Friday, December 2, 2011

போராளி - வெற்றியின் பாதையில்...



சசிக்குமார். சமுத்திரக்கனி கூட்டணி என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்களா? என பார்த்தால் மேக்சிமம் நிறைவேற்றியுள்ளார்கள் என்றுதான் சொல்லலாம்.

கேரளாவிலுள்ள மனநலகாப்பகத்திலிருந்து ஒரு கொட்டும் மழை இரவில் தப்பித்து வருகிறார்கள் சசிகுமாரும், நரேஷும், கையில் சுத்தமாக காசு இல்லாமல் சென்னைக்கு வரும் இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்து பார்ட் டைம்மாக வேலை செய்து, ஃலைபிலும், லவ்விலும் ஒருவழியாக செட்டிலாலும் போது, வேனில் வரும் ஒரு அடியாள் கும்பல் இவர்களை துரத்துகிறது.

யார் அவர்கள்? இவர்களை ஏன் துரத்துகிறார்கள், உண்மையில் இவர்கள் யார்? மனநல காப்பத்தில் சேர்க்கும் அளவுக்கு என்ன நடந்தது? அங்கிருந்து ஏன் தப்பித்தார்கள் என்பதே மீதி கதை.

நாடோடிகள் படத்தில் நட்பின் துரோகத்தை சொன்ன சமுத்திரக்கனி இப்படத்தில் உறவுகளின் துரோகத்தை சொல்ல விழைந்திருக்கிறார்,

படம் இடைவேளை வரை போவதே தெரியவில்லை, அவ்வளவு விறுவிறுப்பு, நன்மைக்கும் தீமை செய், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளள் டைப் ஹீரோ பாத்திரம் சசிக்குமாருக்கு, இயல்பாகவே பொருந்தி போகிற பாத்திரம் என்பதால் அனாயசமாக செய்திருக்கிறார்.


சென்னை நகர காம்பவுண்ட் வாழ்க்கையையும், சாந்திக்கும் காந்திக்கும் நடக்கும் சண்டைகள், பேச்சுலருக்கு வீடு தர மறுப்பது, வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றும் வாலிபர், ஹவுஸ் ஓனர் இவர்களை கொண்டே காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஒட்டு மொத்த படத்திற்கும் வசனங்களே பிரதானம், வசனங்களுக்காகவே இன்னும் ஒருமுறை படம் பார்க்கலாம், கட்டுன பொண்டாட்டியையும், பெத்த பொண்ணையும் சந்தேகப்படுறவந்தான் பேச்சுலர்க்கு பயப்படனும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் போன்ற வசனங்களும், சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை கொண்டே நகைச்சுவை காட்சிகளை எடுத்ததும் ரசிக்க வைக்கின்றன, ஆனாலும் மேக்சிமம் காட்சிகள் நாடோடிகள் டைப் காட்சிகளாகவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

கதாநாயகி சுவாதி கேரக்டருக்கு பெரிதாக ஒன்றும் வேலையில்லை, வழக்கம் போல தமிழ்சினிமா கதாநாயகி வேடம்தான், சுப்ரமணியபுரம் போல இருக்கும் என நினைத்து நடித்திருந்தால் சாரி மேடம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பிளாஸ்பேக்கில் சிறிது நேரமே வருகின்றதென்றாலும் வசுந்தராவுக்கு வெயிட்டான பாத்திரம், ஆனாலும் படத்தின் நீளம் கருதி அவசர அவசரமாக திணிக்கப்பட்டது போல இருப்பதால் அவ்வளவாக ஒட்டவில்லை.

மற்றபடி சூரி, நாடோடிகள் படத்தின் வரும் மன்சூரலிகானை போன்றவர், நரேஷ் காதலிக்கும் பெண், பிச்சைக்காரராக வருபவர்கள் சொன்ன வேலையை சரியாக செய்திருக்கிறார்கள், நரேஷீக்கும் அழுத்தமான கேரக்டர்தான், பைத்தியம் பிடித்தது போல ஆகும் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார், பிண்ணனி இசை, பாடல்கள் ஒன்றும் சொல்வது போல இல்லை.

ஒளிப்பதிவு சேசிங் காட்சிகளில் பிரமாதமாக உள்ளது, இடைவேளை வரை பரபரப்பாக செல்லும் படம், இடைவேளைக்கு பிறகு சற்று தொய்வடைகிறது, இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் படம் பிரமாதமாக வந்திருக்கும்.

சசிக்குமார் படம் என்றாலே நம்பி போகலாம் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை, ஈசன் படம் நன்றாக இருக்கிறது என்று எழுதிய ஒரே ஆள் நான் தான், ஆனாலும் இந்தபடம் நாடோடிகள் போல அதிரிபுதிரி ஹிட்டாக வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்,

போராளி - சசிக்குமாருக்கும், சமுத்திரக்கனிக்கும் மீண்டும் ஒரு வெற்றிப்படம்தான், கண்டிப்பாக பார்க்கலாம்.


இது போராளி படத்திற்கான பிரத்யோக வெப்சைட், படம் பற்றிய கருத்துக்களை பகிர்கிறவர்கள் இந்த வெப்சைட்டிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
  

11 comments:

  1. பதிவர்கள் எழுதியதை வைத்து பார்த்தால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று தெரிகிறது. படம் பாத்துட்டு சொல்றேன் நைட் ஸ்கை.

    ReplyDelete
  2. எல்லா விமர்சனமும் பாஸிடிவ் விமர்சனங்கள் தான். அப்போ படம் பார்த்துரலாம். அப்புறம் விமர்சனம் நல்லா இருக்கு.



    வாசிக்க:
    லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

    ReplyDelete
  3. படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்...!!!

    ReplyDelete
  4. படத்தில் வசனங்கள் எல்லாமே செம....

    யாகாவராயினும் நா காக்க குறள் வரும் இடம் அருமை. அதன் அருகில் தன் செல்போன் நம்பரை எழுதுவது டாப்.

    அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  5. அப்போ படம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க...நடக்கட்டும்!

    ReplyDelete
  6. nice review.... please read my blog www.rishvan.com

    ReplyDelete
  7. என்னோட விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளவும்( நான் காப்பி பேஸ்ட் செய்வதில்லை)நல்ல படம்!

    ReplyDelete
  8. படம் இன்னும் பார்க்கலை பார்த்துட்டு சொல்றேன்...!!!

    ReplyDelete
  9. sasikumar padam nambi parkalam kadaikaha padam yedukum iyakunar nadikar nanri sasi and samuthira kani evlo thirama ulla directer apram yepti mudal padam nerancha manasunu kuppa padam yeditharo therila

    ReplyDelete
  10. @ safi

    சமுத்திரக்கனி சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி நிறைய டிவி சீரியல் எடுத்திட்டு இருந்தாரு, ஒருவேளை அந்த எபக்ட்ல எடுத்த படமோ என்னவோ?

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!