Tuesday, July 5, 2011

இரவுவானம் பெயர்காரணம் - தொடர்பதிவு




இந்த பிளாக் ஓசில கிடைச்சதுங்க, இதுவரைக்கும் இந்த பிளாக்குக்காக வாடகையோ, போக்கியமோ எதுவும் கொடுக்கலைங்க, அவ்வளவு ஏன் இந்த பிளாக் என்னுதுதாங்கறதுக்கு ஒரு எவிடென்ஸ்சோ ஒரு டாக்குமெண்ட்டே கூட இல்லைங்க, கூகிள்காரன் காசு கேட்காத வரைக்குமோ இல்லை யாராவது என்னோட பிளாக்க ஹேக் பண்ணாத வரைக்கும் நாந்தாங்க இந்த பிளாக்குக்கு ஓனரு

இந்த பாழாபோன பிளாக்க நான் ஏன் ஆரம்பிச்சேன், ஏன் இந்த பேர வெச்சேன்னு பெயர்க்காரணம் அப்படின்னு ஒரு தொடர்பதிவு எழுத சொல்லி நம்ம செங்கோவி ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூப்பிட்டு இருந்தாரு, கூப்புட்டப்ப அரை லட்சம் ஹிட்ஸ்சுல இருந்த அவரு இப்ப ஒரு லட்சம் ஹிட்சயே தாண்டி போயிட்டாரு, ஆனா நான் இன்னும் எழுதாம இருக்குறேன், அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் செங்கோவி கூடிய சீக்கிரமே ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடிய ரீச் பண்ணனும்

உண்மையிலேயே சொல்ல போனா என்னோட வாழ்க்கையிலேயே நான் திரும்பி பார்க்கவோ, யோசிக்கவோ, நினைக்கவோ கூடாதுன்னு நினைச்சிகிட்டு இருக்குற வருசம்னா அது போன 2010 ஆம் வருசம்தான், அதனாலேயே திரும்ப பழசெயெல்லாம் யோசிக்க வேண்டி இருக்குமோன்னு நினைச்சுதான் செங்கோவியோட தொடர்பதிவயும், இதுக்கு முன்னாடி பாரத்பாரதி என் டைரி 2010 அப்படிங்கற பேருல எழுத கூப்பிட்ட தொடர்பதிவையும் எழுதாமலேயே விட்டுட்டேன், அதுக்காக நண்பர்கள் ரெண்டு பேருகிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன், மன்னிச்சிருங்க நண்பா

சரி இனி என்னோட கதைக்கு போலாம், நான் பேசிக்கலாவே சோம்பேறிங்க, எந்த ஒரு விசயத்தையும் ஆரம்பிக்கனும் பண்ணனும்னு எப்பவுமோ யோசிக்கறதில்லை, ஆனா தீடீர்னு ஒரு நிமிசத்துல எதையாச்சும் பண்ணிருவேன், அப்படி ஆரம்பிச்சதுதான் என்னோட மெயில் ஐடி, சோசியல் நெட்வொர்க்ஸ் எல்லாமே, அதே மாதிரிதான் இந்த பிளாக்கும், ஒரு நாள் மத்தியாணம் நல்லா சாப்பிட்டு வந்து ஆபிஸ்ல தூங்கிட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு ஞானோதயம் வந்து ஆரம்பிச்ச பிளாக்தான் இது

சரி பிளாக் ஆரம்பிச்சாச்சே என்ன பேரு வைக்கலாம்னு நினைச்சப்ப வீட்டுல என்ன கூப்பிடுற பெயரான சுராங்கற பேருலயே சுராவின் பக்கங்கள்னு வச்சேன், உடனே நாலுவரி எழுதி போஸ்ட் பண்ணிட்டேன், அப்புறம் நைட்டு வரைக்கும் நானே நாணூறு தடவை ஓப்பன் பண்ணி ஓப்பன் பண்ணி பார்த்தேன், யாருமே வரலை, சரின்னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன், அடுத்த நாள் காலையில போய் ஓப்பன் பண்ணி பார்த்தா ஆகாய மனிதன் செம கிண்டலா ஒரு கமெண்டு போட்டு இருந்தார், சிரிப்பு வந்தாலும் சுராங்கற பேருல இருக்குற டெரர்தனம் நல்லாவே தெரிஞ்சது, அப்ப இளைய தளபதி வேற சுறா படம் நடிச்சுகிட்டு இருந்தாரா கேட்கவே வேணாம்

