Tuesday, August 7, 2012

செல்வி அக்காகாலையில் ரோட்டினை கடக்கும்பொழுது திடீரென்றுதான் செல்வி அக்காவை பார்க்க நேர்ந்தது, போட்டிருந்த கண்ணாடியை தாண்டி அந்த முட்டை கண்களும், புருவங்களும் கூட ஆச்சரியத்தையும், விசாரிப்பையும் ஒருசேர காட்டின.

அப்பொழுதும் பேசவில்லை, இப்பொழுதும் பேசவில்லை.

என்ன நினைத்திருப்பாள்? சின்னதம்பி பிரபு போலவே இருப்பேன் என நினைத்திருப்பாளோ? இப்பொழுது ஒல்லியாகிவிட்டதால் ஆச்சரியம் காட்டியிருப்பாளோ? இல்லை வெகுகாலம் கழித்து பார்ப்பதால் ஏற்பட்ட ஆச்சரியம் கலந்த பார்வையோ?

செல்வி அக்கா

சிறுவயதில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள், எங்கள் வீட்டிற்கு நான் ஒரே மகன் என்பதால் அம்மாவை தவிர அக்காள், தங்கை என எந்தவிதமான பெண் பாசமும் கிட்டியதில்லை. 

அக்காவை கிடைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள், அவர்களுக்கு இரண்டு தாய்கள், அழுதால் பாசமாக அரவணைக்க, கோபம் வந்தால் சண்டை போட, யாருமே இல்லாவிட்டாலும் உலகில் நமக்கு ஒருவர் இருக்கிறார் என உணர்ந்த, என எல்லாவுமாகவே அக்காக்கள் இருப்பார்கள் என எனக்கு உணர்த்தியதே செல்வி அக்காதான்.

சிறுவயதில் நான் குண்டாக இருப்பேன், என் பால்யவயது நண்பர்கள் குண்டா என அழைக்கும்போதெல்லாம் அவர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்க பெரும்பாடுபடுவேன், சண்டையிடுவேன், கடைசியில் தோற்று போவேன், வேறுவழியில்லமல் இயலாமையின் உச்சத்தில் அழுகைதவிர மாற்று ஏதுமில்லாமல் போகும், அவ்வாராண ஒருதருணத்தில்தான் செல்வி அக்காவின் கருணை எனக்கு கிடைத்தது.

போங்கடா எல்லாரும், இனிமேல் யாராச்சும் அவனை கிண்டல் பண்ணா அடிப்பேன் என எனக்கு முதன்முதலாக பக்கபலமாக ஆறுதலாக வந்தாள், அப்போதிலிருந்தே அக்காவை எனக்கு பிடித்து போனது, பிடித்தது என்று சொல்வதைவிட அக்கா பைத்தியம் பிடித்தது என்றே சொல்லலாம்.


என் பால்ய நண்பர்கள் விளையாட கூப்பிட்டால்கூட செல்லாமல் அக்காவுடன் சேர்ந்து பன்னாங்கள் விளையாடுவது, நொண்டிவிளையாடுவது, எட்டுகுச்சி விளையாடுவது என அக்காவுடனே பொழுதை கழிக்க ஆரம்பித்தேன், அதிலும் எட்டுகுச்சி விளையாட்டில் நானே ஜெயிப்பதால் என் தலையில் குட்டி செல்லமாக அலுத்துக் கொள்வாள்.

செல்வி அக்காவின் அப்பா வாங்கிதரும் பொரி உருண்டை, இலந்தைவடை, அஞ்சு பைசா மிட்டாய்கள் என அனைத்து திண்பண்டங்களிலும் எனக்கு பங்குதருவாள், அதிலும் அக்கா பள்ளி முடிந்து வருகையில் வாங்கி வரும் கம்மர் கட்டை பாவடையின் நுனியில் வைத்து கடித்து பாதி தருவாள், அந்த கம்மர்கட்டின் சுவை எச்சிலுடன் இப்பொழுதும் நினைவிருக்கிறது.

