பவர்ஸ்டாரை பற்றி அறிமுகம் தேவையில்லை, தற்பெருமை பேசுவதே தன்னம்பிக்கை என்றிருக்கும் தமிழ்நாட்டு ஒஸ்தி நடிகர்களுக்கு மத்தியில், தமிழ்நாடே தன்னை பற்றி பேசும் போதும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர் நமது பவர்ஸ்டார் டாக்டர் சீனீவாசன் அவர்கள், தமிழ்நாட்டில் பவர்ஸ்டாரை பற்றி தெரியாதவர்கள் பவுடர் பால் குடிக்க கூட லாயக்கில்லாதவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பவர் நமது பவர் ஸ்டார்.
கூச்சம் போனால்தான் நடிகனாக முடியும், நமது சத்துணவு மக்கள் கட்சி ச்சீ ச்சீ சாரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.நாட்டாமை சரத்குமார் அவர்களுக்கு கூச்சம் போவதற்காக நமது தலைவர் கவுண்டமணி அவர்கள் கட்டபொம்மன் படத்தில் எத்தனை பாடுபட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள், அப்படியாப்பட்ட கூச்சமே கூச்சப்படும் அளவிற்கு நடித்துக் காட்டிய திறமைசாலி நமது பவர்ஸ்டார்
நடிக்க வந்த சிறிது காலத்திலேயே திரு. சாம் ஆண்டர்சன் அவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தவர் பவர்ஸ்டார், பவர் ஸ்டாரின் புகழ் தென்னிந்திய சினிமா உலகத்தையும் தாண்டி அகில உலகில் பரவி இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த உலக திரைப்பட விழாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பே சாட்சியாகும்
பவர்ஸ்டாரின் புகழை பொறுக்க முடியாமல், அவர் எதாவது விழாவிற்கு வந்தாலோ நடிகர்கள் சிதறி ஓடுகிறார்கள், கூட நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்காமலும் எஸ்ஸாகிறார்கள், அதற்கு ஒருபடி மேலே போய் விக்ரம் போன்றவர்கள் தங்கள் படத்தில் லத்தீஸ்வரன் என்ற பெயரில் கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம், அவர்கள் இதனை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், மீண்டும் அப்படி எதாவது நடந்தால் விக்ரமின் வீட்டு முன்பு பவர்ஸ்டாரின் படம் காட்டும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.
அப்படியாப்பட்ட நமது பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை படம் ரீலீசாக போகிறது என்பது அவரது ரசிகர்களாகிய நமக்கு பெருமைதரக்கூடிய விசயம், அனேகமாக அண்ணன் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்து ஷங்குவுக்கும், லிங்குவுக்கும் டஃப் காம்படீசனை தருவார் என எதிர்பார்க்கிறோம், இப்பொழுது முன்னோட்டமாக டிரைலர் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது, கண்டுகளியுங்கள் மக்களே.
நல்லவங்க படம் ஓடும், ஆனா கொஞ்ச நாள் ஆகும், அதுவரைக்கும் நாமதான் ஓட்டனும் என்ற சந்தானம் அவர்களின் புகழ்பெற்ற பொன்மொழிக்கு ஏற்ப லத்திகா படம் இருநூற்றி ஐம்பது நாளை கடந்து வெற்றிகரமாக ஓட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் ஆனந்த தொல்லை அப்படியல்ல, இந்த படம் உங்களுக்கு ஒரு அதிரடி தொல்லையாக இருக்கும் எனபதை மட்டும் இங்கு பணிவோடு தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறோம்.
பவர்ஸ்டாரின் பெயர் சூப்பர் ஸ்டாரின் பெயரை போலவே ஒவ்வொரு எழுத்தாக மாறி மாறி வருவதை பாருங்கள் மக்களே, இதிலிருந்தே தெரியவில்லையா தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் யாரென்பதை? ஐம்பது படத்திற்கு மேல் நடித்தும் கெட்டப் மாற்ற யோசிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தான் ஹீரோவாக இருந்தும் தனது இரண்டாவது படத்திலேயே கொடூர வில்லனாக நடிக்கும் தைரியம் யாருக்கு வரும்?