ஆஹா நம்மளையும் சுறாக்கண்டம் போடாம விடமாட்டாங்க போல வேற பேரு வச்சிர வேண்டியதுதான்னு யோசிச்சேன் ஒன்னுமே பிடிபடல, அப்புறம் கஷ்டப்பட்டு யோசிச்சு போஸ்ட் பாக்ஸ்சுன்னு பேரு வச்சேன், அது எனக்கே புடிக்கலை, சரி இனிமே பேரு வச்சா தூயதமிழ்லதான் பேரு வைக்கனும்னு முடிவு பண்ணினேன், ஆனா ஒரு வார்த்தையும் சிக்க மாட்டேங்குது, எதை யோசிச்சாலும் எல்கேஜி பையனாட்டம் கூடவே இங்கிலீசு வார்த்தைகளும் வருது

சரி நாம எதுக்கு பிளாக் ஆரம்பிக்கிறோம் பிரபல பதிவர் ஆகத்தானே? பேசாம அதையே பேரா வைக்கலாமேன்னு நினைச்சு பிரபல பதிவர்னு பேர மாத்தினேன், அப்புறம் உண்மையான பிரபல பதிவர்கள் சண்டைக்கு வந்திருவாங்களோன்னு பயந்து சாயங்காலமே பேர தூக்கிட்டேன், பிரபலபதிவர் பிளாக்குக்கு அரை நாள்ளயே ஆயிசு முடிஞ்சு போயிருச்சு, அப்புறம் ரொம்பவே யோசிச்சு சிதறல்கள்னு பேரு வச்சேன், ஆஹா சூப்பரா இருக்குதுன்னு எனக்கே தோணுச்சு, அந்த பேரு எனக்கு ரொம்பவும் புடிச்சது, சரின்னு பேர வச்சிட்டு எதாவது படிப்போம்னு இண்ட்லில ஒரு பதிவ கிளிக் பண்ணி போனா அங்க ஏற்கனவே சிதறல்கள்னு பேரு வச்சுருந்தாங்க

எனக்கு போதும் போதும்னு ஆகிப்போச்சு, என்னடா கொடுமை இது பிளாக்க ஓசில குடுத்தானுகலோ அப்படியே ஒரு பேரையும் கொடுத்திருந்தாங்கன்னா பரவாயில்லையே அறிவு கெட்ட கூகிள்காரனுக நம்மள அலைய விடுறானுகளேன்னு மண்டை காஞ்சு போச்சு, சரி நாம இதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்னு அதோட விட்டுட்டேன், ஆனால் நைட்டு தூங்குனா கனவெல்லாம் பிளாக்கு பேரா வருது, சுண்டெலி, வயல் எலி, தண்ணீர் பானை, சுடுகாடு, கருமாதி, பேய், பிசாசுன்னு இப்படியே, பயந்து போய் தூக்கத்துல இருந்து முழிச்சிட்டேன். அப்புறம் தூக்கமே வரலை,

சரி தூக்கம் வரவரைக்கும் வெளில போய் நிப்போம்னு வீட்டுக்கு வெளில போய் நின்னு வேடிக்கை பார்த்தேன், அப்ப பார்க்கும் போதுதான் இரவு நேரத்துல வானத்துல ஒரே ஒரு நிலா மட்டும் தனிமையில காய்ந்து போய் நின்னுட்டு இருந்தது, என்னை மாதிரியே அதுவும் சோகத்துல இருக்கறதா தோணுச்சு, இரவு நேர அடர் கருப்புலதான் எத்தனை மர்மம் ஒளிஞ்சு இருக்கு, பகல்ல எத்தனை நேரம் வேணும்னாலும் ஈசியா டைம் பாஸ் பண்ணிரலாம் ஆனா இரவு நேரம் அப்படியில்ல, அந்த இரவு முடியாம நீண்டுகிட்டே போற மாதிரி இருக்கும்