அக்காவின் பாவாடையை பிடித்து ரயில் வண்டி விளையாடுவது, இலந்தை பழம் பொறுக்க போவது, வெள்ளிக்கிழமை அவர்கள் வீட்டில் ஒளியும் ஒலியும் பார்ப்பது, ஞாயிற்றுகிழமை சக்திமான், ஜூனூன், திரைப்படம் என அக்காவே வாழ்க்கையாக சுழன்ற நாட்களுக்கு வசதியான ஒருநாளில் ஆப்பும் வந்து சேர்ந்தது.

திடீரென்று ஒருநாள் அக்கா வயதுக்கு வந்தாள், அன்று முதல் அக்காவை அடிக்கடி பார்க்க முடியவில்லை, பேசமுடியவில்லை, ஏனோ அக்காவின் அண்ணனுக்கும் எனக்கும் ஆரம்பம் முதலே ஒத்துபோகவில்லை, ஏனென்று கேட்டதற்கு நீ வேறு ஜாதி என்றான் ஒருநாள், ஆனால் அக்காவின் பாசத்தில் ஒருநாளும் நான் வேறுபாடு கண்டதில்லை, வீட்டு பக்கம் வராதே என்றான் அண்ணன்.


ஒளியும் ஒலியும் பார்க்க சென்றால் கதவை மூடி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள், திறந்திருந்த ஒருநாளில் உள்ளே சென்றபோது அக்காவின் அப்பாவின் சுடுசொல்கள் முகத்தில் வெண்ணீரை ஊற்றியது போல் வலிக்க ஆரம்பித்தது, நாளைடைவில் எனக்கும் அக்காவிற்கும் இடையில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்திருந்தது.

எப்பொழுதாவது வெள்ளிக்கிழமை தலைக்கு சீயக்காய் போட்டு குளித்து விட்டு வெளியில் மைகோதி வைத்து தலையில் கோதிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கிறாயா? சாப்பிட்டாயா? என்று எதாவது பேசுவாள், அவளுக்கும் என்னுடன் பேச ஆசைதான் என்று புரிந்து கொண்டேன், நான் ஆண் என்பதே தடையாக இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன், என்னால் வேறு என்ன செய்ய முடியும்? நாளைடைவில் வெள்ளிக்கிழமை வெளியே வருவதைகூட குறைத்துக் கொண்டாள், நானும் என் நண்பர்கள் வட்டாரத்தில் புலங்க ஆரம்பித்து பழகிவிட்டேன்.

ஒருநாள் அக்காவின் அம்மா இறந்துவிட்டார்கள் என தகவல் வந்தது, ஊரில் உள்ள அனைவரும் இறப்புவீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள், அக்காவுடன் பேச இதைவிட்டால் வேறு வாய்ப்பு இல்லையென்பதால் நானும் சென்றேன், ஊரில் உள்ள பொண்டு பொடுசுகள், பெரிசுகள் வட்டம் போட்டு அழுதுகொண்டிருந்தார்கள், அக்கா எங்கே? என தேடிக்கண்டுபிடித்தேன், தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள், சிறிது நேரத்தில் மயக்கமாகிவிட்டாள்.

நான் என்ன பேச? அந்த சூழ்நிலையில்? சுற்றியும் முற்றியும் பார்த்தேன், அக்காவை போலவே மைகோதியும் தலைகீழாக கிடந்தது, அக்காவின் நியாபகமாக அதனை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன், அம்மா இறந்த ஒரு வருடகாலத்திற்குள் அக்காவிற்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள், பொளர்ணமி போன்ற அக்காவிற்கு அம்மாவாசை போன்ற மாப்பிள்ளை, திருமணத்திற்கு கூட அழைப்பில்லை, செல்லமுடியாமல் போனது. 

அதன்பிறகு காலப்போக்கில் நாங்களும் வீடு மாறிவந்துவிட்டோம், பள்ளி, பாடங்கள், நண்பர்கள், டியூசன் என வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது, அக்காவின் மைகோதியும் அக்காவை போலவே வீடு மாற்றும் பொழுது காணாமல் போய்விட்டது.


