Monday, November 22, 2010

அப்பாடா இருபத்தி அஞ்சு





இது என்னோட இருபத்தி அஞ்சாவது பதிவு, இங்க ஒவ்வொருத்தரும் நூறு இருநூறுன்னு தாண்டி போயிட்டு இருக்காங்க, ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இந்த 25 வதே பெரிய விஷயம், பொதுவாவே நான் கொஞ்சம் இல்லை ரொம்பவே சோம்பேறிங்க, என்னோட இமெயில் ஐடி முதற்கொண்டு பேஸ்புக், டிவிட்டரு, ஆர்குட் இது மாதிரி எல்லா சமூக தளங்களும் விளையாட்டா ஆரம்பிச்சதுதான், அதே மாதிரி இந்த பதிவுலகத்துல கடந்த இரண்டு வருஷமா வெறும் பார்வையாளனா இருந்த நான் திடீர்னு ஒருநாள் சும்மா பிளாக் ஒன்னு ஆரம்பிச்சு பார்ப்பமேன்னு ஆரம்பிச்சதுதான் இந்த பிளாக், ஆனா இதுக்கு பேரு வெக்கறதுக்கு உள்ள நான் பட்டபாடு எனக்குதான் தெரியும், எனக்கு பிடிச்ச பேருல்ல எல்லாம் எல்லாரும் பிளாக் வச்சிருக்காங்க, அட சும்மா ஏதோவொரு வார்ததைய போட்டா அதகூட பஸ்ஸில சீட்டு புடிக்கற மாதிரி புடிச்சு வச்சிருக்காங்க, ஏதோ ஒருவழியா இரவுவானம்னு இந்த பிளாக்க ஆரம்பிச்சிட்டேன்.

பிளாக் ஆரம்பிக்கரது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க, ஆனா இந்த பதிவு எழுதறது இருக்கே, நம்மள மாதிரி சரக்கு இல்லாதவங்க சரக்கு அடிச்சா கூட மேட்டரு தேத்த முடிய மாட்டேங்குது, நானும் முதல்ல பேஸ்புக்குல போயி கும்மி அடிக்கலாம்னுதான் பார்த்தேன், அந்த எழவுல யாரு எதுக்கு என்ன மேட்டருக்கு விஷ் பண்ணராங்க, கமெண்ட் போடராங்க, என்ன ஏதுன்னு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது, சரி அது வேண்டாம்னு டிவிட்டருல போய் டிவிட்டினா வெறும் காத்துதான் வருது, நான் போட்ட கமெண்ட் கிணத்துல போட்ட கல்லாட்டம் கிடக்குது, சரி ஆர்குட்டாவது நல்லா இருக்கும்னு நினைச்சா அது அதவிட, அதுல பொண்ணுங்க ஸ்கிராப் போட்டதான் மதிக்கறாங்க, பசங்க ஸ்கிராப் போட்டா ஒரு பயலும் மதிக்கரதில்லை, ஒரு பொண்ணு போன நியூ இயருக்கு ஹேப்பி நியூ இயர்னு ஸ்கிராப் போட்டா அதுக்கு இந்த நியூ இயர் வரைக்கும் பதில் ஸ்கிராப் போட்டுட்டு இருக்காங்க நம்ம பசங்க, இதில அவங்க கூட பிரண்டா இருக்குற எல்லாருக்கும் சிசி வருது, இந்த சிசியால என்னோட இன்பாக்ஸ்ஸே நிறைஞ்சி போச்சு, அந்த கருமத்த டெலிட் பண்ணி பண்ணி போதும் போதும்னு ஆகுது, இப்படி போயிட்டு இருக்கரப்பதான் இந்த பிளாக்க ஆரம்பிச்சேன், இதுல பரவாயில்லைங்க, நம்ம எழுதற ஆகாவளி மேட்டருக்கும் நம்மளையும் மதிச்சு கமெண்ட் போடராங்க, ஓட்டு போடராங்க, இப்பத்தான் சந்தோசமா இருக்கு.

