும், வா போய் சரக்கு அடிக்கலாம்னான்
எனக்கு வேணாம்டா, நாந்தான் சரக்கு அடிக்க மாட்டேனுல்ல
சரி விடு அப்ப புண்பட்ட மனதை புகைய விட்டு ஆத்தலாம், தம்மடிக்கலாமா
அப்ப எனக்கும் நிறைய சினிமா பார்த்து தம்மடிக்கனும்னு ஒரு ஆசை இருந்தது, ஆனாலும் வீட்டுக்கு தெரிஞ்சுருமோன்னு பயந்துட்டு வேணாம்னு இருந்தேன், ஆனா அப்ப ஏதாவது பண்ணனும் போல இருந்தது, அதனால சரின்னு சொன்னேன்

அவனும் நம்ம அண்ணாச்சி கடைக்கு போனான், அண்ணாச்சி கடை கல்லா பெட்டி மேல சிகரட் பாக்கெட்டெல்லாம் அடுக்கி வச்சிருப்பாரு, கையில காசு இல்லாததால, ஒரு ரூபாய்க்கு ஏதோ வாங்கிட்டு, ஒரு பாக்கெட் வில்ஸ்ஸ சுட்டுட்டு வந்துட்டான்
அந்த சிகரட்ட அடிக்கறதுக்காக, எங்க ஊரு இரங்காட்டுக்குள்ள போய் யாருமே இல்லாத இடமா பார்த்து உட்கார்ந்தோம்

அந்த பாக்கட்டுல ஒன்பது சிகரெட் இருந்தது, ஒன்ன அண்ணாச்சி வித்துட்டாரு, முத முதலா சிகரெட் பத்த வச்சு கொடுத்தான் என் நண்பன், அத வாங்கி குடிக்க தெரியாம குடிச்சு ஒரே இருமலா வந்தது
எனக்கு வேணாம்டா, என்னால முடியல, தொண்டை எல்லாம் எரியுது
டேய் முதல்ல அப்படித்தான் இருக்கும், உன்னை திட்டுனாலுல்ல அவள பழி வாங்கனும், அவள நினைச்சுட்டு இழுடா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்னு சொன்னான்
நானும் அவள நினைச்சுகிட்டே ஆட்டோகிராப் சேரன் மாதிரி நினைவுகள் நெஞ்சினில் ரேஞ்சுக்கு பாட்டு பாடாம தம்மடிக்க ஆரம்பிச்சேன், அப்படியே லைனா நான் நாலு, அவன் அஞ்சுன்னு மொத்த சிகரெட்டயும் குடிச்சு முடிச்சோம்
சரி கிளம்பலாம்னு நினைச்சு கிளம்பும் போதுதான் ஞாபகம் வந்தது, ஆகா இவன் சாயங்காலம் நம்ம ஊர் பசங்களோட சேர்ந்து தண்ணியடிப்பானே, அவங்ககிட்ட சொன்னா போச்சே, நம்மள கிண்டல் பண்ணி ஒருவழி பண்ணிடுவானுங்களேன்னு
டேய் நடந்த விசயம் யாருக்கும் தெரிய கூடாது, முக்கியமா நம்ம பசங்க யார்கிட்டயும் சொல்லிடாத, மானத்தை கெடுத்துடுவானுங்க, அதுவுமில்லாம பிரச்சனை பண்ணிடுவானுங்க
டேய் நான் எதுக்குடா சொல்ல போறேன், சத்தியமா யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னான்
நானும் நம்பிட்டேன்

ஆனா அவன் எப்ப நான் சொன்னத கேட்டுருக்கான்? அப்ப எனக்கு தெரியாது அடுத்து என்ன நடக்க போகுதுங்கறது,
அப்படி என்ன நடந்ததுன்னா? ....

தொடரும்...

Friday, February 18, 2011

கொஞ்சம் பிளாஸ்பேக் - நடந்தது என்ன?திரும்பி பாருங்க ...


அப்ப எங்க ஊருல ஸ்கூல் எல்லாம் கிடையாது, ஊருக்கு வெளியே ஒரு மாரியம்மன் கோவிலும், பிள்ளையார் கோவிலும் பக்கம் பக்கமா இருக்கும், கோவிலுக்கு பின்னாடி சைடுல ஒரு கிணரும், தொட்டியும் இருக்கும், கிணத்த தாண்டுனா ஓரே சவுக்கு தோப்பா இருக்கும், தொட்டிக்கு இந்தப்புறம் சோளக்காடும், அத தாண்டினா சுடுகாடும் இருந்தது,

பிள்ளைக படிக்கறதுக்கு ஸ்கூல் வேணும்னு மாரியாத்தா கோவிலையும், பிள்ளையார் கோவிலையும் ஸ்கூலா பயன்படுத்திகிட்டு இருந்தாங்க, மாரியாத்தா கோவில்ல ஒண்ணாவதும், பிள்ளையார் கோவில்ல இரண்டாம் வகுப்பும் நடந்துகிட்டு இருந்தது, மூனாம் வகுப்புன்னா பெரிய பசங்க ஆச்சே, அவங்ககளுக்கு மட்டும் கிளாஸ் சவுக்கு தோப்புல நடந்துகிட்டு இருந்தது, இப்ப எல்கேஜி, யூகேஜி, மாதிரி அப்ப அங்கன்வாடி வச்சுருந்தாங்க, சின்ன சின்ன குழந்தைகள எல்லாரும் அங்கன்வாடியில படிச்சிட்டு இருப்பாங்க, அங்கன்வாடில இருக்குற குழந்தைக எல்லாம் 3 வயசுல இருந்து 5 வயசுக்குள்ள இருக்குறதால அவங்களுக்கு மட்டும் ஒரு கட்டிடம் கட்டி வச்சிருந்தாங்க,

அப்ப எனக்கு ஒரு மூணரை வயசு இருக்கும், அப்ப நானும் அந்த அங்கன்வாடி ஸ்கூல்ல தான் படிச்சிட்டு இருந்தேன், படிக்கரதுன்னா இப்ப இருக்குற எல்கேஜி, யூகேஜி மாதிரி படிப்பெல்லாம் கிடையாதுங்க, காலையில அம்மா வீட்டுல எழுப்பி ஸ்கூலுக்கு போடான்னு சொல்லுவாங்க, மாட்டேன் நா போ மாட்டேன்னு அழுகணும், அவங்களும் நாலு சாத்து சாத்தி ரோட்டுல தரதரன்னு இழுத்துட்டு போவாங்க, ஸ்கூலு வரைக்கும் அழுதுகிட்டே போகனும், ஸ்கூலுகிட்ட போனதும், ஒரு தேன் மிட்டாயே, ரப்பர் மிட்டாயோ வாங்கி தருவாங்க, அப்புறம் அழுகைய நிப்பாட்டிக்கணும், அப்புறம் ஸ்கூல்ல விட்டுட்டு அம்மா கிளம்பிடுவாங்க

