முன்குறிப்பு : இந்த பதிவு யாருடைய மனதினையும் புண்படுத்துவதற்காக அல்ல, யாரையாவது பாதித்திருந்தால் மன்னிக்கவும்.
ஜாதி, மதம், இனம், மொழி போன்ற சென்சிடிவ் பிரச்சனைகளை பற்றி எழுதவே பயமாக உள்ளது, ஒரு வார்த்தை தவறினாலும் அது வேறு ஒரு அர்த்தத்தினை கொடுத்து பிரச்சனைக்கு வழிவகுத்து விடும், இருந்தாலும் என்னுடைய சந்தேகத்தினை இங்கு கொடுக்கிறேன், விடை தெரிந்தவர்கள் பின்னூட்டங்களின் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், ஏதேனும் தவறாக கருத்தில் பட்டாலே, மனதினை புண்படுத்தி இருந்தாலோ தெரிவிக்கவும், நீக்கி விடுகிறேன்.
என்னுடைய நண்பர்களில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் உண்டு, அனைவரும் பாரபட்சம் இல்லாமல் நட்பாக பழகக் கூடியவர்களே எனினும் சில சமயங்கள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது நீயா நானா விவாதத்தை போல கருத்து மோதல் நடைபெற்று அது வேறு தளத்தில் பயணித்து உன் மதமா என் மதமா என்பது போல ஆகி விடுகிறது. இது எப்பொழுதாவது நடைபெறும் ஒன்று என்றாலும், இதனால் இதுவரை பெரிதாக எந்தவொரு சண்டையும் நட்பினை கெடுத்துவிட வில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
பெரும்பான்மையான கருத்து மோதல்களில் வெளிப்படுவது இவையே, இந்திய நாடு முழுவதும் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாக இருப்பினும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதால் அரசாங்கமும், தனிமனிதர்களும் இந்துக்களை கேவலமாக பேசுவதும், நினைப்பதும், புறக்கணிப்பதும் நடைபெறுகிறது, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகத்தவர்கள் சிறுபான்மை சமூகத்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கு அரசாங்கத்திலும், மற்றைய இதர துறைகளிலும் பலப்பல சலுகைகள் இருப்பினும் அவர்கள் மனதில் ஆழ ஊறி இருப்பது மதப்பற்று ஒன்றே, இந்திய மண்ணில் சகல உரிமையுடன் வாழும் அவர்கள் ஆதரிப்பது மட்டும் ஏன் பாகிஸ்தானாக இருக்கிறது, சொல்லப்போனால் பாகிஸ்தானை விட இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் நல்ல அமைதியான, சந்தோசமான, வாழ்வாதாரத்துடன் வாழும் போது கேவலம் மதத்திற்காக ஏன் தடம் மாறுகிறார்கள், இந்திய மண்ணின் காற்றை சுவாசித்து, இந்திய மண்ணின் உணவினை சாப்பிட்டு, இந்தியாவிலேயே வாழ்ந்தும்விட்டு ஏன் இந்த பாகிஸ்தான் ஆதரவு? அந்த அளவு மதம் பெரிதாக போய்விட்டதா? ஏன் இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் இவ்வளவு ஆழமான மதப்பற்று காணப்படுகிறது? பெரும்பான்மை சமூக மக்கள் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்கும் போது, சிறுபான்மையினர் மட்டும் ஏன் தங்களுக்குள் கூட்டம் சேர்த்துக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்? எல்லாரையும் கூறவில்லை, விதிவிலக்கானவர்கள் நிறைய பேர்கள் இருக்கலாம், ஏன் இந்துக்கள் தவறே செய்வதில்லையா? வன்முறையில் ஈடுபடுவதில்லையா? என்று கேட்கலாம் ஆனாலும் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் அதிகம் நடக்கிறது? இன்னும் இந்துக்களின் கோவில் சொத்துக்களை மட்டும் அரசாங்கமானது இந்து சமய அறநிலைய துறை என்ற ஒன்றை கொண்டு கையாளும் போது, மற்ற மதத்தவரின் மசூதிகளையோ, சர்சுகளையோ ஏன் அவ்வாறு கையாளுவதில்லை? இப்படி போகிறது கருத்து வேறுபாடுகள்.
