அதே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, முறுக்கு மீசை, அரிவாள், கத்தி, ஏய்ய்ய்ய்ன்னு சத்தம் போட்டு பேசுற ஹீரோ, வில்லன், பெரிய குடும்பம், டாடா சுமோ, சபாரி, அதே கதை, ஒரே கதைதான், டாடா சுமோ போகுற பாதையும், கதை நடக்கற இடமும், படமும் மட்டும்தான் வேற வேற
சிவகங்கை மாவட்டத்துல நல்ல ரவுடி ராஜ்கிரண், அவரோட சிபாரிசுல 50,000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கிறாரு கெட்ட ரவுடி பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் நல்ல ரவுடியாச்சே அதனால பிரகாஷ்ராஜ சம்பாதிக்க விட மாட்டேங்குறாரு, கடுப்பான செல்லம், ராஜ்கிரணோட மகன் தனுஷ போட்டு தள்ள டிரை பண்ணுறாரு
ஊருல இருந்தா நடக்கற பஞ்சாயத்துல எல்லாம் கரச்சலை கொடுக்கறாருன்னு தனுஷ திருச்சிக்கு அனுப்பி வச்சிருக்காரு ராஜ்கிரண், தனுஷ் திருச்சில வந்த வேலைய பார்க்காம அவரோட சொந்த வேலையா தமன்னாவுக்கு ரூட்டு விட்டுகிட்டு இருக்காரு அம்மணி அதெல்லாம் முடியாதுன்னு தனுஷுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காங்க, அப்படியே இருக்கும் போது, பிரகாஷ்ராஜோட ஆளுங்க போட்டு தள்ள வாராங்க
வழக்கம் போல கொல்ல வந்த ஆளுங்களையெல்லாம் சுள்ளான் சுளுக்கு எடுக்கறாரு, மகன கொல்ல பாத்தது எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜூதான்னு ராஜ்கிரணுக்கு தெரிஞ்சு போகுது, என்னைக்கு செல்லம் சிவகங்கைல கால் எடுத்து வக்கிதோ அன்னைக்கு சங்குதான்னு ராஜ்கிரண் தொடைதட்டி சவால் விடுறாரு
இந்த மேட்டர தெரிஞ்சுக்கற செல்லம் ஸ்ட்ரெயிட்டா ஹெலிகாப்டர புடிச்சிட்டு வந்து அண்ணன் ராஜ்கிரண் வீட்டு முன்னாடியே இறங்கி, ஒரு மாசத்துல உன்னை போட்டு தள்ளுறேன்னு சவால் விடுறாரு, நம்ம ராஜ்கிரண் சாரும் முன்ன போட்ட சபதத்தை மறந்துட்டு தேமேன்னு நிக்குறாரு, பொறுக்காம பையனும் உடனே கிளம்பி எம்.எல்.ஏ வீட்டுக்கு போய் பதிலுக்கு சவால் விடுறாரு, ஒரு மாசத்துல நான் உன் தலைய எடுக்கறேன்னு
இதுல யாரு சவால் ஜெயிச்சது? தமன்னா தனுசுக்கு ஓகே ஆனாங்களா இல்லையாங்கறத தியேட்டர்லயோ இல்லைன்னா இந்திய தொல்லைக்காட்சிகளில் முதன்முறையாகவோ பாருங்க மகா ஜனங்களே, நானும் அப்படித்தான் பார்த்தேன்
அரைச்ச மாவையே அரைச்சாலும் டேஸ்ட்ட மெயிண்டெயின் பண்ணுறதுல இயக்குனர் ஹரி உண்மையிலேயே கெட்டிக்காரர்தான், இல்லைன்னா இன்னுமா நம்மள ஊரு நம்புதுன்னு அவருக்கே தோணியிருக்கும், ஆனா தோணலை அந்தளவுக்கு திரைக்கதைய பரபரப்பா கொண்டு போயிருக்காரு, இன்னும் ஒரு முப்பது படம் இந்த கதைய வச்சே ஒப்பேத்துவாருன்னு எதிர்பார்க்கலாம், ஹாட்ஸ் ஆஃப் ஹரி சார்
