லஞ்சம்னா என்ன ஊழல்னா என்னன்னு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் நல்லாவே தெரியும் கண்டிப்பா எல்லாருமே அவங்க வாழ்க்கையில ஒரு தடவையாவது கவர்மெண்ட் ஆபிசுல லஞ்சம் கொடுத்து பல் இளிச்சிட்டு நிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருப்பாங்க,
ஆனா இந்த பாழா போன அரசியல்வாதிக மட்டும் ஒரு பதவிக்கு வந்துட்டா கோடி கோடியா கொள்ளை அடிக்கறதும், யாராவது அதை எதிர்த்து கேள்வி கேட்டா போட்டு தள்ளறதும் வாடிக்கையா போச்சு, சாதாரணமா மத்தவங்க மாதிரி இருந்திருந்தா இன்னேரம் அண்ணா ஹசாரேவை போட்டு தள்ளி இருப்பாங்க, நல்லவேளை ஒரு அமைப்பா செயல்படுறதாலயும், நாடு முழுக்க ரீச்சாகிட்டதாலயும்தான் இன்னும் விட்டு வெச்சிருக்கானுங்க படுபாவி பயலுக,
ஊழலுக்கு எதிரா எந்த போராட்டத்தையும் நடக்க விடாம தடுக்கறதுல இருந்தே தெரியுது காங்கிரஸ் அரசாங்கத்தோட லட்சணம், இதுல வலிமையான லோக்பால் வேணும்னு சுதந்திர தின உரையில பேசறாரு பிரதமர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, வெட்கமா இல்லையா உங்களுக்கு மிஸ்டர் பிரதமர், இதையெல்லாம் பார்க்கும் போது ஜோதிஜி சார் பிளாக்குல போட்டிருந்த வாசகங்கள்தான் நினைவுக்கு வருது
கடைசி மரமும் வெட்டுண்டு
கடைசி நதியும் விஷமேறி
கடைசி மீனும் பிடிபட
அப்பொழுதுதான் உறைக்கும்
பணத்தை சாப்பிட முடியாதென்று..!
வழக்கம் போலவே தலைவரு உள்ளாட்சி தேர்தல்லயும் காங்கிரசோடுதான் கூட்டணின்னு அறிவிச்சிட்டாரு, பேசாம கனிமொழி ஜெயில்ல இருந்து வர்ற வரைக்கும் அவங்களோடுதான் கூட்டணின்னு அறிவிச்சிட்டா பிரச்சனையே இல்லையே தலைவரே, ஒவ்வொரு தடவையும் இந்த பத்திரிகைகாரங்களுக்கு பதில் சொல்லியே அலுத்து போகலை? ஒரு வேலை மிச்சமாகும் பாருங்க, கொஞ்சம் யோசிங்க தலைவரே
என்ன நம்ம இவிகேஎஸ்தான் கொஞ்சம் மானாவாரியா திட்டுவாரு அதெல்லாம் பார்த்தா வேலைக்காகுமா? வேணா நம்ம நொந்தபால விட்டு அடுத்த தலைவரும் நாந்தான்னு ஒரு அறிக்கை விட சொல்லலாம், இரண்டு பேரும் அடிச்சிகிட்டு சாவட்டும்
அம்மா ஆட்சிக்கு வந்ததோட திமுகாரங்கள பெண்டு எடுக்கறதோட நிறுத்தி இருக்கலாம், அதவிட்டுட்டு அதிமுக ஜெயிச்ச வுடனே பிளேடு பக்கிரிக, கொள்ளைகாரங்க, கொலைகாரங்க எல்லாம் ஆந்திரா பக்கம் தாராந்து போயிட்டாங்கன்னு அறிக்கை விட்டதுல திருட்டு பசங்க எல்லாம் செம டென்சன் ஆகிட்டாங்க போல, பழ,கருப்பையா வீட்டுல ஆரம்பிச்சு இப்ப நம்ம ஹோம் மினிஸ்டர் சிதம்பரம் வீடு வரைக்கும் திருடி புட்டானுங்க, நம்ம ஓ,பன்னீர் செல்வம் பிரண்ட வேற கொன்னுபுட்டாங்களாம், கொஞ்சம் பார்த்து செய்யுங்கம்மா
