Tuesday, June 19, 2012

வீடா? ஹாஸ்டலா? எது சரி ???சமீபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது

ஹாஸ்டலில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக ஈரோடு சென்றுவிட்டு அப்பொழுதுதான் திரும்பி இருந்தார், அப்பொழுது அவருடன் நடந்த உரையாடல் இது.

என்னங்க சார் திடீர்னு பையன் ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்துட்டீங்க,

ஆமாங்க, பையன் ஒன்பதாம் வகுப்பு போறான், அடுத்த வருசம் பப்ளிக் எக்சாம் வேற

ஏங்க இங்கயே நல்ல ஸ்கூல்லதான படிச்சிட்டு இருந்தான், இத்தனைக்கும் திருப்பூர்ல பேரு வாங்குன ஸ்கூல் வேற

ஆமா படிச்சு கிளிச்சான், ஊரப்பட்ட குறும்புங்க, ஆவூன்னா ஸ்கூல்ல இருந்து கம்ளைண்டு வந்திருது, இந்த தடவை கொஞ்சம் ஓவராவே போயிட்டான்

ஓவராவா என்ன ஆச்சு?

ஸ்கூல்ல எல்லா பொண்ணுங்க கூடவும் போன் போட்டு பேசினானாம், அந்த பொண்ணுங்க அப்பனெல்லாம் கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்கன்னு பேரண்ட்ஸ் மீட்டிங்ல கூப்பிட்டு சத்தம் போட்டாங்க

அய்யய்யோ

ஓவர் விளையாட்டு வேற, எக்சாம்ல நல்ல மார்க்கே வாங்கல, பப்ளிக் எக்சாம்ல செண்டம் வாங்கனுமாம், அதனால பையன் பெயில் ஆக்கிருவோம், அப்படின்னு சொன்னாங்க,

அப்புறம்

வீட்டுல அப்பாம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? பையன சொல்லி குடுத்து வளர்க்கறதில்லையா? அப்படியா இப்படியான்னு ஒரே கம்ளைண்டு

ஓஹோ நீங்க என்ன சொன்னீங்க?

நானா? டிசி கொடுங்கன்னு சொல்லிட்டேன்

டிசியா?

ஆமா டிசி கொடுங்க, இப்பவே கொடுத்தாலும் சரி, இந்த வருசம் முடிச்சிட்டு கொடுத்தாலும் சரி, நல்ல பையன்னு எழுதுனாலும் சரி, இல்லை டிசியவே கிழிச்சு கொடுத்தாலும் சரின்னு சொல்லிட்டேன்

ஏன் சார்?

இதையேதான் அவங்களும் கேட்டாங்க, பின்ன என்ன சார்? பையன் படிக்கலைன்னாலும் பேரண்ட்ஸ் மீட்டிங்கு, குறும்பு பண்ணாலும் பேரண்ட்ஸ் மீட்டிங்கு, எதுக்கெடுத்தாலும் பேரண்ட்ஸ் மீட்டிங் வச்சு, பேரண்ட்ஸ்தான் பார்த்துக்கனும், பேர்ண்ட்ஸ்தான் சொல்லி கொடுக்கனும்னு சொன்னா வாத்தியாருங்க அவங்க எதுக்கு இருக்காங்க?
……………………………

திருப்பூர் இருக்கற நிலையில, விக்கிற விலைவாசியில, கண்ணுமுழி பிதுங்கி, ராப்பகலா வேல செஞ்சு நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு பணம் கட்டி ரெண்டு பசங்கள படிக்க வக்கிறதே கஷ்டம், இதுல ஆவூன்னா பேரண்ட்ஸ்தான் பார்த்துக்கனும்னா அவங்க எதுக்கு இருக்காங்க

அவங்க கேட்குற பணம் கொடுக்கறமுல்ல, பணம் கட்டாட்டி எக்சாம் கூட எழுத விடுறது இல்ல, இத்தன கஷ்டப்பட்டு பசங்கள படிக்க வைக்குறது எதுக்கு? நாம படிக்கலைன்னாலும் பசங்களாவது படிச்சு பெரியாளாகட்டும்னுதான், அதையும் நாமதான் சொல்லி கொடுக்கனும்னா? எல்லாத்துக்கும் டியூசன் வைக்கனும்னா இவங்க என்னத்துக்கு பணம் வாங்குறானுக?

