Tuesday, May 31, 2011

சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்



வாரத்தின் முதல் நாள் கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டிக் கொண்டு பணிக்கு செல்லுவது வழக்கம், அது போலவே நேற்று காலையில் கோவிலுக்கு சென்றேன், அங்கு ஒரு பெரியவர் தீவிரமாக வழிபாடு செய்து கொண்டிருந்தார், நான் செல்வதற்கு முன்பிருந்தே அங்கு நின்று வழிபட்டு கொண்டிருந்தார்

நானும் கடவுளை வேண்டிக் கொண்டு கோவிலை சுத்தி வந்து கொண்டிருந்தேன், அவரது மகன் எக்சாமில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டி கொண்டிருந்தார், அடுத்தடுத்த சுற்றுகளில் சுற்றி வரும் போது இன்னும் இரண்டு பேர்களின் பெயரை சொல்லி வேண்டி கொண்டிருந்தார், சரி அவரின் அடுத்த இரண்டு மகன்கள் போலும் என எண்ணிக் கொண்டு, என்னுடைய வழிபாடு முடிந்ததும், நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்

அப்பொழுது அந்த பெரியவர் ஓடி வந்து நிறுத்தினார், தம்பி பஸ் ஸ்டாண்டு வழியா போவீங்களா? போனீங்கன்னா என்னை அங்க இறக்கி விடுறீங்களான்னு லிப்ட் கேட்டார், சரி ஏறிக்குங்கன்னு சொல்லி அவரை ஏற்றிக் கொண்டேன், போகும் வழியெங்கு உள்ள கோவில்களை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டே முன்பு சொன்னது போலவே அவரது மகன் இன்னும் இரண்டு பேர்களின் பெயரை முணுமுணுத்து வேண்டிக் கொண்டே வந்தார்

எனக்கு ஆர்வம் தாளாமல், என்ன விசயம் சார், ரொம்ப தீவிரமா வேண்டிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர், ஒன்னுமில்லீங்க தம்பி என்னோட பையன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியரிங் படிக்கறான், கடைசி வருசம், நல்ல மார்க் எடுக்கனும்னு வேண்டிக்கிட்டேன்னு சொன்னார், அப்படிங்களா சார், உங்களுக்கு மொத்தம் மூணு பசங்களான்னு கேட்டேன், இல்லீங்க தம்பி ஒரு பையன்தான் அவன் தான் படிக்கறான்னு சொன்னார்


அப்படிங்களா, இல்லை மூணு பேர் பேரை சொல்லி வேண்டிகிட்டு இருந்தீங்களே, அதனால கேட்டேன்னு சொன்னேன், அதுங்களா அவங்க ராம்ராஜ் கம்பெனி ஓனரும் அவரோட பி.ஏவும்னு சொன்னாரு, அவங்கதான் என் பையன படிக்க வைக்குறாங்கன்னு சொன்னார்,
அதிக மார்க் எடுத்துட்டு வசதி இல்லாம இருக்குற ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு அவங்க விருப்பபட்ட படிப்ப படிக்க உதவி செஞ்சுட்டு இருக்குறார்னு சொன்னாரு, எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, இத்தனை நாள் திருப்பூர்ல இருக்கேன் எனக்கே தெரியாம போச்சேன்னு இருந்தது

ஓ, அப்படிங்களா, கொஞ்சம் டீடெயிலா சொல்ல முடியுங்களா? எனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்ல வசதியா இருக்கும்னு கேட்டேன், அவரு சொன்ன டீடெயில் இதோ


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள சென்னை சில்க்ஸ் போற வழிக்கு பின்னாடி சத்குரு டிரஸ்டுன்னு ஒன்னு வச்சு நடத்திகிட்டு இருக்காரு, திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்தின் திரு. கதிர்வேல் அவர்கள், அவர் கூட திருப்பூரின் பெரிய நிறுவனங்களை சேர்ந்த முதலாளிகளும் துணையாக இருக்காங்க

நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி படிக்க முடியாம இருக்குற ஏழை மாணவர்கள் அவங்களை அணுகிணால் அவங்க படிச்சு முடிக்கற வரைக்கும், அவங்களோட காலேஜ் பீஸ், மெஸ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் எல்லாத்தையும் கட்டி அவங்கள படிக்க வைக்குறாங்க