அப்புறம் ஸ்கூலுக்கு உள்ளே போனதும், நம்மள மாதிரியே நிறைய சில்வண்டு பசங்க, பொண்ணுக மூக்குல சளி வழிய அழுதுகிட்டு இருக்குங்க, அதுங்கள கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தா டைம் பாஸாகிடும், அப்புறம் யாராவது இளிச்சவாய குழந்தைகளா பார்த்து கிள்ளி வைக்கணும், இல்லைன்னா அடிக்கணும், அதுக கீகீகீன்னு அழுகும், அத கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தமுனா டைம் பாஸ் ஆகும், அதுக்குள்ள டீச்சர் வந்து நமக்கும் ரெண்டு அடி கொடுப்பாங்க, அப்புறம் நாமளும் கொஞ்ச நேரம் அழுகணும், அப்புறம் டீச்சருக்கு போரடிச்சா அ ஆ இ ஈ, இல்லைன்னா 1 2 3 4 ஏதாவது சொல்லி அறுப்பாங்க, நாமளும் திருப்பி சொல்லணும், அப்புறம் டீச்சருக்கு போரடிச்சிரும், அவங்களும் போயிருவாங்க

அதுக்குள்ள மத்தியானம் ஆயிரும், லஞ்ச் டைம்ல யானைக்கு உண்டகட்டி கொடுக்கற மாதிரி ஒரு பெரிய உருண்டயான சத்து மாவு கொடுப்பாங்க, அத எங்க ஆரம்பிச்சு எப்படி சாப்பிடுறதுன்னு ஒரு முடிவு பண்ணி கண்ணால, மூக்கால, வாயால, மூஞ்சியால எல்லாம் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆயிரும், அப்புறம் டீச்சர் ஆளுக்கொரு குட்டியூண்டு பாய் கொடுப்பாங்க, அத விரிச்சு படுத்தா சவுக்கு தோப்பு காத்து ஜன்னல் வழியா தாலாட்டும், அப்படியே தூக்கம் பட்டைய கிளப்பும், 3 மணி ஆனதும் டீச்சரு எல்லாரையும் எழுப்பி விட்டுடுவாங்க, 

அப்புறம் எழுந்திருச்சு கூட இருக்கற பசங்க பொண்ணுக கூட ஞாயம் பேசியோ, இல்லை மறுபடியும் கிள்ளி வச்சு சண்டையோ போட்டமுன்னா மறுபடியும் டைம் பாஸாகிரும், அப்புறம் அம்மா வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க, போகும் போது மறுபடியும் அஞ்சு காசு மிட்டாயோ, இல்லை ஜம்பரு மிட்டாய், எழந்த வடை ஏதாவது வாங்கி தருவாங்க, அப்படியே ஜாலியா வீட்டுக்கு போயிரலாம், அப்ப எங்க ஊருல எழவு நடந்தா பொணத்து மேல சில்லரை காசு வீசுவாங்க, நான் அத எல்லாம் பொறுக்கி எடுத்து கடையில கொடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன், 

இப்படியே ஜாலியா போயிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில ஒருநாள் அது நடந்தது, அன்னைக்கு காலையில நாங்க பிசியா சண்டை போட்டுட்டு இருந்த நேரத்துல டீச்சர் வந்தாங்க, எல்லாரும் எழுந்திருச்சி லைனா நில்லுங்க, மாரியாத்தா கோவிலுக்கு லைனா நடந்து போங்கன்னு சொன்னாங்க, எங்களுக்கு எதுவும் புரியலைன்னாலும், எழுந்து லைனா கோயிலுக்கு போக ஆரம்பிச்சோம், கோயிலுக்கு வெளிலயே ஓண்ணாவது, ரெண்டாவது, மூணாவது படிக்கற பசங்களும் லைனா நின்னுகிட்டு இருந்தாங்க, ஒவ்வொருத்தரா கோயிலுக்கு உள்ள போகறதும், வெளில வரும்போது ஆன்னு கத்திகிட்டே அழுதுகிட்டு வரதுமா இருந்துச்சு, எனக்கும் ஒரே பயமா இருந்தது,

இப்படியே மூணு வகுப்பு பசங்களும் உள்ள போய் வந்துட்டாங்க, அடுத்து எங்க வகுப்பு டர்ன், என்னோட நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருத்தரா உள்ள போக ஆரம்பிச்சாங்க, உள்ள போய் இவனுங்க கத்துன கத்துல உள்ள இருக்கற மாரியாத்தாவே பயந்திருப்பாங்க, அப்படி கத்துறானுக, எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல, பயந்துகிட்டே காத்திருந்தேன், அடுத்தது என்னோட டர்ன், உள்ள போனேன், ஒரு டாக்டரு உட்கார்திருந்தாரு, அப்பத்தான் எனக்கு புரிஞ்சது, நமக்கு ஊசி போட போறாங்கன்னு, அதனாலதான் எல்லாரும் கத்தியிருக்கானுங்க 

டாக்டரும் பல்லை காட்டு நாக்க காட்டு மூக்க காட்டுனு சொல்லிட்டே ஊசி எடுக்க போனாரு, சார் சார் வேணாம் சார் விட்டுறுங்க சார்,  எனக்கு ஊசின்னாலே பயம் சார், வலிக்கும் சார், விட்டுறுங்க சார்ன்னு கத்துனேன், கதறுனேன், கெஞ்சுனேன், பயபுள்ள எதுக்கும் மசியல, இதுக்குன்னே ரெண்டு பேர வச்சிருந்தாங்க, அவங்க என்ன அசயாம புடிச்சிகிட்டாங்க, நான் கதற கதற டாக்டர் “சதக்”ன்னு குத்திட்டாரு, அய்யோ, அம்மான்னு கத்திட்டேன், வலியில உயிரே போயிருச்சு, ஒரு அரைமணி நேரம் கேப்பு விடாம அழுதுகிட்டு இருந்தேன், அதுக்குள்ள மத்தியானம் ஆனதால, டாக்டரு சாப்பிட போயிட்டாரு, மீதி இருக்குற பசங்கள டீச்சரும் கிளாசுக்கு போக சொல்லிட்டாங்க, டாக்டரு சாப்பிட்டு வந்து ஊசி போடுவாருன்னு சொன்னாங்க,

