Friday, October 1, 2010

இத பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல

நேற்றைக்கு இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டேன், திருப்பூரின் நெருக்கடியான டிராபிக், தற்பொழுது ரோட்டை அகலப்படுத்தியதாலும், ரோட்டின் நடுவே செண்டர் மீடியன் வைத்திருந்ததாலும் சிறிதளவு குறைந்துள்ளது. சரி சீக்கிரம் வீட்டிற்கு போகலாம் என நினைத்திருந்த என் நினைப்பில் சரியாக மண் அள்ளிப் போட்டது பல்லடம் ரோட்டில் காண்ப்பட்ட டிராபிக், வெகு நேரம் காத்திருந்தும் டிராபிக் சரியாகவில்லை, சரி என்ன ஆயிற்றோ நமக்கு ஒன்றும் இது புதுசு இல்லையே என்று காத்திருந்தேன்.  முக்கால் மணி நேரத்திற்கு மேல் மெதுவாக ஊர்ந்து சென்று பார்த்தால். ”சை” என்றாகி விட்டது. பின்ன என்னங்க, ஒரு பஸ் டிரைவர், டூ விலரில் போகும் ஒருவரை சைடில் ஒதுக்கி விட்டாராம். ( சைடில் ஒதுக்குவது என்றால், டூ வீலரில் போதும் ஒருவரை இடிப்பதை போல பஸ்ஸை ஓட்டி அவரை தார் ரோட்டில் இருந்து கீழே இறங்குமாறு நிலை குலைய வைப்பது ) பொறுத்து பொறுத்து பார்த்த அந்த டூவீலர் ஓட்டுனர், பஸ்ஸை மறித்து தகறாறு செய்து கொண்டு இருந்தார். செந்தமிழ் வார்த்தையால அர்ச்சனை வேறு, டிரைவரும் பதிலுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார். எங்க ஊர்ல டிராபிக் போலீஸ் எல்லாம் மாசக் கடைசில கேஸ் புடிக்கவோ இல்லைன்னா மாமூல் வாங்கறதுக்கு மட்டும்தான் வருவாங்க, இதுக்கு எல்லாம் வர மாட்டாங்க, டிராவிக் போலீசும் கம்மிதான், சரி வழக்கம் போல நாமலும் வேடிக்கை பார்த்துட்டு கிடைச்ச கேப்புல புகுந்து வந்துட்டேங்க.

இதுல என்ன விஷயம்னு கேட்குறீங்களா, இது விஷயம் இல்லைங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடி இது மாதிரியே ஒன்னு நடந்ததுங்க.

இதே மாதிரி நான் காலையில வேலைக்கு கிளம்பி வந்துட்டு இருந்தேன். திருப்பூருக்கு கொஞ்சம் முன்னாடி T.K.T MILL னு ஒரு ஸ்டாப் இருக்கு, அங்க ஒரு பஸ் கண்ணாடி உடைஞ்சு நின்னுகிட்டு இருந்தது, பஸ் டிரைவர் கைல பெரிய காயம், கை நல்லா வீங்கி இருந்தது, நாலஞ்சு பொம்பளங்க கையிலயும், மூஞ்சிலயும் காயம், பஸ்ல வந்தவங்க எல்லாம் கூட்டமா நின்னுகிட்டு வேற பஸ்சுக்காக் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, எங்க எந்த பிரச்சனைன்னாலும் வேடிக்கை பார்க்குறதுதான் அகில உலக வழக்கமாச்சே, சரி நாமலும் போய் பார்ப்போம்னு போய் என்னங்க நடந்ததுன்னு கேட்டேங்க.



என்ன நடந்துருக்குதுன்னா, அந்த பஸ் டிரைவர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு பஸ் ஒட்டிட்டு வந்திருக்காரு, அவருக்கு மனசில என்ன பிரச்சனையோ உடுமலையில இருந்து எந்த வண்டிக்கும் வ்ழி விடாம, போற, வ்ர்ற டூ வீலர் காரங்களை எல்லாம் ஒதுக்கி விட்டுட்டே வந்திருக்கார்ரு, அதுல ஒரு டூ வீலர் காரரு, பொறுக்க முடியாமல் நடு ரோட்டில் பஸ்ஸ நிறுத்தி தகறாறு பண்ணி இருக்காரு, நம்ம டிரைவரும் சளைக்காம சண்டை போட்டு இருக்காரு, உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது, நான் கவர்மெண்ட் டிரைவரு, முடிஞ்சா எதாவது பண்ணி பாருன்னு சவால் விட்டு இருக்காரு. 
அந்த டூ வீலர்காரரும், பண்ணிகாட்ரண்டான்னு, வேகமா கிளப்பி திருப்பூர் வந்து, அவரோட பிரண்ட் ஒருத்தரையும் கூட்டிக்கிட்டு, தலைல ஆளுக்கொரு ஹெல்மட்ட மாட்டிட்டு, கைல ஒரு பெரிய கல்லை எடுத்துக்கிட்டு பஸ்சுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காங்க, சரியா நம்ம டிரைவரு அந்த பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ நிறுத்தும் போது கல்லை தூக்கி கண்ணாடி மேல போட்டுட்டு டூவீலர் காரங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாகிட்டாங்க.அதனாலதான் பஸ் டிரைவருக்கும் பயணிகளுக்கும் அடி பட்டு காயத்தோட நிக்கிறாங்க. 

இதுல யார நாம தப்பு சொல்றது, தப்பு இரண்டு பேர் மேலயும் இருக்குன்னாலும், அந்த பசங்கள தப்பு செய்ய தூண்டி விட காரணமா இருந்தது யாரு? அந்த பஸ் டிரைவர்தான? அது என்னங்க கவர்மெண்ட் டிரைவர்னா அவ்வெளவு பெரிய ஆளுங்களா? நான் எல்லா டிரைவரை பத்தியும் சொல்லலிங்க, ஒன்னு ரெண்டு பேர் இப்படித்தான் இருக்குறாங்க, இதுவே பஸ் ஓடிட்டு இருக்கும் போது கல்லை வீசி இருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும், டிரைவரு கண்ட்ரோல் உட்டு எத்தனையோ உயிர்பலி ஆகி இருக்கும்ல?
டாக்டர்களுக்கு அப்புறம், மனுசங்க உயிரை காப்பாத்துற தொழில்ல இருக்குறவங்க டிரைவருங்க தான். உங்கள நம்பித்தான் எத்தனையோ பேரு வீட்டுல அப்பா,அம்மா, பொண்டாட்டி புள்ளங்களை விட்டுட்டு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்குறாங்க.

அதனால எல்லா டிரைவர்களையும் பார்த்து நிதானமா எல்லாருக்கும் வழி விட்டு ஓட்டுங்கன்னு கேட்டுக்குறேங்க, அரசாங்க வேலை வேண்ணா நிரந்தரமா இருக்கலாம், ஆனா எந்த மனித உயிரும் நிரந்தரம் இல்லைங்க.

No comments:

Post a Comment

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!