Thursday, November 25, 2010

டூ இன் ஒன் - நகரம் மறுபக்கம், மந்திர ப் புன்னகை









நகரம் மறுபக்கம்

திருந்தி வாழ நினைக்கும் ரவுடி, திருந்தி வாழ விடாத போலீஸ் நண்பன், இடையிலே ஒரு காதல், காதலுக்கு நடுவே வடிவேலுவின் காமெடி கடைசியில் விசயகாந்து பாணியில் EYE TO EYE, TEETH TO TEETH துப்பாக்கி எடுத்தவன் கத்தியால் சாவான் இதுதான் நகரம் மறுபக்கம்.



நான் முன்னமே சொனனது போல நான் சுந்தர் சியின் தீவிர ரசிகன், அவரது மொக்கை படத்துக்கு தீவிர ரசிகன், நான் எல்லாம் ஷகிலா படத்திலேயே காமெடி சீன் எதிர்பார்ப்பவன், அதனால் சுந்தர் சி படம் என்றால் நல்ல மொக்கை படமா இருக்கும் என்று நம்பி சென்றால் ஏமாற்றி விட்டார், படம் நல்லாவே இருக்குங்க, அவரது வழக்கமான பாக்கு மண்டை தலை இதுல மிஸ்ஸிங், நல்லா 1/4 லிட்டர் வாஸ்மாயில் போட்டு கழுவின மாதிரி தலை நல்லா பளிச்சினு இருக்கு, அதிரடி சண்டை காட்சிகளும் மிஸ்ஸிங், படத்துல ஏகப்பட்ட டிவிஸ்ட், எல்லாமே நல்லா இருக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனா நல்லா ரசிக்கக் கூடிய வகையில எடுத்து இருக்காங்க, நம்ம தானைதலைவி குஷ்புவ காட்டுவாங்கன்னு கடைசி வரைக்கும் எதிர்பார்த்து ஏமாந்துட்டேன், அதனால என்ன பரவாயில்லை அனுயாவ நல்லாவே காட்டி இருக்காங்க, நான் அவங்களுக்கும் ரசிகந்தான் ( யாரத்தான் விட்டு வச்சிருக்கோம்) வடிவேலு காமெடி ஒன்னும் சொல்லிக்கர மாதிரி இல்லை, இன்னும் எத்த்னை நாளைக்குதான் திருடப்போர மாதிரி, டிரஸ் இல்லாம் நிக்கர மாதிரி, வாய்ஸ ஏத்தி இறக்கி பேசுர மாதிரி இப்படி ஜோக்கெல்லாம் பண்ணுவாங்களோ தெரியல, கடைசியா நான் பார்த்த பயங்கர மொக்கை படம் சுறாதான், அதுக்கப்புறம் வந்த எல்லா படங்களுமே ஓரளவுக்கு பரவாயில்லை, ஒருவேளை நான் திருந்திட்டனா இல்லை தமிழ்சினிமா திருந்திருச்சா? ஒரு எழவும் புரிய மாட்டேங்குது.



மந்திர ப் புன்னகை






அந்த ப் டைட்டில்லயே தனியா போடுராங்க, அதான், இது மனநிலை பாதிக்கப்பட்ட ஹீரோ, நம்ம இளைஞர்கள் வாழ நினைக்கிற ஆதர்ஷ வாழ்க்கை வாழ்ந்திட்டு சந்தோசமா இருக்காரு, வழக்கம் போல எல்லா தமிழ்பட ஹீரோக்களுக்கும் வரக்கூடிய காதல் வியாதி வருது, அப்பத்தான் ஒரு டிவிஸ்டு, அவருக்குல்ல இருக்கர அன்னியன் வெளில வந்துடுரான், அந்த அன்னியன அடக்கி ஒடுக்கி எப்படி காதல்ல ஜெயிக்கராருங்கறத ஒரு இருபது முப்பது பாக்கெட் சிகரட், ஏலெட்டு புல்லு, நாலஞ்சு பிகரோட சொல்லி முடிக்கராங்க, 