எப்ப விடியல் வரும்னு எப்ப இரவு முடியும்னு யாருக்கு தெரியும்? அது மாதிரிதான் அப்போ இருந்த என்னோட நிலைமையும் இப்படி பல விசயங்கள் எனக்கும் இரவு நேர வானத்துக்கும் பொருந்தி போகற மாதிரி தெரிஞ்சது, அப்பவே முடிவு பண்ணினேன், என்னோட பிளாக் பேரு இரவுவானம்னு, டைப் பண்ணுற யூஆர்எல் கூட தமிழ்லயே இருக்கனும்னு டிரான்ஸ்லிட்டரேசன் பண்ணினேன்

பேசிக்காவே ஆரம்பிச்ச எதையுமே நான் முழுசா கண்டினியூ பண்ணுனதில்லை, பாதியிலயே சோம்பேறித்தனத்தால விட்டுடுவேன், இந்த மாதிரி நிறைய விசயங்களை பாதியிலேயே விட்டுருக்கேன், ஆனா அதிசயமா இந்த பிளாக் இப்பவரைக்கும் இந்த நூறாவது பதிவு எழுதற வரைக்கும் தொடருது, இது எனக்கே ஆச்சரியாத்தான் இருக்குது, ஒருவேளை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கற விடியல் வரப்போகுதோ என்னமோ, சரி இதுதாங்க இந்த இரவுவானத்தோட கதை

பிளாக் ஆரம்பிச்ச பிறகு நடந்தது, கிடைத்த அருமையான நண்பர்கள் இவங்களை பத்தியெல்லாம் நண்பேண்டான்னு ஒரு தொடர்பதிவு எழுத நண்பர் ரஹீம் கஸாலி கூப்பிட்டு இருக்காரு, அதுல எழுதறேன், இதுவரைக்கும் என்னோட பிளாக்க படிச்சவங்க, கமெண்டு போட்டவங்க, ஓட்டு போட்டவங்க, வந்து படிச்சிட்டு போனவங்க எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள், நன்றிகள் நண்பர்களே


இந்த தொடர்பதிவ லேட்டானாலும் லேட்டஸ்டா தொடர நான் கூப்பிடுறது, வம்ப விலைக்கு வாங்குவோம்லன்னு பேர வச்சிட்டு இன்னைக்கு வரைக்கும் ஒரு வம்பையும் விலைக்கு வாங்காம அன்பை மட்டுமே சம்பாதிச்சிட்டு இருக்குற மணிவண்ணன் அவர்களை - ஏன் வம்ப விலைக்கு வாங்குவோம்லன்னு பேரு வச்சீங்கன்னு எழுத அழைக்கிறேன்

பதிவை பிளாக்கில் எழுதாமல் பின்னூட்டங்களில் மட்டுமே எழுதி கொண்டிக்கும் திருப்பூரின் பின்னூட்ட சூறாவளி முறைமாமன் கார்த்திக் அவர்களை – ஏன் முறைமாமன்னு பேரு வச்சீங்கன்னு எழுத அழைக்கிறேன்

நன்றி
அன்புடன்
இரவுவானம்   

36 comments:

  1. உங்க பிளாக்கின் பெயருக்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா?

    சாயங்காலம் வானத்தை பார்த்திருந்தா என்ன செய்திருப்பீர்கள்? அந்தி வானம்னு வச்சிருப்பீங்களோ?

    ReplyDelete
  2. தொடருங்கள் நண்பா வாழ்த்துகள் ...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...பெயர்காரணம் சூப்பர் மாப்ள!

    ReplyDelete
  4. இன்னைக்கு தான் உன் ப்ளாக் பக்கம் வர்றேன்.... நல்ல அருமையான பெயர் விளக்கம். இனி தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. மணிவண்ணன் பிகர் கூட சுத்திட்டு இருக்கறப்போ நீ போன் பண்ணி தொந்தரவு தர்றியாம். இரவு வானத்துக்கு நம்பர் கொடுத்தது தப்பா போச்சுன்னு பயபுள்ள பொலம்புது. இளசுகளை தனிமையில விடுப்பா....

    ReplyDelete
  6. அருமையான பெயர் காரணம் அருமை..

    ReplyDelete
  7. உங்க ப்ளாக் பெயர் காரணம் அருமை.நானும் யோசிக்கறேன் உங்கள மாதிரியே பதிவு போடலாமா என்று ..?

    ReplyDelete
  8. //செங்கோவி கூடிய சீக்கிரமே ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடிய ரீச் பண்ணனும்// அப்புறம் திகார் ஜெயிலுக்குப் போகணுமா..நல்ல ஆசைய்யா உங்களுக்கு.