இதுக்காக அவங்க உள்ளூர் காரங்க வெளியூர்காரங்கன்னு பாகுபாடு பார்க்குறது கிடையாது, வெளியூரிலிருந்து வந்தும் உதவி பெற்று போகிறார்கள், எனக்கு தெரிஞ்சு அம்பது பசங்களுக்கு மேல படிக்க வச்சுகிட்டு இருக்காரு

நல்லா படிக்கற யாருக்காவது உதவி வேண்டுமென்றால், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மங்கலம் போகும் பேருந்தில் ஏறி பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ராம்ராஜ் ஹெட் ஆபிஸ் எங்கன்னு கேட்டா எல்லாரும் வழி சொல்லுவாங்க, ஈசியா கண்டுபுடிச்சிடலாம், அங்க போய் திரு.கதிர்வேல் அவர்களின் பி.ஏ திரு ஜீவானந்தம் அவரை பார்த்து விசயத்த சொல்லி உதவி கேட்டா ரெண்டு நாள்ல கண்டிப்பாக உதவி பண்ணுவாரு

மறக்காம மார்க் சீட்டு கொண்டு போறது முக்கியம், ஏழை மாணவர்களா இருக்குறதும் ரொம்ப முக்கியம், என்னோட பையனுக்கு ரெண்டே நாள்ல டிடி எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணுனாங்க, இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ரூபா அளவுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க, நான் கம்பெனில வேலை பார்த்தெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியுங்களா, என்னோட பையனுக்கு அவருதான் காசு கட்டி படிக்க வைக்குறாருன்னு சொன்னாரு, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா கண்டிப்பா சொல்லுங்கன்னு சொன்னாரு


சரிங்க கண்டிப்பா சொல்லுறேன், அப்படியே அவரோட போன் நம்பர் சொன்னீங்கன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும்னு சொன்னேன், இல்ல தம்பி அவரோட அனுமதி இல்லாம போன் நம்பர் கொடுக்கறது அவ்வளவு உசிதமா இருக்காது, அதுவுமில்லாம நேர்ல போய் கேட்குற மாதிரி போன்ல பேசுறது இருக்காது, நமக்கு உதவி வேணும்னா நாமதான் நேர்ல போய் கேட்கனும், இங்க பக்கத்துலதான இருக்கு, நேர்லயே போய் பார்க்க சொல்லுங்க தம்பின்னு சொல்லிட்டாரு

எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இப்ப படிக்கறவங்க இல்லை, அதனால அவரு சொன்னதை பிளாக்குல பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு, யாராவது வசதி இல்லாதவங்க கல்வி உதவி தேவைப்படுறவங்க இருந்தா திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்த அணுகலாம், எனக்கு இந்த விசயம் புதுசா இருக்குறதால இதோட நம்பகத்தன்மை எந்தளவுக்குன்னு தெரியல, திருப்பூர்ல இருக்குற விசயம் தெரிஞ்ச நண்பர்கள் சொல்லலாம், அவங்களோட போன் நம்பர் கிடைக்க டிரை பண்றேன், கிடைச்சா கண்டிப்பா பிளாக்குல போடறேன், 

நெட்ல தேடினப்ப அவங்க வெப்சைட் முகவரி கிடைச்சது, அதுல போன் நம்பரும் இருக்கு, அது அவங்க வியாபாரம் சம்பந்தமான இணையதளம், அதுல உள்ள போன் நம்பர்ல கூப்பிட்டா சரியா இருக்குமான்னு தெரியல, முடிந்தவரை நேர்ல போய் டிரை பண்ணுனாதான் சரியா இருக்கும்னு தோணுது


ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறக்க இந்த மாதிரி சத்தமில்லாம உதவி பண்ணிட்டு இருக்கறவங்களயும் என்கிரேஜ் பண்ணுறது ரொம்ப முக்கியம், அதனால ஏழைக் குழந்தைகளோட கல்விக்கு உதவி பண்ணிட்டு இருக்குற ராம்ராஜ் நிறுவத்தின் முதலாளி அவர்களுக்கும், திரு. கதிர்வேல், திரு. ஜீவானந்தம், மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே இது போல உங்கள் ஊரிலயும் உதவி செய்யுற பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க, அவங்கள நீங்களும் அறிமுகம் செஞ்சீங்கன்னா உதவி தேவைப்படுறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும், நன்றி   

