Tuesday, March 1, 2011

கமர்சியல் பக்கங்கள் - 01/03/2011



கருப்பு எம்ஜியார் விஜயகாந்த், விஞ்ஞான முறையில ஊழல் செய்ய தெரிந்தவர் என சர்க்காரியா கமிசனால் பாராட்டு பெற்ற (இன்னும் பாராட்டு விழா நடக்கலை) நமது சினிமா மினிஸ்டர் முத்தமிழ் அறிஞர், இளைஞர் ச்சீ கலைஞர் இளைஞன் காவியம் படைத்தவருடன் கூட்டணி அமைக்காமல், வெறும் சாதா ஊழல் மட்டுமே புரிய தெரிந்த வாய்தாதெய்வம் ச்சீ மனித தெய்வம், இதயதெய்வம், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், ஒரிஜினல் எம்ஜியார் தோற்றுவித்த அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுசெயலாளர் அம்மாவுடன் கூட்டு சேர போகிறாராம், 
முன்பு யாருடனும் கூட்டணி இல்லைன்னு சொன்னாரு, அப்புறம் மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணின்னு சொன்னாரு, இப்போ? (ஒருவேளை நைட்டு கொஞ்சம் ஓவரா போச்சோ)
ஒருவேளை அந்த குழந்தையே நீங்கதான் சார்ங்கற மாதிரி அந்த தெய்வமே அம்மாதானோ என்னவோ :-)
தெரிஞ்சோ தெரியாமலோ போன எலக்சன்ல விருத்தாச்சலத்துல ஜெயிச்சு ச.ம.உ ஆயிட்டாரு, அந்த ஊரு ஜனங்களும் கூட்டணி இல்லாம தனியா நிக்குறாரு அதுவுமில்லாம முதல்வர் பதவிக்கு போட்டி போடற ஆளாச்சேன்னுதான் ஓட்டு போட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன், சரி முதல்வர் ஆசைதான் கைகூடல, கிடைச்ச எம்,எல்,ஏ பதவியை வெச்சாவது ஏதாவது பண்ணிருக்க வேண்டியதுதான, முதல்வர் ஆகணும்னு ஆசைபடறவரு தன்னோட தொகுதியில தேவையான வசதிகளை செஞ்சு கொடுத்து, பாலாரும் தேனாரும் ஓட விடாட்டியும், தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி தொகுதியா தன்னோட தொகுதியை கொண்டுவந்து, பாருங்க மக்களே என்னோட ஒரு தொகுதியவே இந்தளவு பண்ணியிருக்கனே, தமிழ்நாட்ட என்கையில கொடுங்க மொத்த தமிழ்நாட்டையும் மாத்தி காட்டறேன்னு சவால் விட்டுருந்தா அது சரி, அதவிட்டுட்டு விருதகிரி படம் எடுக்கறதுலயும், மீதி நேரத்துல சரக்கு அடிச்சுட்டு திமுகாவை மட்டும் வாரு வாருன்னு வாரிட்டும் இருந்தா எப்படி? கடைசியா நடந்த மாநாட்டுல தலைவர் காலுக்கு அடியிலேயே ஒருத்தர் உட்கார்ந்துகிட்டு இருந்தாரு, அடுத்தது என்ன பேசறதுன்னு பாயிண்ட் எடுத்து குடுத்துட்டு இருந்தாரு, அப்படித்தான் மாநாடு முழுக்க பேசிட்டு இருந்தாரு, அதுவும் குடும்ப அரசியல பத்தி பேசுறது,
நம்ம வீட்டுல மட்டும் என்ன வாழுதாம், அண்ணி, மச்சான்னு, நாளைக்கு நம்ம பசங்களே பெரியவங்க ஆனா கட்சிபதவி கொடுக்க மாட்டீங்களா என்ன?

ஜனங்க இவர நம்பி ஓட்டு போட்டதே இவரு தனிச்சு நிக்கிறாருங்கறதுக்குதான், இப்ப கூட்டணி வச்சு தானும் ஒரு அரசியல்வாதின்னு நிருபிச்சிட்டாரு, 
எதிரியை கூட மன்னிக்கலாம், ஆனா நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே மாட்டேன், இது இவரோட பஞ்ச் டயலாக்தான், மக்களே மன்னிப்பீங்களா?
மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - இதுவும் இவரோட டயலாக்தான் ஞாபகம் வச்சிக்கோங்க, அவ்வளவுதான்..
நாளைக்கே கூட்டணி பேரம் ஒத்து வரலைன்னா மீண்டும் மக்களோட மட்டும்தான் கூட்டணின்னு சொல்லுவாங்களோ?


