Saturday, January 29, 2011

ஆல் இன் ஆல் அழகுராஜா - பரிகார செம்மல் ...
ஓம் காமதேவாய அம் அம் கிருஷ்ணாலயா உம் உம் கோபி லோல மம் மம் மாதவப்பிரியா சம் சம் சிவானந்த ரூபா வம் வம் வாசுதேவா என்னைக் கண்ட .........................  வாயடக்கி, கை மடக்கி, கால் மடக்கி எனக்கு வசமாக ஹூ ஹா ....
என்ன பார்க்குறீங்க ஏதோ மந்திரவாதி ஆகிட்டேனான்னா அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஒரு எண்ணெய் இருக்குதுங்களாம் அத ரெண்டு புருவத்திலும் தடவி விட்டுட்டு இந்த மந்திரம் சொன்னீங்கன்னா உங்களுக்கு தேவையான ஆள் அது ஆணோ பொண்ணோ நீங்க வசியம் பண்ணிரலாமாம், இது மட்டும் இல்லைங்க இது போக வசிய அஞ்சனம், வசிய எண்ணெய்னு நிறைய இருக்குது.

அவங்க கிட்ட இருக்குறதுலயே சூப்பர் மேட்டர் ஒன்னு இருக்குது, அதுதான் சக்கரை, சக்கரைன்னா சாதாரணமான சக்கரைன்னு நினைச்சுராதீங்க, அது பண்ர வேலைய பார்த்தீங்கன்னா அசந்துருவீங்க, உங்க வீட்டுல பொண்டாட்டி கிட்ட டெய்லி அடிவாங்க முடியலியா, இல்லை உங்க புருசன போட்டு பிரிச்சு எடுக்கனுமா ஒன்னும் பிரச்ச்னை இல்லை, எப்ப உங்களுக்கு பிரச்சனை வருதோ அப்ப இந்த சக்கரையை கொஞ்சம் சாப்பிட்டீங்கன்னா போதும், சும்மா விஜயகாந்து கணக்கா காத்துலயே பறந்து பறந்து அடிக்கலாம், விலை ஒன்னும் பெரிசா இல்லைங்க வெறும் 1000 மட்டுமே.

அப்புறம் உங்களுக்கு மாமனார், மாமியார், நாத்தனார் இப்படி யாராவது எதிரி இருக்காங்களா, ஒன்னும் பிரச்சனை இல்லை கொஞ்சூண்டு இந்த சக்கரை போட்டு காபி போட்டு கொடுத்தீங்கன்னா போதும் முடிஞ்சது, அட ஆள் இல்லைங்க, மேட்டர் முடிஞ்சது அவங்க டம்மி பீஸ் ஆகிருவாங்க, இதோட விலையும் ஆயிரம்தான்

உங்களுக்கு எது மேலயாவது விருப்பம் அதிகமா இருந்து கிடைக்காம போயிருச்சா, அது வீடு, நிலம், புருசன், பொண்டாட்டி, காதல், கல்யாணம், கத்திரிக்காய், அட எதுவா இருந்தா என்னங்க அதுக்கும் இருக்கு ஒரு சக்கரை இருக்கு, இதுவும் சேம் ரேட்தான்.

அடுத்த சக்கரை வசூல் சக்கரை, வசூல பத்தி உங்களுக்கு சொல்லவே வேணாம், வட்டிக்கு விடுறவங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும், பேங்க் காரங்க வேணாலும் மொத்தமா மூட்டை கணக்கா ஆர்டர் கொடுக்கலாம் டிஸ்கவுண்ட் பண்ணாலும் பண்ணுவாங்க, விலை அதுவேதான் ஒன்லி தவுசண்ட் ரூப்பீஸ்

