Monday, November 15, 2010

மைனாவ பத்தின என்னோட பார்வை



மைனா பத்தி சொல்லனும்னா சான்ஸ்ஸே இல்லைங்க, என்ன சொல்றதுன்னே தெரியல, படம் பார்த்து முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் மைனா நெனப்பாவே இருக்குங்க, அந்தளவுக்கு சூப்பரா இருக்குங்க, என்ன நடிப்பு, என்ன பெர்பாமென்ஸ், சத்தியமா சொல்றேங்க, மைனா மாதிரி நடிக்கரதுக்கு இங்க வேற யாருமே இல்லைங்க, அந்த பொண்ணோட கண்ணு இருக்கே, யப்பா என்ன கண்ணுடா சாமி. நேர்ல நின்னு அந்த கண்ண பார்த்தா எவனா இருந்தாலும் கண்டிப்பா லவ் பண்ண ஆரம்பிச்சிருவான். ஆயிரம் டயலாக் பேச வேண்டிய இடத்துல அந்த பொண்ணோட கண்ணே பேசிருதுங்க, இந்த படத்த பத்தி நான் சொல்லனும்னு அவசியம் இல்லை, பதிவுலகில எல்லாரும் துவைச்சி காய போட்டு அயர்னும் பண்ணிட்டாங்க, படத்துல எல்லாரும் நல்லா நடிச்சி இருந்தாலும், எல்லார விடவும் இந்த பொண்ணுதான் ரொம்ப இயல்பா நடிச்சி இருந்த்து, மத்த எல்லாரும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான் பண்ணிட்டு இருந்தாங்க, டைரக்டர் சாலமன் சார், தீபாவளி அன்னிக்கு எல்லா டிவியிலயும் வந்து உட்காந்துட்டு ஓவரா சலம்பல் பண்ணிட்டு இருந்தாரு, அவரோட கஷ்டம் அவருக்கு.எண்ண பண்ரதுங்க ஒரே படத்த பத்தி ஒரே மாதிரி டயலாக்க எல்லா டிவிலயும் திரும்ப திரும்ப பார்த்தா போரடிக்கத்தான செய்யும்?



படத்துல எனக்கு புடிச்ச சீன் : சின்ன வயசில இருந்தே தினமும் பார்த்துட்டு இருக்கர மைனா வயசுக்கு வந்த்தும் 10 நாளைக்கு அவள பார்க்க கூடாதுன்னு சுருளி கிட்ட சொல்லிருவாங்க, அவரு டெய்லி வந்து வித விதமாய் டிரை பண்ணுவாரு பார்க்கரதுக்கு, ஆனா பார்க்க முடியாது, 10 நாள் முடிஞ்சதும் சடங்கு எல்லாம் முடிஞ்சு எல்லாரும் போனதும் சுருளிய பார்த்து சின்னதா கண் அடிச்சு ஒரு முத்தம் கொடுக்கும் பாருங்க, செமையான சீன் அது, அதுக்கு சுருளி கொடுக்குற ரியாக்‌ஷனும், அத தொடர்ந்து வர்ற மைனா, மைனா பாட்டும் செம பீலிங்கா இருக்கும்.



அதே மாதிரி, வீட்டுல சண்டை போட்டுட்டு, சுருளி ஜெயிலுக்கு போயிருவான்னு தெரிஞ்சும், அவன் ஜெயிலுக்கு திரும்பி போகும் போது, இரண்டு நாள்ல வெளில வந்துருவான், சேர்ந்து வாழலாம்னு நினைச்சு சந்தோசமா இருக்கும் போது, மூணாறுல சாப்பிட உட்காரும் போது, ஜெயில் அதிகாரியா வர்ரவரு, தலை தீபாவளிக்கு போக முடியாத கோபத்துல, உன்ன கஞ்சா கேசுல போட்டு வெளிய வரமுடியாம செஞ்சிருவேன், உன்ன நம்பி வந்த இவள் நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைக்கிறேன் பார்னு கத்தும் போது, நம்ம வாழ்க்கை முடிஞ்சு போச்சோன்னு இயலாமையில அழுகற நடிப்பு, ஒரு தேர்ந்த நடிகையாலதான் முடியும், புதுமுக நடிகை இந்தளவு நடிச்சிருக்காங்கண்ணா உண்மையிலேயே பாராட்டனுங்க, கிளைமேக்ஸ்ல வில்லனுங்க அடிச்சு கொல்லும் போது வலில கத்தக்கூட முடியாம வாயில எச்சில் தெரிக்க, கண்ணுல வலியோட, பேச முடியாம காலை புடிச்சு கெஞ்ச டிரை பண்ணி செத்து போவாங்க, அந்த சீன்ல யாரா இருந்தாலும் பீல் பண்ணாம இருக்க முடியாது.