அப்புறம் தனுஷ், தேசிய விருது பெற்ற பிறகு அந்த விருதுக்கே சவால் விடும் அளவுக்கு இந்த படத்துல நடிச்சிருக்காரு, வழக்கமான ஹரி பட ஹீரோக்கள் பேசுற பத்தடி லென்த் டயலாக்க கடகடன்னு ஓப்பிக்கற வேலைய இவரும் சரியா செஞ்சிருக்காரு, அப்புறம் தனுஷ் சண்டை போடுறதே ஒத்த சொல்லால பாட்டுக்கு டான்ஸ் ஆடுர மாதிரிதான் இருக்கு, அனேகமா இதுக்கும் ஒரு தேசியவிருது கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன், அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தனுஷ்
தமன்னா தனுசுக்கு டஃப் காம்படீசன் கொடுக்குராங்க, நடிப்புலயான்னு கேட்குரீங்களா? ஹரி படத்துல நடிப்புக்கு என்னங்க வேலை? அதெல்லாம் இல்லைங்க தனுஷ் அளவுக்கு அவங்களும் ஒல்லியா இருக்குறாங்க, அவங்க மலையாளத்துல பேசற அந்த காதல் சீன்கள் ரொம்பவே அழகு
காதல் காட்சிகள் மட்டும் சொல்லிக்கற மாதிரி இருக்கு, ரசனையோடு எடுத்திருக்காரு, குறிப்பா செல்வத்துள் செல்வம் திருக்குறள் சீன், முதல்முறையா பாவாடை தாவணில நடிக்கிறேன்னு சந்தோசமா பேட்டியெல்லாம் கொடுத்துட்டு இருந்தவங்கள பாட்டு சீன்ல கவர்ச்சியா நடிக்க வச்சு அவங்க நினைப்புல மண்ணள்ளி போட்டுட்டாங்க
பிரகாஷ்ராஜ் இதே மாதிரி நடிக்கர முப்பத்தஞ்சாவது படம் இதுன்னு நினைக்கிறேன், என்ன செல்லம் செல்லம்னு சொல்லுறதுக்கு பதிலா எருமை எருமைன்னு அடிக்கடி சொல்லுறாரு, மோனிகா ஞாபகம் வந்துருச்சோ என்னமோ, மத்தபடி செல்லம் கரெக்டா சொன்ன வேலைய செஞ்சிருக்காரு, அந்த கள்ள நோட்டு காமெடி சீன் செம, படத்துல சிரிக்க வச்ச ஒரே காமெடி அதுதான்
கஞ்சா கருப்பு சார், காமெடின்னு பண்ணுனதெல்லாம் ஒரே காமநெடிதான், சத்தியமா சிரிப்பு வரலை வெறுப்புதான் வருது, குடும்ப படம்னு வேற சொல்லுறாங்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில என்ன சொல்ல போற பாட்டு மட்டும் என்னமோ சொல்ல வைக்குது, பிண்ணனி இசையில DSP யும் ஹரி மாதிரியேதான், பேக் கிரவுண்டுல சிங்கம் சிங்கம்னு கத்துனதுக்கு பதிலா வேங்கை வேங்கைன்னு கத்துது, வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
மொத்தத்தில் வேங்கை – காட்சிகள் ஒன்று, களம் மட்டும் வேறு
ஓடவிட்டு சுடப்பட்ட வேங்கை ஹிஹி...இதைத்தானே சொல்லவறீங்க மாப்ள!
ReplyDeleteஆக! நீங்களும் பாத்துட்டீங்க! எஸ் ஆகிட்டம்ல! :-)
ReplyDeleteஉங்களுக்கும் தமன்னா பிடிக்காதா பாஸ்?
ReplyDelete///அரைச்ச மாவையே அரைச்சாலும்//சுருங்க கூறின், படம் இதுதான் ...
ReplyDeleteஐயய்யோ மறுபடியும் ஒரு "சண்டை கோழி' கதையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ReplyDelete@ விக்கியுலகம்
ReplyDeleteஏறக்குறைய அப்படித்தான் மாம்ஸ் :-)
@ ஜீ...
ReplyDeleteஅய்யோ ஒரு ஆள் தப்பிச்சிட்டாரே
@ செங்கோவி
ReplyDeleteயாருங்க சொன்னது? அதெல்லாம் புடிக்கும்
@ கந்தசாமி.
ReplyDeleteஒரு வரில சொல்லிட்டீங்களே பாஸ்
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஎப்பவும் ஒரே கதைதான் மனோ சார்
@ வழித்தகவல்
ReplyDeleteஇணைத்து விடலாம் நண்பரே
அருமையான விமர்சனம்
ReplyDeleteகஞ்சா கருப்புக்கு பதில் வேறு ஒருவரை போட்டிருக்கலாம்.
ReplyDelete