என்னுடைய சந்தேகம் என்னவென்றால், எனக்கு தெரிந்த வரையில் இஸ்லாம் மதமும், கிறிஸ்தவ மதமும் இந்தியாவில் தோன்றவில்லை, இஸ்லாமிய மதமானது கைபர் கணவாய் வழியே வந்த அக்பர் அவர்களால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டதோ அல்லது வேறு வகையிலா என்று எனக்கு தெரியவில்லை, அது போலவே கிறிஸ்தவ மதமும் எவ்வாறு இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் எனக்கு சரியாக தெரியவில்லை, இந்த இரண்டு மதமும் இந்தியாவில் பரவிய பின்னர் அதில் ஈடுபாடு கொண்டு மக்கள் இணைந்துள்ளனர், எனது கேள்வி எல்லாம், இன்று இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுடைய தந்தை அல்லது தாய் இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம், அந்த தந்தை அல்லது தாய் அவர்களின் தந்தை அல்லது தாயும் (தாத்தா, பாட்டி) கிறிஸ்தவ, இசுலாம் மதத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம், ஏன் அவர்களின் கொள்ளு தாத்தா, பாட்டி கூட மேற்கண்ட மதத்தினை சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களுடைய தந்தை அல்லது தாய் (கொள்ளு தாத்தா, பாட்டியின் தந்தை அல்லது தாய்) முந்தைய மூன்றாம் தலைமுறை கண்டிப்பாக ஒரு இந்துவாக இந்து மதத்தை சார்ந்தவராகத்தானே இருக்க முடியும்? அது சரி என்றால், இப்பொழுது இந்தியாவில் உள்ள அனைவருடைய பரம்பரையும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே?
பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலமாக தெரிவிக்கவும், தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன், நன்றி.
உங்களுடைய கருத்துக்கு எனது ஆதரவு முழுமையாக உண்டு. மதரீதியாக நாம் ஒன்றுபட்டாலும் ஜாதி நம்மை பிரித்து விடுகிறது. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களின் ஒற்றுமை தான் அவர்களை வாழ வைக்கிறது.உங்களுடைய மனதின் பிரதிபலிப்புதான் ஏனைய இந்து சகோதரர்களின் கருத்தாக இருக்கும் என கருதுகிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteயாருங்க அந்த இந்து? இந்துன்னா யாருன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்... நானும் இதுக்கு விடை தேடி ரொம்ப நாளா அழைஞ்சிக்கிட்டு இருக்கேன்
ReplyDeleteகுறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...
ReplyDeleteஇந்தியாவில் உள்ள அனைவருடைய பரம்பரையும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே? yes
ReplyDeleteஇனியவன் said...
ReplyDeletevinodh said...
philosophy prabhakaran said...
guna said...
நண்பர்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்.
ReplyDelete1. இந்து மதம் எங்கிருந்து வந்தது?
2. 2.இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?
நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து படித்து வாருங்கள்.
3.
இந்து மதம் எங்கே போகிறது?
.........
tamilan said...
ReplyDeleteநன்றி நண்பரே
இந்தியர்களின் ஆதி இந்துதான். இதனால் நீங்க கேட்க்க வருவது?
ReplyDeleteTHOPPITHOPPI said...
ReplyDeleteஉங்களின் கருத்து புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு, உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தொப்பி சார்
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...
ReplyDeletephilosophy prabhakaran said...
ReplyDeleteசாரி நண்பா, கமல் படங்கள் அவ்வளவாக நான் பார்த்ததில்லை, நான் ரஜினி ரசிகன், ரஜினி படங்கள் மட்டுமே அதிகமாக பார்த்துள்ளேன், அதனால் எழுத முடியாது, மன்னிக்கவும், அது சரி இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இல்லை?
சகோதரர் அவர்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.இந்தியாவில் உள்ள அனைவரும் பாரம்பரியத்தால் ஹிந்துக்கள் தான்.எனது முப்பாட்டன் ஒரு ஹிந்துவாகவே இருந்திருப்பார்.நானும் ஒரு ஹிந்து எனும் பதிவு எனது தளத்தில் வெளியிட்டு இருப்பேன்..நேரம் இருப்பின் பார்வையிடலாம்
ReplyDeletehttp://sunmarkam.blogspot.com/2010/03/blog-post_30.html
இந்தியாவில் இஸ்லாம் மன்னர்களால் பரப்பப்பட்டதல்ல.அது சூபிகள் எனும் இஸ்லாமிய ஞானிகளால் பரப்பப்பட்டது.
