Saturday, August 27, 2011

யுவன் யுவதி..!தமிழ் சினிமாவின் கல் தோன்றி மண் தோன்றா காலத்து காதல் கதைதான் இந்த யுவன் யுவதியும், காட்சி அமைப்புகளிலாவது வித்தியாசம் செய்து கவர்கிறார்களா என பார்த்தால் வேண்டா வெறுப்புக்கு படம் எடுத்து யுவன் யுவதி என்ற பெயரை வைத்தது மாதிரிதான் இருக்கிறது.

ஊரில் பெரிய மனிதராக இருக்கும் சம்பத்தின் மகன் பரத், அப்பா பார்த்து வைக்கும் பெண்ணை பிடிக்காமல் அமெரிக்கா ஓடிப்போக பார்க்கிறார், அமெரிக்கன் எம்பசியில் விசாவிற்காக காத்திருக்கும் வேலையில் ஹீரோயின் ரீமாவுடன் சண்டை போடுகிறார்.

தமிழ் சினிமாவின் இலக்கணப்படி, சண்டையில் தொடங்கும் பரத்தின் நட்பு காதலாக மலர்கிறது, காதலை தெரிவிக்க நினைக்கும் வேலையில் காதலி அமெரிக்கா போவதே திருமணம் செய்யத்தான் என்ற உண்மை தெரிகிறது, அதே வேளையில் மகன் ஓடிப்போவது தெரிந்த சம்பத் என்ன செய்தார்? ரீமா அமெரிக்கா போனாரா? திருமணம் நடந்ததா? பரத்தும் ரீமாவும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே என்பதே யுவன் யுவதி கதை.


டிவி சீரியல் கூட விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கும் காலத்தில், இவ்வளவு ஸ்லோவாக படத்தை கொண்டு போய் தியேட்டரில் பாப்கார்ன் விற்பவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பல காட்சிகளில் பரத் ரீமாவின் பின்னால் அலைந்து ஹாய் ஹாய் என்று சொல்கையில் படம் பார்க்கும் நமக்கே டார்ச்சராக இருக்கும் போது கதாநாயகி டார்ச்சராவதில் தவறில்லையே என்று தோன்றுகிறது.

படு போரான திரைக்கதையில் கொஞ்சமாவது கலகலப்பூட்டுவது சந்தானம்தான், அவரும் இல்லையென்றால் பாதிப்பேர் தியேட்டர் ஸ்கீரினிலேயே தூக்கு போட்டு செத்திருப்பார்கள், வழக்கமாக சிக்சராக அடிக்கும் சந்தானம் இதில் ஃபோர் மட்டுமே அடிக்கிரார், காமெடி டிராக் எழுதியது யாரோ? இடைவேளை வரையாவது பார்க்கும்படியாக படம் இருப்பதே ஆறுதல்.

கேயாக வரும் சத்யனும், ஆட்டோ ஓனராக வரும் மயில்சாமியும் ஒரு சீனில் மட்டுமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள், சத்யன் படத்துக்கு படம் மெருகேறி வருகிறார், அதிலும் அவர் இதுக்குதான் நான் கேர்ள்சோட சேர்றதே இல்லை என கூறும் போது வெடிச்சிரிப்பு.


படத்தின் இசை விஜய் ஆண்டனி, இயக்குனர் காதலில் விழுந்தேன் படம் 
மாதிரியே பாடல் கேட்டிருப்பார் போல, அனைத்து பாடல்களுமே காதலில் விழுந்தேன் டியூனிலேயே இருக்கிறது, அதிலும் நாக்கமுக்க போலவே அதே டியூனில் ஒரு பாஸ்ட் பீட் போட்டு இருக்கிறார் பாருங்கள், சுத்தம்.

