Monday, November 29, 2010

இவனுங்க தொல்லை தாங்க முடியல



எனக்கும் பஸ்சுக்கும் ஏழரை பொறுத்தம் போல இருக்கு, எப்பப் பார்த்தாலும் நான் பஸ்ஸில போகும் போதெல்லாம் ஒரு பிரச்சனைய சந்திக்க வேண்டி இருக்குது, 
பஸ் ரூட்டுக்கு எல்லாம் யாருங்க டைமிங் ஒதுக்கறது, அந்தாளு சரியா தான் ஒவ்வொரு பஸ்சுக்கும் டைமிங் கொடுக்கராரா? ஒன்னுமே புரிய மாட்டேங்குது, இப்படித்தான் நேத்தைக்கு அவசரா கோயம்புத்தூர் போகணும்னு திருப்பூர் பஸ் ஸ்டாண்டுல பஸ் ஏறுனா அந்த பஸ்சுக்கு முன்னாடி வந்து இன்னொரு பஸ்ஸ குறுக்க நிறுத்தி எடுக்க மாட்டேங்குராறு இன்னொரு பஸ் டிரைவர், இவனுங்க பிரச்சனையில வேற எந்த பஸ்சுமே பஸ் ஸ்டாண்ட விட்டு வெளியே போக முடியல, பயங்கரமான டிராபிக் ஜாம், 




இதுல அதிகமா இந்த பிரச்ச்னை பண்ணுரவங்க தனியார் பஸ்சுக்காரங்கதான், எங்க ஊருல ஒரு தனியார் பஸ்சு கம்பெனி இருக்கு, திருப்பூருல இருந்து சுத்தி இருக்குர அத்தனை ஊருக்கும் இவங்க பஸ் ரூட்டு வாங்கி வச்சிருக்காங்க, அரை மணி நேரத்திக்கு ஒரு பஸ்சு இங்கிருந்து கிளம்பும் அதே சமயம் அடுத்த் ஊருல இருந்து இங்க ஒரு பஸ்சு கிளம்பும் அந்தளவுக்கு நிறைய பஸ்சு வச்சிருக்காங்க, அந்த பஸ்சு கம்பெனிக்காரங்க பண்ணுரதுதான் இந்த டைமிங் பிரச்சனை, அவனுங்க யாரோட டைமிங்ல வேணாலும் பஸ்சு ஓட்டுவாங்க, ஆனா அவங்க டைமிங்ல யாராவது ஒரு நிமிஷம் குறுக்க வந்தாலும் அடிக்க போயிடுவானுங்க, அந்தளவு அடாவடித்தனம் பண்ணுராங்க, இவனுங்க பஸ்சு ஓட்டுரதும் சாதாரணமா கிடையாது ஒண்ணரை மணி நேரம் போக வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரத்தில போயிடுவானுங்க, சும்மா பேய் வேகத்துல ஓட்டுவாங்க, குறுக்க யாராவது வந்த அடுத்த அஞ்சு நிமிசத்துல அவங்களும் பேயாகிர வேண்டியதுதான், எங்க ஊருல யாராவது வண்டி ஒட்டினா சைடு மிரருல இவங்க வண்டிய பார்த்தா அவ்வளவுதான் இந்த வண்டியான்னு ரோட்ட விட்டே ஒதுங்கிறுவாங்க, அந்தளவு பயம், அது எனக்கு மட்டுமில்ல மத்த பஸ்சுகாரங்களுக்கும் இருக்குங்கறது நேத்துதான் உரைச்சது,




