Monday, October 18, 2010

அன்புள்ள பதிவுலக வாசக அன்பர்களுக்கு...

எல்லாரும் தமிழ் படம் பார்த்திருப்பீங்க, அதுல ஒரு டயலாக் வரும், அந்த சின்ன பையன் அவங்க பாட்டிகிட்ட போய், பாட்டி, நான் பொறந்து 10 வருஷம் ஆகுது, ஆனா எனக்கு இன்னும் 10 வயசுதான் ஆகுது, நான் எப்போ பெரிசாயி தப்ப தட்டி கேட்கறதுன்னு சொல்லுவான், அதுமாதிரிதாங்க, நான் பதிவுலகத்துக்கு வந்து இரண்டு மாசம் ஆகுது, இன்னும் 10 பாலோயர் கூட வாங்க முடியல, சத்தியமா எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியாமத்தான் எழுதிகிட்டு இருக்கேன், நான் சும்மானாச்சுக்கும் எழுதுன இந்த பதிவு இண்ட்லில 26 ஓட்டு வாங்கி முண்ணனில வந்துச்சு, ஆனா உருப்படியா எழுதலாம்னு நினைச்சு எழுதுன பதிவு எதுவுமே, 5 ஓட்டு கூட தாண்டல, நான் எப்ப பதிவு எழுதி போஸ்ட் பண்ணினாலும் ஒரு ஓட்டுதான் விழுது, அது கூட என் சொந்த ஓட்டுதான்.

இந்த ஒரு மாசத்துலயே நான் பயங்கரமா எழுதி பெரிய பதிவரா ஆக முடியாதுன்னு எனக்கு தெரியும், ஆனா ஒரு லட்சியத்தோட தான் நான் எழுதிகிட்டு இருக்கேன், அது என்னன்னா 2012 ல டிசம்பர் மாசம் உலகம் அழிய போதுதுன்னு சொல்றாங்க, அதுக்குள்ள ஒரு 2000 விசிட்டும், ஒரு 10 பாலோயரும் என் பிளாக்குக்கு வரணுன்னு ஆசப்படுறேன், அவனவன் 2011 ல் சிஎம் ஆகணுனும்னு கனவு கண்டுகிட்டு இருக்குறாங்க, நான் இதுக்கு ஆசப்படுறது தப்பா நீங்களே சொல்லுங்க, இந்த பதிவுலகத்தில நிறைய பேரு 5 லட்சம் ஹிட்ஸ்சு, 10 லட்சம் ஹிட்ஸ்சு வாங்கிட்டோம்னு சொல்றாங்க, சத்தியமா ஹிட்ஸ்சுன்னா என்னன்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது, எனக்கு தெரிஞ்ச ஒரே ஹிட்ஸ் திருப்பாச்சி படத்துல இளைய தளபதி வில்லனை கொல்ல யூஸ் பண்ணுவாரே, அந்த ஹிட்ஸ் மட்டும்தான், அது கூட ஆள கொல்ல யூஸ் பண்ணுரதுன்னுதான் முதல்ல நினைச்சேன், 

இதனால நான் உங்க எல்லாருகிட்டயும் பணிவுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், என்னோட பதிவுக்கு ஓட்டு போடுங்கன்னு உங்கள கேட்க மாட்டேன், ஏன்னா நீங்க ஓட்டு போட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், பின்னூட்டம் போடுங்கன்னும் கேட்க மாட்டேன், சத்தியமா இது நடக்காத விஷயம்னு எனக்கு நல்லாவே தெரியும், ஆனா இப்படியே போனா என்னோட லட்சியத்த நான் எப்படி நிறைவேத்தறது? அதனால உங்க எல்லாருகிட்டயும் கெஞ்சி ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கிறேன்,  நீங்க என்னோட பிளாக்க ஓப்பன் பண்ண நேர்ந்தால், படிச்சிட்டு, குளோஸ் பண்ணி, குளோஸ் பண்ணி மீண்டும் திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,  
இப்படி நீங்க பண்ணீங்கன்னா என்னோட விசிட் பக்கம் 2000 வர்றதுக்கு சான்ஸ் இருக்கு, அதே மாதிரி, எல்லாரும் சும்மா கிடைக்குற மெயில் ஐடி தானேன்னு ஒரு நாலஞ்சு வச்சிருந்தீங்கன்னா, அதுல நீங்க பயன்படுத்தாம இருக்குற ஏதோ ஒரு மெயில் ஐடியவாவது யூஸ் பண்ணி என்னோட பாலோயர் லிஸ்ட்டுல சேருமாறு கேட்டுக் கொள்கிறேன். எப்படியாவது என்னோட லட்சியத்தை நிறைவேத்திட்டீங்கன்னா, என்னோட தானை தலைவர், அகில உலக சூப்பர்ஸ்டார், திரு. சீனிவாசன் அவர்களோட லத்திகா படத்தின் பிரிவியூ ஷோ டிக்கெட்ட உங்களுக்கு வழங்குவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். லத்திகா படத்தை காண இங்கு கிளிக்கவும்.

