Tuesday, March 15, 2011

கமர்சியல் பக்கங்கள் - 15/03/2011


மார்ச் – 15
இன்று உலக ஊனமுற்றோர் தினம், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டாலும் தன்னம்பிக்கையை இழக்காதவர்களின் சொல்ல போனால் சாதாரண மனிதனை விட தன்னம்பிக்கையை அதிகம் கொண்டுள்ளவர்களின் தினம், எனவே அத்தகையவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி கொள்வோம், ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுதிறனாளிகள் என மாற்றியமைத்தால் மட்டும் போதாது, அவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வேண்டும், எனவே கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் மாற்றுதிறனாளி நண்பர்கள் வாழ்வில் புது வசந்தம் மலர கடவுளை வேண்டி கொள்வோம். 




இந்த நாளில், நாம் அனைவரும் ஒர் உறுதி ஏற்போம், கண் பார்வை இழந்தவர்கள், கைகால் இழந்தவர்கள், காது கேட்காதவர்கள், போன்றவர்களை குருடன், செவிடன், நொண்டி என கேலி பேசுபவர்களை பார்த்திருக்கலாம், ஏன் நாம் கூட பேசி இருக்கலாம், இன்றைய தினத்தில் இருந்து தப்பிதவறி கூட மனதால் கூட இனிமேல் யாரையும் கேலியோ கிண்டலோ செய்வதில்லை என உறுதியேற்போம்.
அனைத்து மாற்றுதிறனாளி நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
                   
இன்னும் டையிங் பிரச்சனை திருப்பூர்ல முடியல, எத்தனை பேருக்கு வேலை போயிருக்குன்னு தெரியல, முன்ன எல்லாம் வீட்டுல இருந்து கிளம்பி கம்பெனிக்கு போகனும்னா குறைந்தபட்சம் ஒரு முக்கால் மணி நேரமாவது ஆகும், அவ்வளவு டிராபிக் இருக்கும், இப்பயெல்லாம் மெதுவா போனாலே அரைமணி நேரத்துள்ள போக முடியுது, இதே நிலை நீடிச்சா இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம முழு நேர பிளாக்கரா ஆயிர வேண்டியதுதான் போல இருக்கு, எப்படியும் எலக்சன் முடியாம யாரும் சாயபிரச்சனைய பத்தி நினைக்க மாட்டாங்க போலிருக்கு, பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு :-(

                                     
ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த மக்கள் அந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்திப்போம், அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் சின்னா பின்னமானாலும், தங்களது கடின உழைப்பால் விரைவில் எழுந்து நின்ற நாடு ஜப்பான், இந்த பாதிப்பில் இருந்தும் விரைவில் எழும் என நம்பலாம்,
சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என ஒரு டயலாக் வரும், இப்போ பூகம்ப நாளும் சுனாமி நாளும் தெரிந்தால் சாகும் நாள் தெரிந்துவிடும் போலிருக்கிறது, என்னதான் விஞ்ஜானம், அறிவியல் என தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், இயற்கையை எதிர்த்து மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிரூபனமாகி வருகிறது, எனவே முடிந்தவரை இயற்கையோடு இணைந்திருப்போம்.


மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்
மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?
கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!
மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..
கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடான்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்
மன்மோகன் : என்ன பதிலு?
கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.
மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்து, நானும் ஒத்துக்கிட்டேன்.
மன்மோகன் ; த்த்தூ...!

(இந்த ஜோக் எஸ்.எம்.எஸ்ஸாக வந்தது)


என்னடா வாழ்க்கை இது, காலையில கண் முழிச்சதுல இருந்து ஒன்னும் நல்லதாவே நடக்க மாட்டேங்குது, எது எடுத்தாலும் பிரச்சனை, என்ன பண்ணாலும் பிரச்ச்னை, ஆபிஸ்லயும் பிரச்சனை, வீட்டுலயும் பிரச்சனை என்னதான் பண்றது, வாழ்க்கையே வெறுப்பா இருக்குதுன்னு பீல் பண்றீங்களா? கவலைபடாதீங்க நீங்க என்ன பண்ணனும்னு ஒரு குழந்தை சொல்லி தருது, பாருங்க...


இன்னைக்கு மேட்டர் அவ்வளவுதான்..

நன்றி
அன்புடன்
இரவுவானம்


39 comments:

  1. சாயபிரச்சனை தீர வழியே இல்லையா?

    ReplyDelete
  2. ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேண்டுதல் செயடவோம் ....

    ReplyDelete
  3. கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான். //// Nice.,

    ReplyDelete
  4. திருப்பூர் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு வருகிறது

    ReplyDelete
  5. கமர்சியல்பக்கங்கள் கலக்கல் பக்கங்கள்

    ReplyDelete
  6. //கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்து, நானும் ஒத்துக்கிட்டேன்.
    மன்மோகன் ; த்த்தூ...!//


    இப்பிடியெல்லாம் நடக்குதா மக்கா.....