நெக்ஸ்ட் திருமணதடை நீக்கும் சக்கரை, உங்களுக்கு யாருக்காவது கல்யாணம் ஆகலேன்னு பிரச்ச்னை இருக்கா, நோ பிராப்ளம் இருக்கவே இருக்கு சக்கரை டெய்லியும் இரண்டு வேளை கொஞ்சம் சாப்பிடுங்க, நீங்க மட்டும் சாப்பிட்டா போதாதுங்க, உங்க அப்ப அம்மாவும் சாப்பிடனும், அது மட்டும் இல்லை பொண்ணு பார்க்க வர வீட்டுக்காரங்களுக்கு காப்பி கொடுப்பீங்கல்ல அதுலயும் கலந்து கொடுங்க அப்புறம் பாருங்க வெளங்கிரும், ச்சீ கல்யாணம் நல்ல படியா விளங்கும்னு சொல்ல வந்தேங்க, விலை எது எடுத்தாலும் 1000 மட்டுமே

அடுத்து வரது முக்கியமான சக்கரை வியாதி நீக்கும் சக்கரை, உங்களுக்கு வேண்டியவங்க யாராவது ஆஸ்பத்திரியில சீரியசா இருக்காங்களா, அவங்க குணமாகனும்னு வேண்டி நீங்க ரெண்டு வேளை சாப்பிட்டீங்கன்னா போதும் உடனே குணமாகிடுவாங்க, விலையும் அதேதான்

யப்பா சொன்னா சொல்லிட்டே போக வேண்டியதுதான் அதுனால மிச்சம் இருக்குற சக்கரைகளை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன்,
உங்களுக்கு வேலை கிடைக்கலையா அதுக்கு இருக்கு வேலை உத்யோகம் கிடைக்கும் சக்கரை
படிப்பு வரலியா டோண்ட் வொர்ரி அதுக்கு இருக்கு கல்வியில் உயர்நிலைக்கான சக்கரை
நீங்க கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலியா அதுக்கு சாப்பிடுங்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் சக்கரை, இதுல ரெண்டு வகையான சக்கரை இருக்கு ஒன்னு சாதா இன்னொன்னு ஸ்பெசல்
உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது காணாம போயிட்டாங்களா அதுக்கு சாப்பிடுங்க காணாமல் போனவர்கள் திரும்பி வரும் சக்கரை
கல்யாணம் ஆகியும் குழந்தை பொறக்கலியா அதுக்கும் இருக்கு குழந்தை பாக்கிய சக்கரை
இன்னும் இருக்கு விற்காத பொருள் விற்கும் சக்கரை, செல்வாக்கு சக்கரை, செய்வினை தீர்க்கும் சக்கரை, இந்த சக்கரை எது வாங்கினாலும் விலை ஆயிரம் ரூபாய் மட்டுமே,

இது எதுவும் காமெடி இல்லைங்க, முழுக்க முழுக்க உண்மை தயவுசெஞ்சு சந்தேகப்படாதீங்க, அப்படி சந்தேகப்பட்டீங்கன்னா அதுக்கும் இருக்கு சந்தேகம் நிவர்த்தி செய்யும் சக்கரை, மேற்கண்ட அனைத்து சக்கரைகளையும் கண்டுபுடித்து மக்களுக்காக சேவை செய்பவர் பரிகார செம்மல் சித்தர் ஞானகுரு அவர்கள், மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தினை பார்க்கவும்.

(படத்தினை கிளிக்கி பெரிதாக பார்க்க்வும்)
நன்றி - வாராந்தரி ராணி

எனவே நண்பர்களே இந்த அற்புதமான விளம்பரத்தினை ராணி வார இதழில் பார்த்தேன், பாவம் எத்த்னை அற்புதமான பொருட்களை விற்பனை செய்பவர் காசு கொடுத்து வார இதழில் விளம்பரம் செய்திருக்கிறார், எனவே அவரின் புகழை இலவசமாக பரப்புவதற்காக நான் என் தளத்தில் வெளியிட்டுள்ளேன், இவரை மற்ற வைத்தியர்களை போல லாட்ஜ் வைத்தியர் என்று நினைத்து விடாதீர்கள், சார் மேன்சனில் குடியிருக்கிறார் மறந்து விடாதீர்கள், ஆகவே நண்பர்களே முந்துங்கள் உங்களுக்கு தேவையான சக்கரை வாங்கி அருந்தி பயனடையுங்கள்.