அன்புடன்
இரவுவானம் 

32 comments:

  1. பல்லடம் சூரி. பல ஏழை மாணவர்களுக்கு உதவி புரியும் ராம்ராஜ் காட்டனை பற்றி விரிவாக எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. போற்றத்தக்க பணி. உதவி தேவைப்படுவோர் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளட்டும்.

    ReplyDelete
  3. நல்ல தகவல்.. நன்றி..

    பஸ் ல் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete
  4. நல்ல தகவல்.. நன்றி..

    பஸ் ல் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete
  5. ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறக்க இந்த மாதிரி சத்தமில்லாம உதவி பண்ணிட்டு இருக்கறவங்களயும் என்கிரேஜ் பண்ணுறது ரொம்ப முக்கியம், அதனால ஏழைக் குழந்தைகளோட கல்விக்கு உதவி பண்ணிட்டு இருக்குற ராம்ராஜ் நிறுவத்தின் முதலாளி அவர்களுக்கும், திரு. கதிர்வேல், திரு. ஜீவானந்தம், மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.///


    வாழ்த்துகள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. கண்டிப்பா சல்யூட் அடிக்கிற விஷயம்தானுங்க....

    இதுபோல பெரிய நிறுவனங்கள் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிக்க முன்வந்தால் உதவிக்கு ஏங்கும் ஏழைமாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் சாதிப்பார்கள்...

    ReplyDelete
  7. மாப்ள நல்ல தகவல் நன்றி!

    ReplyDelete
  8. @ ! சிவகுமார் !

    நன்றி சிவா

    ReplyDelete
  9. @ தமிழ் உதயம்

    நன்றி தமிழ் உதயம் சார்

    ReplyDelete
  10. @ எண்ணங்கள் 13189034291840215795

    ரொம்ப நன்றிங்க எண்ணங்கள் மேடம்

    ReplyDelete
  11. @ MANO நாஞ்சில் மனோ

    நன்றி மனோ சார்

    ReplyDelete
  12. @ # கவிதை வீதி # சௌந்தர்

    உண்மைதாங்க செளந்தர், உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. @ Rathnavel

    நன்றி ரத்னவேல் சார்

    ReplyDelete
  14. @ karthikkumar

    தேங்க்ஸ் மச்சி

    ReplyDelete
  15. @ FOOD

    நன்றிங்க சார்

    ReplyDelete
  16. @ விக்கி உலகம்

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  17. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. நல்ல பணி தொடர வாழ்த்துவோம்.

    ReplyDelete
  19. வாழ்த்துகள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  20. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். கல்வி கண் திறந்து வைப்பவர்கள், அந்த குடும்பத்தயே கரையேற்றுகின்றனர். மிக நல்ல விஷயம்.
    amas32

    ReplyDelete
  21. @ ஈரோடு கதிர்

    நன்றிங்க சார்

    ReplyDelete
  22. @ Rajan

    நன்றிங்க ராஜன் சார்

    ReplyDelete
  23. @ மாலதி

    நன்றிங்க மாலதி மேடம்

    ReplyDelete
  24. @ நாகராஜ்

    நன்றிங்க சார்

    ReplyDelete
  25. @ amas

    நன்றிங்க சார்

    ReplyDelete
  26. Thank you very much for your information. This will help sumone...

    ReplyDelete
  27. அருமையான விஷயம்.

    மீள்பதிவு செய்து கொள்ளட்டுமா சகோ?

    அபு நிஹான்

    ReplyDelete
  28. @ Poornima

    நன்றி மேடம்

    ReplyDelete
  29. @ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)

    தாராளமாக மீள்பதிவு செய்து கொள்ளுங்கள் நண்பா, கமெண்ட் மாடரேசன் செய்யாததால உங்களின் கமெண்டை உடனே பார்க்க இயலவில்லை, மன்னிக்கவும்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!