அது தவிர பாக்கிஸ்தான் ஆதரவு என்பது,தவறான சுட்டுதல்.அப்படி இருப்பின் அது தேச துரோகம்.அவன் இந்தியவில் வாழ தகுதி அற்ற ஈனச்செயல்.ஒரு அரசின் கீழ் வாழும் போது,இன்னொரு நாட்டை ஆதரிப்பது,குறிப்பாக எதிரி நாட்டை ஆதரிப்பது,இஸ்லாத்திற்கு விரோதமானது.அவன் குழப்பவாதி லிஸ்டில் சேர்க்கப்பட்டு இஸ்லாமிய அரசானால் அவனுக்கு அதிகபட்ச தண்டனை தரும்.இது முற்றிலும் தவறான எண்ணம்,இது சில அரைக்கிருக்கர்களிடம் இருப்பதை உணர முடியும்.அதுகளெல்லாம் நாட்டுக்கு உதவாத கேஸுகள்.வெருமனே கிரிக்கெட்டில்தான் அவர்களது இஸ்லாமிய பற்று துலிர்விடும்.அது பாக்கிஸ்தானியர்களை பிரியப்படும்.ஆனால் அதுவே ஒட்டுமொத்த முஸ்லீம்களின் கருத்து என ஒருபோதும் சொல்லலாகாது.உண்மையான பற்றுள்ள இந்தியர்களாக நாங்களேல்லாம் இருக்கும் போது,எங்களை உதாரணப்படுத்தலாம்/
இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு வன்முறை எனதாங்கள் கேட்பது நியாயமானது.
நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.
இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது இஸ்லாமியதீவிரவாதம் மட்டுமே,மக்களுக்கு அதிக ப்ரீச்சியம்.இதற்கு காரணம் திட்ட்மிட்டே செய்யப்படும் இஸ்லாம் மீதான ஒருக்கு முறையும்,உலகலாவிய இஸ்லாமொபோபியாவுமே...
அன்றாடம் நடக்கும் நக்சல் தீவிரவாதம் நம்மை சீண்டுவதில்லை.ஆண்டிற்கு ஒரு முறைஎன்றாலும்.1000ங்களில் கொலை புரியும் ஹிந்து தீவிரவாதம் நமக்கு தெரிவதில்லை.
இவை எல்லாத்தையும் குறிப்பிடுவதால் இஸ்லாமிய போர்வையில் நடக்கும் தீவிரவாதங்களை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை.எனது வண்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.தீவிரவாதம் எந்த முகமாக வந்தாலும் அதை ஒன்று சேர்ந்து முறியடிப்போம்.
//ஏன் இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் இவ்வளவு ஆழமான மதப்பற்று காணப்படுகிறது?//
இஸ்லாமியர்களுகு மதப்பற்று.அதிகமே.நாட்டுபற்றும் மதப்பற்றில் ஒரு அங்கம் என விளங்காதவர்கள் தான் தாங்கள் குறிப்பிடும் குருநரிகள்.
//சிறுபான்மையினர் மட்டும் ஏன் தங்களுக்குள் கூட்டம் சேர்த்துக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்?//
சகோ நியாயமான் காரணங்களுக்கு போராடுகிறோம்.எங்களின் மீதான அடக்குமுறைக்கு,அவமதிப்புக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கிறோம்.வன்முறை இஸ்லாமிய வழி அல்ல.
நன்றி
அன்புடன்
ரஜின்
http://sunmarkam.blogspot.com
RAZIN ABDUL RAHMAN said...