காமெடி

நான் 50 வருசமா அஸ்வின் ஹேர் ஆயில்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன், இப்ப முடி கொட்டுறது சுத்தமா நின்னு போச்சு, தேங்க்ஸ் டூ அஸ்வின்

- டாக்டர் கலைஞர் கருணாநிதி

குழந்தை : மம்மி எனக்கு தம்பி வேணும்
மம்மி : உங்க அப்பா துபாய் போய் இருக்கார், வரட்டும் யோசிக்கலாம்
குழந்தை : நோ மம்மி, டாடிக்கு நாம் சர்ப்ரைஸ் கொடுப்போம்
மம்மி : டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தாண்டா செல்லம்

கவிதை

புரண்டு படுத்தால் நாம் இறந்து போவோமோ என்று
கருவில் இருந்து நமக்காக தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்
- அம்மா

எனக்கு எதிரிகள் யாரும் இல்லை
அவளை பார்க்கும் பொழுது
ஒரு நொடி மறைக்கும்
இமைகளை தவிர...

தத்துவம்

யாராவது உங்களை விரும்பினால் நீங்கள் உணர்வது காதல் என்றால் என்னவென்று
யாராவது உங்களை வெறுத்தால் நீங்கள் உணர்வது வாழ்க்கை என்றால் என்னவென்று

நல்ல உறவுகள் என்பது கடிகாரத்தின் முள்ளை போல
சில நேரங்களில் மட்டுமே இணையும்
ஆனால் எப்பொழுதும் பிரியாது

ஒரு சின்ன நியூஸ்
கூகிள்ல ஒரு புது பிராஜெக்ட் வந்திருக்கு, இந்த விசயம் பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம், தெரியாதவங்களுக்காக இந்த நியூஸ்.
அமெரிக்கா, லண்டன்ல, பெர்லின் இப்படி பெரிய நாடுகள்ல இருக்கற பெரிய பெரிய மியூசியங்கள பார்க்கனும்னு நிறைய பேருக்கு ஆசையா இருக்கலாம், ஆனா அங்க போறதுக்கு வசதி இல்லாம நாம நிறைய பேரு இருக்குறோம் இல்லையா, அவங்களுக்காக கூகிள் கம்பெனிக்காரங்க ஆரம்பிச்சி இருக்கறதுதான் கூகிள் ஆர்ட் பிராஜெக்ட், இந்த வெப்சைட் மூலமா பல்வேறு நாடுகள்ல இருக்குற புகழ்பெற்ற மியூசிங்கள நாம இங்கிருந்தே பார்த்துக்கலாம், அதுவும் மவுஸ் மூலமாவே ஸ்கிரால் பண்ணி மியூசியத்துல இருக்கற ஒவ்வொன்னையும் பக்கத்துல பக்கத்துல பார்த்துக்கலாம், நான் எல்லா மியூசிங்களையும் சுத்தி பார்த்துட்டேன், நீங்களும் பார்க்கணும்மா

மியூசிங்கள பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க...


நீங்க தம்மடிக்கற ஆளா, தம்மடிச்சா ஒரு ரிலீஃப் கிடைக்குதுன்னு நம்புறீங்களா? கூடவே கேன்சரும் ப்ரீயா கிடைக்குது அதையும் நம்புங்க, கீழ இருக்குற வீடியோவை பாருங்க, சாதாரண வாட்டர் கேனுக்கே இந்த நிலைமையுனா? உங்க நுரையீரல் என்ன கதியாகும்?



இதே மாதிரிதான் நான் ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க போயிருந்தேன், அங்கயும் படம் போடுரதுக்கு முன்னாடி சிகரெட் புடிக்கறதால ஏற்படுற கெடுதல்கள் என்ன, என்னென்ன நோய் வரும், அப்படின்னு பார்க்கவே சகிக்காத படங்களா போட்டு ஒரு விழிப்புணர்வு படம் போட்டுருந்தாங்க, படத்தோட இடைவேளையில ரெண்டு பசங்க, மச்சி பார்த்தயாடா நுரையீரல் எல்லாம் எப்படிவெந்து போய் கிடக்குதுன்னு அத பத்தி பயங்கர சீரியசா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க, கையில சிகரட்டோட ...

ரசித்தவை...

அப்புறம் இன்னொரு விசயம் குடிக்கற சரக்குல போட்டு இருக்காங்க, மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடுன்னு, வீட்டுக்கும், உயிருக்கும் வேணா கேடா இருக்கலாம், ஆனா சத்தியமா நாட்டுக்கு இல்லை, நாடே டாஸ்மாக் வருமானத்துலதான் தள்ளாடாம நடக்குது, இப்படி நாடு தள்ளாடாம இருக்கறதுக்காக, தான் தள்ளாடிட்டு இருக்கற குடிமகன பாராட்டாட்டியும் பரவாயில்லை, தயவுசெய்து யாரும் திட்டாம இருங்க, அதனால மதுபாட்டில்கள்ள மது வீட்டுக்கும் உயிருக்கும் மட்டும் கேடுன்னு போடுமாறு அரசாங்கத்தை குடிமகன்கள் சார்பாக கேட்டுக் கொள்றேங்க...