இந்த படத்தில் இருக்கும் பவர்ஸ்டாரின் ஹேர்ஸ்டைல் வேறு எந்த நடிகர்களாலும் செய்ய முடியாத ஒன்று, அதற்கான உடல்மொழியும், தலைமொழியும் பவர்ஸ்டாருக்கு மட்டுமே உண்டு, கமல்,விக்ரம், சூர்யா போன்ற மாறுவேட போட்டி நடிகர்களாலேயே செய்யமுடியாத சாதனை இது, அவ்வளவு ஏன்? பிளாக் அண்ட் வொயிட் பியூட்டி சலூன்காரர்களால் கூட செய்ய முடியாது, (ஏனென்றால் அது விக்)
இறுதியாக ஆனந்த தொல்லை படத்தின் முதல்நாள், முதல் ஷோ டிக்கெட் கிடைக்காதவர்கள் யாரும் தீக்குளிக்கவோ தற்கொலை செய்யவோ முடிவு செய்யாதீர்கள், அதையெல்லாம் படம் பார்த்த பிறகு செய்து கொள்ளுங்கள், மேலும் படம் பார்த்தவர்கள் ஆத்திரத்தில் தியேட்டரின் மீதும் பேருந்துகளின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி பவர்ஸ்டாரின் பெயரை கெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், இன்று பவர்ஸ்டாரை பார்த்து சிரிப்பவர்கள் நாளை சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், அப்படிபட்ட நிலையை ஏற்படுத்தி கேப்டனை மிரள செய்வோம் என உறுதிமொழி ஏற்போம், இது ஏதோ ஒரு பதிவு தேத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அதையும் தாண்டியது, ஏனென்றால் டிரைலரை பார்த்தீர்களானால் பறந்து உதைப்பதில் கேப்டனுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை எங்கள் பவர்ஸ்டார் என்பது உங்களுக்கு நிரூபனமாகும், எதையோ எழுத நினைத்து இன்னும் எதை எதையோ எழுதிக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்து கொல்கிறேன்.
இவன்
பவர்ஸ்டார் ரசிகர் படை
பவர்ஸ்டார் ரசிகர் படை
வட தமிழ்நாடு கிளை
தமிழ்நாடு
புகழ்பெற்ற பொன்மொழிக்கு ஏற்ப லத்திகா படம் இருநூற்றி ஐம்பது நாளை கடந்து வெற்றிகரமாக ஓட்டப்பட்டு கொண்டிருக்கிறது//
ReplyDeleteதவறான தகவல் தந்து பவர் ஸ்டார் புகழை குறைக்க முயற்சி செய்த உங்களை கண்டிக்கிறோம். படம் நானூறாவது நாளை நோக்கி ஓட்ட்டப்படுகிறது :))
பவர் ஸ்டாரைப் போல ரொம்ப பக்காவாகத்தான் இருப்பீக போலிருக்கு. ரொம்ப நல்லா வந்துருக்கு.
ReplyDeleteடிரைலரே இப்படி சூப்பரா இருக்கே, மெயின் பிக்சர் ஒ சூப்பரா இருக்கும் போல, உங்க ரசிகர் மன்றத்துல என்னை செர்க்காதீங்க ஏன்னா நான் படத்தை பார்த்துட்டு அருவாள் எடுக்குற ஆளு ஹி ஹி...!!!
ReplyDeleteஅய்யா புண்ணியவானே...உனக்கு ஏன் இந்த கொலவெறி..இருக்குர தொல்லைங்க பத்தாதுன்னு இந்த பிஞ்ச ச்சே பிஞ்சி மூஞ்ஜிய கொண்டாந்து போட்டு வவுறு வலிக்க வச்சிட்டியேய்யா!
ReplyDeleteபவர் ஸ்டாரை வருங்கால முதல்வர் என்று வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டதைக் கண்டிக்கிறோம்.