பொது நலன் கருதி வெளியிடுவது நானேதான் ....... 

நன்றி
அன்புடன் 
இரவுவானம்

   

53 comments:

 1. தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

  ReplyDelete
 2. யோவ் அதுக்கு நீங்கதான் விளம்பர தூதுவரா! பார்திங்களா மக்களே வித விதமா சக்கர விக்கிறாங்க . சார்! பார்த்து சார் brown sugarகேஸ்ல உள்ள தள்ளிர போறானுங்க.. avvvvv

  ReplyDelete
 3. இம்புட்டு இருக்கா அந்த சக்கரைல? இத அந்தாளே தின்னுட்டு பெரியாளாக வேண்டியதுதானே?

  ReplyDelete
 4. இம்புட்டு இருக்கா அந்த சக்கரைல? இத அந்தாளே தின்னுட்டு பெரியாளாக வேண்டியதுதானே?///

  சரியாக சொன்னீர்கள் ஹா ஹா ஹா ஹா ஹா.........

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அதை வாங்கி ஏமாந்தால் இரவு வானம் சுரேஷ் பணத்தை திரும்ப தருவார். ஹி ஹி எதோ நம்மால முடிஞ்சது

  ReplyDelete
 7. @ sakthistudycentre-கருன் ...

  வருகிறேன் நண்பரே ...

  ReplyDelete
 8. @ sulthanonline ...

  நீங்கதான் ஆன்லைன்லயே இருக்கறீங்க்ளே எனக்கு என்ன கவலை சார், காப்பாத்திருங்க, எதுக்கும் ஒருவாய் சந்தேக நிவர்த்தி சக்கரையை சாப்பிடறீங்களா...

  ReplyDelete
 9. @ பன்னிக்குட்டி ராம்சாமி ...

  என்ன இப்படி சொல்லிட்டீங்க அவரு ஆல்ரெடி பெரிய ஆள்தான் சார், ராணில எல்லாம் விளம்பரம் கொடுத்து இருக்காரு ...

  ReplyDelete
 10. @ MANO நாஞ்சில் மனோ ...

  சார் அந்த சக்கரைய மத்தவங்க சாப்பிட்டாதான் பலிக்கும், அவருக்கு பலிக்காது ...

  ReplyDelete
 11. @ karthikkumar ...

  அதுக்கு முன்னாடி உனக்கு திருமண நிவர்த்தி சக்கரை வாங்கி கொடுத்து டெஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன், ஓகேவா மாம்சு ...

  ReplyDelete
 12. உங்க வாயில சர்க்கரைதான் போடனும்!

  ReplyDelete
 13. @ எஸ்.கே ...

  என்ன பாஸ் அவ்வளவு அருமையான நியூசா நான் கொடுத்திருக்கேன் :-(

  ReplyDelete
 14. //என்ன பாஸ் அவ்வளவு அருமையான நியூசா நான் கொடுத்திருக்கேன் :-(//

  ஹா..ஹா..இப்படி எங்கேருந்துதான் கிளம்பறாங்கன்னே தெரியலை. எந்த நம்பிக்கையில் இப்படி செய்ய ஆரம்பிக்கிறான்னும் புரியலை. அதையும் நம்பி போறவங்கள நினைச்சா என்ன பண்ணுறதுன்னே தெரியலை.

  ReplyDelete
 15. @ எஸ்.கே ...

  இங்கதான் பாஸ் பக்கத்துல சென்னையிலதான் ஹி ஹி ...

  ReplyDelete
 16. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ...

  இல்லைங்க கொ.ப.செ ...

  ReplyDelete
 17. ///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  You are the owner. Right? ///

  யோவ் பேசாம் இவருக்கு ஒரு பொட்டலம் கொடுத்துடுங்கய்யா!

