Saturday, October 23, 2010

அன்பினை வெளிப்படுத்துவோம்


     
அன்புள்ளம் கொண்டவர்களே, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள், இந்த பூமியானது இறைவனின் வீடு, இங்குள்ள நம் அனைவருக்கும், தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என நம்மையும், நம் நலனையும் கருத்தில் கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உள்ளது, ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளினால், எந்தவித ஆதரவோ, கரிசனமோ, ஒரு வேளை உணவோ கூட கிடைக்காமல், அனதைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களாகவும், எண்ணற்ற பேர்கள் நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விரவி காணப்படுகிறார்கள், ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும், உடுத்த சரியான உடை கிடைக்காமலும், அவதிப்படுவோர்கள் ஏராளம் பேர்கள் இங்கு உண்டு, அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் வயிறார உண்ணும் ஒரு தினம் உண்டெனில், அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாகும்.


  

நாம் அனைவரும் வருகின்ற தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர் கொள்ள இருக்கிறோம், இத்தருணத்தில் அவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையில் ஒரு சிறு தொகையினை உதவி செய்வதன் மூலம் அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே, நம்மில் எண்ணற்றவர்கள் போனஸ் தொகையினை கருத்தில் கொண்டு தங்களின் நீண்ட கால கனவினை நிறைவேற்றும் எண்ணம் கொண்டிருக்கலாம், எனவே தனிப்பட்ட முறையில் கொடுக்க முடியவில்லை என்றாலும், நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சக தோழர்களுடன் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் உங்களாலும் ஒரு தொகையினை புரட்ட முடியும்.  உங்கள் ஒவ்வொருவரின் உதவியாலும், ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும், இது போன்ற காப்பகங்கள் அனைத்து ஊர்களிலும் உள்ளன. 



சிந்தியுங்கள், செயல்படுங்கள், மனநிறைவோடு தீபாவளி பண்டிகையிணை கொண்டாடுங்கள் - அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி. 

[நம் பதிவுலகில் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து இம்முயற்சியினை மேற்கொண்டால், கேபிள் சங்கர் எழுதிய இந்த சிறுமியின் மருத்துவ செலவுக்கு ஒரளவாவது உதவ முடியும், இதற்கு நான் தயாராக இருக்கிறேன், மேலும் இதுபோன்ற முயற்சியினை மேற்கொள்ள தயாராக உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், அல்லது pldmsuri@gmail.com என்ற முகவரிக்கு மெயிலவும், நாம் இணைந்து நம்மால் முடிந்ததை செய்யலாம், நான் சென்ற வருடம் என் நிறுவனத்தின் நண்பர்களிடம் வசூலித்த் தொகையினை உடல் ஊனமுற்றவர்கள் பள்ளிக்கு வழங்கி இருந்தேன், அப்போது குறைவாக 5000 மட்டுமே வசூலானது. இதுபோன்ற குறைந்த தொகையினை கொண்டு மருத்துவ உதவி செய்வது சாத்தியமாகாது. எனவேதான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்]  

6 comments:

  1. நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் களவாணி படத்துல விளையாட்டுப் போட்டி நடத்த பணம் வசூல் செய்து தண்ணி அடிப்பது போட அந்த சிறுமியை காரணமா வச்சு யாரும் சுட்டாம நல்லது செய்தா போதும். எல்லாரும் ஒரு நம்பிக்கையிலதான் தர்றாங்க. நானும் அதே நம்பிக்கையில் உங்ககூட இணைந்து செயல்பட தயார்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி
    கரம் கோர்ப்போம் வாருங்கள் நண்பர்களே

    ReplyDelete
  3. sineham said...

    உங்களின் சினேகத்திற்கு நன்றி

    ReplyDelete
  4. dineshkumar said...

    நன்றி தினேஷ்குமார் சார்

    ReplyDelete
  5. நண்பரே வணக்கம் ,
    வாழ்த்துக்கள் .இப்படி பட்ட பதிவுகள் அவசியம் தேவை.அகன்ற சிந்தனையுடன் செயல்படுவோம்
    நட்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  6. நன்றி சக்தி, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!