தமிழகத்திற்கு
மின்சாரம் வழங்கும் திட்டம் இல்லை – மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் திட்டவட்டம்
பஞ்சாப் மாநிலம்
வழியா பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க பரிசீலிக்கப்படும்னு பிரதமர் சொல்றாரு,
ஆனா தமிழ்நாட்டுக்கு அந்த பரிசீலனை கூட கிடையாதாம், நல்லா இருக்குய்யா உங்க நியாயம்,
அப்ப தமிழ்நாடு இந்தியால இல்லையா???
ஒரு காவிரி பிரச்சனைனா
கர்நாடகாவே ஒன்னு கூடுது, பாலாறு பிரச்சனைனா ஆந்திராவே அல்லோலப்படுது, முல்லை பெரியாருன்னா
கேராளாவுக்கே பிரச்சனைன்னு ஒன்னு கூடறாங்க, ஆனா இங்க மட்டும்தான் முல்லை பெரியாறா?
அது தேனிமாவட்டத்து பிரச்சனை, காவிரி பிரச்சனையா? அது தஞ்சை மாவட்டத்து பிரச்சனை, கூடங்குளமா?
அது நாகர்கோவில் பிரச்சனை, எங்களுக்கு என்ன வந்தது? கரண்டு கிடைச்சா போதும் அவ்வளவுதான்னு
விட்டுடறது, அப்ப ஒட்டுமொத்த தமிழ்நாட்டும் பிரச்சனையே இல்லையா? இல்ல அத எப்பத்தான்
உணரப்போறோம்?
அட ஈழப்பிரச்சனைனா
ஒன்னு கூடறீங்க, அதே காங்கிரஸ்காரங்க கூடங்குளம் பிரச்சனைனா பாதிப்பேரு அந்த பக்கம்,
பாதிப்பேரு இந்த பக்கம்னு நிக்கறீங்க, தமிழனுக்குள்ளயே எந்த ஒற்றுமையும் இல்லாம போராட்டம்
பண்ணுறேன்னு சொன்னா ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழனுகனா காமெடி பீஸ் மாதிரிதான தெரியும்,
அட ஒரு சிங்க தூக்குதண்டனைல இருந்து காப்பாத்தனும்னா ஒட்டுமொத்த மாநிலமும் போராடுது,
தூக்குதண்டனைய நிறுத்தி வைக்குது, ஆனா இங்க???
எங்க அய்யா சொல்லிட்டாரா
நானும் சப்போர்ட் பண்ணுறேன், எங்க ஆத்தா சொல்லிட்டாங்க அப்ப சரியாத்தான் இருக்கும்னு
முடிவு எடுக்கறது, எப்பத்தான் சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கப்போறோம்? அப்படியே ஒரு
ஆளு வந்து அணு உலையோட பாதிப்ப பத்தி சொல்லி மக்கள திரட்டி ஒரு போராட்டம் பண்ணுனா? அந்தாளையே
கேள்விக்குறியாக்குறதுதான் நம்ம ஆளுங்களோட வேலை, இத்தனை நாள் எங்கிருந்த நீயி? வெளிநாட்டு
பணம் வருதா? நீ தேசத்துரோகி, நீ நக்சலைட்டு, பெட்ரோமாக்ஸ் லைட்டுன்னு ஆரம்பிக்க வேண்டியது,
சரி அவருதான் சோமாலியா
பட்டினி சாவு குழந்தைக போட்டாவ வச்சி மக்களளுக்கு சாவு பயத்தகாட்டி கூட்டம் கூட்டிட்டாரு,
நீங்கதான் மக்களுக்காகவே வாழுறவங்களாச்சே, கொஞ்ச பேரு சேர்ந்தே அணு உலைக்கு எதிரா இத்தனை
பேர கூட்ட முடியும் போது, இவ்வளவு பெரிய அரசாங்கம் மீடியா பலமும் வச்சிருக்குற நீங்க
ஏன் அணு உலை பக்கம் குடியிருக்கறவங்க எல்லாம் பில்கேட்சாவும், அம்பானியாவும் ஆகறமாதிரி
ஒரு படம் எடுத்து காட்டக்கூடாது?