அப்புறம் மறுபடியும் டீச்சர் வந்து மிச்சம் மீதி ஊசி போடாம இருந்தவங்கள கூட்டிட்டு போய் அவங்களுக்கும் ஏத்திட்டு வந்தாங்க, அன்னைக்கு புல்லா எங்க கிளாஸ் ரூம் பசங்க எல்லோரும் எழவு வீடு மாதிரி அழுதுகிட்டே இருந்தாங்க, நானும் தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேன், அப்ப என்னோட நண்பண் ஒருத்தன் பேரு மோகன் அவன் மட்டும் அழுகாம சிரிச்சுகிட்டு இருந்தான், ஏண்டா உனக்கு வலிக்கலையான்னு கேட்டேன், அவன் நான் ஊசி போட்டு இருந்தாதான வலிக்கறதுக்கு, நாந்தான் ஊசியே போடலியேன்னு சொன்னான், எப்படிடான்னு கேட்டேன், ஒன்னும் இல்லடா ஊசி போட்டதுக்கு அப்புறம் பஞ்சு கொடுக்கறாங்கல்ல, அது கீழ கிடந்தது, அத எடுத்து கைல வச்சிகிட்டு அழுத மாதிரி நடிச்சேன் விட்டுட்டாங்க அப்படின்னான், எனக்கு ஒரே ஆச்சரியாமா போச்சு, என்ன பண்ரது நம்ம விதி அப்படின்னு சோகமா இருந்தேன், 

சாயங்காலம் அம்மா கூட்டிட்டு போனாங்க, அம்மா நான் இனிமே ஸ்கூலுக்கு போக மாட்டேன், ஊசி போட்றாங்கன்னு சொன்னேன், அம்மா இனிமே போட மாட்டாங்க பயப்படாதன்னு சொன்னாங்க, நான் கேட்கலை, 3 நாளா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்புடிச்சேன், அப்புறம் அம்மா செமயா மாத்து மாத்துன்னு மாத்தி ஸ்கூல்ல கொண்டு போய் விட்டாங்க, அப்புறம் ஊசி எல்லாம் போடல, மறுபடியும் ஒரு வருசம் ஹேப்பியா இருந்தேன்,

அடுத்த வருசம், மறுபடியும் ஒருநாள், வெள்ளை கோட்டோட டாக்டருங்க, இன்னும் இரண்டு மூணு பேரு எல்லாம் வந்தாங்க, அத நாங்க கிணத்து பக்கம் ஒன்னுக்கு போகும் போதே பார்த்துட்டேன், ஆஹா வந்துட்டாங்கையா, வந்துட்டாங்க, ஊசி போட வந்துட்டாங்கன்னு நம்ம பசங்ககிட்ட போய் சொன்னோம், அப்பவே எல்லாரும் பயந்து நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க, மறுபடியும் அதே மாதிரி டீச்சர் வந்து எல்லாரும் லைனா நில்லுங்க, கோயிலுக்கு கிளம்புங்கன்னாங்க, அப்பவே எல்லாரும் ஆளாளுக்கு, எனக்கு முந்தாநேத்துதான் ஊசி போட்டாங்க, காலையிலதான் ஊசி போட்டாங்க, விட்டுடுங்கன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க, டீச்சரும் இன்னைக்கு ஊசி எல்லாம் போட மாட்டாங்க வெறும் செக்கப்தான்னு கூட்டிட்டு போணாங்க,

தக்காளி போணப்புறம் தான் தெரிஞ்சது, டீச்சரு நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாங்கன்னு, மறுபடியும் அய்யோ அம்மான்னு அபலை குரல் கேட்க ஆரம்பிச்சிருச்சு, நான் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன், டக்குன்னு மோகனோட பழைய ஐடியா ஞாபகம் வந்தது, ஆஹா எவனாவது பஞ்ச கீழ போடுவானான்னு பார்த்துகிட்டே இருந்தேன், தெய்வாதீனமா ஒருத்தன் பஞ்ச கீழ போட்டுட்டு அழுதுகிட்டு இருந்தான், நானும் பாஞ்சு பஞ்ச புடிச்சு, கைல வச்சிகிட்டு எப்படா மத்தியானம் ஆகும்னு காத்துகிட்டு இருந்தேன், மத்தியானம் ஆனதும் மீதி பேரெல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் வாங்கன்னு சொல்லி அனுப்புனாங்க, நானும் சந்தோசமா கிளாசுக்கு திரும்பி வந்துட்டேன்,

மத்தியானமும் டீச்சர் வந்து புள்ள புடிக்கறவங்க மாதிரி புடிச்சிட்டு போய் ஊசி போட்டாங்க, நான் வெற்றிகரமா தப்பிச்சிட்டேன், கைல பஞ்ச வச்சிகிட்டு வராத கன்ணீர வரவழைச்சி அழுதுகிட்டு இருந்தேன், மோகனும் என் பக்கத்துல உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தான், சரி விடுடா டீச்சர்தான் போயிட்டாங்கள்ள, எதுக்கு அழுதுகிட்டு இருக்கற? அழுகைய நிறுத்துடான்னு சொன்னேன், அவன் முன்ன விட வேகமா அழறான், இல்லடா எனக்கு உண்மையிலேயே ஊசி போட்டுட்டாங்கடான்னு, எனக்கு ஆச்சரியா இருந்தாலும் சந்தோசமா இருந்தது, ஹே மாட்டிகிட்டயா நான் உன்னோட டெக்னிக்க யூஸ் பண்ணி தப்பிச்சிட்டேன், எனக்கு ஊசியே போடலியே, தப்பிச்சிட்டனேன்னு சொல்லி சிரிச்சிகிட்டு இருந்தேன்,

அவனுக்கு பயங்கர கோவம், அப்ப பார்த்து டீச்சரு வரவும், டீச்சர் இவன் ஊசியே போடல, பஞ்ச வச்சு ஏமாத்துறான்னு போட்டு கொடுத்துட்டான், எனக்கு அதிர்ச்சியாகிருச்சு, இல்லைங்க டீச்சர், இவன் பொய் சொல்றான், நான் ஊசி போட்டுட்டேன், கை எல்லாம் வீங்கி போச்சுன்னு சொன்னேன், டீச்சர் நம்பவே இல்லை, டேய் மரியாதையா வந்துரு, வந்து ஊசி போட்டுக்கோன்னு சொன்னாங்க, நான் கேட்கவே இல்லை, ஸ்கூலுக்கு உள்ள ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சேன், டேய் அவன புடிங்கடான்னு பசங்கள ஏவி விட்டுட்டாங்க, அவனுக இதுதான் சான்சுன்னு என்னை தொறத்த ஆரம்பிச்சானுங்க, நானும் எப்படி எப்படி எல்லாமோ தப்பிக்க முயற்சி பண்னென், அப்பவும் முடியல,கடைசியில நாலஞ்சு பசங்க சேர்ந்து என்னை புடிச்சிட்டாங்க,