இப்பத்தான் ஒரு நாலஞ்சு பேராவது வந்து போராங்க, ஆனா முதல்ல ஒரு பதிவு எழுதிட்டு விழிமேல் வழி வெச்சு சாரி பிளாக்கு மேல விழி வெச்சு காத்திட்டு இருப்பேன், ஒரு ரியாக்சனும் இருக்காது, இந்த நேரத்துல என்னை வரவேற்று முதல் கமெண்ட் போட்ட ஆகாய மனிதன் அவர்களுக்கு என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அதற்கப்புறம் கமெண்ட் அளித்து என்னை ஊக்கப்படுத்திய வினு, ஜெயதேவ், ரிஷிகேசவ், சுப்ரா, கந்தசாமி சார், ராபின், தமிழ்பறவை, ரம்மி, பயணமும் எண்ணமும், பிரியமுடன் பிரபு, ஈரோடு தங்கதுரை, டிங்டாங், புதிய மனிதா, ஜோதிஜி, நொந்தகுமாரன், பிலாசபி பிரபாகரன், சித்ரா மேடம், எப்பூடி, பர்ஹத், ராம்ஜி யாஹூ, பந்து, சேகர், தினேஷ்குமார், சக்தி, தொப்பிதொப்பி, சுனில் கிருஷ்ணன், சாய் கோகுலகிருஷ்ணன், சாதிகா, முத்துலெட்சுமி, நிலாமதி, ராதாகிருஷ்ணன், சொளந்தர், பதிவுலகில் பாபு, தயாநிதி ஸ்ரீராம், எஸ்.கே, அன்பரசன், பிரியா, இனியவன், வினோத், குணா, தமிழன், இன்னும் யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 போன்றவற்றில் ஓட்டளித்த அனைவர்களுக்கும், வந்து படித்து சென்ற அனைவர்களுக்கும் என்னுடைய நன்றி.

பிளாக் ஆரம்பித்த புதிதில் எப்படி செட்டிங்ஸ் செய்வது, எப்படி ஓட்டுபட்டையை நிறுவுவது என குழம்பி கொண்டிருந்த வேளையில், வந்தே மாதரம், மற்றும் பிளாக்கர் நண்பன் போன்றவர்களின் வலைத்தளத்தை பார்த்து பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், பதிவுலகில் எனக்கு முதன் முதலாக அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கிய என்னுடைய அருமை நண்பர் பிலாசபி பிரபாகரன் அவர்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ் ( எப்படி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டேன் பார்த்தீங்களா), எது எழுதினாலும் ஒரு ஓட்டும், பின்னூட்டமும் இடும் வலையுலக வள்ளல் சித்ராக்கா அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அனைவரையும் விட கூட்டம் சேர்த்து வைத்துள்ள பிரபல பதிவர்களுக்கு மட்டுமில்லாமல், இப்படி யாருமே இல்லாத கடையில் டீ ஆத்தி கொண்டிருக்கும் எனக்கும் அருளும் கூகிளாண்டவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இப்படியே கடைசி வரை எந்தவொரு, பதிவரசியலிலும், பதிவுலக சண்டைகளிலும் சிக்காமல் இருக்க துணைபுரியுமாறு வேண்டிக் கொள்கிறேன்

மேலும் ஒரு 10 பாலோயர் கிடைச்சாலே பெரிய விஷயம்னு நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என்னையும் நம்பி பாலோயராக சேர்ந்த 25 அன்பு உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை ( என்னடா பாலோயர் 26 ன்னு காட்டுதேன்னு பார்க்குறீங்களா, கண்டுக்காதீங்க அதில ஒன்னு எப்படிடா இப்படி எல்லாம் எழுதறேன்னு என்னை பார்த்து நானே வியந்து போயி எனக்கு நானே பாலோயர் ஆகிட்டேன்), இதே போல இண்ட்லியிலும் எனக்கு பாலோயராக உள்ள 13 பேர்களுக்கும் மிகுந்த நன்றியினை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மன்னிப்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன் என்று கவுதமி நாயகன் சீச்சீ சாரி உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார், அது போல நான் இதுவரை எழுதிய பதிவுகளோ அல்லது வார்த்தைகளோ உங்களில் யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடைசியாக இது எல்லாம் ஒரு பதிவா என காறித்துப்புவதற்கு முன்னால் இந்த பதிவையும் நகைச்சுவை என்ற பிரிவில் இணைத்தால்தான் நிறைய பேர் படிக்க  வருவார்கள் என்பதால் அதில் இணைக்கப் போகிறேன் அதற்கும் மன்னித்து கொள்ளுங்கள், எனினும் கீழே இரண்டு SMS ஜோக் போட்டுள்ளேன், படித்து விட்டு சமாதானமாக போங்கள், நன்றி