வாங்குற காசுக்கு
மேலயே கூவுற தினமலரும், நம்ம அய்யாவும், திடீர்னு அல்வா குடுத்த அம்மாவும், அய்யா அப்துல்
கலாம், சீனிவாசன், மன்மோகன் சிங்கு, நாராயணசாமி மாதிரி பெரிய பெரிய விஞ்சானிக எல்லாரும்
அணு உலை பாதுகாப்பா இருக்குன்னு சொல்றத, அந்த ஜனங்க நம்புற மாதிரி ஒரு டாக்குமெண்டரி
படமாவாவது எடுத்து போடலாமே?
அவ்வளவு ஏங்க,
அம்மா டிவியில அரைமணி நேரம் நியூசு வாசிப்பாங்க, 5 நிமிசம் செய்தியும், 5 நிமிசம் விளம்பரமும்
போக, மீதி 20 நிமிசம் அம்மா வாழ்கன்னு பாடிட்டி இருப்பாங்க, அதுல ஒரு அஞ்சு நிமிசம்
ஒதுக்கி அணு உலையோட அருமை பெருமைகளை விளக்கலாமே?
அது ஏன் நீங்க
அமைக்கிற வல்லுநர் குழுவெல்லாம் ஜனங்க பக்கமே போக மாட்டேங்குறாங்க? அணு உலையால தேசமே
வளர்ச்சி பெற போகுதுன்னா ஆப்டர் ஆல் கூடங்குளம் வளராதா? எதுக்கு 500 கோடிக்கெல்லாம்
அனாவசியா வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் அறிவிக்கனும்?
சுனாமி வந்தா நாலடிதான்
வரும், நிலநடுக்கமா அது பூமிக்குள்ளதான் வரும், மேல வராது, கதிர் வீச்சா அது செல்போன் சிக்னல விட
கம்மியானதுதான், அணுக் கழிவா அது உங்க வீட்டு பீரோவுக்குள்ள பத்திரமா வச்சுக்கலாம்
– என்னங்கய்யா கலர் கலரா ரீலு விடறீங்க, கேட்கிறவன் கேனையனா இருந்தா ஹிரோசிமால குண்டு
போடும்போது நாலுநாள் நான் அங்கதான் இருந்தேன்னு சொல்லுவாங்க போல
மரம் வளர்க்க சொன்னாலே
ம@%$ர் மட்டுமே வளர்க்கற பயபுள்ளக, இப்ப அணு உலை பக்கம் குடியேற தயார்னு கெத்தா சொல்லுறாங்க,
காலங்காலமா சொந்த வீடு, சொந்த நிலம்னு வாழுற ஜனங்க எங்க, விவாதத்துக்காக குரல் கொடுக்கற
நாம எங்க? தனக்கு நடக்கும் வரை எல்லாமே வேடிக்கதைதான்கற பொன்மொழி சரியாத்தான் இருக்கு.