சினிமால ரவுடிய போலீசு புடிக்கற மாதிரி என்னை புடிச்சிட்டானுங்க, நானும் திமிறி திமிறி பார்த்தேன், தப்பிக்கவே முடியல, ஒரு நிமிசம் போன வருசம் ஊசி போட்டதை நினைச்சு பார்த்தேன், அப்புறம் என்னோட சக்தியெல்லாம் திரட்டி ஒரே தள்ளு, பசங்க எல்லோரும் சினிமால காட்டுற மாதிரி தெரிச்சி போய் விழுந்தாங்க, அங்கன்வாடி ஸ்கூல் கதவு டாக்டர் வந்ததால ஊசி போட திறந்து வச்சிருந்தாங்க, ஓரே ஓட்டம், ஸ்கூல விட்டு வெளிய வந்து வீட்டை பார்த்து ஓட ஆரம்பிச்சேன், டீச்சரும், மூணாவது பசங்கள விட்டு தொறத்தி பிடிக்க சொன்னாங்க, அவங்களுக்கு என்னோட வீடு தெரியாததால நான் எங்க போனேன்னு தெரியாம திரும்பி போயிட்டாங்க,

வீட்டுக்கு போனதும் எங்க அம்மா நல்லா பூஜை போட்டாங்க, செம அடி, எல்லா அடியும் வாங்கி அழுதனே தவிர மறுபடியும் அங்கன்வாடி பக்கம் தலை வச்சு படுக்கல, அப்புறம் ஒரு வருசம் ஸ்கூலுக்கு போகல, அதுக்குள்ள எங்க ஊருல ஸ்கூல் கட்டி முடிச்சிருந்தாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும், அப்புறம் மாரியாத்தா கோவில்ல, பிள்ளையார் கோவில்ல, சவுக்கு தோப்புல நடந்துகிட்டு இருந்த கிளாஸ் எல்லாத்தையும் புது ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க, சரியா ஒரு வருசம் கழிச்சு என்னோட அஞ்சே முக்கால் வயசுல நான் ஒண்ணாம் கிளாஸ்ல சேர்ந்தேன்....

இப்ப எதுக்காக இந்த பிளாஸ்பேக்குன்னு கேட்குறீங்களா, காரணம் இருக்குது, என்னோட நானும் என் காதலும்கற தொடர் கதையில ஒரு வயசு வித்தியாசத்த காட்டி அந்த பொண்ணு என்ன தம்பின்னு சொல்லிட்டு போயிருச்சுன்னு சொல்லியிருந்தேன், ஆனா எனக்கும், அந்த பொண்ணுக்கும் ஓரே வயசுதான் அப்படிங்கறத சொல்லத்தான் இந்த பதிவு, ஸோ ஏஜ் வித்தியாசம் கிடையாது, அந்த கதைய படிக்காதவங்க கீழ இருக்குற லிங்க்ல போய் படிச்சு பார்த்துகோங்க, 


இதுலயே எல்லா பாகத்தோட லிங்கும் இருக்குது, பதிவுலகத்துக்கு கேப்பு விட்டாதலயும், ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கறதாலயும் பதிவு எழுதவோ, இல்லை மத்த நண்பர்களோட பதிவை படிக்கவோ நேரம் கிடைக்க மாட்டேங்குது, அதனால என்னோட பழைய கதையவே மறுபடியும் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன், குற்றம் நடந்தது என்னங்கற மாதிரி, காதல் தோல்வி - அடுத்தது என்ன நடந்தது அப்படின்னு சொல்ல போறேன், வேற வழி இல்லை கொஞ்சம் பொறுத்துகோங்க, வாரத்துக்கு ஒன்னுதான,
இந்த கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்கு, கண்டிப்பா எழுதுங்கன்னு சொல்லி ஊக்குவிச்ச அண்ணன் எஸ்.கே மற்றும் பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள், ஹி ஹி திட்டனும்னா தாராளமா எஸ்.கே அண்ணன திட்டிக்கோங்க, :-)))))) 

அன்புடன்
இரவுவானம்


Monday, February 14, 2011

வர வர காதல் கசக்குதய்யா ... (A)

இது ஒரு பயங்கர மொக்கையான பதிவு, இந்த பதிவை காதலிப்பவர்கள், காதலிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள், மற்றும் பெண்கள் யாரும் படிக்க வேண்டாம், சில விசயங்கள் 18+ போல இருக்கும், அதனால் பக்கத்தில் எதாவது நல்ல பிளாக்கா போய் நல்ல விசயங்களை படிங்க, மீறி படிச்சிட்டு திட்டாதீங்க !!!


இன்னைக்கு காதலர் தினம்னு சொல்றாங்க..,
காதல்னா என்ன? ஆணும் பொண்ணும் மட்டும் காதலிக்கிறதா இல்லைன்னா எல்லாரும் சொல்ற மாதிரி அப்பா அம்மா, நாய், பூனைக்குட்டி, இப்படி எது மேல எல்லாம் அன்பு பீறிட்டு வருதோ அது எல்லாமே காதல்தானா? இல்ல அட்ராக்சனா? இப்படி அட்ராக்சன் எது காதல் எதுன்னு பிரிச்சி தெரிஞ்சுக்கற அளவுக்கு பக்குவம் வந்திருக்கா? இப்ப காதல்னா என்னன்னு எல்லாருக்கும் முழுசா தெரியுமா? உணர்ந்திருக்காங்களா? இல்லை எது எது எல்லாம் காதல்னு நினைச்சுட்டு இருக்காங்க? இதுதான் என்னுடைய கேள்வி, அதற்கான பதிலை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன், எதுக்குன்னு கேட்குறீங்களா? சும்மா தெரிஞ்சுக்கறதுக்காகத்தான், இப்ப நான் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கிற காதல்கள பத்தி சும்மா கொஞ்சம் ....