  ReplyDelete
 18. @ பன்னிக்குட்டி ராம்சாமி ...

  என்ன பொட்டலம் கொடுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க பன்னிக்குட்டி சார்...

  ReplyDelete
 19. ////இரவு வானம் said...
  @ பன்னிக்குட்டி ராம்சாமி ...

  என்ன பொட்டலம் கொடுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க பன்னிக்குட்டி சார்... ////

  எல்லா வகைலேயும் ரெண்டு ரெண்டு பொட்டலமா கட்டி கொடுத்துடுங்க!

  ReplyDelete
 20. @ பன்னிக்குட்டி ராம்சாமி ...

  ஹா ஹா ஹா எல்லா வகையிலுமா அப்புறம் அவரும் இன்னொரு ஞானகுரு ஆகிருவாரு ..

  ReplyDelete
 21. இந்த ராணி பத்திரிக்கையத்தான் போட்டு நாலு சாத்து சாத்தணும். காசு கொடுத்தா கஞ்சாவுக்கே விளம்பரம் கொடுப்பாங்க போலிருக்கு

  ReplyDelete
 22. @ பாலா...

  டென்சன் ஆகாதீங்க பாலா சார், டென்சன் போக்கும் சக்கரை ஒன்னு இருக்கு யூஸ் பண்ணி பாக்குறீங்களா :-)

  ReplyDelete
 23. அந்த சர்க்கரையில கொஞ்சம் நமக்கும் வாங்கி அனுப்புங்க! வெஸ்டர்ன் யூனியன்ல பணம் அனுப்புறேன்!

  ReplyDelete
 24. இதுல நீங்க என்ன மை அல்லது சர்க்கரை வாங்கினீங்க..?

  ReplyDelete
 25. எல்லா சக்கரையும் நாலு நாலு கிலோ வாங்கணும், அதுக்கு நிறைய 'ஆயிரம்' தேவைப்படுது, அந்த ஆயிரத்தை கிடைக்க செய்ய ஏதாவது விலை குறைந்த சக்கரை இருக்கான்னு கேட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 26. @ மாத்தி யோசி ...

  உங்களுக்கு எந்த சக்கரை வேணும்னு சொல்லவே இல்லையே பாஸ்? ...

  ReplyDelete
 27. @ Vinoth ...

  ஹி ஹி ஹி ஹிட்ஸ்சும், ஓட்டும் அதிகமா விழுகற சக்கரைதான் ...

  ReplyDelete
 28. @ எப்பூடி..

  தல நீங்க முதல்ல வசூல் சக்கரை வாங்குங்க, உங்களுக்கு பணம் கிடைச்சிரும் அப்புறம் எல்லா சக்கரையும் நாலு கிலோ என்ன நாப்பது கிலோவே வாங்கலாம் ...

  ReplyDelete
 29. ஆல் இன் ஆல் அழகு ராஜா - ராஜன் லீக்ஸ் என்ற பதிவர்தான் தற்போதைய மீனவர் பலி பிரச்சனை பற்றி ஆரம்பத்திலேயே
  உணர்ச்சி மிக்க டுவிட்டர்களை எழுதினார் . அவர் பற்றிய பதிவோ என நினைத்தேன்..

  ReplyDelete
 30. சர்க்கர கசக்குர சக்கர... நீங்க அதுக்கு விளம்பரம் வேற...

  ReplyDelete
 31. //அப்புறம் உங்களுக்கு மாமனார், மாமியார், நாத்தனார் இப்படி யாராவது எதிரி இருக்காங்களா, ஒன்னும் பிரச்சனை இல்லை கொஞ்சூண்டு இந்த சக்கரை போட்டு காபி போட்டு கொடுத்தீங்கன்னா போதும் முடிஞ்சது, அட ஆள் இல்லைங்க, மேட்டர் முடிஞ்சது அவங்க டம்மி பீஸ் ஆகிருவாங்க, இதோட விலையும் ஆயிரம்தான்//

  Best Social Service:)))

  ReplyDelete
 32. சஸ்பென்ஸ் சர்க்கரை கடைசியில் வார இதழ் வழியாக வந்ததுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்

  ReplyDelete
 33. ஆஹா ..அற்ப்புதம் ...
  அழகான செய்தியை விளம்பர படுத்திய நீங்கள் வாழ்த்துக்கு உரியவர்.