அப்படி இப்படின்னு ஒருவழியா சமச்சீர் கல்விய அமல்படுத்திட்டாங்கப்பா, ரொம்ப சந்தோசம், இதுக்கு இடையில எங்கடா நம்ம எதிர்கட்சி தலைவர காணோம்னு நினைச்சுகிட்டு இருந்தப்பவே விட்டாரு பாருங்க ஒரு அறிக்கை, சமச்சீர் கல்விய படிச்சா குமாஸ்தா வேலைக்குதான் போக முடியும்னு, நல்ல வேளை ஒன்னுமே படிக்காம இருந்தா எதிர்கட்சி தலைவரா ஆகலாம்னு சொல்லாம விட்டாரேன்னு சந்தோசப்பட்டேன்
பாவம் அவருபாட்டுக்கு அவரு வேலையா பார்க்கட்டும், எதிர்கட்சி தலைவர காணோம் எதிர்கட்சி தலைவர காணோம்னு கூப்பாடு போட்டு தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிறாதீங்க, அவரு என்ன சும்மாவா இருக்காரு, வருங்கால தேமுதிக தலைவர், தமிழகத்தின் முதல்வர், எதிர்கட்சி தலைவர், விருதகிரி பார்ட் – 2, எங்கள் ஆசான் பார்ட் – 2 கதாநாயகன் சண்முக பாண்டி அவர்களை சினிமாவுக்காக தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்
அனேகமா கேப்டன் உள்ளாட்சி தேர்தல்லையும் கணிசமா சீட்டு வாங்கி ஜெயிச்சிட்டு அப்புறமாதான் பொங்கி எழுவார்னு நம்பலாம்
ஏற்கனவே எங்களுக்கு ஒன்னா உட்கார சீட்டு கொடுத்தாதான் சட்டசபைக்கு வருவோம்னு வெளிநடப்பு பண்ணிட்டு இருக்கற திமுக காரங்க, இப்ப மீதி இருக்குற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணிக்க போறதா அறிவிச்சிருக்காங்க,
பாவங்க அவங்க, எப்படா யார கைது செய்ய போறாங்கன்னு அவங்களே பயந்துகிட்டு இருக்காங்க, அவங்கள எல்லாம் ஒன்னா உட்கார வெச்சா என்னவாம், தனித்தனியா உட்கார்ந்தா பயமா இருக்காது, ஒன்னா உட்கார்ந்தாலாவது ஒரு சேப்டியா இருக்கும்னு நினைச்சிருக்கலாம், கொஞ்சம் பார்த்து செய்யுங்கம்மா
சமீபத்துல ஒருநாள் கோவை போயிருந்தேன், வழியில ஒருத்தர் கரும்பு ஜூஸ் கடை போட்டு இருந்தார், சரி நாமளும் ஒன்னு சாப்பிடலாமேன்னு ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன், அப்போ ஒரு போலீஸ்காரர் வண்டில வந்தார், வந்தவர் அவரு பாட்டுக்கு @$&^#*&(*( #&^*(^&#^ அப்படின்னு பயங்கரமா கெட்டவார்த்தையில திட்ட ஆரம்பிச்சிட்டாரு, நான் வெலவெலத்து போயிட்டேன்
அவரு என்னைய திட்டல, நம்ம கரும்பு ஜூஸ் கடைக்காரரதான் திட்டினாரு, உடனே நம்மாளு ஓடிப்போய் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டினாரு, அத வாங்கிட்டு போலீஸ்காரர் அமைதியா வண்டிய கிளப்பிட்டு போயிட்டார்
ஜூஸ்கடைக்காரரும் திரும்பி வந்து வேலைய பார்க்க ஆரம்பிச்சார், நான் சும்மா இருக்காம என்னங்க மாமூலான்னு கேட்கவும், அவரும் ஆமாங்க அந்த $#%&@@*( பையனுக்கு டெய்லியும் மாமூல் அழனும், இன்னும் மூணு பேரு இருக்காங்க, ஆமா ஐஸ் போடலாமான்னு கேட்டாரு
வழக்கமா ஐஸ் போட்டுத்தானே குடுப்பாங்க, இவரு என்ன ஸ்பெசலா கேட்குறானுன்னு நினைச்சுகிட்டே ஆமா போடுங்கன்னு சொன்னேன், அவரு என்ன பண்ணுனாருன்னு தெரியுங்களா?