(பின்குறிப்பு: சத்தியமா இது ஒரு சீரியஸ் பதிவு, சிரிப்பு பதிவு என்று நினைத்து கொண்டு என்னுடைய வேண்டுகோளை புறக்கணித்து விட வேண்டாம் என உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி)

6 comments:

 1. ஏன்னா நீங்க ஓட்டு போட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், பின்னூட்டம் போடுங்கன்னும் கேட்க மாட்டேன், சத்தியமா இது நடக்காத விஷயம்னு எனக்கு நல்லாவே தெரியும்,

  ..... இது ரெண்டையும் செய்வதை ஒரு கொள்கையாக வச்சுருக்கிறவங்க, நாங்க.... உங்களுக்கும் செய்ய மாட்டோமா? ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 2. ///(பின்குறிப்பு: சத்தியமா இது ஒரு சீரியஸ் பதிவு, சிரிப்பு பதிவு என்று நினைத்து கொண்டு என்னுடைய வேண்டுகோளை புறக்கணித்து விட வேண்டாம் என உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி)///

  ஹேய்... நான் 8 வது follower ஆயிட்டன்
  இன்ட்லிலயும் ஓட்டு போட்டுட்டன்..

  ரொம்ப சீரியஸ் ஆகிடாதிங்க பின்ன டொக்டருகிட்ட போக வேண்டியிருக்கும்

  ReplyDelete
 3. அன்புள்ள இரவு வானம் அவர்களே...

  ஏற்கனவே லத்திகா பற்றிய உங்களது முந்தய பதிவை படித்து நான் பின்னூட்டம் இட்டிருந்தேன்... உங்களுக்கு நல்ல creative sense இருக்கிறது... எழுத்து நடையும் நன்றாகவே இருக்கிறது... But அதையும் தாண்டி நீங்கள் ஓட்டுக்களும் பின்னூட்டங்களும் பெற விரும்பினால் அதற்கு வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது... பதிவுலகத்திற்கு என்று சில முறைகள் இருக்கின்றன... நீங்கள் பின்னூட்டம் பெற விரும்பினால் மாற்றவர்களின் பதிவுகளுக்கு சென்று பின்னோட்டம் இட வேண்டும்... அது எவ்வளவு மொக்கையான பதிவாக இருந்தாலும் வெட்கமே இல்லாமல் "nice...", "super..." என்றெல்லாம் பின்னூட்டங்கள் போட வேண்டும்... இதேபோல மற்றவர்களின் பதிவுகளுக்கு சென்று ஓட்டு போட வேண்டும்... ஓட்டு போட்டால் மட்டும் போதாது... நீங்கள் ஓட்டு போட்ட தகவலை மறைமுகமாக பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்... உங்களது profile பக்கத்தை கண்டேன்... இதுவரை பத்து வலைப்பூக்களை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறீர்கள்... இப்படி இருந்தால் உங்களது பாலோயர் எண்ணிக்கை எப்படி உயரும்...குறைந்தது 100 வலைப்பூக்களையாவது பின்தொடர்ந்தால் தான் ஒரு 40 பேராவது உங்களது வலைப்பூவை பின்தொடர்வார்கள்... திரட்டிகளில் இணைக்கும்போது பதிவுக்கு பொருத்தமான அதே சமயம் கவர்ச்சிகரமான keywords உபயோகப்படுத்தினால் Hit Counts அதிகரிக்கும்... என்ன நான் சொன்னதெல்லாம் புரிகிறதா...

  ReplyDelete
 4. ரொம்ப நன்றி சித்ரா மேடம், நான் இவ்வளவு சீரியஸ்ஸா எழுதியும், சிரிக்கறீங்களே அத நினைச்சாதான் கவலையா இருக்கு.

  ReplyDelete
 5. Farhath said...
  மிகவும் நன்றி பர்கத், நான் ஆல்ரெடி ஆஸ்பத்திரியில இருந்துதான் இந்த பதிவையே போட்டேன்.

  ReplyDelete
 6. philosophy prabhakaran said...

  அன்புள்ள பிரபாகரன் சார், உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, நானும் நீங்கள் கூறியவாறு எல்லாம் செய்ய முயற்சி செய்கிறேன், நானும் நீங்கள் கூறியவாறு மற்றவர்களின் பிளாக்குகளின் இணையவும், வோட்டு போடவும் முயற்சி செய்துள்ளேன், ஆனால் என்னுடைய Open ID பெரும்பாலும் வேலை செய்வது இல்லை, இது ஏன் இப்படி நடக்கிறது என புரிய மாட்டேன் என்கிறது, Open ID இல்லாமல் வேறு மெயில் ஐடி யில் இருந்து பாலோயர் ஆகவும் விருப்பம் இல்லை, எனவேதான் என்னுடைய பாலோயர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, இதை எப்படி சரி செய்வது என தெரிவியுங்கள்? நன்றி.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!