 மத்த பஸ்சு கம்பெனி முதலாளிகெல்லாம் டிரைவரு வேலைக்கு ஆள் எடுக்கும் போது அனுவம், திறமை, விபத்து எதுவும் நடக்காத டிரைவரா வேலைக்கு எடுப்பாங்க, ஆனா இவங்க கம்பெனில இதுக்கு முன்னாடி எத்தனை பேர கொன்னிருக்க, எத்தனை ஆக்சிடென்ட் பண்ணி இருக்கன்னு கேட்டுதான் ஆள் எடுப்பாங்கன்னு எனக்கு தெரிஞ்ச டிரைவர் ஒருத்தர் சொல்லி இருக்காரு, அது ஓரளவுக்கு உண்மைதான் எனக்கு தெரிஞ்ச வரையில் இதுவரைக்கும் ஒரு அஞ்சாறு தடவை அந்த பஸ்சு போலீஸ் ஸ்டேசன்ல நின்னு பாத்து இருக்கேன், போன நியூ இயர் அன்னைக்கு நான் திருப்பூர் போயிட்டு திரும்பி வீட்டுக்கு போயிட்டு இருந்தேன், அப்ப 15 வயசு இருக்கற டூ வீலர்ல போயிட்டு இருந்த இரண்டு பசங்கள இந்த பஸ்சு அடிச்சி தூக்கிருச்சு, அவங்க உயிரோட இருப்பாங்கன்னு யாரும் நினைக்கவும் இல்லை, ஆம்புலன்சுக்கு கூப்பிடவும் இல்லை, ஏன்னா இந்த பஸ்சு அடிச்சிருச்சா சத்தியமா சாவுதாண்டான்னு எல்லாருக்கும் தெரியும்,



ரொம்ப நாள் முன்னாடி தினமலர்ல ஒரு போட்டோ பார்த்தேன், முன்னாடி எல்லாம் கோவையில இரண்டடி இருக்கர மாதிரி டிவைடர் வச்சிருப்பாங்க, இந்த பஸ்சுக்காரன் சிக்னல்ல நிக்க பொறுமை இல்லாம அந்த டிவைடர் மேலயே பஸ்ஸ ஓட்டி ராங் ரூட்டில பஸ் ஓட்டிட்டு போரான், இவங்கள என்னதான் சொல்ரது? இத்தனைக்கும் இந்த பஸ்சு கம்பெனி முதலாளி ஒரு பொம்பளைங்க, ஒரு தடவை நான் இந்த பஸ்சுல போகும் போது இப்படித்தான் டைமிங் பிரச்சனை, வேற ஒரு தனியார் பஸ்ஸோட டைமிங்ல இவரு ஒட்டிட்டு வந்துட்டாரு, அந்த டிரைவர் வயசானவரு அவரும் கஷ்ட்டப்பட்டு ஓவர்டேக் எடுத்து நம்மாள குறுக்க நிறுத்தி ஏய்யா இப்படி என்னோட டைமிங்ல பஸ்ஸ ஓட்டரேன்னு கேட்டதுக்கு இவரு பேசுன வார்த்தை இருக்கே, முன்னாடி உக்காந்து இருந்த பொண்ணுங்க எல்லாம் பின்னாடி ஓடிப்போயிட்டாங்க, அந்தளவு நாராசமா பேசிட்டாரு, அந்த வயசான் டிரைவரும் இந்த பஸ்சில போகுர யாரும் உயிரோட போய் சேரமாட்டீங்கடான்னு சாபம் விட்டாரு, எனக்கு மனசு கஷ்ட்டமா போயிருச்சு,

ஏன் நாம எல்லாரும் இவ்வளவு சுயநலமா இருக்கோம்? தப்புன்னு எல்லாருக்கும் தெரியுது, ஆனா யாருக்கும் தட்டி கேட்க பயமா இருக்கு, நாலு பேரு ஒன்னா சேர்ந்த தைரியமா கேட்கலான்னா அந்த நாலு பேரு யாருன்னு எப்படி கண்டு பிடிக்கரது? எனக்கும் அந்த தைரியம் வரமாட்டேங்குது, இந்த பிரச்ச்னை மட்டும் இல்ல, பஸ்சுல டிக்கட்ட அதிக விலைக்கு விக்கிறது, பாக்கி சில்லறை கொடுக்காம ஏமாத்தறது, அதிக தூரம் உள்ள இடங்களுக்கு போறவங்கள மட்டும் உக்கார சொல்றது, அவங்க மட்டுமா காசு தராங்க?மத்தவங்க எல்லாம் ஓசியிலயா பஸ்சுல வராங்க? இப்படி பல யோசனைகள் வருது,   எனக்கு என்ன, எனக்கு என்னன்னு போயிட்டே இருந்தா இதுக்கு எப்பத்தான் தீர்வு கிடைக்கும்?  சரி அவங்க அவங்களுக்கு வர்ர வரைக்கும் எல்லாமே வேடிக்கைதான் இந்த உலகத்துல, ஏதோ எழுதணும்னு தோணுச்சு அதான் எழுதிட்டேன்.

( பதிவுக்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படங்கள் உதவி - நன்றி Google )

12 comments:

  1. பதிவில் உங்கள் ஆதங்கங்கள் - பொருமல்கள் ... படங்களோ மனதை பதற வைக்கின்றன.... இப்படி படங்கள் போடும் போது, கொஞ்சம் வார்னிங் கொடுங்க.... please!

    ReplyDelete
  2. Chitra said...

    ஒ.கே சித்ரா மேடம், இனிமேல் சரி பண்ணிக்கிறேன், உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இந்த மாதிரியெல்லாம் செய்யறதை என்ன பண்ணுறது?

    ReplyDelete
  4. எஸ்.கே said...

    அதுதான் எனக்கும் தெரியல சார், உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. ரொம்ப கொடுமை... அந்த விபத்து புகைப்படம் கண்களை கலங்க வைத்துவிட்டது...

    ReplyDelete
  6. philosophy prabhakaran said...

    வாங்க பிரபாகரன்,அந்த படம் கூகிள்ல இருந்து எடுத்தது, உங்க கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. பயணமும் எண்ணங்களும் said...

    கொடுமைதான் என்ன செய்வது? இங்கு எல்லாத்தையும் சகித்து வாழ பழகி விட்டோம், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  8. நாலு பேருக்கு நல்லது செய்யிருதுன்னா எதுவுமே தப்பில்லை
    நீங்கள் தைரியமாக அந்த பஸ் கம்பெனி பேரைத் தெரிவிக்கலாம்
    அல்லது போட்டோ போடலாம் குறைந்தபட்சம் இதை படிக்கிறவங்க
    நாலு பேராவது அந்த பஸ்ல போகாம
    வேற பஸ்க்கு போகலமில்லையா

    ReplyDelete
  9. Velu said...

    நீங்க சொன்னது உண்மைதான் நண்பா, நான் பெயரை குறிப்பிடாததற்கு காரணம் அவர்களின் செல்வாக்கு மட்டுமில்லை, திருப்பூரில் வசிக்கும் பஸ்ஸில் செல்லும் அனைவருக்குமே தெரியும் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்ற ந்ம்பிக்கைதான் காரணம், இத்தனை நாட்கள் கழித்து நீங்கள் இந்த இடுகையை வாசித்து பின்னூட்டம் இட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, நன்றிகள் சார்.

    ReplyDelete
  10. ரெம்ப கொடுமை நண்பா . எங்க ஊர்லயும் இந்த மாதிரி கொடுமை நடக்குது .பொதுவாவே இந்த
    பிரைவேட் பஸ் எப்பவுமே ரூல்ஸ் பாலோவ் பண்றதில்லை . நீங்க சொல்லறத பார்த்தா அவிங்க வலுவான கட்சி சப்போர்ட் உள்ளவீங்கலாட்டாம் தெரியுதே .என்னத்து பண்றது

    " survival of the fittest "

    ReplyDelete
  11. நா.மணிவண்ணன் said...

    ஒன்னுமே பண்ண முடியாது நண்பா எல்லாத்தையுமே சகித்து வாழ பழகி விட்டோம், அப்படியேதான் இருக்க வேண்டும் போல, நமது குமுறல்களை இப்படி பதிவின் மூலம்தான் வெளிப்படுத்த முடியும் :-(

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!