என்னோட வீட்டுக்கு பக்கம் ஒரு மளிகை கடை இருக்கு, பசங்க எல்லாரும் எப்பவும் மளிகை கடை பக்கத்துல இருக்கற கம்பி கேட்டுளதான் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம், மளிகை கடை அண்ணாச்சி பலம்பெரும் குடிகாரர், அவருக்கு வாங்கி தந்தா கொஞ்சம் நமக்கும் கிடைக்குமேன்னு பசங்க எல்லாரும் அங்கயேதான் இருப்போம், எங்க வீட்டுக்கு பக்கம் ஒரு பொண்ணு இருந்துச்சு, அந்த பொண்ண கோயம்புத்தூர் காந்திபுரத்துல பார்த்தோம், ஈரோட்டுல பி.எஸ் பார்க்குல பையனோட பார்த்தோம்னு அடிக்கடி பசங்க சொல்லுவாங்க, சரி அது ஏதோ ஒரு பையன லவ் பண்ணுதுன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு.
அப்ப எங்க அண்ணாச்சி முத ல் முறையா ஒரு STD  பூத் ஒன்னு ஓப்பன் பண்ணுனாரு, அப்ப செல்போன் ரொம்ப புழக்கம் இல்லாத டைம்மு, காயின் பாக்சு, எஸ்டிடி பூத்துன்னு ஓடிட்டு இருந்துச்சு, நம்ம பொண்ணு இருக்கே, அதுவும் அங்க போன் பண்ண ஆரம்பிச்சது, டெய்லியும் 3 மணி நேரம் என்ன பேசும்னே தெரியாது, ஒருநாள் ரெண்டு நாள் இல்லை மாசக்கணக்கா மணிக்கணக்கா பேசும், அது பேசுன வேகத்துக்கு மூணே மாசத்துல நம்ம அண்ணாச்சி அட்டன் டைம்ல நாலு காயின் பாக்ஸ் வாங்கி போடற அளவுக்கு வசதி ஆகிட்டாரு, அதுவும் எப்படி நிமிசத்துக்கு 60 செகண்ட்ஸ் நம்ம அண்ணாச்சி காயின் பாக்ஸ் மட்டும்தான்,

எங்கிருந்து வந்தாங்களோ தெரியாது புதுசா நாலு பொண்ணுக வந்தாங்க சாயங்காலம் ஆனா போதும் நம்ம பழைய பொண்ணு எஸ்டிடிக்குள்ள போய் குடியேறிடும், மீதி நாலு பொண்ணுகளும் ஆளுக்கொரு காயின் பாக்ஸ்ஸ புடிச்சுக்குவாங்க, உண்டியல்ல காசு போடற மாதிரி ஒவ்வொன்னா லொட்டு லொட்டு போட்டு பேச ஆரம்பிப்பாளுக, நாங்களும் ஒட்டு கேட்க எவ்வளவோ டிரை பன்ணுவோம், ஹூஹூம் ஒன்னும் கேட்காது, அவளுக பேசுறது ரிசீவர்க்கே கேட்காது, எதுத்தாப்ல இருக்கறவனுக்கு கூட கேட்குமோ என்னவோ, அவங்க ச்சீம்பாங்க இல்லைன்னா சிரிப்பாங்க, நாங்க அதை பார்த்து விவேக் மாதிரி மிமிக்ரி பண்ணி சிரிச்சுக்குவோம், நம்மால வேறென்ன பண்ண முடியும்.
இப்படியே நாலு மாசம் போச்சு, காயின் பாக்ஸ்ல இருந்த மூணு பொண்ணு ஓடிப்போயிருச்சு, நாலாவது பொண்ணு மளிகைகடை பின்னாடி இருந்த பொதருல ஒருத்தனோட கையும் களவுமா பிடிச்சிட்டாங்க, புடிச்சது நம்ம அண்ணாச்சியேதான், அவரு புடிக்க போனது வேற விசயம், புடிக்கறேன்னு சொல்லி அவரும் சில அஜால் குஜால் எல்லாம் பண்ணிட்டாரு, ஏங்க இப்படி பண்ணுனீங்க போதைல அண்ணாச்சி இருக்கறப்ப கேட்டப்பதான் தெரிஞ்சது, அந்த பொண்ணு பேசும் போது நம்ம அண்ணாச்சி ஒட்டு கேட்டு இருக்காருன்னு, அது நாலஞ்சு பசங்கள டீல் பண்ணிட்டு இருந்துருக்கு, அதனால தலைவரும் களத்துல இறங்கி இருக்காருன்னு.

இப்படியே நாலு பொண்ணுங்களும் போக எஸ்டிடி பொண்ணு மட்டும் களத்துலயே இருந்துட்டு இருந்துச்சு, கொஞ்ச நாள் ஆச்சு, முன்ன சிரிப்பும் வெட்கமுமா பேசிட்டு இருந்த பொண்ணு இப்ப ஓரே அழுகைதான் பேசுற மூணு மணி நேரத்தில இரண்டரை மணி நேரமும் ஒரே அழுகைதான், இப்ப டெய்லியும் மணிக்கணக்கா அழ ஆரம்பிச்சிருச்சு, எங்களுக்கு ஒன்னும் புரியல, ஏதோ மேட்டர் ஆகி போச்சுன்னு மட்டும் புரிஞ்சது, அண்ணாச்சியும் ஒட்டு கேட்டுட்டு வந்து அதேதான்னு சொன்னாரு, ஆகா பய கை கழுவ பார்க்கறான்னு தெரிஞ்சு போச்சு, அதுவும் ஒரு மாசம் அழுது பார்த்துச்சு, அப்புறம் கொஞ்ச நாளா ஆளையே காணோம்.

ஒரு மாசம் கழுச்சு பார்த்தா கையில செல்போனோட அது பாட்டுக்கு ரோட்டுல சிரிச்சு பேசிட்டு போகுது, அண்ணாச்சிகிட்ட போய் என்னன்னு கேட்டோம், அவ கழட்டி விட்ட பையன் கூட பீல் பண்ணி இருக்க மாட்டான், இவருஆள் நொந்துட்டாரு, அந்த பொண்ணு ஆள மாத்திடுச்சாம், புது ஆளு பரவாயில்லை,  பழைய ஆள் மாதிரி கிடையாது, உடனே செல்போன வாங்கி கொடுத்திட்டான், பாவம் அண்ணாச்சிக்குதான் வருமானம் போச்சு, அண்ணாச்சி டென்சன் ஆகிட்டாரு, படுபாவி இவள நம்பிதான கடைய வச்சிருந்தேன், இப்படி ஆள மாத்திட்டாளே, இவ அழுது அழுது என்னோட போன் ரிப்பேர் ஆனதுதான் மிச்சம்னு புலம்பிட்டாரு, விடுங்க அண்ணாச்சி இந்த பொண்ணுகளே இப்படித்தான் ஒரு கட்டிங் போட்டா சரியாகிடும்னு சொல்லிட்டு வந்தேன், பாவம் அண்ணாச்சி ஓவரா கட்டிங் வுட்டு இப்ப குடல் வெந்து ஹாஸ்பிட்டல்ல இருக்காரு,