ReplyDeleteபவர்ஸ்டார் வெறியர் மன்றம்
சர்வதேச கிளை
பவர் ஸ்டாரை வருங்கால முதல்வர் என்று வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டதைக் கண்டிக்கிறோம்.
ReplyDeleteபவர்ஸ்டார் வெறியர் மன்றம்
சர்வதேச கிளை//
அப்போ வருங்கால அமெரிக்க ஜனாதிபதி யார்?
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ReplyDeleteபொருட்குற்றம் மட்டுமே நிகழ்ந்து உள்ளது, சொற்குற்றம் இல்லை சிரிப்பு போலீஸ் சார் மன்னிக்கவும் :-)
@ ஜோதிஜி திருப்பூர்
ReplyDeleteமிக்க நன்றி சார்
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteமிக்க நன்றி அருவா மனோ அவர்களே, சீக்கிரமே உங்களை ரசிகர் படையில் எதிர்பார்க்கிறேன் :-)
@ விக்கியுலகம்
ReplyDeleteவிக்கி மாம்ஸ்சுக்கு வகுறு வலிக்க செய்த பவர்ஸ்டாரை பாராட்டுகிறோம், நன்றி தலைவா
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//பவர் ஸ்டாரை வருங்கால முதல்வர் என்று வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டதைக் கண்டிக்கிறோம்.
பவர்ஸ்டார் வெறியர் மன்றம்
சர்வதேச கிளை//
பன்னிகுட்டி அவர்கள் மிகப்பெரிய வெறியராக இருப்பது போல தெரிவதால் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொல்கிறேன்
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteபவர் ஸ்டாரை வருங்கால முதல்வர் என்று வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டதைக் கண்டிக்கிறோம்.
பவர்ஸ்டார் வெறியர் மன்றம்
சர்வதேச கிளை//
//அப்போ வருங்கால அமெரிக்க ஜனாதிபதி யார்?//
அதற்கான போட்டியில் ஏற்கனவே சின்ன கேப்டன் குதித்துள்ளார் என்பதை அறிய தருகிறோம், எனவே பவர்ஸ்டார் அவர்கள் செவ்வாய் கிரக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார், அதற்கான செலவுகளை பன்னிகுட்டி அவர்கள் பரிசு போட்டி நடத்தி வழங்க இருக்கிறார் :-)
பவர் ஸ்டாரை வைத்து ப்ளாக், சமூகத்தளங்களில் காமடி கச்சேரி நடப்பது பவர் ஸ்டாருக்கு ஆனந்த தொல்லைக்கு உண்மையிலேயே நல்ல ஓப்பினிங்கை ஏற்ப்படித்திக் கொடுக்கும் சந்தர்ப்பம் உண்டு!!! தன்னை கேனயனாக்கிய பவர் ஸ்டாரின் விளம்பர யுக்தி வெற்றி பெறும் என்றே தோன்றுகின்றது :p
ReplyDelete//நடிக்க வந்த சிறிது காலத்திலேயே திரு. சாம் ஆண்டர்சன் அவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தவர் பவர்ஸ்டார்//
ReplyDeleteபவர்ஸ்டார்: ஓ... அப்போ நான் தான் நம்பர் ஒன்னா...
ஏனுங்க இந்த கொலைவெறி...
ReplyDeleteசும்மா சும்மா பறந்து பறந்து அடிக்கிறார் ..
இவரை காட்டி புள்ளைங்கள அடக்கி வைக்கலாம் போலிருக்கு...
அந்த அளவுக்கு வடிவான முகமுங்கோ ....
என்ன ஒரு நடிப்பு .. அசத்துறாரே ... ஆமா அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இந்த படம் எத்தனை நாளைக்கு ஓட்டப்படும்...
ரொம்ப சிரிச்சேன் .. நன்றி
தலைவர் படத்தை ஒட்டாமல் ஒயமாட்டிங்க போல.. ஜோதியில நானும் ஐக்கியமாகிறேன்.. ;-))
ReplyDelete