ReplyDeleteநன்றி நண்பரே முதன் முதலான உங்களின் வருகைக்கு
’’அது தவிர பாக்கிஸ்தான் ஆதரவு என்பது,தவறான சுட்டுதல்.அப்படி இருப்பின் அது தேச துரோகம்.அவன் இந்தியவில் வாழ தகுதி அற்ற ஈனச்செயல்.ஒரு அரசின் கீழ் வாழும் போது,இன்னொரு நாட்டை ஆதரிப்பது,குறிப்பாக எதிரி நாட்டை ஆதரிப்பது,இஸ்லாத்திற்கு விரோதமானது.அவன் குழப்பவாதி லிஸ்டில் சேர்க்கப்பட்டு இஸ்லாமிய அரசானால் அவனுக்கு அதிகபட்ச தண்டனை தரும்.இது முற்றிலும் தவறான எண்ணம்,இது சில அரைக்கிருக்கர்களிடம் இருப்பதை உணர முடியும்.அதுகளெல்லாம் நாட்டுக்கு உதவாத கேஸுகள்.வெருமனே கிரிக்கெட்டில்தான் அவர்களது இஸ்லாமிய பற்று துலிர்விடும்.அது பாக்கிஸ்தானியர்களை பிரியப்படும்.ஆனால் அதுவே ஒட்டுமொத்த முஸ்லீம்களின் கருத்து என ஒருபோதும் சொல்லலாகாது.உண்மையான பற்றுள்ள இந்தியர்களாக நாங்களேல்லாம் இருக்கும் போது,எங்களை உதாரணப்படுத்தலாம்/’’
நானும் பெரும்பான்மையான முஸ்லீம்கள் என சொல்லவில்லை,சில பேர்களே என்பதை சுட்டி காட்டுகிறேன்.
’’இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது இஸ்லாமியதீவிரவாதம் மட்டுமே,மக்களுக்கு அதிக ப்ரீச்சியம்.இதற்கு காரணம் திட்ட்மிட்டே செய்யப்படும் இஸ்லாம் மீதான ஒருக்கு முறையும்,உலகலாவிய இஸ்லாமொபோபியாவுமே...
அன்றாடம் நடக்கும் நக்சல் தீவிரவாதம் நம்மை சீண்டுவதில்லை.ஆண்டிற்கு ஒரு முறைஎன்றாலும்.1000ங்களில் கொலை புரியும் ஹிந்து தீவிரவாதம் நமக்கு தெரிவதில்லை’’
திட்டமிட்டு ஏன் ஒரு மதத்தை பற்றி இவ்வாறு அவதூறு கூறுகிறார்கள் என விளக்குவீர்களா?
’’இஸ்லாமியர்களுகு மதப்பற்று.அதிகமே.நாட்டுபற்றும் மதப்பற்றில் ஒரு அங்கம் என விளங்காதவர்கள் தான் தாங்கள் குறிப்பிடும் குருநரிகள்.’’
இதில் நான் உடன்படவில்லை, நாட்டுபற்றும் மதப்பற்றும் எப்படி ஒன்றாகும்? அப்படி பார்த்தால் நீங்கள் கூறிய நான்கு மதத்தை பின்பற்றுபவர்களும் மதப்பற்று அதிகம் கொண்டவர்களே, அப்படியாயின் அவ்ர்கள் ஏன் நாட்டை கெடுக்கிறார்கள்?
சகோ நியாயமான் காரணங்களுக்கு போராடுகிறோம்.எங்களின் மீதான அடக்குமுறைக்கு,அவமதிப்புக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கிறோம்.வன்முறை இஸ்லாமிய வழி அல்ல.
சகோதரரே இதே காரணத்தை மற்ற மதத்தவரும் தெரிவித்தால் என்ன செய்வது?
என்னை பொறுத்த வரையில் மத்மும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை, மதத்தின் மேல் பற்று உள்ள எந்த ஒரு மனிதனும் எந்த நாட்டுக்கும் உண்மையான குடிமகனாக இருக்க முடியாது, ஏதோ ஒரு சூழலில் அவர்களுடைய மதப்பர்று வெளிப்பட்டே தீரும், அது பிரச்சனைக்கே வழிவகுக்கும்.
என்னுடைய இந்த கருத்துக்களில் தங்களுக்கு ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.
//திட்டமிட்டு ஏன் ஒரு மதத்தை பற்றி இவ்வாறு அவதூறு கூறுகிறார்கள் என விளக்குவீர்களா?//
ReplyDeleteசகோ.நிச்சயம் இது பற்றி விளக்க முடியும்.ஆனால் மிகநீளமான ஒன்று,முடிந்தால் அது பற்றி விரிவான பதிவை வெளியிடுகிறேன்.