  எனக்கு மண் மோகன் சிங்கிடம் இருந்து காரியம் ஆக வேண்டியிருக்கு...!!!

  அந்த எண்ணையை வாங்கி,மன்மோகன் சிங்கை வசியம் பண்ணி,ஒரு ஐநூறு கோடியை அமுக்கிட வேண்டியதுதான்.

  ரொம்ப நன்றி......ங்கோ.

  ReplyDelete
 34. என்னப் பத்திதான் எதோ விமர்சனமாயிருக்கும்னு நெனச்சி வந்தா அளப்பர நடந்துட்டு இருக்கு! ம்ம்ம் தும் ததா!

  ReplyDelete
 35. @ ராஜன்
  // என்னப் பத்திதான் எதோ விமர்சனமாயிருக்கும்னு நெனச்சி வந்தா அளப்பர நடந்துட்டு இருக்கு! ம்ம்ம் தும் ததா! //

  நல்லா பல்ப் வாங்கினீங்களா அண்ணே...

  ReplyDelete
 36. அடியாத்தி எப்படியெல்லாம் கிளம்புறாங்க... இன்னுமா இவங்கள உலகம் நம்புது..

  ReplyDelete
 37. அவன் அவன் முடிஞ்ச மாதிரி விளம்பரம் போடுறாங்க...TV ல பாத்தா கண்ணு வைக்கரவங்கள தடுக்குற மாதிரி தகடு குடுக்குராங்கலாம்.........இங்க என்னடான்னா சக்கர பொட்டலம் விக்கறாங்க........எல்லாம் பில்லி சூனியங்களும் ஒன்னாயிடுசோ.........ஐயோ அம்மா காப்பாத்துங்க...............

  ReplyDelete
 38. விழிப்புணர்வுப்பதிவெல்லாம் போட ஆரம்பிச்சீட்டீங்களே

  ReplyDelete
 39. //நல்லா பல்ப் வாங்கினீங்களா அண்ணே..//

  இதுக்குதான் என்னைய மாதிரி கமுக்கமா போயிறணும்.

  அய்யய்யோ! நானும் மாட்டிக்கிட்டனா இப்ப?

  @இரவு வானம்
  அந்த விளம்பரத்தை வரி விடாம படிக்கிற அளவுக்கு ப்ரீயா இருக்கீங்களா? சும்மா ஒரு டவுட்டு.

  ReplyDelete
 40. ahhhaaa avaru irukkarathae sakkarai chettiyar mensionla!!! enna porutham....!!!!

  ReplyDelete
 41. தலைவா உங்களை எங்க வீதி பக்கம் வர வைக்கிறதுக்கு ஏதாவது வசியம் இருக்கா பாஸ்...

  ReplyDelete
 42. சக்கர இனிக்கிற சக்கர இதில் எறும்புக்கு என்ன அக்கறை

  ReplyDelete
 43. என்ன இருந்தாலும் லேகியப் பார்ட்டிங்க மாதிரி வருமா...

  ReplyDelete
 44. பாரத்... பாரதி. அப்படிங்களா? சரி விடுங்க, நன்றி பாரதி ...

  ஆனந்தி.. நன்றி மேடம் ...

  thirumathi bs sridhar.. ஹி ஹி நன்றிங்க மேடம் ...

  அந்நியன் 2 .. மன்மோகன் சிங்கை வசியம் பண்ணுரத விட, ராசாவை வசியம் பண்ணி பாருங்களேன், இன்னும் நிரைய கிடைக்கும் ...