இதோ வெகுநாள் கழித்து இல்லை இல்லை வருடங்கள் கழித்து அக்காவை பார்க்கிறேன், குண்டடித்து தோல்சுருங்கி, கண்ணாடி அணிந்து செல்வி அக்காவா இது? ஆச்சரியத்துடன் என்னை பார்க்கிறாள்.

என்ன நினைத்திருப்பாள்? சின்னதம்பி பிரபு போலவே இருப்பேன் என நினைத்திருப்பாளோ? இப்பொழுது ஒல்லியாகிவிட்டதால் ஆச்சரியம் காட்டியிருப்பாளோ? இல்லை வெகுகாலம் கழித்து பார்ப்பதால் ஏற்பட்ட ஆச்சரியம் கலந்த பார்வையோ?

அப்பொழுதும் பேசவில்லை, இப்பொழுதும் பேசவில்லை. 

அக்காவை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு திட்டிகொண்டு செல்கிறான் அவள் கணவன்.

”சீக்கிரம் நடடி உன்னையெல்லாம் கூட்டிகிட்டு நடக்கனும்னு தலையெழுத்து” 

எல்லா அக்காள்களின் வாழ்க்கையும் இப்படித்தானோ !!?


46 comments:

 1. மீ...பஸ்ட்டு!

  ReplyDelete
 2. எனக்கும் இப்படி கதைசொல்லி, விளையாடிய பக்கத்து வீட்டு அக்கா பால்ய வயதில் இருந்தாள்...!அது அன்பு மட்டும் இருந்த கனாக்காலம்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குமா மாம்ஸ்? எல்லோருக்கும் ஒரு அக்கா இருந்திருப்பார்கள் போலிருக்கிறது.

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 4. அருமை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராபர்ட்

   Delete
 5. //பாவடையின் நுனியில் வைத்து கடித்து பாதி தருவாள், அந்த கம்மர்கட்டின் சுவை எச்சிலுடன் இப்பொழுதும் நினைவிருக்கிறது. //

  நினைவுகளை மீள் பிரசுரம் செய்கிறது உன் எழுத்துக்கள் .......

  என் பால்யம் திரும்பியது காட்சிகளாய் பல வண்ணங்கள் நிறைந்து

  பத்து நிமிடம் மகிழ்ந்து இருந்தேன் இந்த எழுத்துகளுடன் .......

  வாழ்த்துக்கள் ..............நன்றியும் கூட தம்பி

  நீ நல்லா வருவா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா, மீள் ஞாபகம் என்றும் இனிமையானதுதான்.

   Delete
 6. //அக்கா பள்ளி முடிந்து வருகையில் வாங்கி வரும் கம்மர் கட்டை பாவடையின் நுனியில் வைத்து கடித்து பாதி தருவாள்//
  எனக்கும் அனுபவம் உண்டு...இனிய நினைவுகல் அருமையாச் சொல்லியிருக்கீங்க பாஸ்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜீ அனைவருக்கும் இதே போன்ற அனுபவம் உண்டு என்று தெரிந்து கொண்டேன்.

   Delete
 7. நீர் பாட்டுக்கு மலரும் நினைவுகளை உசுப்பி விட்டுடீரே......ஆமாம் எனக்கும் உண்டு கல்யாணி அக்காள் - அட, வீடு சொன்னது போல அது ஒரு கனா காலம் மாப்ள.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கனா தெளியலியா மாம்ஸ், ஸ்பேம்ல இருந்து எடுத்து விட்டாச்சு :-)

   Delete
 8. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்கள் உண்மையான அக்கறையான தெளிவான ..... இன்னும் பல... ரசித் தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளைக்கு பிறகு உங்ககிட்ட திட்டு வாங்காம தப்பிச்சதே பெரிய விசயம் :-) மிக்க நன்றி சார்

   Delete
 9. சுரேஷ்

  பேனர் கொஞ்சம் மாற்றி விடுங்க. நீல கலர் ரொம்ப அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. முயற்சிக்கிறேன் சார்