//நாட்டுபற்றும் மதப்பற்றும் எப்படி ஒன்றாகும்?//
சகோ நன்கு கவனியுங்கள்.நாட்டுபற்றும் மதப்பற்றில் ஒரு அங்கம் என்றுதான் சொல்லி இருப்பேன்.(இது இஸ்லாத்தை பொருத்தவரை)
//இதே காரணத்தை மற்ற மதத்தவரும் தெரிவித்தால் என்ன செய்வது?//
வன்முறை தவிர்த்து,யாரும் அவரது உரிமைக்காக போராட உரிமை உண்டு.தடுக்க முடியாது.
//என்னை பொறுத்த வரையில் மதமும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை,//
மதத்தின் மீதான நம்பிக்கை இல்லாதிருக்க,உங்களின் எண்ணமும் செயலும்,அதற்கு எதிராகவே இருக்கும்.மதம் சில நன்மைகளை வழங்கினாலும் ஏற்க மனம் ஒப்பாது.
//மதத்தின் மேல் பற்று உள்ள எந்த ஒரு மனிதனும் எந்த நாட்டுக்கும் உண்மையான குடிமகனாக இருக்க முடியாது,//
இது உங்களது கருத்து,இதில் நான் முழுமையாக உடன்படவில்லை.
//ஏதோ ஒரு சூழலில் அவர்களுடைய மதப்பர்று வெளிப்பட்டே தீரும், அது பிரச்சனைக்கே வழிவகுக்கும்.//
ஏன் கம்யூனிசம் பயின்ற நக்சலைட்டுகள் எந்த மதத்தினர்??,அவர்கள் மதங்களை எதிர்ப்பவர்களே,அவர்களால் எப்பிரச்சனையும் எழவில்லையா.இந்தியா அவர்களை ஒடுக்கவே அதிக வருமானத்தை செலவிடுவது உங்களுக்கு தெரியுமா?
மதம் என்பதே முட்டால் தனம் என எண்ணும் தாங்கள் தான் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்களா? என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
தங்களது கருத்து கண்ணீயமானதாக இருக்கும் வரையில் அது என்னை ஏதும் செய்யாது, மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்புடையவன் நான்.என் மார்க்கம் கற்றுத்தந்தது...
நன்றி.
அன்புடன்
ரஜின்
http://sunmarkam.blogspot.com/
RAZIN ABDUL RAHMAN said...
ReplyDelete''சகோ.நிச்சயம் இது பற்றி விளக்க முடியும்.ஆனால் மிகநீளமான ஒன்று,முடிந்தால் அது பற்றி விரிவான பதிவை வெளியிடுகிறேன்''
வெளியிடுங்கள் ஆவலாக இருக்கிறேன்
’’மதத்தின் மீதான நம்பிக்கை இல்லாதிருக்க,உங்களின் எண்ணமும் செயலும்,அதற்கு எதிராகவே இருக்கும்.மதம் சில நன்மைகளை வழங்கினாலும் ஏற்க மனம் ஒப்பாது’’
உங்களின் இந்த கருத்துக்கு நான் முழுமையாக உடன்படவில்லை, காபர் என்றால் என்ன என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா? நீண்ட நாட்களாகவே தெரிந்து கொள்ள ஆசை.
’’ஏன் கம்யூனிசம் பயின்ற நக்சலைட்டுகள் எந்த மதத்தினர்??,அவர்கள் மதங்களை எதிர்ப்பவர்களே,அவர்களால் எப்பிரச்சனையும் எழவில்லையா.இந்தியா அவர்களை ஒடுக்கவே அதிக வருமானத்தை செலவிடுவது உங்களுக்கு தெரியுமா?’’
நான் கூறியது //ஏதோ ஒரு சூழலில் அவர்களுடைய மதப்பர்று வெளிப்பட்டே தீரும், அது பிரச்சனைக்கே வழிவகுக்கும்.// இதுதானே தவிர மதப்பற்று இல்லாதவர்கள் பிரச்சனையே செய்ய மாட்டார்கள் என்பதல்ல
’’மதம் என்பதே முட்டால் தனம் என எண்ணும் தாங்கள் தான் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்களா? என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்’’
நான் ஏன் இப்படி எழுதினேன் என்றால் என்னுடைய நண்பர்கள் ஈஸ்லாம்தான் உண்மையான மதம் மற்ற மதம் எல்லாம் போலியானது என்று வாக்குவாதம் செய்த போது எனக்கு தோன்றியதே இந்த சந்தேகம், மற்றபடி இந்துமதத்தை உயர்வாக சொல்ல நான் இந்த பதிவை எழுதவில்லை.