படத்தில நல்லா இருக்குர விஷயம் வசனமும், சந்தானம் காமெடியும் தான், சந்தானம் இல்லைன்னா படத்த பார்க்கவே முடியாது, அதுலயும் அந்த நாட்டாமை ஜோக் சூப்பரு, கண்டிப்பா பாருங்க, படம் முழுக்க ஸ்லோவாவே போகுது, அட குத்துப்பாட்டு ஒன்னு இருக்கு அது கூட ஸ்லோவாவே இருக்கு, மீனாட்சி பத்தி சொல்லனும்னா படத்துலதான் மீனாட்சி பாட்டு சீன்ல எல்லாம் ஷகிலா சேச்சி, நம்ம இசையருவி மகேஸ்வரி லிவ்விங் டூ கெதர் மாதிரி ஒரு ரோல்ல வராங்க, ( லிவ்விங் டூ கெதர்னா பிரச்சனை ஆயிடுமே?) சாரி ஒரு நல்ல(?) விபச்சாரியா வர்ராங்க, இருந்தாலும் போயிம் போயிம் இப்படி ஒரு ரோல்ல அறிமுகம் ஆகி இருக்க வேணாம், மீனாட்சிய விட மகேஸ்வரிதான் சூப்பரா இருக்காங்க, இப்படி ஒரு டம்மி பீஸ் கேரக்டர் கொடுத்து ஏமாத்திட்டாங்கன்னு நினைக்கும் போது மனசு கஷ்ட்டமா இருக்கு, சரி பரவாயில்லை விடுங்க, நாளைக்கு காலையில அன்பு வாழ்த்துக்கள் ஒரு மணி நேரம் பார்த்தா சரியாகிடும். இந்த படமும் பார்க்கலாம் நல்லாவே இருக்கு

டைட்டில் பஞ்ச்

நகரம் - சிகரம்

மந்திர ப் புன்னகை - தந்திர ப் புன்னகை

முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி படிச்சிட்டாவது போங்க, நன்றி

8 comments:

  1. // திருந்தி வாழ நினைக்கும் ரவுடி, திருந்தி வாழ விடாத போலீஸ் நண்பன், இடையிலே ஒரு காதல், காதலுக்கு நடுவே வடிவேலுவின் காமெடி கடைசியில் விசயகாந்து பாணியில் EYE TO EYE, TEETH TO TEETH துப்பாக்கி எடுத்தவன் கத்தியால் சாவான் இதுதான் நகரம் மறுபக்கம். //

    இதே கதையை ஏற்கனவே ஓராயிரம் படங்களில்... ஏன் சுந்தர்.சி படங்களிலேயே பார்த்தாகிவிட்டது... கடுபேத்துறாங்க மை லார்ட்...

    // அந்த ப் டைட்டில்லயே தனியா போடுராங்க, //
    எதனால அப்படி போடுறாங்க... எனக்கு சரியா புரியலை...

    ReplyDelete
  2. நகரம் கதையை கேட்கும் போது, புளிச்ச மாவு வாசனை.
    :-)

    ReplyDelete
  3. philosophy prabhakaran said...

    வாங்க பிரபாகரன் சார், இருந்தாலும் சுந்தர் சி படம்னாலே சம்திங் ஸ்பெஷல் தான்.

    ReplyDelete
  4. Chitra said...

    வாங்க மேடம் ரொம்ப நாளா நீங்க இல்லாம ஒரு ஓட்டும், பின்னூட்டமும் மிஸ்ஸாகுது, மறுபடியும் வந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  5. என்னவோ சுந்தர்.சி சார் முடிஞ்ச வரைக்கும் காமெடியாவது தருவார்னு நினச்சேன். உங்க விமர்சனம் பாத்தவுடனே 150 ரூபா வீணாயிடுமோன்னு பயமா இருக்கு எதுக்கும் ஒரு வாட்டி போய் பாப்போம்

    ReplyDelete
  6. ஐயையோ நான் தமிழன் said...

    அப்படி எல்லாம் இல்லை சார், திரைக்கதை நல்லா பண்ணி இருக்காரு, ஒருதடவை பார்க்கலாம், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. இன்னைக்கி நான் பாக்க போறது ஆங்கில படம் UNSTOPPABLE! சென்னை தேவியில். நல்லா இருக்காம் படம்.

    ReplyDelete
  8. சிவகுமார் said...

    வாங்க சார், நகரம் படத்த விட ஒரு சிறந்த ஆங்கிலப்படம் இருக்க முடியுமான்னு தெரியல, எனிவே படம் பார்த்துட்டு வந்து விமர்சனம் போடுங்க, எங்க ஊருல இந்த படம் ரிலீசாகில்ல

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!