Tuesday, November 9, 2010

தீபாவளி முடிஞ்சிருச்சு ஆனா ?

எல்லாருக்கும் வணக்கங்க, தீபாவளி எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா, நம்ம பதிவுலகத்தில தொடர் பதிவு ஒன்னு அடிக்கடி ஆரம்பிப்பாங்க, அப்படியே இந்த தீபாவளிய எப்படி கொண்டாடுனீங்க அப்படின்னு ஒரு தொடர் பதிவ ஆரம்பியிங்க, யாரு யாரு என்னென்ன டகால்டி வேலை எல்லாம் பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.



நான் தீபாவளி அன்னைக்கு என்ன பண்ணுனேன்னா, காலையில ஒரு பத்து மணி இருக்கும், சரி தீபாவளி அன்னைக்கு திருப்பூரே காலியா இருக்கும், அந்த ரோட்டுல ஒரு ரவுண்ட் வரலாம்னு பைக்க எடுத்த்துட்டு கிளம்புனேங்க, ஊரே வெறிச்சோடி கிடந்ததுங்க, என்னடா கொடுமையா இருக்கு, ஒரு பயலையும் காணலையேன்னு பாலைவனம் மாதிரி இருந்த ஊருக்குள்ள சுத்தி சுத்தி வந்தேங்க, அப்படி வரும்போது பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி ஒரு காட்டன் மில் இருக்குதுங்க, பேரெல்லாம் வேண்டாங்க, அந்த மில்லு எப்ப பாத்தாலும் மூடியே வச்சிருப்பாங்க, வேலை நடக்கரதே வெளிய தெரியாது, அப்படி சைலண்டா இருக்கும், அந்த மில்லு கேட் தொறந்து கிடந்ததுங்க, இது என்னடா என்னைக்கும் இல்லாம கேட்டு திறந்து கிடக்குதேன்னு கேட்டு முன்னாடி பார்த்தா ஒரு 20 பொண்ணுங்க புது டிரஸ் எல்லாம் போட்டு பட்டாசு வெடிச்சுகிட்டு இருந்தாஙக, ங்கொய்யால இத்த்னை பிகருங்கள இத்தனை நாளா எப்படி பார்க்காம மிஸ் பண்ணிட்டோம்னு மண்டை காய்ஞ்சி போய் பக்கத்துல இருந்த டீ கடையில போய் உட்காந்துகிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேங்க, அப்பத்தான் உறைச்சது, அந்த பொண்ணுங்க எல்லாம் சுமங்கலி ஸ்கீம் பொண்ணுங்கன்னு.






சுமங்கலி ஸ்கீம்னா வெளியூர்ல இருந்து ஏழை பொண்ணுங்கள கூட்டிகிட்டு வந்து இது மாதிரி மில்லுல வேலைக்கு வெச்சுக்குவாங்க, அவங்களுக்கு சம்பளம் எதுவும் கிடையாது, 3 வருஷம் 5 வருஷம்னு காண்ட்ராக்ட் போட்டு வேலை வாங்கி சக்கையா புழுஞ்சு எடுத்துருவாங்க, அவங்க காண்ட்ராக்ட் முடிஞ்சதும் 50000 அல்லது 5 பவுன் அப்படின்னு கொடுத்து அனுப்பி வச்சிருவாங்க, இப்படி வேலைக்கு வர பொண்ணுங்களுக்கு வேலை நேரம், சரியான சம்பளம்னு எதுவுமே கிடையாது, ஒரு நாளைக்கு எத்த்னை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்குவாங்க, அவங்க எல்லாருமே FORCED LABOUR தான், ஜெயில் வாழ்க்கைக்கும், இவங்க வாழ்க்கைக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது, மில்லு கேட்ட தாண்டி கூட இவங்க வெளில வரமுடியாது. அதுவும் நான் பார்த்த பொண்ணுங்கள்ள பாதி பேருக்கு 13 வயசுதான் இருக்கும், இதுவும் குழந்தை தொழிலாளர் முறைதான்.சரி மில்லு முதலாளி இருக்குற வசதிக்கு எந்த அதிகாரியும் வந்து ஒன்னும் புடுங்க முடியாது.



[ இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க ]

அடப்பாவமேன்னு பார்த்துகிட்டு இருக்கும் போது, பின்னாடி பார்த்தா 10 அடி தள்ளி இன்னொரு 20 பொண்ணுங்க பட்டாசு கைல வெச்சிகிட்டு நிக்கிறாங்க, இவங்க வெடிச்சு முடிச்சதும் அடுத்த குரூப் வந்து வெடிக்கனுமாம், மாடில பார்த்தா அடுத்தடுத்ததா நிறைய பொண்ணுங்க காத்துகிட்டு இருக்காங்க, இதுல நம்ம டீக்கடைக்காரரு பெருமையா வேற சொல்ராரு, மில்லு முதலாளி வருச வருஷம் தீபாவளிக்கு இந்த பொண்ணுங்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுக்கராராம். 

அட லூசு பயலுகளா, பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுக்குரதுக்கு பதிலா அந்த காசுக்கு வேனோ லாரியோ வாடகைக்கு புடிச்சு அந்த பொண்ணுங்கள அவங்க அவங்க ஊருக்கு அனுப்பி அவங்க குடும்பத்தோட தீபாவளி கொண்டாட வச்சிங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க இல்லை, எப்படியும் 3 வருஷத்துக்கு வெளிய உட போறது இல்லை, ஒரு நாள் தானே இப்படி பண்ணலாம் இல்லையா, காலையில வீட்டில விட்டுட்டு சாயங்காலம் கூட்டிட்டு வந்தரலாம்.

என்னதான் முதலாளிகளா இருந்தாலும், நீங்களும் இந்த மண்ணுலதான் பொறந்திருக்கீங்க, இந்த மண்ணுலதான் வாழறீங்க, இந்த மண்ணுலதான் சாகவும் போறீங்க, அப்படித்தான் எல்லாருமே, அந்த பொண்ணுங்க வயசில உங்க வீட்டிலயும் குழந்தைங்க இருக்கலாம், அதனால அடுத்த வருஷமாவது கொஞ்சம் சிந்திச்சு செயல்படுங்க. சைட் அடிக்க போனாலும் எப்படி நம்ம சமுதாய பார்வை. அப்புறம் கோவையில 2 குழந்தைங்கள கொன்னவன என்கவுண்டர் பண்ணிட்டாங்கலாம், ஐம் வெரி ஹாப்பிங்க, நான் மட்டும் முதலமைச்சரா இருந்திருந்தேன்னா அவன அன்னைக்கே சில்லி புரோட்டா போட்டு 4 பக்கிகளுக்கு பார்சல் பண்ணி கொடுத்திருப்பேன், எனிவே லேட்டானாலும் லேட்டஸ்டாதான் என்கவுண்டர் பண்ணி இருக்காங்க, GOD IS DOUBLE GREAT.  

6 comments:

  1. மக்களோட வறுமையை இந்த மாதிரி முதலாளிங்க எப்படியெல்லாம் யூஸ் பண்ணிக்கறாங்க..

    "சுமங்கலி ஸ்கீம்" பத்தி இதுவரை எனக்குத் தெரியாது.. இப்படி எல்லாம் கொடுமைப்படுத்தறானுங்களா..

    தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. பதிவுலகில் பாபு said...

    உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாபு சார்.

    ReplyDelete
  3. என்ன கொடுமைங்க இது.. எப்படி எல்லாம் கொத்தடிமை ஆக்கறாங்க...

    ReplyDelete
  4. பிரியமுடன் ரமேஷ் said...

    நம்ம நாட்டுல என்னதான் நடக்கல சொல்லுங்க, ஏழையா பொறந்தாலே பிரச்சனைதான், உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரமேஷ் சார்.

    ReplyDelete
  5. ஏழைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டே போகிறார்களே!

    ReplyDelete
  6. Chitra said...

    உண்மைதான் மேடம், நன்றி உங்கள் கருத்துக்கு.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!