நம்ம பிரண்டு ஒருத்தர் இருக்காரு, அவரோட டெக்னிக்கே தனி, முதல்ல கூட வேலை பார்க்குற பொண்ணுங்க, தெரிஞ்ச பொண்ணுங்க இப்படி கடலை போட ஆரம்பிப்பாரு, அப்புறம் அந்த பொண்ணுங்க கிட்ட கேட்டு அவங்க ரிலேசன் பொன்ணுக இல்லைன்னா பிரண்டுக இப்படி அவங்க நம்பர் வாங்கி கடலை போட ஆரம்பிப்பாரு, கேட்டா பிரண்சிப்ப வளர்க்கறாங்களாம், அடுத்து அந்த பொண்ணுகளோட பிரண்ஸ்சு, ரிலேசனு இப்படி ஒரு அஞ்சாரு ரவுண்டு தாண்டி போய் ஏதாவது ஒரு பொண்ண புடிக்க வேண்டியது, பேசி கரக்ட் பண்ணி எங்கயாவது கூட்டிட்டு போனா மேட்டர் முடிஞ்சது, அப்புறம் ஆள் எஸ்கேப்பாகிடுவாரு, பாதிக்கப்பட்ட பொண்னுககிட்ட அந்த பையன் கூட எப்படி பழக்கம்னு கேட்டா அவங்களே குழம்பிடுவாங்க, யாரு மூலமா காண்டாக்ட் கிடைச்சதுன்னு, இப்படி நிறைய பேரு இருக்காங்க,

இன்னொரு நண்பன், என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன், அவனும் இதே கேட்டகிரிதான் ஆனா வேற மாதிரி மூணு பொண்ணுகள வச்சிருக்கான், இதுல ஒரு பொண்ணு பத்தாவது படிக்குது இவன சின்சியரா லவ் பண்ணுது, மீதி ரெண்டு பொண்ணுக்கும் இவன் மத்த பொண்ணுகளயும் லவ் பண்றது தெரியும், ஆனா அவங்களும் இத கண்டுக்கரதில்லை, ஏன்னா அவங்களும் இவனை கழட்டிவிடத்தான போறாங்க, இல்லைன்னா இவன் அவங்கள கழட்டிவிட போறான் அவ்வளவுதான், இப்ப அவனுக்கு வீட்டுல தீவிரமா பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க, கூடிய சீக்கிரம் மூணு பேர்க்கும் அல்வா புஜ்ஜி அல்வா,
சினிமா பார்த்து கெட்டு போறாங்க, சினிமா பார்த்து கெட்டு போறாங்கன்னு சும்மாவா சொல்றாங்க, இங்க ஒரு லிங்க் தரேன் போய் பார்த்துட்டு வாங்க, லிங்க் 18+ அல்ல, ஆனா லிங்க் அடுத்து வரது எல்லாம் 18+ ஆ இருக்கும், அதனால லிங்க்க மட்டும் கேட்டுட்டு வந்துடுங்க, மத்தத கேட்டீங்கன்னா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்,

http://www.youtube.com/watch?v=mqwI-HAmUg4

முன்ன எல்லாம் லவ் பண்ணா காண்டாக்ட் பண்ண வழி இருக்காது, இப்ப செல்போனு, இண்டர்நெட்டுன்னு வந்ததுக்கு அப்புறம் சும்மா கொடி கட்டி பறக்குது சார் பலபேரோட மானம் நெட்டுல பார்க்குறோமுல்ல, அதுல எத்தனை பேருக்கு தெரியுமோ தன்னோட மானம் நெட்டுல போயிருச்சுன்னு, தெரிஞ்சு எத்தனை பேரு செத்தாங்கலோ யாருக்கு தெரியும்? இனி 3ஜி வேற வந்திருச்சு, சொல்லவே வேணோம், சாதரண கேமரா மொபைல வச்சே ஸ்காண்டலு, எம் எம் எஸ்னு ஓடிட்டு இருக்கு இப்ப வீடியோ கால் வேற, என்னன்ன கொடுமை எல்லாம் நடக்க போகுதோ,

முதல்ல கல்யாணம் பண்ணிட்டு இன்பமடைஞ்சாங்க, அப்புறம் போன் வந்ததுக்கு அப்புறம் போன்ல செக்ஸ் மேட்டர் பேசி கிளுகிளுப்படைய ஆரம்பிச்சாங்க, அப்புறம் இண்டநெட்டு, சாட்டிங்கு அப்படின்னு கிளுகிளுப்படைய ஆரம்பிச்சாங்க, இப்ப பொழுதன்னைக்கும் எஸ் எம் எஸ் கார்டு போட்டு எஸ் எம் எஸ் மூலம் மேசேஜ் அனுப்ப ஆரம்பிச்சிருக்காங்க, இது என்ன மனவியாதியா என்னன்னு எஸ்.கே சார்தான் விளக்கனும்

முன்னயெல்லாம் லவ் பண்றதுனா சாமி குத்தம் மாதிரி இருந்தது ஒருகாலம், அப்ப எனக்கு தெரிஞ்சு அம்மா அப்பா இல்லாத பொண்ணுக, யாரோட ஆதரவும் இல்லாதவங்க, இப்படிப்பட்டவங்கதான் காதல்ல விழுவாங்க, காதலிப்பாங்க ஆனா இப்ப பாய் பிரண்டு, கேர்ள் பிரண்டு வச்சிருக்கறது பேசனாகி போச்சு,
புருசன் பொண்டாட்டி மாதிரி பிகேவ் பண்ராங்க, போன்ல மணிக்கணக்கா செக்ஸ் மேட்டர் பேசறாங்க, பைக்ல ஊர் ஊரா சுத்துறாங்க, எல்லாமே பண்ணறாங்க ஆனா லவ் பண்றோம்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க கேட்டா ஐஸ்ட் பிரண்டுகிறாங்க, இது எல்லாத்தையுமே பிரண்ட்சிப்புகுள்ள அடக்கிடுறாங்க, ரொம்ப உசாரா இருக்காங்கப்பா, லவ் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாதான் தப்பாம், பிரண்ட்சிப்புன்னு சொல்லிட்டு பண்ணினா தப்பில்லையாம், என்ன கொடுமை சார் இது? அப்ப ந்ட்புன்னா என்ன? அப்படின்னு யாராவது சொன்னா தேவலை.

ஒரு பொண்ணுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க்றது, கிப்ட் கொடுக்க்றது, அவங்களுக்கு தேவையானது எல்லாம் செய்றது, டிரஸ் வாங்கி கொடுக்கறது, போன் வாங்கி கொடுக்கறது, ரீசார்ஜ் பண்ணி கொடுக்க்றது, காத்திருந்து பைக்ல டிராப் பண்றது இப்படி எல்லாம் ஒரு பையன் வந்து பண்ணி கொடுக்கறானே அது எதுக்காக அவனோட எதிர்பார்ப்பு என்னன்னுஅந்த பொண்ணுக்கு தெரியாமலா இருக்கும்?,  அதே மாதிரிதான் பொண்ணுகளும் பிரண்ட்ஸ்சிப் பிரண்ட்ஸ்சிப்புன்னு நிறைய பசங்களோட பழகறது, மிஸ்பிகேவ் பண்றது, முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்.

