Saturday, November 27, 2010

நந்தலாலா - தாயை தேடிமனித மனங்களின் உணர்வுகளை தொடும் எந்த படமும் கண்டிப்பாக தோற்று போகாது, அன்பு பாசம் மட்டுமே நிரந்தரமானது, அது மனநோயாளிக்கும் இருக்கும், ரோட்டில் கடந்து செல்பவர்களுக்கும் இருக்கும், அதனை ஏற்று கொள்பவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள், கடந்து செல்பவர்கள் தவற விடுகிறார்கள்,  மனநோயாளியான மிஸ்கினும், ஸ்கூலில் படிக்கும் ஒரு சிறுவனும் தாயை தேடி செல்கிறார்கள், எதற்காக செல்கிரார்கள்? போகும் வழியில் நடைபெறும் விஷயங்கள் என்னென்ன? அதனை அவர்கள் எதிர் கொள்ளும் விதம், கற்றுக் கொள்ளும் விஷயங்கள் என்னென்ன என்பதுதான் திரைக்கதை,
அதனை மிஸ்கின் கொடுத்திருக்கும் விதம் தாய்மடியை போன்று சுகமானது, இது ஜப்பான் படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள், அதே ஜப்பான் படத்தை சப் டைட்டிலுடன் திரையிட்டால் எவ்வளவு பேர் சிலாகிக்க முடியும்? எத்தனை பேருக்கு புரியும்? எது எப்படி இருந்தாலும் மிஸ்கினின் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் திருக்குறளை போல, பல்வேறு விஷயங்களை புரிய வைக்கிறது, ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ஒரு நிமிடம் கேமரா அந்த இடத்தில் நின்றுவிட்டு செல்கிறது, அது வழியில் வருபவர்கள் அவர்கள் வழியில் சென்றுவிட்டாலும் இவர்கள் அங்கேயே அந்த நிலையிலேயே நிற்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது,


இந்த காட்சி ஒரு புதுக்கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை, மூன்றையும் சேர்த்தால் என்ன கிடைக்குமோ, அந்த் அனுபவத்தை தரும்


படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதை அதை வெளிப்படையாக சொன்னால் புதிதாக படம் பார்ப்பவர்கள் ரசிக்க முடியாது, இருந்தாலும் எனக்கு பிடித்த காட்சியாக, மிஸ்கினின் அறிமுகத்தில் சுவற்றில் கை விரலை தேய்த்து கொண்டு நடப்பவரை போல காட்சி வரும், அதே போல கடைசியில் அவரின் அம்மாவை எடுத்து கொண்டு செல்லும் போது, அம்மாவின் கால்கள் சுவற்றினை தேய்த்து கொண்டு செல்வது போல இருக்கும், அது ஒரு இதயத்தை வருட செய்யும் காட்சி, இது போல பல காட்சிகள், ஒவ்வொன்றையும் சிலாகித்து எழுத வேண்டும் போல உள்ளது, ஆனாலும் வேண்டாம், திரையில் பாருங்கள், ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் மிஸ்கினும் சிறுவனும் தலைகுமிந்து கொண்டே நிற்கிறார்கள், அது எதற்கு என்றுதான் தெரியவில்லை? மிஸ்கினின் முந்தைய படத்திலும் ஹீரோக்கள் தலையை குமிந்து கொண்டே இருப்பார்கள், அது எதற்கு என்றுதான் புரியவில்லை,படத்தின் உயிர்நாடி ராகதேவன் இளையராஜா அவர்கள், அவரின் இசையை பற்றி என்ன சொல்ல? சூன்யத்தை போல அமானுஷ்யமான இசை இப்படத்தில், உடலில் புகுந்து, குருதியில் கலந்து, இதயத்தை தொடுகிறது,  அதிலும் தாலாட்டு கேட்க நானும் என்று இளையராஜா பாட ஆரம்பிக்கையில் யாராக இருந்தாலும் உடைந்து போய் அழாமல் இருக்க முடியாது, படத்தில் நடித்துள்ள மிஸ்கின், அந்த சிறுவன், ஸ்னிக்தா, இசைஞானி அனைவருக்குமே விருதுகள் நிச்சயம்.

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தளம் உண்டு, அது அந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிந்து விடும், எல்லா படத்திற்கும் கொண்டாட்ட மனநிலையுடன் செல்லக்கூடாது (உபயம்:சாரு நிவேதிதா), இந்த படத்திற்கு வந்து விசிலடித்து படம் பார்த்து கொண்டு இருப்பவர்களை தொந்தரவு செய்து கொண்டு இருந்த விசிலடிச்சான் குஞ்சுகளும் கடைசி காட்சியில் அமைதியாக சென்றது படத்தின் தாக்கத்தை உணர்த்தியது, கண்டிப்பாக தியேட்டரில் பார்த்தால் தான் படத்தின் தாக்கத்தை உணர முடியும், குறை சொல்வதற்காகவே பார்த்த திரைப்படங்கள் உண்டு, ஆனால் இதில் குறை சொல்ல மனது வரவில்லை, கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்க வேண்டிய படம்.

நந்தலாலா - தாய் வாசல்

13 comments:

 1. // இது ஜப்பான் படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள், அதே ஜப்பான் படத்தை சப் டைட்டிலுடன் திரையிட்டால் எவ்வளவு பேர் சிலாகிக்க முடியும்? எத்தனை பேருக்கு புரியும்? //
  valid point...

  // அம்மாவின் கால்கள் சுவற்றினை தேய்த்து கொண்டு செல்வது போல இருக்கும் //
  மிகவும் ஆழமாக படத்தை ரசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது...

  // தாலாட்டு கேட்க நானும் என்று இளையராஜா பாட ஆரம்பிக்கையில் யாராக இருந்தாலும் உடைந்து போய் அழாமல் இருக்க முடியாது //
  நிதர்சனம் :(

  கடைசி லைன் சூப்பர்...

  என்னுடைய விமர்சனத்தையும் கொஞ்சம் வந்து படிங்க...


  http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_27.html

  ReplyDelete
 2. விமர்சனம் அருமைங்கோ .கண்டிப்பா தியட்டேர்ல போய் பாத்துடுறேன்

  ReplyDelete
 3. கமல் படத்துக்கு மட்டும் கொடுக்கும் மரியாதையை இந்த படம் கொடுத்துள்ளது.

  ReplyDelete
 4. நா.மணிவண்ணன் said...

  கண்டிப்பா பாருங்க மணிவண்ணன் சார், உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. ஜோதிஜி said...

  வாங்க ஜோதிஜி சார், உங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. மிக நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 8. இந்த படம் தமிழர்களின் வீக்னசை குறி வைத்து எடுக்கப்பட்ட , ஃபார்முலா படம்...


  ஆனால் இப்படி பட்ட படம் வருவது ரசிகனாகிய நமக்கு எந்த பாதிப்பும் இல்லை...ஆனால் தமிழ் திரை உலகுக்குத்தான் பாதிப்பு....

  இருந்த போதிலும், உங்களுக்கு சரி என பட்டதை நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்...
  எழுத்து நடையும் சூப்பர்...

  ReplyDelete
 9. Chitra said...

  நன்றி சித்ரா மேடம்

  ReplyDelete
 10. KANA VARO said...

  நன்றி சார்

  ReplyDelete
 11. எஸ்.கே said...

  நன்றி எஸ்.கே சார்

  ReplyDelete
 12. பார்வையாளன் said...

  நன்றி பார்வையாளன் சார்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!