   Delete
 10. மச்சி அருமைடா !!!! மூன்று முறை படித்து விட்டேன் ஒவ்வொரு முறை உன் வரிகளை படித்து செல்லும் போது என் நினைவுகள் என்னை என் பால்ய காலத்தின் பின்னுக்கு மிக வேகமாக அழைத்து செல்கிறது ...நம் ஒவ்வொருவர்ரின் பால்யத்தின் பின்னே செல்வி அக்காவோ ,இல்லை கோமதி அக்காவோ இல்லை மாலதி அக்காவோ இல்லை பாப்பக்கவோ ..என ஒவ்வொரு அக்காக்கள் மேல் இந்த கதை ஊர்ந்து செல்கிறது....நிஜமாகவே நமக்கு மிட்டாய்களை உடைத்து சமமாக்கி தருவதாகட்டும் , ஐந்துகள் ஆட்டம்,ஆடுபுலி ஆட்டம் ,நொண்டி ஆட்டம் , பல்லாங்குழி என ஒவ்வொரு விளையாட்டுகள் ஆகட்டும் நமக்கு ஒரு அக்காதான் கற்று தந்து இருக்கிறாள் ..அந்த அக்காகளுக்கும் நமக்குமான இடைவெளி அவர்கள் பூப்பெய்தியதும் முதல்தான் தொடங்குகிறது ....அவர்கள் கை பிடித்து காடு மேடெல்லாம் நடந்து ஆறோ ,வாய்க்களோ குளமோ ,குட்டையோ அதில் எல்லாம் மீன் பிடித்து சந்தோசமாய் சுற்றி திரியும் ஒரு காலம் இனி ஒரு தலைமுறைக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் ஆகவே அக்காக்கள் என்றும் நம் பாசத்துக்கு உரியவர்கள் என்பதைவிட நாம்தான் அக்காகளின் பாசத்துக்கு உரியவர்கள் ....//////திடீரென்று ஒருநாள் அக்கா வயதுக்கு வந்தாள், அன்று முதல் அக்காவை அடிக்கடி பார்க்க முடியவில்லை, பேசமுடியவில்லை, ஏனோ அக்காவின் அண்ணனுக்கும் எனக்கும் ஆரம்பம் முதலே ஒத்துபோகவில்லை, ஏனென்று கேட்டதற்கு நீ வேறு ஜாதி என்றான் ஒருநாள், ஆனால் அக்காவின் பாசத்தில் ஒருநாளும் நான் வேறுபாடு கண்டதில்லை, வீட்டு பக்கம் வராதே என்றான் அண்ணன்...///ஒளியும் ஒலியும் பார்க்க சென்றால் கதவை மூடி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள், திறந்திருந்த ஒருநாளில் உள்ளே சென்றபோது அக்காவின் அப்பாவின் சுடுசொல்கள் முகத்தில் வெண்ணீரை ஊற்றியது போல் வலிக்க ஆரம்பித்தது, நாளைடைவில் எனக்கும் அக்காவிற்கும் இடையில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்திருந்தது. எனக்கு இது நடந்து இருக்கிறது மச்சி நான் இதை அனுபவித்து இருக்கிறேன் நீ எழுதியதை படிக்கும் போது கண்களுக்குள் அந்த காட்சி விரிகிறது விரிந்து கண்கள் கண்ணீரால் சூழ பெறுகிறது .................நினைவுகள் என்றுமே தாலாட்டும் உன் எழுத்தை போல .......நன்றி மச்சி

  ReplyDelete
  Replies
  1. என் சொந்த அனுபவங்களோடு கற்பனையும் கலந்து எழுதினேன், அது நிறைய பேரின் அனுபவங்களோடு ஒத்து இருந்தது சந்தோசம், நிறைய பேர் மனம் பின்னோக்கி சென்று அக்காக்களை நினைவில் இருத்தி இருக்குறது தெரியும்பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, உனக்கும் பிடித்திருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

   Delete
 11. அந்தக்கால நினைவு நாபகம் வந்தது...
  தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி சார்

   Delete
 12. அருமையான நினைவு மீட்சி..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி கோவி சார்

   Delete
 13. மிக அருமையான கதை! வாழ்த்துக்கள்!

  இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் சார்

   Delete
 14. //ஒளியும் ஒலியும் பார்க்க சென்றால் கதவை மூடி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள், திறந்திருந்த ஒருநாளில் உள்ளே சென்றபோது அக்காவின் அப்பாவின் சுடுசொல்கள் முகத்தில் வெண்ணீரை ஊற்றியது போல் வலிக்க ஆரம்பித்தது,//

  நாம எல்லாம் வீர பரம்பரை இந்த அசிங்கத்துக்கெல்லாம் அஞ்சலாமா தல :)

  ReplyDelete
  Replies
  1. அஞ்சகூடாதுதான் ஆனா கழுத்தை புடிச்சு வெளிய தள்ளாத குறையா திட்டுனா என்ன பண்ணுறது மச்சி?

   Delete
 15. சும்மா சொல்லக்கூடாது க்லாஸிக் ரைட்டிங் சூப்பர் மச்சி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வருண்

   Delete
 16. எல்லா அக்காக்களின் வாழ்க்கையிலும் உங்களைப் போல் தம்பி உண்டு, இன்னமும் அந்த நினைவை மனதில் புதைத்து உள்ளுக்குள் அழுது கொள்ளும் பாவப்பட்ட ஜென்மங்கள்
  பகிர்தலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அக்காக்களின் வாழ்க்கையில் தம்பிகள் என்றும் ஸ்பெசல்தானே, உங்களுக்குள்ளும் தம்பி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன், மிகவும் நன்றி மேடம்.

   Delete
 17. சோகமான மலரும் நினைவுகள்.....மனசை கலக்கிருச்சுய்யா....தொண்டையில் பந்து மாதிரி ஏதோ உருண்டாப்ல இருக்கு....அக்காக்களின் பாசத்துக்கு நானும் அடிமை...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்தப்பு எல்லோருக்கும் உண்டான அனுபவம்தானே

   Delete
 18. நாடோடி வாழ்க்கை வாழ்ந்து,இருவது வருஷம் கழித்து லீவுக்கு வந்தபோது,என் அக்காவை [[சொந்த சித்தப்பா மகள்]]எதேயச்சையாக பார்க்க நேர்ந்தது, அந்த கல்யாணவீடே அழுகையாக மாறிப்போச்சு...எங்க அக்கா என்னை கட்டிபிடித்து அழுதது அப்படி...! நாம மறந்தாலும் அக்காக்கள் நம்மை மறப்பதில்லை என்று அன்று உணர்ந்து கொண்டேன்...!

  ReplyDelete
  Replies
  1. எல்லோருடைய வாழ்க்கையிலும் அக்கா தனி இடம் பிடித்திருக்கிறார்கள்.

   Delete
 19. இந்த கதை என் சொந்த வாழ்வில் நடந்ததை போன்றே இருக்கின்றது.. அதிகமான ஆண்களுக்கு இப்படியான அக்காக்கள் இருந்திருக்கிறார்கள்போலும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மாம்ஸ் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

   Delete
 20. சூப்பர் நண்பரே.ஏதோஒரு வருடல் நெஞ்சத்தைக்கிள்ளி சென்றதுபோல!மிகவும் ரசித்தேன்.நானும் செல்விதான்..அதனாலோ என்னவோ,மீண்டும் மீண்டும் படித்தேன்.எனக்கும் இப்படி ஒரு நாலஞ்சு தம்பிகள் உண்டு.

  ReplyDelete
 21. யதார்த்தமான வரிகள் !நெருடும் நினைவுகள் ! நன்றி நண்பரே

  ReplyDelete
 22. நெகிழ்ச்சியான கதை...வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. யதார்த்தமான வரிகள்

  ReplyDelete
 24. நான் எழுத வேண்டும் என்று நினைத்த கதையை நீங்கள் எழுதிவிட்டீர்கள்கள். அருமை ...மனதை நெகிழச்செய்தது.

  ReplyDelete
 25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

  வலைச்சர தள இணைப்பு : வெள்ளியின் விடியல்கள்

  ReplyDelete
 26. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!