அரை டம்ளருக்கு மேல ஐஸ் வாட்டரும், ஐஸ் கட்டியையும் போட்டுட்டு கொஞ்சூண்டு கரும்பு ஜூசை ஊத்தி குடுத்துட்டு பத்து ரூபாய் வாங்கிட்டார், அந்த போலீஸ்காரனுக்கு குடுத்த மாமூல எங்கிட்ட வசூல் பண்ணிட்டாரு,
அடப்பாவிகளா இந்த போலீஸ்காரனுக கூட சகவாசம் வெச்சுகிட்டாலும் தப்பு, வேடிக்கை பார்த்தாலும் தப்புன்னு என் விதியை நொந்துகிட்டே வந்துட்டேன், இதே மாதிரிதான் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிகளும் வாங்குற லஞ்சத்தாலயும் அத ஈடுகட்ட யாரோ ஒருவர் பாதிக்கப்படுறாரு,
முதல்ல லஞ்சம்கற பேரை மாத்தி திருட்டு பணம்னு பேர் வைக்கனும், லஞ்சம் வாங்குறதுன்னா என்னமோ ஆஸ்கார் வாங்குற மாதிரி பெருமையா வாங்குறானுங்க, இதுவும் ஒரு திருட்டுதான், என்ன தெரியாம திருடுறதுக்கு பதிலா தெரிஞ்சே திருடுறானுங்க, என்னைக்கு லஞ்சப்பணத்த கையில வாங்க கூச்சப்படுறாங்களோ அன்னைக்குதான் உண்மையான சுதந்திர தினம்.
ஓகே நண்பர்களே, இவங்களுக்கு நடுவுல வாழறதே ஒரு பெரிய பொழப்புதானடான்னு கஞ்சா கருப்பே சொல்லி இருக்காரு, இவ்வளவு நேரம் இதெல்லாம் ஒரு பதிவான்னு படிச்சு காண்டாகி இருப்பீங்க, அதனால உங்களுக்காக கேரளாவில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, பல பேரோட தூக்கத்தை கெடுத்த சில் சிலாகி சில் சிலா பாட்டு உங்களுக்காக டெடிகேட் பண்ணுறேன், பார்த்து என்சாஜ் பண்ணுங்க
ஒன்னுமே எழுதலைன்னாலும் இந்த இரண்டு வாரத்துல புதுசா ஏழு பாலோயர்ஸ் கிடைச்சிருக்காங்க, அவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ், நன்றி..!
அன்புடன்
இரவுவானம்
முதல் வருகை..
ReplyDeleteஅனேகமா கேப்டன் உள்ளாட்சி தேர்தல்லையும் கணிசமா சீட்டு வாங்கி ஜெயிச்சிட்டு அப்புறமாதான் பொங்கி எழுவார்னு நம்பலாம்.//// நம்பலாமா?
ReplyDelete//நல்ல வேளை ஒன்னுமே படிக்காம இருந்தா எதிர்கட்சி தலைவரா ஆகலாம்னு சொல்லாம விட்டாரேன்னு சந்தோசப்பட்டேன்//
ReplyDeleteசூப்பர்!
