Wednesday, November 17, 2010

மீண்டும் புதிய தளபதி டாக்டர் L. சீனிவாசன்
இன்னைக்கு காலையில தினத்தந்தி பேப்பர் பார்த்தப்ப ஒரு இன்ப அதிர்ச்சி என்னை தீண்டியது, அதுதான் நம்ம தலைவரோட ஆனந்த தொல்லை படத்தோட இசை வெளியீட்டு விழா விரைவில்னு போட்டிருந்தது, கேவலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் ஒரு நியூசா சார், இதுதான் சார் நியூசு, நம்ம தலைவரோட படத்தோட இசை வெளியீட்டு விழான்னதும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, நம்ம தலைவரோட படமே தொல்லைதான், ஐ மீன் ஆனந்த தொல்லைதான், இதுல இசை வெளியீடு வேறயான்னு டவுட் வேற ஆயிருச்சு, சரி அப்படியே பதிவுலகத்துக்கு நம்ம தலைவரோட அடுத்தடுத்த உலக படங்களை அறிமுகம் செய்யலாம்னு இந்த பதிவு.

முதன் முதலா வரப் போறது லத்திகா படம் தான், அந்த படத்த பத்தி தெரிஞ்சுக்கனும்னா இங்க கிளிக்குங்க                             அடுத்து வரப் போற படம்தான் ஆனந்த தொல்லை


                           விரைவில் இசை தொல்லை ஆரம்பிக்கப் போகுது


விசயகாந்துக்கு அப்புறம் போலீஸ் வேஷங் கட்டறதுக்கு நம்ம தல சீனிய வுட்டா ஆளில்லை


பார்த்தீங்களா போலீஸ்னா அது நம்ம சீனிதான், இந்த படத்த பார்க்கறதுக்கு ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் காரங்களே வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாம், அந்தளவுக்கு போலீஸ்காரங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க போற படம் இது, சூர்யா கூட அடுத்த படம் போலீசா நடிக்கப் போரதுக்கு முன்னாடி தலைவர் கிட்ட டிரைனிங் எடுக்கனும்னு நிமிசக்கணக்கா காத்துகிட்டு இருக்காராம்.இந்த படத்துல நம்ம தலைவரு வில்லனா வரப்போராரு, படம் பார்த்துட்டு யாருக்கும் மூலம் வராம இருந்தா சரி


நம்ம தலைவரோட பாதையே தனிதான்
இதப்பத்தி சொல்ல ஒன்னும் இல்லை, அதுதான் படத்தோட தலைப்புலேயே இருக்கே


அப்புறம் நீங்க நம்ம தலைவரோட ஒரு முகத்த தான் பார்த்திருப்பிங்க, இன்னொரு முகத்த பார்த்திருக்க மாட்டீங்க, இதுக்கு மேல பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க, நொந்துருவீங்க......


தலைவருகிட்ட எனக்கு புடிச்சதே அந்த சிரிப்புதான், அட அட அட கண்ண மூடிட்டு எப்படி சிரிக்கராறு பாருங்க, கண்ணுபட போகுதுங்க சார், வீட்டுல சொல்லி சுத்தி போடுங்கசூட்டிங் ஸ்பாட்டுல ஒரு போஸ்என்னா லுக்கு, என்னா ஸ்டைலு


இத நினைச்சாதான் பயமா இருக்கு, தலைவரு விடுதலை சிறுத்தையிலேயே பெரிய சிறுத்தையாம், கடிச்சிருவாரோ


ஒரு வேளை வெட்டிடுவாரோ
எப்பூடி, நாங்கெல்லாம் யாரு தெரியுமா? விசய் தம்பி நடிக்க வந்ததுக்கு அப்புறம் தான் டாக்டரு, நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே டாக்டருஅப்ப எல்லாரும் மறக்காம படத்துக்கு வந்துருங்க
14 comments:

 1. ஏற்கனவே இவரை பற்றி படிச்சிருக்கேன்! ரொம்ப நல்லாயிருக்கார்! :-)

  ReplyDelete
 2. நிஜமாவே இதெல்லாம் வரப்போற திரைப்படங்கள்தானா??..

  ஏன் இப்படி பயமுருத்தறீங்க இப்படியெல்லாம் படம் போட்டு :-)

  ReplyDelete
 3. கொன்னுட்டீங்க போங்க.

  ReplyDelete
 4. இப்படி 18 + பதிவு போடுமுன் சொல்லிரதில்லையா, என்கூட இதை பார்த்த அக்கா பையன் இன்னும் அழுகைய நிறுத்தல :-)

  ReplyDelete
 5. நேற்றிரவே Buzzல் பார்த்தேன்... அப்போது வர முடியவில்லை... தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  எங்க தலைவர் ஒரே நேரத்துல ஆறு படத்துல நடிக்கிறதா கேட்டா சந்தோஷமா இருக்கு... உபயோகமான தகவலை சொல்லியிருக்கிறீர்கள்... இந்திர சேனா படம் ஏற்கனவே வெளிவந்து வெள்ளிவிழா கண்ட படமென்பது உங்களுக்கு தெரியாதா...

  நாங்கள் எல்லாம் தலைவர் டாக்டர் சீனிவாசனின் தீவிரவாத ரசிகர்கள்...

  ReplyDelete
 6. எஸ்.கே said...

  நன்றி எஸ்.கே சார்

  ReplyDelete
 7. பதிவுலகில் பாபு said...

  என்ன பாஸ் அவரு அழகுல மயங்குவீன்னு பார்த்தா இப்படி சொல்லிட்டீங்களே

  ReplyDelete
 8. அன்பரசன் said...

  நன்றி அன்பரசன் சார்

  ReplyDelete
 9. எப்பூடி.. said...

  சாரி பாஸ் மறந்துட்டேன், அதனால என்ன உங்க அக்கா பையன மிரட்டரதுக்கு ஒரு ஆளு கிடைச்சிட்டாரில்ல

  ReplyDelete
 10. philosophy prabhakaran said...

  ஒத்துக்கிறேன் பாஸ், நீங்க தீவிரவாதிதான், சாரி தீவிரவாத ரசிகர்தான்.

  ReplyDelete
 11. இப்புடி ஒரு அளகரு இம்புட்டு நாளு எங்க இருந்தாரு? "கன்னிப் பெண்களின் கனவு நாயகன்"-ன்னு ஒரு பட்டம் குடுத்துர வேண்டியது தான்.

  ReplyDelete
 12. Priya said...

  நீங்களே சொல்லீட்டீங்களே இனிமே கொடுத்துர வேண்டியதுதான், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பிரியா மேடம்

  ReplyDelete
 13. mudiyala saami vedunka aala ithukku rajapakseve melu pole . ilankaikku poiidalaamunnu irukken
  ippadiyaa mirattuveenka . hioooooooooo , hioooooooooo

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!