Saturday, October 30, 2010

ஸ்டேட் பாங்கின் GEOSANSAR - KIOSK வங்கிச் சேவை




பாரத ஸ்டேட் வங்கியானது, தனது வங்கி சேவையில் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதுவரை வங்கியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமானால், முகவரி சான்று, அடையாள அட்டை போன்றவை தேவையாக உள்ளது, ஆனால் இந்த புதிய முறையின் மூலம், இது போன்ற எந்த சான்றும் தேவை இல்லை, வெறும் கைரேகை மட்டுமே போதுமானது. கை மற்றும் கைரேகை உள்ள எந்த மனிதனும் ஜியோசன்சார் மூலம் வங்கி சேவையை பெறலாம்.
இந்த முறையில் வங்கி கணக்கினை தொடங்க எந்த பணமும் கட்ட தேவையில்லை, குறைந்த பட்ச பணம் எதுவும் வைக்கத்தேவை இல்லை, இதற்காக நாடு முழுவதும் ஜியோசன்சார் கிளைகளை ஸ்டேட் பாங்க் திறந்துள்ளது, பெரிய பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்ய இத்திட்டம் பெரிதும் உதவும் என ந்ம்பப்படுகிறது, வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முகவரி சான்று, அடையாள அட்டை போன்றவை சொந்த ஊர்களில் இருப்பதால் அவர்கள் வங்கி கணக்கிணை எளிதாக தொடங்க முடிவதில்லை, அவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.



ஜியோசன்சார் மூலம் வங்கி கணக்கிணை தொடங்குபவர்களுக்கு ATM கார்டு கிடையாது, அதற்கு பதிலாக ஒரு அடையாள அட்டை வழங்கப் படுகிறது, உங்களின் கைரேகை பதிவினை வைத்தால் மட்டுமே, உங்களின் அக்கவுண்ட் செயல்படும். இந்த அக்கவுண்ட் மூலம், 30 ரூபாய் முதல் எத்த்கைய AMOUNT ஐயும் சேமிக்க முடியும், தமழகத்திலேயே முதன்முறையாக திருப்பூரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, திருப்பூரில் 6 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன, சென்னையில் 2 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.உங்களின் இருப்பு தொகையினை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஸ்டேட் பாங்கின் எந்த கிளைக்கும் பணத்திணை டிரான்ஸ்பர் செய்ய முடியும், இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்திற்கு, மற்ற கணக்குகளை போன்றே வட்டியும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள குறை என்னவென்று பார்த்தால், மற்ற வங்கி கணக்குகளை போன்று பாஸ் புக், செக்புக், செக் லீப் போன்றவை வழங்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு அன்றும் செயல்படுகிறது, விரைவில் நாடு முழுவதும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட போகின்றது என எண்ணுகின்றேன்.

( டிஸ்கி: ஆபிஸ்ல ஆணி புடுங்குறது கொஞ்சம் அதிகமா இருந்ததால பதிவு போட முடியல, இப்ப ஆணி எல்லாம் புடுங்கி முடிச்சாச்சு, என்ன பதிவு போடறதுன்னு தெரியல, அதனால இந்த சீரியஸ் பதிவு, ஆனாலும் உங்களுக்கு சிரிக்கறதுக்காக இந்த விளம்பரத்தை பாருங்க, இதுவும் ஆபிஸ் பத்தினதுதான், அதுலயும் ஆபிஸ்ஸரு ஒரு காரணம் சொல்லுவாரு பாருங்க, அட, அட, அட.)



3 comments:

  1. You have lot of pop=-up windows, which does not allow to comment easily. Check your blog site.

    ReplyDelete
  2. சரி செய்து விட்டேன், நன்றி சித்ரா மேடம்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!