//ஒன்னுமே எழுதலைன்னாலும் இந்த இரண்டு வாரத்துல புதுசா ஏழு பாலோயர்ஸ் கிடைச்சிருக்காங்க, அவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ், நன்றி..!//
ReplyDeleteஇது நல்ல ஈஸியான டெக்னிக்கா இருக்கே..நானும் எழுதறதை நிறுத்திப் பார்க்கலாமா..
எழுதறத நிறுத்தினா பாலோயர் கிடைப்ப்பான்களா? பாவம் அவங்க.
ReplyDeleteவெளியிட்ட அத்தனை விஷயங்களும் அருமை...
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஒன்னுமே எழுதலைன்னாலும் இந்த இரண்டு வாரத்துல புதுசா ஏழு பாலோயர்ஸ் கிடைச்சிருக்காங்க, அவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ், நன்றி..!//நன்றி
ReplyDeleteநண்பா இந்தியாவில் இப்போ இருக்கற முக்கியமான ஒரு பிரச்சனை என்னன்னா, காங்கிரசுக்கு மாற்றா ஒரு தேசிய அளவிலான கட்சி இல்லாததுதான்.
ReplyDelete@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றிங்க கருன், நம்புங்க தாராளமா நம்புங்க, தலைவர் தெளிவானதும் பொங்குவாரு
@
ReplyDeleteசெங்கோவி said...
//ஒன்னுமே எழுதலைன்னாலும் இந்த இரண்டு வாரத்துல புதுசா ஏழு பாலோயர்ஸ் கிடைச்சிருக்காங்க, அவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ், நன்றி..!//
இது நல்ல ஈஸியான டெக்னிக்கா இருக்கே..நானும் எழுதறதை நிறுத்திப் பார்க்கலாமா..
வேணாம் நண்பா இருக்குறவங்க ஓடிப் போயிட போறாங்க, ஹி ஹி சும்மா சொன்னேன், உங்கள நம்பித்தான் திரட்டிகளே பொழப்பு நடத்திட்டு இருக்காங்க, அவங்களுக்காகவாவது எழுதுங்க விடாம
@ தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஎழுதறத நிறுத்தினா பாலோயர் கிடைப்ப்பான்களா? பாவம் அவங்க.
ஹி ஹி இதுல எதுவும் உள்குத்து இல்லீங்களே???
@ # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவெளியிட்ட அத்தனை விஷயங்களும் அருமை...
ரொம்ப நன்றிங்க செளந்தர் சார்
@ மாலதி said...
ReplyDeleteநன்றிக்கு நன்றி மாலதி மேடம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி
@ பாலா said...
ReplyDeleteநண்பா இந்தியாவில் இப்போ இருக்கற முக்கியமான ஒரு பிரச்சனை என்னன்னா, காங்கிரசுக்கு மாற்றா ஒரு தேசிய அளவிலான கட்சி இல்லாததுதான்.
அதுதான் பிஜேபி இருக்குங்களே, ஒரு நல்ல ஆள மட்டும் பிரதமர் வேட்பாளரா நிறுத்தினா போதும், இன்னும் எத்தனை நாளைக்கு மத சார்பின்மை மத சார்பின்மைன்னு காங்கிரஸ்காரங்களுக்கு ஓட்டு போடறது???
கலக்கல் கமர்சியல் பக்கங்கள்.. அந்த மரம் பற்றிய கவிதை உறைய வைக்கிறது.
ReplyDeleteநீண்ட நாள்களாக உங்கள் வலைப்பூ பக்கம் வர இயலாமல் போய் விட்டது. அதற்காக மன்னிக்கவும் சகோ. இனி வழக்கம் போல வருகையும், வாக்குகளும், பின்னுட்டமும் தொடரும்..
ReplyDeleteயாருப்பா அது..எங்க பிரதமரோட மௌன விரதத்தை கலைக்க பாக்குறது...
ReplyDelete