Wednesday, October 13, 2010

உங்களோட சிபில் கிரெடிட் ரிப்போர்ட் வாங்குவது எப்படி ?
CIBIL CREDIT REPORT - பத்தி ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம், தெரியாதவங்களுக்காக இந்த பதிவு.

நம்ம ஆளுங்க நிறைய பேரு வண்டி லோன், வீட்டு லோன், பர்சனல் லோனுன்னு வாங்கி இருப்போம். எல்லாரும் கரக்டா டியூ கட்டிட்டு வருவாங்க, ஆனா சில பேரு ஒழுங்கா கட்டமாட்டாங்க, டியூ டேட்ல பணம் இருக்காது, பேங்க்காரங்க செக் போட்டா பவுன்ஸ் ஆகும், இ.சி.எஸ் ஆ இருந்தா பேங்க்ல பேலன்ஸ் இருக்காது, இப்படியே பண்ணிட்டு இருப்பாங்க, ஆனா இப்படி பண்ணிட்டு இருக்கறவங்க அடுத்த தடவை ஏதாவது லோனு,கீனு வாங்கனும்னு நினைச்சாங்க கண்டிப்பா கிடைக்காது. இப்படிபட்டவங்களை கண்டுபுடிக்கறதுக்குன்னே கவர்மெண்ட் சிபில் (CIBIL) அப்படின்னு ஒன்னு வச்சிருக்குங்க,
அவங்க என்ன பண்ணராங்கன்னா, ஒருத்தரோட வரவு செலவுக்கு தகுந்த மாதிரி மார்க்கு போடராங்க, ஒருத்தர் சரியா வரவு செலவு பாங்குல பண்ணிட்டு இருந்தார்னா அவருக்கு நிறைய மார்க்கு கிடைக்கும், மேல சொன்ன மாதிரி சரியா பணம் கட்டாம ஏமாத்திட்டு இருந்தோம்னா மார்க்க கம்மி பண்ணிடுவாங்க, நம்ம பேங்க காரங்க ஒருத்தரு லோன் வேணுன்னு அப்ளிகேசன் கொடுத்தாருன்னா இந்த சிபிலை பார்த்துதான் லோன் குடுக்கராங்க. இதுல என்ன பிரச்சனைனா சில பேரு லோன் ஒழுங்கா கட்டி முடிச்சிருப்பாங்க, ஏன் இன்ஸ்டால்மெண்டுக்கு முன்னாடியே கட்டி முடிச்சு கூட இருப்பாங்க, அப்படி இருந்தும் அவங்க அடுத்த லோனுக்கு அப்ளை பண்ணினாங்கன்னா, லோன் கிடைக்காது, ஏன்னா சிபில்ல நம்ம ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகி இருக்காது, ஆத்திர அவசரத்துக்கு லோன் கிடைக்காம அல்லல் பட வேண்டியதுதான். இதுல நாம சிபிலை பத்தியும் குறை சொல்ல முடியாது, நம்ம நாட்டுல கோடிக்கணக்கான பேரு லோன் வாங்கி, திருப்பி கட்டிட்டு இருப்பாங்க, இதுல நம்ம ஸ்டேட்டஸ் எப்ப அப்டேட் ஆகுறது? ஆனாலும் நாம நம்மளோட சிபில் கிரேடிட் ரிப்போர்ட்ட ஈசியா வாங்க முடியும். அது எப்படின்னா,

சிபில் வெப்சைட் ல CIR Reqest Form னு ஒன்னு இருக்குதுங்க, அத பிரிண்ட் அவுட் எடுத்து அதுல உங்கள பத்தின விவரம் எல்லாம் எழுதணும்க, அப்புறம் உங்க ID PROOF ( PAN CARD / PASS PORT / VOTER ID ) ஒண்ணும், ADDRESS PROOF (BANK STATEMENT / EB BILL / TELEPHONE BILL )  ஜெராக்ஸ் எடுத்து அதுல உங்க கையெழுத்த போட்டுடுங்க, கூடவே ஒரு 142 ரூபாய்க்கு டிடி Credit Information Bureau (India) Limited, payable at Mumbai கற பேர்ல எடுங்க, இது மூணயும் ஒன்னா பின் அடிச்சு, தபால்ல இல்ல ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பனும்னா 

Credit Information Bureau (India) Limited, 
P.O. Box 17, Millennium Business Park, Navi Mumbai- 400 710.
இந்த முகவரிக்கு அனுப்புங்க, 


இல்ல கூரியர்லயோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்லயோ அனுப்புனம்னா

Consumer Relations, 
Credit Information Bureau (India) Limited, 
Hoechst House, 6th Floor, 193, Backbay Reclamation, Nariman Point, Mumbai 400 021.  
இந்த முகவரிக்கு அனுப்புங்க,

CIR FORM PDF (இந்த PDF பைல பயன்படுத்திக்கோங்க)

இந்த CIR Request Form  அ ஆன்லைன்ல கூட பில்லப் பண்ணலாம், டிடிக்கு பதிலா நெட் பேங்கிங் வசதி மூலமாவும் பணம் செலுத்தலாம், ஆனா அதுக்கப்புறம் அத பிரிண்ட் அவுட் எடுத்து மேல சொன்ன மாதிரி போஸ்ட் பண்ணித்தான் ஆகணும். என்னால முடிஞ்ச அளவுக்கு தமிழ்ல சொல்லிட்டேன், இதுக்கு மேல வேற ஏதாவது தகவல் வேணும்னா மேல குடுத்திருக்கர லிங்க்ல போய் தெரிஞ்சுக்கோங்க.

வண்டிக்கு எப்படி NOC வாங்கி வச்சுக்கறமோ, அதே மாதிரி லோன் வாங்கினவங்க இந்த ரிப்போர்ட்டயும் வாங்கி வச்சிக்கறது ரொம்ப நல்லது, நம்மள பத்தின கிரேடிட் ரிப்போர்ட் கையில இருந்தா எந்த பேங்கலயும் நம்ம அவசர தேவைக்கு தைரியமா போய் நிக்கலாம், அவங்கலும் அதை இதை சொல்லி நம்ம அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ண முடியாது பாருங்க.

வாங்கின லோனுக்கு மேலேயே வட்டி கட்டிட்டு இருக்குறோம், ஒரு 142 ரூபாய் செலவு செஞ்சி இத வாங்க முடியாதா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. 

7 comments:

 1. நல்ல உபயோகரமான பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ரம்மி said...
  நல்ல உபயோகரமான பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!

  மீண்டும் உங்களுடைய வருகைக்கு நன்றி ரம்மி சார்.

  ReplyDelete
 3. நண்பரே அணைவருக்கும் சேர வேண்டிய விசயங்கள். பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

  ReplyDelete
 4. ஜோதிஜி said...
  நண்பரே அணைவருக்கும் சேர வேண்டிய விசயங்கள். பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

  நன்றி நண்பரே

  ReplyDelete
 5. பலருக்கும் பயன்பெறக்கூடிய அருமையான பதிவு. நன்றாகவும் எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 6. நொந்தகுமாரன் said...

  நன்றி நொந்தகுமாரன் சார்

  ReplyDelete
 7. SIR, AMOUNT CHANGED ,THIS TIME 470 RS

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!