    ReplyDelete
  9. //மன்னிப்பு கேட்டுக்கிறேன், மன்னிச்சிருங்க நண்பா// முடியவே முடியாது..ஆங்!

    ReplyDelete
  10. //என்னடா கொடுமை இது பிளாக்க ஓசில குடுத்தானுகலோ அப்படியே ஒரு பேரையும் கொடுத்திருந்தாங்கன்னா பரவாயில்லையே// ..ஹா..ஹா....ஓசில ப்ளாக் கொடுத்ததே பெருசு..

    ReplyDelete
  11. //ஆனால் நைட்டு தூக்குனா // அய்யய்யோ..இந்த டீடெய்லு நான் கேட்கலை மக்களே...அவராச் சொல்றாரு...ஸ்பெல் செக் பண்ணும்யா.

    ReplyDelete
  12. //இரவு நேரத்துல வானத்துல ஒரே ஒரு நிலா மட்டும் தனிமையில காய்ந்து போய் நின்னுட்டு இருந்தது, என்னை மாதிரியே அதுவும் சோகத்துல இருக்கறதா தோணுச்சு, இரவு நேர அடர் கருப்புலதான் எத்தனை மர்மம் ஒளிஞ்சு இருக்கு, பகல்ல எத்தனை நேரம் வேணும்னாலும் ஈசியா டைம் பாஸ் பண்ணிரலாம் ஆனா இரவு நேரம் அப்படியில்ல, அந்த இரவு முடியாம நீண்டுகிட்டே போற மாதிரி இருக்கும். எப்ப விடியல் வரும்னு எப்ப இரவு முடியும்னு யாருக்கு தெரியும்? // சூப்பர் நண்பா..சூப்பர்.

    ReplyDelete
  13. //இந்த நூறாவது பதிவு எழுதற வரைக்கும் தொடருது, // ஆஹா..100வது பதிவு எனக்கா......வாழ்த்துகள் நைட்டு.

    ReplyDelete
  14. //எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள், நன்றிகள் நண்பர்களே// உங்கள் பொன்னான சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவிட்டு, நண்பனுக்காக இந்த பதிவு எழுதியதுக்கு நன்றி நைட்டு.

    ReplyDelete
  15. இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுதி அதுல என்னை கோர்த்துவிட்டு என்னைய எழுத வெச்சிரலாம்னு நெனைக்கிறீங்களா.. அது நடக்காது மாப்பு :))

    ReplyDelete
  16. செஞ்சுரிக்கு வாழ்த்துகள் :))

    ReplyDelete
  17. அதென்ன பின்னூட்ட சூறாவளி.. நான் ப்ளாக்ல கமெண்ட்ஸ் போட்டே ரொம்ப நாள் ஆச்சு.. நீங்க வேற இப்படி சொல்றீங்க.. போங்க மாம்ஸ் எனக்கு வெக்க வெக்கமா வருது .. :P

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. @ பாலா

    ஹி ஹி சாயங்காலம் நான் தூங்கறதில்லைங்க பாலா

    ReplyDelete
  20. @ கந்தசாமி.

    ரொம்ப நன்றிங்க கந்தசாமி சார்

    ReplyDelete
  21. @ விக்கியுலகம்

    ரொம்ப நன்றிங்க விக்கி மாம்ஸ்

    ReplyDelete
  22. @ தமிழ்வாசி - Prakash

    வாங்க வாங்க தமிழ்வாசி, நீங்க வேறங்க மணி போன் பண்ணுனா அந்த புள்ள போன எடுக்க மாட்டேங்குதாம், ஏன்னு கேட்டா ஒரு கதை இருக்கு ஒன் லைன் சொல்றேன் கேட்குறியான்னு கேட்டு டார்ச்சர் பண்ணுனாராம், அன்னைக்கு ஓடுன புள்ள இன்னைக்கு வரைக்கும் போன எடுக்கவே இல்லையாம், அதனால பயபுள்ள எனக்கல்ல போன் பண்ணி டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  23. @ !* வேடந்தாங்கல் - கருன் *!

    நன்றிங்க கருன்

    ReplyDelete
  24. @ கோவை நேரம்

    தாராளமா எழுதுங்க நண்பா, நாங்களும் தெரிஞ்சுக்குறோம் உங்க பெயர்காரணத்தை

    ReplyDelete
  25. @ செங்கோவி said...