தாங்க சைட் அடிக்கறதுக்கு, கூட்டிட்டு சுத்தறதுக்கு அழகழகான பொண்ணுங்க வேணும், மாடர்ன் பொண்ணுக வேணும்னு நினைக்கறவங்க எல்லாரோட எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்னு பார்த்தா அவங்க கல்யாணம் பன்னிக்க போற பையனோ பொண்ணோ மட்டும் ஒழுக்கமா இருக்கனுமாம், ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு நல்லவங்களா இருக்கனுமாம், ஒன்னு தெரிஞ்சுக்கனும், இங்க ஒழுக்கம் கெட்டு சுத்தறவங்க யாரா இருந்தாலும் சரி ஆணோ பொண்னோ அவங்களுக்கு வரவங்க மட்டும் ஒழுக்கமா இருப்பாங்கன்னு நினைக்காதீங்க, கண்டிப்பா ஒழுக்கம் கெட்டதாதான் இருக்கும்,

 வெள்ளைக்காரன் அப்படி பண்ணான் வெள்ளைக்காரன் இப்படி பண்ணான்னு மேற்கத்திய கலாச்சாரத்த தப்பு சொல்றமே, அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான், இங்கதான் பொண்டாட்டி இருக்கறப்பவே மனைவி, வப்பாட்டி, துணைவின்னுட்டு கெடக்கறாங்க,

எப்படி வேணாலும் வாழலாம்னு நினைச்சு வாழ்ந்தா சரியா இருக்குமா இல்லை இப்படித்தான் வாழனும்னு நினைச்சு வாழ்ந்தா சரியா இருக்குமா, ஏனெனில் தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம், பல சமுதாயங்கள் சேர்ந்ததுதான் ஊர் நாடு இத்யாதி போன்றவை, எனவே தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் பிரதிபலிக்கும், தனி மனித ஒழுக்கம்கறது தானா வராது, பிறப்பு வளர்ப்புலதான் வரும், குறைந்தபட்சம் நல்லது கெட்டது உணர்ந்து நமக்கு என்ன தேவை அப்படின்னாவது உணர்ந்து இருக்கனும், ஆணோ பொண்ணோ நமக்கு தேவை ஒரு துணை, அது யார் என்பதை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் மட்டும் போதுமானது, மற்றபடி தெரிந்தே தவறு செய்வது நல்லதல்ல, இறைவனின் சன்னிதானத்தில் எல்லாவற்றுக்கும் மன்னிப்பு கிடைக்கும் அது தெரியாமல் செய்த தவறுக்கு மட்டுமே, தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது, தண்டனை மட்டுமே.

இது காதலிப்பவர்கள் யாரையும் குறிப்பிட்டு எழுதியது அல்ல, இப்படித்தான் எல்லா காதலர்களும் செய்கிறார்கள் என்று கூறுவதும் அல்ல, சில காதல்களை கண்டதால் எழுதியது, ரொம்ப நாளாக எழுத நினைத்தது, மற்றபடி உண்மைகாதலுக்கு நான் என்றும் ஷாஜகான் விஜய்தான், ஆனால் என்ன செய்வது அதை காண்பது அரிதாகவே உள்ளது, இங்கு நல்ல காதலை விட கள்ளக்காதலுக்குதான் வலிமை அதிகமாக உள்ளது!

ஓகே ரொம்ப அறுத்துட்டேன்னு நினைக்கிறேன், அதனாலை கீழ்வரும் பாடலை உண்மைக்காதலர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், மத்தபடி என்னை திட்டனும்னு நினைக்கறவங்க தாராளமா திட்டிட்டு போலாம், நன்றி ....



Friday, January 21, 2011

நானும் என் லவ்வும் - 5



உன் மேல் கோபம்தான் அன்பே
உன்னைபற்றி மட்டுமே
நினைக்க வைத்து 
என்னை
சுயநலவாதியாய்
மாற்றிவிட்டாய் என்று ...





நண்பர்களே நான் இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் போது முழு கதையையும் சுருக்கமா எழுதிடலாம்னு நினைச்சேன், ஆனா எழுத எழுத அனுமார் வாலாட்டம் அது பாட்டுக்கு நீண்டுகிட்டே போகுது, அதனால இந்த பதிவு ஏறக்குறைய கிளைமேக்ஸ் மாதிரி, இதோட போதும்னு நினைச்சீங்கன்னா சொல்லுங்க நிறுத்திடறேன், மேற்கொண்டு என்ன நட்ந்ததுன்னு தெரிஞ்சுக்கனும்னா விருப்பப்பட்டீங்கன்னா சொல்லுங்க மேற்கொண்டு தொடருகிறேன், ஏன்னா உங்க பொறுமையை இதுக்கு மேல சோதிக்க எனக்கே பொறுமை இல்லை ... 

மூணு பேரும் கிளம்பினோம், நேரா வீட்டுக்கு போனேன்,
டேய் எங்கடா போற,
நில்லுடா வீட்டுக்கு போய் கை கால் மூஞ்சி எல்லாம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு போலாம்டா
டேய் ஏற்கனவே டைம் ஆயிருச்சி, இன்னும் இதெல்லாம் பண்ணிகிட்டு இருந்தா அவ போயிருவா, அப்படியே வா, நல்லாத்தான் இருக்கு
விட மாட்டான் போலருக்கே, எப்படியாவது லேட் பண்ணிடலாம்னு பார்த்தா, என்னை விட இவனுக்குதான் அவசரம் போல இருக்குது
அதெல்லாம் முடியாது, லவ் பண்றது நானு, இந்த அழுக்கு பனியன், வேட்டியோட எல்லாம் என்னால வரமுடியாது, வேணும்னா இன்னொரு நாள் மொட்டையனை கூட்டிட்டு போலாம்
ஏண்டா நீவேற இவ்வளவு தூரம் கிளம்பி வந்துட்டு ஆசை காட்டி அவன ஏமாத்தாத
அப்ப அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுடான்னு சொல்லிட்டு அவசர அவசரமா சட்டை மாத்தினேன், அதகூட மாட்ட அவனுங்க விட மாட்டேங்கறாங்க, இருங்கடா இருங்கடான்னு சொல்ல சொல்ல ஏறக்குறைய என்னை தூக்கிட்டே போயிட்டானுங்க
டேய் பேர் அண்ட் லவ்லியாவது போட்டுக்கறேண்டா விடுங்கடான்னு கத்தினேன், அவனுங்க கேட்டாத்தான, அவசர அவசரமா சைக்கிள்ள உட்கார வெச்சு கிளம்புனானுங்க,