ஓ அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?

அவங்க என்ன சொல்றது, ஏன்சார் இப்படி பேசறீங்க? பையன கண்டிச்சு வைங்கன்னு சொன்னாங்க?

கண்டிச்சீங்களா?

நான் ஏன் சார் கண்டிக்கனும்? என் பையன் கேட்கறான் சார், நான் என்னப்பா தப்பு பண்ணேன், என் கிளாஸ் பொண்ணுகிட்ட போன் பண்ணி பேசுனேன் இது தப்பான்னு?

நீங்க என்ன சொன்னீங்க?

நான் எங்கடா தப்புன்னு சொன்னேன்? உன் டீச்சருதான் சொல்றாங்க, அவங்ககிட்டயே கேளுன்னு சொன்னேன்.

ஹாஹாஹா, பேரண்ட்ஸ் மீட்டிங்கயே ரணகளம் ஆக்கிட்டீங்க போல


இல்லையா பின்ன

ஓ இதனாலதான் ஹாஸ்டல்ல சேர்த்தீங்களா?

இதனால இல்லீங்க சார், ஆறாவதுலேயே சேர்த்திருக்கனும், லேட்டா சேர்த்துட்டனேன்னு பீல் பண்றேன் சார்.

ஆறாவதுலேயேவா ஏன் சார்?

பின்ன பசங்க நம்மகிட்ட இருந்து என்ன பண்ண போறான்?

என்னசார் இப்படி சொல்லிட்டீங்க, பசங்க நம்மகிட்டயே இருந்து வளர்ந்தாதான அன்பு பாசம் இருக்கும்? சின்ன வயசுலயே ஹாஸ்டல்ல விட்டுட்டா மனதளவில வெறுத்து போயிடுவாங்களே சார்

கிளிச்சானுங்க, நம்மகிட்ட இருந்தா உருப்படவே மாட்டானுங்க, என் பையன் ஏழு மணிக்கு எந்திரிக்கிறான், ஒரு மணி நேரத்துக்குள்ள அவசர அவசரா பல்லுவிளக்கி, பாத்ரூம் போயி, அரைகுறையா குளிச்சு, சாப்பிட்டும் சாப்பிடாம, ஷூ, டையெல்லாம் கட்டியும் கட்டாம, ஒழுங்கா கட்டமுடியலைன்னா கோவத்துல என்ன வேற ஒரு உதை உதைச்சிட்டு போறான் சார், இதுவே ஹாஸ்டல்னா இப்படி இருக்க முடியுமா சார்?

ரெண்டு நாள் முன்னாடி அவனுக்கு பொறந்தநாளு, காலையிலேயே திருப்பூர்ல இருந்து கிளம்பி ஈரோடு போய் பையன் பாக்குறேன், அஞ்சு மணிக்கே எழுந்து பொறப்பட்டு, பிரேயர் முடிஞ்சு, படிச்சிட்டு இருக்கான் சார், என்ன பார்த்ததும் குட்மார்னிங் டாடின்னு சொல்றான், நீட்டா டிரஸ் பண்ணி தலைவாரி, என் பையனான்னு எனக்கே ஒரு நிமிசம் டவுட்டா போச்சு

ஏங்க இதெல்லாம் பெரிய மேட்டரா?

வேற என்னதாங்க பெரிய மேட்டரு, வீட்டுலயும் நாங்க அதைத்தான் சொல்றோம், ஓவர் செல்லம் கேட்க மாட்டேங்குறான், ஆனா அங்க அப்படியா? நம்மகிட்ட இருந்தா என்ன கத்துக்குவான் சொல்லுங்க? உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன், நான் காலையில வண்டி தொடப்பேன், இவனும் என்கூடவே நின்னுகிட்டு வேடிக்கை பார்ப்பான், என்ன பார்ப்பான்னு நினைக்கறீங்க? அக்கம் பக்கம் வீட்டுல இருக்கற ஆண்டிக காலையில பாத்திரம் வெளக்கறதயும், தண்ணிபுடிக்கறதும் துணி விலகி இருக்கறதையும் வேடிக்கை பார்க்கிறான், அவனயும் தப்பு சொல்லமுடியாது அவன் வயசு அப்படி, இதையா கத்துக்கறது?