கடைசியா வெள்ளைக்காரன
எதுர்த்து காந்தி அஹிம்சை வழியா போரடினாரு, வெள்ளைக்காரனுக்கு மனசாட்சி இருந்தது சுதந்திரம்
கொடுத்தான், ஆனா நம்ம அரசியல்வியாதிகளுக்கு மனசே கிடையாது, அப்புறம் மனசாட்சிக்கு எங்க
போறது? என்ன போராட்டம் பண்ணுனாலும் அத அடக்கி ஒடுக்கிட்டு வேலைய முடிச்சிட்டு கமிசன
வாங்கிட்டு போய்கிட்டே இருப்பாங்க
எந்த மாநிலத்துக்காரனுக்கு
பிரச்சனையினாலும், கேரளா, ஆந்திரா, குஜராத், ஒரிசான்னு எந்த மாநில மீனவனுக்கு பிரச்சனைனாலும்,
இந்திய மீனவன் பிரச்சனைன்னுதான் சொல்லுறாங்க, ஆனா நம்ம மீனவர்கள் பிரச்சனைனா மட்டும்
தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்கள்னு எழுதறாங்க, அட வடநாட்டு பத்திரிக்கைகாரங்கதான் அப்படின்னா
நம்ம ஊர் பத்திரிக்கையும் அப்படித்தான் எழுதறாங்க
நம்ம தமிழ்நாடையும்
இந்தியாவுல ஒரு மாநிலம்தான் மத்தவங்கள நினைக்க விடாம எது தடுக்குது? ஒரு மாநிலத்துல
ஒரு பிரச்சனையின்னா அது தீருகிற வரைக்கும் நாடாளுமன்றம், சட்டசபைன்னு எதிர்கட்சி, ஆளுங்கட்சி
வித்தியாசம் இல்லாம எல்லாரும் ஒத்துமையா போராடுறாங்க, பிரதமர், ஹோம் மினிஸ்ட்ர்னு மாத்தி
மாத்தி போய் மீட் பண்ணுறாங்க, பிஜெபியா இருந்தாலும், காங்கிரஸ்காரங்கள சந்திக்க தயங்குவதே
இல்லை, அவங்களுக்கு தேவை என்னவோ அதை நிறைவேத்திக்கற வரை தயங்காம போராடுறாங்க
ஆனா இங்க நிலைமை
என்ன? அய்யாவும், அம்மாவும் பார்த்துக்கவே மாட்டாங்க, அவங்க மேற்க போனா, இவங்க கிழக்க
போவாங்க, இவங்கள மட்டும்தான் நாம மறுபடியும் மறுபடியும் தேர்ந்தெடுக்க போறோம், அரசியல்
நாகரீகம் துளிகூட கிடையாது, தமிழ், தமிழர்னு ஒரு கூட்டம் உசுப்பேத்தியே குளிர்காய்ஞ்சுகிட்டு
இருக்கு, நம்ம மக்கள் யார் சொன்னாலும் தலையாட்டறாங்க, யார்கிட்டயும் ஒத்துமையே இல்லை,
ஒவ்வொரு நாட்டுலயும் டிவிட்டர், பேஸ் புக்குல விழுற சின்ன தீப்பொறியே பெரிய அளவுல மக்கள்
போராட்டமா முன்னெடுத்து வெற்றி பெறுகிற சூழலை பார்த்துகிட்டு இருக்கோம், ஆனா இங்க கண்ணெதிர்லயே
ஒரு அநியாயம்னாலும் எனக்கென்னனு தேமேனு இருக்கோம், இந்த நிலை என்னைக்கு மாறும்? எல்லோரையும்
ஒருக்கிணைக்குற ஒரு தலைவரோ, ஆட்சியோ எப்ப கிடைக்கும்?
அதுவரைக்கும் எது நடந்தாலும், நம்ம
மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும்தான், நம்ம மாநிலத்தையும், மக்களையும் காப்பாத்த
போறாங்கன்னு நம்பிக்க வேண்டியதுதான்.
தமிழன் விஷயத்தில் நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதபோது வட இந்தியா ஊடகங்களை என்ன சொல்வது?
ReplyDeleteவெளங்கிரும்.......
ReplyDeleteநம்ம நாட்டு மக்களோட உயிரை பயணம் வைச்சு கிடைக்கிற மின்சாரத்தை, பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க முன் வந்திருக்கிறார் நம்ம மண்ணுமோகன் சிங். இதை என்ன சொல்ல?
ReplyDeleteஅணு உலை வேண்டுமா வேண்டாமா? எனபதை தாண்டி,
ReplyDeleteகூடன்குள போராட்டத்தை மாநில அரசு கையாண்ட விதமும் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தது. உங்களின் கோபம் நியாயமானது தான்..