’’தங்களது கருத்து கண்ணீயமானதாக இருக்கும் வரையில் அது என்னை ஏதும் செய்யாது, மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்புடையவன் நான்.என் மார்க்கம் கற்றுத்தந்தது...’’
நான் கண்ணியக்குறைவாக எங்கும் எழுதவில்லை, அப்படி எழுத நினைத்து இருந்தால் பதிவில் ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி நீங்கள் உங்கள் மார்க்கத்தில் கூறியுள்ளது என்று கூறிகிறீர்கள், என்னை பொறுத்த வரையில் அடிப்படை ஒழுக்கத்திலேயே அடுத்தவருக்கு கண்ணியக்குறைவு ஏற்படுத்தக் கூடாது என்பதுதான், எனினும் இந்து மதத்திலும் அடுத்தவரை கண்ணியக்குறைவாக கூறும்படி சொல்லவில்லை.
மற்றபடி உங்கள் கருத்து என்னை மகிழ்வடைய செய்கிறது, இப்படி ஒரு ஆரோக்கியமான விவாதத்தினை எனக்கு வழங்கியதுக்கு மிகவும் நன்றி.
நீங்கள் சொல்வது தவறு, இந்து மதம் என்பது இந்தியாவில் தோன்ற வில்லை தோழரே,பார்பனர்கள் வெளியில் இருந்து கொண்டு வந்தது,தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தில் சேர்க்காதீர்கள்
ReplyDeleteசகோ.ஆரோக்கியமான பின்னூட்டவிவாதங்களை நான் அதிகம் விரும்புபவன்.என்றுமே உடன்பட்டவன்.
ReplyDeleteதங்களின் பேச்சை கொண்டு தாங்கள் நாத்தீகரா,அல்லது மத உடன்பாடுடையவரா என அறிய முடியவில்லை.
இஸ்லாமிய நண்பர்கள் சிலரின் போக்கு தங்களை அவ்வாறு இஸ்லாம் குறித்து எண்ணச்செய்தது குறித்து வருந்துகிறேன்.இஸ்லாத்தில் பிற மதங்களை பழிக்கவோ,இகழவோ,அனுமதி இல்லை.அவர்களை உதாரணமாக கொள்ளவேண்டாம்.
அவர்கள் அழைக்கும்,அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதீர்கள். - 6.108 அல் குர்ஆன்
காஃபா பற்றி:காஃபா என்பது நபி இபுராஹிம்(அலை) அவர்களால் இறைவனுக்காக உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம்.அது பின்னர் நபி முஹம்மது (ஸல்)அவர்களின் காலத்தில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு,உட்புறம் 6 தூண்களால் கட்டப்பட்ட கட்டிடம்.உட்புறம் ஒன்றூமே இல்லை.வெற்று இடமே.இஸ்லாமியர்கள் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் அதன் திசையை நோக்கி தொழுகிறோம்.மற்றபடி,அக்கட்டிடத்தை வணங்குவதில்லை.
நன்றி
அன்புடன்
ரஜின்
ஆகா இரண்டு மைனஸ் ஓட்டுகள், பிரமாதம்.
ReplyDeleteH.ரஜின் அப்துல் ரஹ்மான் said...
ReplyDeleteநண்பரே உங்களுக்கான பதில் ஒரு பதிவாக விரைவில் வெளியிடுகிறேன், இதுவரை தாங்கள் அளித்த ஆதரவுக்கு மிகவும் நன்றி, வலையுலகில் எனக்கு மேலும் ஒரு நல்ல நண்பர் கிடைத்துள்ளார் என நினைக்கலாமா?
திட்டமிட்டு ஏன் ஒரு மதத்தை பற்றி இவ்வாறு அவதூறு கூறுகிறார்கள் என விளக்குவீர்களா?
ReplyDeletecos islam is the fastest spreading religion in the world.
this is not only the reason, its also one of the
reason behind it.