இதுமட்டும் இல்லீங்க, ஸ்கூல்ல கம்ப்யூட்டர் சம்பந்தமா புராஜெக்ட் ஒன்னு கொடுத்துருக்காங்க, எல்லாரும் வீட்டு பக்கத்துல இருக்கற பிரவுசிங் செண்டருக்கு போய் பிராஜெக்ட் பண்ணுங்கடான்னு, கம்ப்யூட்டர் லேப்புக்குனு காசு மட்டும் வாங்குறானுக, ஆனா புராஜெக்ட் பண்ண மட்டும் பிரவுசிங் செண்டருக்கு போகனுமாம், பிரவுசிங் செண்டரெல்லாம் ஒழுங்காவா இருக்கு? எல்லா கம்ப்யூட்டருலயும் அசிங்க அசிங்கமா படம் ஓடுது, அதையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் இவனுங்க அடங்குவானுங்களா? அப்புறம் என்ன ம@#$%த்துக்கு கம்ப்யூட்டர் லேபுக்கு காசு வாங்குறானுக?


காலையில ஒன்பதரை மணிக்கு ஸ்கூலுக்கு எட்டு மணிக்கே வீட்டுல வந்து பிக்கப் பண்ணிட்டு போயிடரான் சார் ஸ்கூல் பஸ்காரன், ஒன்னரை மணி நேரம் தெருத்தெருவா சந்து சந்தா வீதி வீதியா சுத்தி ஒன்பதரை மணிக்கு ஸ்கூலுக்கு கொண்டு போய்விட்டா பசங்க என்னாவாங்க? நீங்களே சொல்லுங்க சார், ஒருமணி நேரம் டிராவல் பண்ணி ஆபீஸ் போனா நீங்க டயர்டாவீங்களா? இல்ல சுறுசுறுப்பா வேலை செய்வீங்களா? பெரியவங்க நமக்கே இப்படின்னா சின்ன பசங்களுக்கு எவ்வளவு டயர்டா இருக்கும்? அப்புறம் அவங்களால எப்படிங்க சுறுசுறுப்பா படிக்க முடியும்? என்ன பொறுத்தவரைக்கும் ஸ்கூலுக்கு வீட்டுக்கும் அதிகபட்சம் 10 நிமிசம்தான் டிராவல் இருக்கனும், அப்பத்தான் பசங்க நிம்மதியா படிக்க முடியும், இது ஹால்டல்ல மட்டும்தான் நடக்கும்.

கடைசியா என்னதான் சொல்ல வரீங்க?

என்ன பொறுத்தவரைக்கும் பசங்க நம்மகூட பத்து வயசு வரைக்கும் இருந்தாலே போதும் சார், அதுவரைக்கும்தான் அன்பு பாசம் எல்லாம் தேவைப்படும், அப்புறம் அவங்கள எதாவது நல்ல ஹாஸ்டலா பார்த்து தங்க வச்சி அவங்க தேவை என்னவோ அதை வாங்கி தரதோட விட்டுரனும், அப்பத்தான் வாழ்க்கைக்கு தேவையான நாலு விசயங்களை கத்துக்க முடியும், வருங்காலம் போட்டி நிறைஞ்ச உலகம் சார், சின்ன விசயத்துல கோட்ட விட்டுட்டா பெரிய விசயங்கள் கைநழுவி போய்விடும், அப்புறம் காலாகாலத்துக்கும் நீங்க என்னதான் சமாதானம் பண்ணாலும், எதை வாங்கி கொடுத்தாலும், பையன் நீ எனக்கு என்ன பண்ணுனன்னுதான் கேட்பான், பெரிய பெரிய பணக்கார பசங்கள இருந்தா பரவாயில்ல சார், நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்து பசங்க எல்லாம் ஒழுங்கா இருக்கவும், நாலு விசயம் கத்துக்கவும் கண்டிப்பா ஹாஸ்டல்தான் சரிதான் சார்.

நண்பர்களே இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?  