  ராஜன்.. தல உங்களை எல்லாம் விமர்சனம் பண்ணுவனா ...

  Philosophy Prabhakaran .. அப்படி எல்லாம் இருக்காது நண்பா ....

  வெறும்பய... இன்னும் கொஞ்சம் பேரு அப்படித்தான் சுத்திகிட்டு இருக்காங்க தல :-)

  விக்கி உலகம் .. ஹி ஹி அம்மா வந்துதான் காப்பாத்தனும் போல இருக்கு ...

  சி.பி.செந்தில்குமார்.. தல சத்தியமா இது விழிப்புணர்வு பதிவெல்லாம் இல்லை, நான் நகைச்சுவைன்னு நினைச்சுதான் போட்டேன் ...

  கும்மி .. நீங்களும் பல்ப் வாங்கிட்டீங்களா? ஹி ஹி ரொம்பவே ப்ரீயா இருந்தேன் அதான், வருகைக்கு நன்றி சார் ...

  Kumar.. அதான செம பொறுத்தம் இல்லை ...

  # கவிதை வீதி # சௌந்தர்.. கொஞ்சம் ஆணி பாஸ் வேறொன்னும் இல்லை, கண்டிப்பாக வருகிறேன் ,...

  நா.மணிவண்ணன் ... என்ன நண்பா பாட்டு மட்டும் பாடிட்டு போனா எப்படி, ஏதாவது சொல்லுங்க பாஸ் ...

  பாவா ஷரீப்.. நன்றி மச்சி ..

  செங்கோவி.. என்ன நண்பா சொல்றீங்க, அனுபவமா ஹி ஹி ஹி ...

  ReplyDelete
 45. See,
  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post.html

  ReplyDelete
 46. //இந்த ராணி பத்திரிக்கையத்தான் போட்டு நாலு சாத்து சாத்தணும். காசு கொடுத்தா கஞ்சாவுக்கே விளம்பரம் கொடுப்பாங்க போலிருக்கு//

  அப்ப பதிவு போட்ட இரவு வானத்திற்கு கலைமாமணி விருது தரலாமா?

  ReplyDelete
 47. >>> சக்கர இனிக்கிற சக்கர...எறும்புக்கு என்ன அக்கற பாட்டு கேசட் இலவசமாம், சுரேஷ்!

  ReplyDelete
 48. @ sakthistudycentre-கருன் ... இதோ வருகிறேன் நண்பரே...

  @ பாரத்... பாரதி ... ஹி ஹி நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்க, கலைமாமனி வேணாம், பாரத ரத்னா மட்டும் போதும் ...

  @ ! சிவகுமார் !... யாரு கொடுக்கறாங்க சிவா ...

  ReplyDelete
 49. //இந்த ராணி பத்திரிக்கையத்தான் போட்டு நாலு சாத்து சாத்தணும். காசு கொடுத்தா கஞ்சாவுக்கே விளம்பரம் கொடுப்பாங்க போலிருக்கு//

  அப்ப பதிவு போட்ட இரவு வானத்திற்கு கலைமாமணி விருது தரலாமா?
  அடுத்தும் கலைஞ்சர் ஆட்சி வரதுக்கு ஏதாவது சக்கரை இருந்த சொல்லுக்க தன்னால எல்லா விருது வரும் , இருந்தாலும் இப்படி பட்ட விளம்பரங்களை( பதிவு ) தவிர்ப்பது நலம். வேண்டுகோள் மூட நம்பிக்கையை வளர்காதீங்க ..
  அப்புறம் எல்லாத்துக்கும் சக்கரை கேட்ட மக்கள் ஆரபிச்சன்கன்னா ? என்ன கொடும இரவு வானம் .......

  ReplyDelete
 50. சர்க்கரை பதிவு!! ஆனா மேட்டர் தான் கசப்பு!

  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  ReplyDelete
 51. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது மாதிரி -பதிவு.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!