Tuesday, February 1, 2011

கமர்சியல் பக்கங்கள் - 01/02/2011

ஒரு சந்தோசம்
கடந்த சனிக்கிழமை இணைய உலகிலே என்றும் இல்லாத அதிசயமான புரட்சி ஒன்று நம் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக நடந்தது பாராட்டத்தக்கது, எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த ஒரு விசயத்தில் அணி திரண்ட நண்பர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை, நல்லதொரு முடிவு கிடைத்தால் நன்றாக இருக்கும்,  இந்த இணைய புரட்சி தொடர வேண்டும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு, நானும் பதிவொன்றை போடலாம் என்று இருந்தேன், பல பிளாக்குகளில் சென்று பார்த்த போது அனைவரும் பெட்டிசன் அனுப்புவது, டிவீட் செய்வது என்று அதனையே பதிவாக எழுதி இருந்தனர், சரி நாமும் ஒரு முறை அதையே எழுத வேண்டாம் என்று நினைத்து விட்டு விட்டேன், பிறகு சொந்தமாக ஒரு கட்டுரையினை எழுதலாம் என்று நினைத்து எழுதினேன், எழுதி முடித்தவுடன் படித்து பார்த்த போது கோபத்தில கண்டபடி எழுதி இருந்தேன், சென்சார் போர்டுக்கு அனுப்பினால் கண்டிப்பாக நான்கு வரிகள்தான் மிஞ்சும் என்ற அளவில் இருந்தது, அதனால் பிரசுரம் பண்ணாமல் விட்டு விட்டேன், கொஞ்சம் டிங்கரிங், பெயிண்டிங் வேலை எல்லாம் செய்து பின்னால் வெளியிடுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கண்டனம்
சென்ற வாரம் ஆனந்தவிகடன் புத்தகம் ஒன்றினை எதேச்சையாக நண்பர் ஒருவரின் கடையில் படிக்க நேர்ந்தது, அதில் சென்னை புத்தக கண்காட்சி விழா பற்றிய கட்டுரையில் சரஸ்வதி விஜயம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன், பதிவர்களை பற்றி கண்டபடி எழுதி இருந்தனர், பதிவர்கள் இணையத்தில் தமிழ் குப்பைகளை கொட்டுகிறோமாம், ஓசியில் கூகிள் காரன் கொடுத்த பிளாக்கினை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு எழுதுகிறோம் என்று வாரு வாரு என்று வாரி இருந்தார்கள், என்ன இருந்தாலும் நாமும் பதிவர் அல்லவா அதனால் ஆனந்த விகடனுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்னமோ இவர்கள்தான் பத்து வருடம் படித்து விட்டு வந்து பத்திரிக்கைகளில் எழுதுவதை போலவும் நாம் எல்லாம் எழுதவே தெரியாமல் எழுதுவது போலவும் நினைப்பு அவர்களுக்கு, ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சந்தேகம்
பிறப்புக்கு முன்னால் என்ன என்பது உனக்கும் தெரியாது

இறப்புக்கு பின்னால் என்ன என்பது எனக்கும் தெரியாது - கண்ணதாசன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு தத்துவம்
அடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை இல்லை
கோபமே படாவிட்டால், நமக்கே மரியாதை இல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு காதல் கவிதை
மரத்துல இருக்குது காயி,
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி,
தூங்க தேவை பாயி
நீ ’’ம்’’ னு சொன்னா இந்த சிவா
உன் காலடி நாயி செல்வி நாயி

கவிதையை எழுதி இயற்றியவர் - சிவா
படம் -சென்னை-28
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு லைன்

WINNERS DON'T DO DIFFERENT THINGS.
THEY DO THINGS DIFFERENTLY.
- YOU CAN WIN SHIV KHERA
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவை பாருங்க, செம காமெடியா இருக்கும், சினிமாலதான் இந்த மாதிரி சண்டை காட்சிகளை பார்க்க முடியும், இது டிவி நிகழ்ச்சியில எடுத்தது

-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குட்டி கதை
அது ஒரு ஆளில்லாத நெடுஞ்சாலை, நேரம் இரவு பதினோரு மணி ஆகி விட்டிருந்தது, அந்த நெடுஞ்சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இல்லை, அடர்ந்த கும்மிருட்டு, அந்த இருட்டில் ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள், அந்த வாலிபன் ஒரு பெரிய அடர்ந்த மரத்தினடியில் கொண்டு போய் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான், இருவரும் கீழிறங்கினார்கள், அந்த வாலிபன் சுற்றும் முற்றும் இருபுறமும் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் ஆள் நடமாட்டமே இல்லை, பிறகு சிரித்துக் கொண்டே அவன் அந்த பெண்ணை நெருங்கினான், இருவரும் ஒருவருக்கு அருகில் ஒருவர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர், அவன் மேலும் அவளுக்கு அருகாமையில் நெருக்கத்தை அதிகப்படுத்தினான், பிறகு தன்னுடைய இரண்டு கைகளால் அவள் முகத்தை பற்றினான், அவளுடைய ஆரஞ்சு வண்ண முகம் வெட்கத்தால் மேலும் சிவந்தது, அப்படியே அவன் அவளுடைய முகத்தை பற்றிக் கொண்டு தன்னுடைய உதடுகளை அவள் காதருகில் கொண்டு போனான், கொண்டு போய் என்ன சொன்னான் என்றால், வண்டில பெட்ரோல் தீர்ந்து போச்சு, வா ரெண்டு பேரும் தள்ளலாம்...!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வருத்தம்
போன வாரம் நம்ம முறைமாமன் கார்த்திக் சாட்டிங்குல வந்து ஞாயித்து கிழமை மீட்டிங் ஒன்னு இருக்கு கோமாளி செல்வா, சுற்றுலா விரும்பி அருண், அப்புறம் நானும் வரேன், நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாரு, நானும் பதிவுலகத்துல வந்ததுல இருந்து தேவியர் இல்லம் ஜோதிஜி சார மட்டும்தான் மீட் பண்ணி பேசி இருக்கேன் , வேற யாரையும் சந்திச்சது இல்ல, அதனால கண்டிப்பா போகலாம்னு நினைச்சேன், ஆனா பாருங்க விதி யார விட்டது வழக்கம் போலவே ஊருக்கு போக வேண்டியதாகிருச்சு, அங்க போய் உடம்பும் சரி இல்லாம போயிருச்சு, டாக்டர் வேற சிடி ஸ்கேன் அது இதுன்னு என்ன என்னவோ எடுக்க சொல்லி இருக்காரு, பார்ப்போம் என்ன ஆகுதுன்னு, ஆகவே முறைமாமன் சார் இந்த மீட்டிங் வரமுடியல, அடுத்த மீட்டிங் போடறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னமே சொல்லிருங்க, கண்டிப்பா வரேன்....

அன்புடன்
இரவுவானம்