    //செங்கோவி கூடிய சீக்கிரமே ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடிய ரீச் பண்ணனும்// அப்புறம் திகார் ஜெயிலுக்குப் போகணுமா..நல்ல ஆசைய்யா உங்களுக்கு

    திகாருக்கு போனாலும் ஒரு கனிய வேற கூட கூட்டிட்டு போகணுமே

    ReplyDelete
  26. @ செங்கோவி said...

    //ஆனால் நைட்டு தூக்குனா // அய்யய்யோ..இந்த டீடெய்லு நான் கேட்கலை மக்களே...அவராச் சொல்றாரு...ஸ்பெல் செக் பண்ணும்யா.

    ஒரு புளோவுல எழுதும் போது ஒரு வார்த்தை மிஸ்ஸாகிருச்சு அதுக்காக இப்படியா பப்ளிக்ல போட்டு கொடுக்கறது

    ReplyDelete
  27. @ செங்கோவி said...

    //எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள், நன்றிகள் நண்பர்களே// உங்கள் பொன்னான சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவிட்டு, நண்பனுக்காக இந்த பதிவு எழுதியதுக்கு நன்றி நைட்டு.

    நீங்க இன்னைக்கு வரைக்கும் ஒன்னும் சொல்லாததற்கே நாந்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும் நண்பா

    ReplyDelete
  28. @ # கவிதை வீதி # சௌந்தர்

    டபுள் ரைட்ட்ட்டு...

    ReplyDelete
  29. @ karthikkumar said...

    இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுதி அதுல என்னை கோர்த்துவிட்டு என்னைய எழுத வெச்சிரலாம்னு நெனைக்கிறீங்களா.. அது நடக்காது மாப்பு :))


    இன்னொரு தொடர்பதிவு இருக்குது மச்சி இத எழுதலைன்னா அதுலயும் கோர்த்து விட்டுடுவேன், பீ கேர்புல் - நான் என்னைய சொன்னேன்

    ReplyDelete
  30. @ karthikkumar said...

    செஞ்சுரிக்கு வாழ்த்துகள் :))

    நன்றி மச்சி

    ReplyDelete
  31. @ karthikkumar said...
    //அதென்ன பின்னூட்ட சூறாவளி.. நான் ப்ளாக்ல கமெண்ட்ஸ் போட்டே ரொம்ப நாள் ஆச்சு.. நீங்க வேற இப்படி சொல்றீங்க.. போங்க மாம்ஸ் எனக்கு வெக்க வெக்கமா வருது .. :P//

    அதுக்காக கதவுக்கு பின்னாடி போயா ஒளிஞ்சுக்கறது, தைரியமா வெளில வா மச்சி

    ReplyDelete
  32. @ Rathnavel

    மிகவும் நன்றிங்க ஐயா

    ReplyDelete
  33. சூப்பர் நண்பா! பிரபல பதிவரும் நல்லா டெரரா கெத்தா இருக்கே! :-)அப்புறம் நண்பேன்டாவா?

    ReplyDelete
  34. உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு மாட்டிவிடுறேன் பாருங்க

    ReplyDelete
  35. 'தென்னந்தோப்பு'ல மறக்க முடியாத 'இரவுகளை' மனசுல வச்சி நீங்க 'இரவு வானம்' பேர் செலக்ட் பண்ணீங்கன்னு நினைச்சேன்..!!

    ReplyDelete
  36. அன்பு சகோதரர் சுரா,

    இரவுவானம்- பெயர் காரணம் அருமை!!!

    நூறாவது பதிவு!!!
    வாழ்த்துகள்!!!

    கூடிய சீக்கிரமே
    (1,76,00,000,00,000) ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடி பதிவு ரீச் பண்ணனும்!!!

    எனது (Sai Gokulakrishna. Blogspot & Gmail account)வலைப்பதிவு கடந்த மாதம் யாரோ ஒரு புண்ணியவானால் ஹேக் செய்யப் பட்டுவிட்டதால்..,

    வேலைவாய்ப்புச் செய்திகளை/ தகவல்களை
    http://dmk-jobs.blogspot.com

    இந்த வலைத்தள‌த்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!