என்னடா படத்த பத்தி ஒன்னும் சொல்லாம திரும்ப திரும்ப கதாநாயகி பத்தியே சொல்லிட்டு இருக்குறேன்னு நினைச்சீங்கண்ணா பதிவோட தலைப்ப திரும்ப ஒருதடவை படிச்சிருங்க, இருந்தாலும் இப்படி ஒரு உணர்வு பூர்வமான படத்த கொடுத்ததுக்கு பிரபு சாலமனுக்கு நன்றி, ஒவ்வொரு ப்ரேமும் காட்டுக்குள்ள நாமளே இருக்கர மாதிரி 3D எபக்ட்ல ஒளிப்பதிவு பிரமாதமா இருக்கு, வாடா படம் பார்த்துட்டு இமான நான் இசை எமன்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அவரோட திறமையை இந்த படத்துல காட்டிட்டாரு, கொஞ்ச நாள் கமர்ஷியல் டைரக்டருகிட்ட சிக்காம இருந்தார்னா பொழச்சிக்குவாரு.



இந்த அமலா பொண்ணுக்கு ஏதாவது ஒரு நல்ல விருதா பார்த்து கொடுத்தாங்கன்ணா நல்லா இருக்கும், அவங்களுக்கும் நல்லா நடிக்கணும்னு ஊக்குவிப்பா இருக்கும், அதுக்காக தேசிய விருது கொடுத்துட போராங்க, அப்புறம் பிரியாமணி மாதிரி ரூட்டு மாரிரும், இதே மாதிரிதான் கொஞ்ச நாள் முன்னாடி அங்காடித்தெரு படம் பார்த்துட்டு பீல் பண்ணி அஞ்சலி பொண்ணு என்னமா நடிச்சி இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன், நம்ம பிரண்டு ஒருத்தரு இதுக்கு மேலே போய் ஆர்குட்ல அஞ்சலி பேன்ஸ் கிளப் எல்லாம் ஆரம்பிச்சு இருக்காரு, கொஞ்ச நாள் முன்னாடி மகாராஜான்னு ஒரு படத்தோட ஸ்டில் பார்த்தா அஞ்சலி, சிங்கிள் (பீஸ்) எலியா நின்னுட்டு இருக்கு,

நாம இந்த படத்துல இப்படி நடிச்சிருக்கே, அடுத்த படத்துல எப்படி நடிச்சிருக்கும்னு நினைச்சா, இந்த டைரக்டருங்கோ, இந்த படத்துல இப்படி நடிச்சிருக்கே, அடுத்த படத்துல குட்டை பாவாடை போட்டா எப்படி இருக்குன்னு நினைக்கிராங்கோ, கேட்டா ரசிகர்கள் விரும்புராங்கன்னு டயலாக் வேற, ஒரு வேளை நல்லா நடிச்சா அடுத்த படத்துல சான்ஸ் தரமாட்டாங்களோ? மைனா அப்படின்னதும் எனக்கு வேற ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, அத பத்தி ஒரு தனி பதிவு போடலமான்னு ஒரு ஐடியா இருக்கு.

                    


மொத்தத்துல மைனா - மனதில் (எல்லாம் இந்த சன் டிவியால வந்தது)

2 comments:

  1. நீங்களும் என்னை மாதிரி அனாகா (அமலா பால்) ரசிகர் மன்றத்துல சேர்ந்துட்டீங்க போல...

    ReplyDelete
  2. philosophy prabhakaran said...

    நான் தலைவராவே ஆகரதுன்னு முடிவு பண்ணிட்டேன் பிரபாகர்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!