23 comments:

 1. //பேர்ண்ட்ஸ்தான் சொல்லி கொடுக்கனும்னு சொன்னா வாத்தியாருங்க அவங்க எதுக்கு இருக்காங்க?//

  எனகென்னவோ சரியாதான் படுது கேள்வி

  ReplyDelete
 2. நானே ஒரு பதிவு போடனும்ன்னு நெனைச்சேன்.....பேரணட்ஸ் மீட்டிங் என்பது நம்ம பையனை பற்றி நம்மகிட்ட குறை சொல்லுகின்ற ஒரு நிகழ்வா போயிருச்சு!

  ReplyDelete
 3. //கடைசியா என்னதான் சொல்ல வரீங்க?//

  மொத இருந்தே தெளிவாதான் சொல்றாரு

  ReplyDelete
 4. மாப்ளே, 25 வருசத்துக்கு முன்னால எங்கப்பாரு எடுத்த முடிவு - நாங்கெல்லாம் என்ன வீணாவா போய்ட்டோம்.

  ReplyDelete
 5. எனக்கெல்லாம் கெட்டது பழகிதந்ததே ஹாஸ்டல் தான் ஆனா ஹாஸ்டல்ல மட்டும் படிக்காட்டி எப்பவோ தொழிலதிபர் ஆகிருப்பேன்.... அதாங்க ஃபெயில் ஆகி பொட்டிக்கடை வச்சிருப்பேன் (8th to 12th and PG in Hostel)

  ReplyDelete
 6. ஓ இது புது மேட்டரா சிந்திக்க வைக்குதே...!!!!

  ReplyDelete
 7. //துக்கெடுத்தாலும் பேரண்ட்ஸ் மீட்டிங் வச்சு, பேரண்ட்ஸ்தான் பார்த்துக்கனும், பேர்ண்ட்ஸ்தான் சொல்லி கொடுக்கனும்னு சொன்னா வாத்தியாருங்க அவங்க எதுக்கு இருக்காங்க?///

  ங்கொய்யால! நம்மளை விடக் கோவக்காரனா இருப்பான் போலிருக்கு!

  :-)

  ReplyDelete
 8. @
  மனசாட்சி™

  மாம்ஸ் டிரேட் மார்க் சிம்பல் எல்லம் போட்டுட்டீங்க :-)

  ஆமா மாம்ஸ் நீங்க ஹாஸ்டல்ல படிச்சுதான் பெரியாளாகி இருக்கீங்க

  ReplyDelete
 9. @ வீடு சுரேஸ்குமார் said...
  நானே ஒரு பதிவு போடனும்ன்னு நெனைச்சேன்.....பேரணட்ஸ் மீட்டிங் என்பது நம்ம பையனை பற்றி நம்மகிட்ட குறை சொல்லுகின்ற ஒரு நிகழ்வா போயிருச்சு!//

  கண்டிப்பா ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை செய்தாலே போதும், மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவரலாம்

  ReplyDelete
 10. @
  மௌனகுரு

  ஹாஸ்டல்ல படிச்சு கெட்டுபோன பசங்கள விட நல்லா வந்த பசங்கதான் ஜாஸ்தி போல :-)

  ReplyDelete
 11. @ 19, 2012 7:57 PM
  MANO நாஞ்சில் மனோ

  வாங்கண்ணே, நல்லா சிந்திச்சு ஒரு முடிவெடுங்க

  ReplyDelete
 12. @ வெளங்காதவன்™

  ஆமாங்க அவரு கொஞ்சம் கோபக்காரர்தான்

  ReplyDelete
 13. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  அட நம்ம சிரிப்பு போலீசே ஹாஸ்டல்காரர்தானா? அப்ப சரி

  ReplyDelete
 14. பள்ளிகூடம் போறப்பவே ஹாஸ்டல்ல சேர்க்குறது ரொம்ப கொடுமை பாஸ்.

  ReplyDelete
 15. @ Robert said...
  பள்ளிகூடம் போறப்பவே ஹாஸ்டல்ல சேர்க்குறது ரொம்ப கொடுமை பாஸ்.//

  கரக்ட்தான் பாஸ், ஆனா கொஞ்சம் விபரம் வந்தப்புறம் 12 அல்லது 13 வயசுல ஹாஸ்டல்ல சேர்க்கனும்னு அவரு சொல்றாரு

  ReplyDelete
 16. இதுக்கு தனியா ஒரு பதிவு போடனும் போல இருக்குதே!

  நேரம் மாட்டுதான்னு பார்க்கிறேன்.