என் பிரண்டு சொன்னான், டேய் டைம் இப்பவே ரொம்ப ஆயிருச்சு, நான் முன்னாடி போய் பார்க்கிறேன், இன்னேரம் டியூசன் முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும், நீங்க பின்னாடியே வாங்க, டியூசன் விட்டுருந்தாங்கன்னா முன்னாடியே வந்து சொல்றேன்னுட்டு போயிட்டான்
நானும் மொட்டையனும் அவனோட சைக்கிள்ள முடிஞ்ச அளவுக்கு வேகமா போயிட்டு இருந்தோம், அய்யர் வீதி தாண்டி திரும்புனா கடை வீதி வந்துரும், அதை தாண்டி போனாத்தான் டியூசன் செண்டர், நாங்க அய்யர் வீதி பாதி தூரம் போகறதுக்குள்ள என் பிரண்டு தலைதெறிக்க சைக்கிள் ஓட்டிட்டு எதிர வந்துகிட்டு இருந்தான், அவன பார்த்ததும் நாங்களும் சைக்கிள நிறுத்துனோம்.
ஏண்டா என்னாச்சு
டியூசன் முடிஞ்சிருச்சுடா, அவங்க கிளம்பிட்டாங்க, பாதி தூரம் வந்துட்டாங்க, இனி அங்கே போய் பேச முடியாது
அய்யா தப்பிச்சோம்டா சாமின்னு நினைச்சேன், அப்ப சரி விடுங்கடா இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்னேன்,
டேய் பாவம்டா மொட்டையன், இன்னொரு நாளைக்கு எப்படிடா வருவான், பேசாம இங்கயே வச்சு பேசிருடான்னான்,
இங்கயா முடியவே முடியாது, உங்களுக்கு வேற வேலை இல்லையா, இது அவங்க ஏரியா, யாராவது பார்த்தா பிரச்சனையாகிடும்டா
ஒன்னும் ஆகாதுடா, ஞாயித்து கிழமை மத்தியானம் யாருமே இருக்க மாட்டாங்க, நான் வேணா உன்கூட நிக்கிறேன், தைரியமா பேசுடா, பேசுடான்னு உசுப்பேத்தறானுங்க,

நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவே மாட்டேங்கறானுங்க, இங்க ஒன்னு சொல்லியாகனும். அய்யர் வீதி எண்டுல போஸ்ட் ஆபிஸ், அது பக்கத்துலேயே போலீஸ் ஸ்டேசன் இருக்குது, நாங்க நின்னுகிட்டு இருந்தது போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல,

சரி ஆனது ஆகட்டும்னு போஸ்ட் ஆபிஸ் முன்னாடி நின்னேன், என் பிரண்டு வெவரமா பத்தடி தள்ளி போஸ்ட் பாக்ஸ்கிட்ட நிக்கிறான், மொட்டையன் ரோட்டுக்கு ஆப்போசிட்ல ஒரு வீட்டு முன்னாடி சைக்கிள ரிப்பேர் பண்றமாதிரி நிக்கிறான், போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற ஏட்டு வேற என்னயே பார்க்கிற மாதிரி இருந்தது, ஆகா நல்லா மாட்டிகிட்டம்டா, சிக்குனம்னா ஈவ் டீசிங் கேசுல உட்கார வெச்சிடுவாங்களோ என்னமோன்னு மனசுல நினைச்சிகிட்டு இருந்தேன்.

முன்னயாவது என்ன பேசனும், எப்படி பேசனும்னு நைட்டு வீட்டுல உட்கார்ந்து விடிய விடிய டிரைனிங் எடுப்பேன், இப்ப திடீர்னு கூட்டிட்டு வந்துட்டானுங்க, என்ன பேசுறதுன்னு ஒன்னும் புரியல, ஏதோ ஒன்னு பேசனும், என்ன பேசலாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கும்போதே கரக்டா போலீஸ் ஸ்டேசன் திரும்பி அவளும், அவ பிரண்டும் அய்யர் வீதிக்குள்ள நுழைஞ்சாங்க, என் பிரண்டுக இரண்டு பேரும் சைகை மூலம் பேசிட்டு இருந்தானுங்க, டேய் அதுதான் அவன் ஆளுன்னு,

சரி ஆனது ஆச்சு பேசிரலாம்னு முடிவு பண்னினேன், இப்ப எனக்கு முன்ன மாதிரி பயம் இல்லை, அவகிட்ட பேசுனா கண்டிப்பா திருப்பி பேசுவா, சிரிச்சிட்டு போவான்னு ஹண்ட்ரட் பர்சண்ட் நம்பிக்கை இருந்தது மனசுக்குல்ல, அவ கொஞ்ச கொஞ்சமா நெருங்கி வர ஆரம்பிச்சா,

அவ பக்கத்துல வந்ததும், நானே அவங்ககிட்ட நெருங்கி போனேன், அவ மூஞ்சில சிரிப்பு மிஸ்சிங், அதவிட அவ என்ன கண்டுக்காத மாதிரி நேரா பார்த்துட்டு போனா, நான் இது இரண்டையும் கவனிக்க தவறுனேன், நேரா எதிர்ல போய் நின்னேன், அவங்களும் நின்னாங்க, என்ன பேசறதுன்னு தெரியல, அதனால சும்மானாச்சுக்கும் எதாவது பேசுவோம்னு,

எதுக்குங்க என்ன பார்த்து சிரிச்சீங்கன்னு கேட்டேன்,
அதுக்கு அவளும், நீங்க ஏன் என்னை பார்த்தீங்கன்னு கேட்டா, 
நான் சும்மாதான் பார்த்தேன்னு சொன்னேன்
நானும் சும்மாதான் சிரிச்சேன்னு சொன்னா
இது என்னடா கொடுமைன்னு நினைச்சுகிட்டே சரி எத்தனையோ பேர் இருக்கயில்ல என்னை மட்டும் பார்த்து ஏன் சிரிச்சீங்க, அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன்,
அதுக்கு அவ சொன்னா பாருங்க பதிலு, அத கேட்டு அடிக்கற காத்து அப்படியே நிக்குது, கடல் அலைகளும் அப்படியே நிக்குது, காத்துல ஆடுற மரங்களும் அப்படியே நிக்குது

அவ என்ன சொன்னான்னா ....

உன் வயசு என்ன? என் வயசு என்ன? நான் பிளஸ் 2 படிக்கிறேன், நீ பிளஸ் 1 படிக்கிற, நீ என் தம்பி மாதிரி ....

தொடர்ந்தாலும் தொடரும் ... 


ஒரு சின்ன கவிதை
அவள் சிரித்தாள்
நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால்
நான் பேரன்ஸ் என்றேன், இறுதியில்
’’நான் மணவறையில்’’
’’அவள் கல்லறையில்’’
கொய்யாலே எவ்வளவு நாள்தான் பசங்களே சாகுறது..
இனிமேல் பொண்ணுங்களும் சாகட்டும்
நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி ...