Wednesday, November 10, 2010

வ - குவாட்டர்ஜி கட்டிங்ஜி




நீங்க தமிழ்படம் பார்த்தீங்களா, படம் புடிச்சி இருந்ததா? சிவா படம்னா காமடியா இருக்கும்னு நினைக்கிறீங்களா, ஓரம்போ படம் பார்த்திருக்கீங்களா, அந்த படம் டைரக்ட் பண்ண டைரக்டர் படம்னா எதாவது வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறீங்களா, அத விட முக்கியமா தியேட்டர்ல படம் ஓடிட்டு இருக்கும் போது தூங்கற பழக்கம் உங்களுக்கு இருக்கா, அப்படின்னா இதோ உங்களுக்கான படம் வ- குவாட்டர் கட்டிங்.


                     ( குவாட்டர் கிடைக்காம மண்டை காஞ்சி போற சீன் இது )

கட்டிங் அடிச்சிட்டு போய் படம் பார்த்தீங்கன்னா படம் பார்த்த மாதிரியே இருக்காது, குவாட்டர் அடிச்சிட்டு போய் பார்த்தீங்கன்னா நல்லா தூங்கலாம். படத்தோட திரைக்கதை என்னன்னா ( கதை எல்லாம் ஒன்னுமில்லை ) சிவா சவூதி போறதுக்காக பிளைட் புடிக்க சாயந்தரமா சென்னை வர்றாரு, அடுத்த நாள் காலையில 4 மணிக்கு பிளைட், அப்பத்தான் தெரியுது சவூதியில தண்ணி அடிக்க முடியாதுன்னு, அதனால கடைசியா ஒரு குவாட்டர் அடிக்கலாமுன்னு ஆசைபடுராரு, அவரோட ஆசை நிறைவேருச்சாங்கறதுதான் திரைக்கதை.


                               ( இது கொஞ்சம் காமெடியா இருக்கும் )

படத்தோட ஆரம்பத்துல ஒவ்வொரு கேரக்டரா காட்டும் போது கதை மாதிரி ஒன்னு சொல்வாங்க ரொம்ப நல்லா இருந்த்து, சரி படம் சரி காமெடியா இருக்கும் போலன்னு நினைச்சா அது ரொம்ப தப்பு, சிவாவும், சரணும் மலையாளப் படம் மாதிரி படம் பூரா பேசிக்கிட்டே இருக்காங்க, அவங்க காமெடியாதான் பேசறாங்க, நமக்குதான் ஒன்னும் புரிய மாட்டேங்குது, அந்தளவு ரொம்ப ஸ்பீடா பேசராங்க, ஒருவேளை இருக்குற திரைக்கதையாவது ஸ்பீடா இருக்கணும்னு நினைச்சி இருப்பாங்க போல.


                                     ( இவரு வர்ர சீன் எல்லாம் படு மொக்கை)


                                           ( இது அதவிட மொக்கை சீன் )

படம் பூரா ஓடிக்கிட்டே இருக்குராங்க, கண்டிப்பா சரண் ஒல்லியாகி இருப்பாரு, படத்தோட தூணே சரண் தான், எனக்கு ரொம்ப புடிச்ச சீன்னா சிவா, அரசியல்வாதிகிட்ட குவாட்டர் வாங்குறதுக்காக, கண்டிப்பா ஓட்டு போடுறேன்னு பைபிள், குரான், கீதை எல்லாத்துலயும் அவசர அவசரமா சத்தியம் பண்ணிட்டு உள்ளே போய் பார்த்தா செம கூட்டமா இருக்கும், கஷ்ட்டப்பட்டு, அத்த்னை பேரு மேலேயும் ஏறி நீச்சல் அடிச்சிட்டு போய் குவாட்டர் பாட்டிலை தொடும் போது போலீஸ் வந்து அடிச்சு தொரத்தி விட்டுருவாங்க.


                                   ( இந்த பாட்டு ஒன்னுதாங்க நல்லா இருக்குது )



                                             ( சிவா டான்ஸ் சூப்பருங்கோ )

ஷார்ப்பு ஷார்ப்புஜின்னு ஒரு பாட்டு சூப்பரா இருக்குங்க, சிவா வோட டான்ஸ் செம காமெடியா இருக்கும், இதுலயும் பர்ஸ்ட் பாட்டு ஒன்னுக்கு டான்ஸ் ஆடி இருக்காரு, நல்லா இருக்குது, கண்டிப்பா பாருங்க, படம் மொக்கை படமா இருந்தாலும், எனக்கு புடிச்சி இருந்தது, கண்டிப்பா கொஞ்ச பேருக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்.


                              
                                        ( கிளைமேக்ஸ் - சிங்கம் சீட்டாடற சீன் )

மொத்தத்துல வ - குவாட்டர் கட்டிங் - தண்ணி கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்திட்டாங்க.

12 comments:

  1. நல்லாயிருக்கு விமர்சனம். ஆனா நிறைய பேருக்கு படம் பிடிக்கலை!

    ReplyDelete
  2. THOPPITHOPPI said...

    என்னஜி பண்ரது, நாம படம் பாக்கும் போதுதான எழுத முடியும், உங்க கருத்துக்கு நன்றி ஜி

    ReplyDelete
  3. எஸ்.கே said...

    நன்றி ஜி

    ReplyDelete
  4. மொத்தத்துல வ - குவாட்டர் கட்டிங் - தண்ணி கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்திட்டாங்க.


    .....அதான், அந்த போட்டோவுல குடை பிடிச்சு இருக்காங்க போல... ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  5. நல்ல வேளை படம் பார்க்கின்ர பழக்கமே எனக்கு இல்லை.

    ReplyDelete
  6. // தண்ணி கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்திட்டாங்க //
    தண்ணி மட்டும்தான் ஊத்தியிருக்காங்கன்னு நினைக்கிறேன்... நம்ம விமர்சனத்தையும் கொஞ்சம் வந்து படிங்க...

    http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_08.html

    ReplyDelete
  7. Chitra said...

    நீங்க வேற சித்ரா மேடம், மொத்த படத்தையுமே தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க.

    ReplyDelete
  8. ஸாதிகா said...

    தப்பிச்சிட்டீங்க, இல்லைன்னா குவாட்டர் அடிக்காம தூங்க முடியாது, சாரி சும்மா சொன்னேன், கருத்துக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  9. philosophy prabhakaran said...

    எப்படிங்க உங்களால இவ்வளவு விளக்கமா எழுத முடியுது? நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  10. வா குவாட்டர் கட்டிங்கை வச்சு சிவா நடிச்ச 'தமிழ்ப்படம்' மாதிரி இன்னொரு படமே எடுக்கலாமென்கிறாங்களே, உண்மையா? :-)

    ReplyDelete
  11. எப்பூடி.. said...

    பாஸ் அந்தளவுக்கு நமக்கு உலக நாலேட்ஞ் கம்மி, உங்க கருத்துக்கு நன்றி சார்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!