  ReplyDelete
 17. ராஜ நடராஜன் கூட நழுவி போய்விட்டார்.

  அன்பு, பாசம், அக்கறை ஒரு பக்கம், அடிப்படை கடமைகள் மறுபக்கம். இதுவா? அதுவா? குழந்தைகளைப் பொறுத்தவரையில் கட்டளைகள் என்ற பெயரில் பெற்றோர்கள் எதிர்பார்ப்பின் காரணமாக முரண்பாடுகள் உருவாகின்றது. அது பெண் ஆண் குழந்தைகள் என்ற வேறுபாடு இல்லாமல் வீட்டில் சண்டை சச்சரவு என்று நாள்தோறும் உருவாகிக் கொண்டிருப்பதால் எங்கேயாவது தள்ளிவிட்டால் போதும் என்ற மனோநிலை உருவாகின்றது.

  குழந்தைகள் நம்மோடு வளர்ந்தால் நாம் படக்கூடிய கஷ்டம், நம்மைச் சுற்றிலும் உள்ள உறவினர்கள், நம்முடைய வாழ்க்கை அமைப்பு, எந்த அளவுக்கு நம் வசதிக்கு ஏற்ப எதை எதை எதிர்பார்க்கலாம், எந்த அளவுக்கு நாம் உயர வேண்டும் என்ற அடிப்படை விசயங்களை கற்றுக் கொள்ள வைக்க முடியும். ஆனால் அதற்கு பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் படிக்க வைத்து விட்டேன். பணம் கட்டி விடுகின்றேன். பள்ளிக்கூடம் முடித்தவுடன் வேண்டுமானால் டியூசன் போய் மேலும் படிக்கட்டும் என்று ஒதுங்குதல் தொடங்கும் போதே உள்ளூர தலைமுறை இடைவெளி உருவாகி விடுகின்றது.

  ஹாஸ்டல் நல்லது தான் மற்றொரு வகையில். எப்படியென்றால் உடுமலைப்பேட்டையில் உள்ள இராவணுத்தினரால் நடத்தப்படும் சைனிக் பள்ளிக்கூடம் போன்ற அமைப்பின் மூலம் ஒரு குழந்தையின் முழுத்திறமையும் வெளியே கொண்டு வாய்பபு அதிகம்.. ஆனால் அதற்குண்டான வசதிகள் நமக்கு வேண்டும். நான் பார்த்தவரையிலும் நம்மோடு வளரும் குழந்தைகளும் பிடிவாதம், ஆக்ரோஷம், விதண்டாவாதம் போன்ற குணாதிசியங்கள் உருவானால் கூட தட்டி தட்டி முயற்சி செய்தால் ஒரு ஒழுங்கான உருவத்திற்கு கொண்டு வர முடியும். ஹாஸ்டல் என்றால் ஒருவர் உருவாக்கிய கட்டளையை அந்த மாணவன் மாணவி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மனதிற்குள் பொருமிக் கொண்டே மனக்கோளாறின் அடிப்படையை உள்ளே வைத்துக் கொண்டு பள்ளி அல்லது கல்லூரி படிப்பு முடித்து வெளியே வந்து குடும்பத்தோடு ஒட்டாமல் ஒரு தனிச்சையான வாழ்க்கை நடைமுறையோடு வாழ்ந்து கொண்டிருப்பதை என் கண் எதிரே பார்த்துக் கொண்டு இருக்கேன்.

  ReplyDelete
 18. மீகவும் நல்ல தகவல்.. தந்தை கொனதில் பார்தால் நீங்கல் சொல்வது சரி தான்.. ஹொஸ்டெல்ல தான் ரொம்ப துன்பபடுரங்க.. காலைல 4 மணி முதல் night 11 மணி வரை படிதால் மென்டல் தான் ஆகுவாங்க..
  குரும்பு பன்னுனா தான் பசங்க. மாணவர்கல machine mathiri mathithinga..
  www.busybee4u.blogspot.com

  ReplyDelete
 19. அவர் சொல்றத பார்த்த சரியாய் தான் இருக்கு ஆன கெட்டு போற பசங்க எங்க இருந்தாலும் கெட்டு தான் போவாங்க நம வளர்புல தான் இருக்கு

  ReplyDelete
 20. http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
  நண்பரை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!