Saturday, October 9, 2010

எந்திரன் - ஒரு ரஜினி ரசிகனா இருந்துட்டு...


நீங்க சன் டிவி பார்ப்பவரா? எந்திரன் டிரைலர் ஒரு பத்து தடவை பார்த்திருப்பீங்களா? நீங்க பிளாக் படிப்பவரா? இதுவரைக்கும் ஒரு 10 விமர்சனம் படிச்சிருப்பீங்களா? அதுக்கும் மேல நீங்க ரஜினி ரசிகரா? ஷங்கர் படம்னா எதாவது வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறவரா? ஆமான்னா உங்களுக்கு சீக்கிரமே எந்திரன் படம் பார்க்கணும்னு தோணுமே? அப்படித்தான் எனக்கும் தோணுச்சு, 

நேத்தைக்கு படம் பார்த்த பிறகு என்ன சொல்றதுன்னே தெரியல, கண்டிப்பா மேல நான் சொன்ன மாதிரி ஆளா நீங்க இருந்தீங்கண்ணா கண்டிப்பா திருப்தியா இருக்காது, ஷங்கருக்கு ரஜினி மேல என்ன கோபமோ தெரியல, ஒரு புதுமுகம் ரேஞ்சுக்கு பயன்படுத்தி இருக்காரு, கண்டிப்பா ரஜினி படத்த பார்த்து பழகுனவங்களுக்கு இது பிடிக்காது,  ஆனாலும் மனுசன் சின்னப்புள்ள தனமா நடிச்சிருக்காரு, ஷங்கருக்கு இது கனவு படமாம், நம்பவே முடியல, சத்தியமா அவரு நினைச்சு இருந்தது இந்த அளவா இருக்க முடியாது, ஏதோ கலாநிதி மாறன்கிட்ட சொன்ன பட்ஜெட் தாண்டி போக கூடாதுன்னு நினைச்சு எடுத்த மாதிரி இருக்கு, அது ரோபோ தீயில போய் காப்பாத்தற காட்சியிலேயே நல்லா தெரியுது. ஷங்கர் படத்துல குறைஞ்ச பட்சம் பாட்டு சீனாவது நல்லா கலர்புல்லா இருக்கும், நம்ம படத்துல புல்லா செட்டா போட்டு தள்ளிட்டாரு, அதாவது நல்லா போட்ருந்தா பரவாயில்லை, பாய்ஸ் படத்துல வர்ற செட்டாவது நல்லா இருக்கும், கலாநிதி கலைக்கு என்ன நிதி குடுத்தாருன்னே தெரியலயே, அரிமா அரிமா பாட்டு செட்டெல்லாம், ஏதோ சங்கீத மகா யுத்தம் செட் மாதிரியே இருக்கு. 


எந்திரன் கதையெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும், படம் கொஞ்ச ஸ்லோவா இருக்குங்கறத ஒத்துக்கணும், ஆனாலும் தமிழ்ல இந்த மாதிரி படம் வந்ததில்லை, கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்தான், தலைவர் ரொம்ப கஷ்ட்டப்பட்டு நடிச்சிருக்காரு, ஷங்கர் நினச்ச மாதிரியே படம் வரனும்னு நினைச்சு நடிச்சிருக்காரு,  ஆனாலும் ரஜினி ரசிகர்களையும் கொஞ்சம் மனசில நினைச்சு இருக்கலாம். வில்லன் ரோபோ ரஜினிதான் காப்பாத்துது, ஐஸ்வர்யா ராயையும் குறை சொல்ல முடியாது, நல்லாவே நடிச்சிருக்காங்க, கவர்ச்சியும் காட்டி இருக்காங்க, வயசானாலும் நல்லாதான் இருக்குறாங்க, அவங்கல பார்க்கும் போது, அபிசேக் பச்சன நினைச்சாத்தான் கவலையா இருக்கு.


நான் எதிர்பார்த்தத விட ஒன்னு கண்டிப்பா இருந்துச்சு, அது மியூசிக், சத்தியா நல்லா இருக்குங்க, இதவிட யாராலயும் நல்லா மியூசிக் போட்டிருக்க முடியாதுங்க, ரஹ்மான் மியூசிக்க பொறுத்த வரைக்கும் படத்துல ஹிட் ஆன பாட்டோட மியூசிக்கையே படத்துக்கும் பயன்படுத்துவாறு, முன்பே வா, அன்பே வா பாட்டோட மியூசிக்க படம் புல்லா பயன்படுத்தி இருப்பாரு, அதே மாதிரி இதுல அரிமா, அரிமா பாட்ட பயன்படுத்தி இருக்காரு. மத்தபடி டெக்னிக்கல் விஷயங்கள் எதுவும் என்க்கு தெரியாது, அத பத்தி எல்லாம் மற்ற பதிவர்கள் நிறைய எழுதி இருக்காங்க, இது எல்லாமே எனக்கு தோனினது மட்டும்தான். 

சத்தியமா ஷங்கர் நினைச்ச மாதிரி வந்திருக்காதுன்னுதான் நினைக்கிறேன், அவருக்கும் ஏமாற்றமாத்தான் இருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாத்தான் இருக்கும். இது எல்லாமே ரஜினி ரசிகர்களுக்கும், ஷங்கர் ரசிகர்களுக்கும் மட்டுமே, மற்றபடி வேற எல்லாருக்கும் இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும், பாட்டு, காமெடி, சண்டை எல்லாமே நல்ல எண்டர்டெயின்மெண்ட் தான். 

எந்திரன் கண்டிப்பா பார்க்கலாம் - உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் - ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும்.

4 comments:

  1. என்னங்க எல்லாரும் எந்திரனைப் பற்றி எழுதுறாங்கனா நீங்களும??? உங்களோட அறிவுக்கும் திறமைக்கும் இதையெல்லாம் நீங்க எழுதலாமா? தமிழ்நாடு தாங்காதுங்க. உங்ககிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன். நல்லா ஃபீல் பண்ணி எழுதுங்க.

    ReplyDelete
  2. எப்படியோ ஒரு நல்ல படம் பார்த்துவிட்டோம் ..

    ReplyDelete
  3. என்ன பண்ணரதுங்க டிங்டாங், உங்க அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது, அப்படியே என்ன எதிர்பாக்குறீங்கங்கறதயும் சொல்லிட்டீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.

    ReplyDelete
  4. புதிய மனிதா.. said...
    எப்படியோ ஒரு நல்ல படம் பார்த்துவிட்டோம் .

    அது என்னவோ வாஸ்தவம்தாங்க.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!