வர வர தமிழ்சினிமாவில் கதாநாயகர்கள் தலைசீவாமல் வருவது ஃபேஷனாகி விட்டது போல, கோவில் ஜீவா, வானத்தில் சிம்பு போல, இதில் பரத்தும், ஆனால் பார்க்கத்தான் என்னவோ போல் இருக்கிறது, பரத்துக்கும் காதல் காட்சிகளுக்கும் காத தூரம் இருக்கும் போல, காதல் காட்சிகளில் என்ன எழவோ என பார்த்துக் கொண்டு இருக்கிறார், பரத்தின் வெற்றிப்பட வரிசையில் மற்றுமோர் தோல்விப்படம், வழக்கம் போல ஹீரோயினே ஆறுதல்.


செஷல்ஸ் தீவின் அழகைப்போல ஹீரோயினும் அவ்வளவு அழகு, படத்தை ரிலீஸ் செய்து சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தார், டைட்டில் டிசைனும், செஷல்ஸ் தீவின் அழகை படம் பிடித்த விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி, கூடவே ஹீரோயினும், இடைவேளை வரை படம் பார்த்துவிட்டு ஓடி வந்து விடலாம்.

மொத்தத்தில் யுவன் யுவதி, கைக்காசுக்கு சனி, மற்றபடி தடி கொடுத்து அடி வாங்க நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

================================================================================== 


நேற்றைய பதிவின் லிங்க் இது, நேற்று லிங்க் எங்கேயும் வேலை செய்யவில்லை, அப்டேட்டும் ஆகவில்லை, எனவே பொறுமை இருப்பவர்கள் முடிந்தால் படிக்கவும். 

13 comments:

 1. //பரத்தின் வெற்றிப்பட வரிசையில் மற்றுமோர் தோல்விப்படம், வழக்கம் போல ஹீரோயினே ஆறுதல்//
  SUPER!!!! :-)

  ReplyDelete
 2. டைட்டில் டிசைனும், செஷல்ஸ் தீவின் அழகை படம் பிடித்த விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி, கூடவே ஹீரோயினும், இடைவேளை வரை படம் பார்த்துவிட்டு ஓடி வந்து விடலாம்.//

  நன்றி.

  ReplyDelete
 3. ஹீரோயின் அட்டு பிகர் ,கண்ணுதான் பெருசா இருக்கும்போல

  ReplyDelete
 4. அருமையான படம் பரத் தொடர்ந்து சறுக்குகிறார்

  ReplyDelete
 5. சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ? http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_27.html

  ReplyDelete
 6. உங்கள் பதிவுகளை மேலும் அதிக அளவில் மக்களிடையே சென்றடைய யுடான்ஸ் திரட்டியில் இணைத்து ஓட்டுப்பட்டையை சேருங்கள்.

  http://udanz.com.

  ReplyDelete
 7. தமிழ் பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியிது.

  http://udanz.com

  ReplyDelete
 8. இன்னைக்கு படத்துக்கு போடலாம்ன்னு இருந்தேன். தப்பிச்செண்டா சாமி..
  நன்றி.

  ReplyDelete
 9. சந்தானம்கூடக் காப்பாத்தலியா?

  ReplyDelete
 10. ஏங்க ....பதிவுலகமே பர பரப்பா கிடக்குது அப்பாவி மூன்று பேரின் மரணகயிற்றுக்கு மன்னிப்பு கிடைக்காதா என்று,நானும் அதைப் பற்றித்தான் பதிவு போல என நினைத்து வந்தால் சினிமா பார்த்து கொண்டு இருக்கின்றிர்களே.

  விஷயம் உங்களுக்கு தெரியாது போல தெரியுது மாய உலகம் ப்ளாக்கிற்கு சென்று பாருங்கள்.

  ReplyDelete
 11. மொக்கைப்படம் பாக்கனும்னே தியேட்டருக்கு போறீங்களா..இல்ல நீங்க பாக்குற படம் எல்லாமே மொக்கையா?

  ReplyDelete
 12. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 13. இந்த மொக்கைய நீங்களும் பார்த்தாச்சா? சேம் பிளட்.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!