HI I AM VIJAY THE ROBOT 

SPEED - 1 KB 
MEMORY - 2 KB 

இவனுக்கு எல்லா ஆந்திரா ஹீரோஸ்ஸோட ஹிட் படம் எல்லாத்தையும் ரீமேக் பண்ண புரோகிராம் செய்யப்பட்டு இருக்கு 

Special Skills 

Long Jump ( Kuruvi) 
Kabady Comedy (Gilli) 
Athlete (ATM) 

Records 38 Flop out of 50 

மனுசன் படச்சதுலேயே உருப்படியான ரெண்டு விஷயம், ஒன்னு நான் ஒன்னொன்னு என் படம் 

PROFESSOR BORA: 


WHAT IS YOUR BIGGEST FLOP SURA? OR VILLU? 

VIJAY : HYPOTHETICAL QUESTION


அடுத்தது


சன் ஃபிக்ஸர்ஸ் புது படம்

ஹீரோ : அருள் நிதி
சைட் ஹீரோ : உதயநிதி
ஸ்டண்ட்: அழகிரி 

காஸ்ட்யும் : தயாநிதி  

லிரிக்ஸ் : கனிமொழி

மீடியா : கலாநிதி
டைரக்டர் : கருணாநிதி 

அஸி.டைரக்டர் : ஸ்டாலின் 

டைட்டில் : கொள்ளைக்கூட்டம்



ப்ரொடியுசர் : மக்கள் ‘’நிதி’’ 

முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி படிச்சிட்டு போங்க, நன்றி


8 comments:

  1. WHAT IS YOUR BIGGEST FLOP SURA? OR VILLU?

    VIJAY : HYPOTHETICAL QUESTION

    ஹிஹி
    88888888888888888888888888888888888888
    தொடந்து எழுத 25 வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. 25க்கு வாழ்த்துக்கள்...

    // இங்க ஒவ்வொருத்தரும் நூறு இருநூறுன்னு தாண்டி போயிட்டு இருக்காங்க //
    நீங்க இதே வேகத்துலேயே எழுதுங்க... இல்லைன்னா சலிச்சிடும்...

    ReplyDelete
  3. THOPPITHOPPI said...

    நன்றி தொப்பி தொப்பி சார்

    ReplyDelete
  4. philosophy prabhakaran said...

    நன்றி பிரபாகரன்

    ReplyDelete
  5. பாஸ்.. உங்க பேரு, படம் எங்க? சீக்ரம் போடுங்க. நடுராத்திரில எந்திரிச்சி ஒரு ஓட்டாவது விழுந்து இருக்கானு பாத்தா ஒண்ணு கூட விழாத காலங்கள் இருக்கே...மறக்க முடியாது. விரைவில் நூறாவது பதிவு எழுத வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com) ஒரு விளம்பரம்....உங்களுக்காவது 26. எனக்கு அதுல பாதிதான்.....சத்திய சோதனை...

    ReplyDelete
  6. என்னோட சேர்த்து 27...

    ReplyDelete
  7. சிவகுமார் said...

    வாங்க பாஸ், முத முதலா வந்துருக்கீங்க, //நடுராத்திரில எந்திரிச்சி ஒரு ஓட்டாவது விழுந்து இருக்கானு பாத்தா ஒண்ணு கூட விழாத காலங்கள் இருக்கே..// எனக்கு இன்னைக்கு வரைக்கும் இதே நிலமைதான் பாஸ், சத்திய சோதனைங்கறது காந்தி எழுதுன புக்குதான?

    ReplyDelete
  8. //என்னோட சேர்த்து 27..// உண்மையில நீங்கதான் 26 நன்றி பாஸ், இதுக்கு பிரதிபலனா நானும் உங்க பிளாக்குல சேர்ந்துக்கிறேன்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!