    ReplyDelete
  7. இதே நிலை நீடிச்சா இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம முழு நேர பிளாக்கரா ஆயிர வேண்டியதுதான் போல இருக்கு, ///
    மாம்ஸ் அந்த கொடுமை எல்லாம் எங்களால தாங்க முடியாது .... இருங்க தயாகிட்ட பேசி சாயபிரசினைக்கு ஒரு வழி பண்றேன் ... அந்த கனி ஜோக் செம.... பாத்து சூதானமா இருங்க....:))

    ReplyDelete
  8. kani மனி ஜோக் எனக்கு போட தைரியம் இல்ல.. உங்கலை பாராட்டறேன்

    ReplyDelete
  9. //ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுதிறனாளிகள் என மாற்றியமைத்தால் மட்டும் போதாது, அவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வேண்டும்//

    மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் நண்பரே! ஒரு மாற்றுத் திறனாளியாக தங்கள் அன்புக்கு நன்றி கூறுகிறேன்!

    ReplyDelete
  10. உலக ஊனமுற்றோர் தினம் - நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //இன்றைய தினத்தில் இருந்து தப்பிதவறி கூட மனதால் கூட இனிமேல் யாரையும் கேலியோ கிண்டலோ செய்வதில்லை என உறுதியேற்போம்.//

    உண்மை நண்பரே! முன்பொரு இடுகையில் மாற்றுத்திறனாளிகளை மறைமுகமாக கேலிசெய்வதுபோன்ற பெயர்களை வைத்து எழுதினேன். அதை சில நல்ல பதிவர்கள் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியதும், அன்றுமுதல் அத்தகைய பெயர்களை உபயோகிப்பதை நிறுத்தினேன்.

    அவர்களது வாழ்க்கை வளம்பெற இறைவன் அருள்வானாக! பகிர்வுக்கு நன்றி! :-)

    ReplyDelete
  12. ஊனமுற்ற சகோதரர்கள், மற்றும் இயற்கை பேரழிவால் பாதிக்க பட்ட அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறேன்.

    கலைஞர் மன்மோகன் காமெடி சூப்பர்.

    வீடியோ அருமை.

    சாயப்பட்டறை கழிவுகள் தண்ணீரில் கலக்கின்றன. அங்கோ அரசியல் கலந்துள்ளது.

    ReplyDelete
  13. மாற்றுத்திறனாளிகளுக்கு எமது நம்பிக்கை பூங்கொத்துக்கள்..

    ReplyDelete
  14. அந்த குழந்தைகள் வீடியோ அசத்தல்.. ரசித்தேன்..

    ReplyDelete
  15. Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

    Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete
  16. ஜப்பான் திரும்பவும் எந்திரிக்கும்.தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆன்மபலமும்,உறுதியும் ஜப்பானிடம் என்றுமே இருந்ததுண்டு.

    ReplyDelete
  17. பதிவு கலக்கல் நைட்..கனிமொழி ஜோக் கொஞ்சம் ஓவராத் தெரியலை?

    ReplyDelete
  18. @வேடந்தாங்கல் - கருன்

    நன்றி கருன் சார், சாயபிரச்ச்னை தீர வழியே இல்லையான்னு எங்களுக்கும் தெரியல...

    ReplyDelete
  19. @MANO நாஞ்சில் மனோ

    சார், அது வெறும் ஜோக்கு சார், எஸ்.எம்.எஸ்சுல வந்தது :-)

    ReplyDelete
  20. @karthikkumar

    தயாகிட்ட பேசறதுக்கு பதிலா முறாகிட்ட பேசினாவாவது ஒரு முடிவு கிடைக்கும்னு நினைக்கிறேன், ஓகே மச்சி சூதானமா இருந்துக்கிறேன் :-)

    ReplyDelete
  21. @சி.பி.செந்தில்குமார்

    என்ன தல நீங்க பார்க்காத பிரச்சனையா :-)))))

    ReplyDelete
  22. @எஸ்.கே

    நன்றி எஸ்.கே சார், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நீங்கள் மேலும் மேலும் சாதிப்பீர்கள் :-)

    ReplyDelete
  23. @ரஹீம் கஸாலி

    என்ன நண்பா எப்பொழுதும் பிரசண்ட் மட்டும்தானா?

    ReplyDelete
  24. @தமிழ் உதயம்

    நன்றி தமிழுதயம் சார்...

    ReplyDelete
  25. @சேட்டைக்காரன்

    நன்றி சேட்டைக்காரன் சார்...

    ReplyDelete
  26. @விமலன்

    உண்மைதான் சார், உங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  27. @செங்கோவி

    அந்த ஜோக் எஸ்.எம்.எஸ்ஸா வந்தது நண்பா, கொஞ்சம் ஓவராதான் இருக்குது,என்ன பண்ணலாம்? தூக்கிடலாமா சொல்லுங்க...

    ReplyDelete
  28. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  29. மாற்றுத்திறானிகளை ஆதரிக்காட்டாலும் பரவாயில்லை,உதாசினப்படுத்தக் கூடாது,

    என்னதான் sms வந்தாலும் பதிவில் எழுத தைரியம் வேணும்.இப்படிலாம் யோசிக்கிறாங்ளா?

    குழந்தைகள் வீடியோ சூப்பர்

    ReplyDelete
  30. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete
  31. மாப்ள அந்தாளுக்கு அந்த டீலிங் புடிசிருந்துதாமாம் அடங்கொன்னியா கலி முத்திடுச்சி டோய் ஹி ஹி!

    கலக்கல் பக்கங்கள் மாப்ள சூப்பரு!

    ReplyDelete
  32. ஊனமுற்ற சகோதரர்கள், மற்றும் New Zealand & JAPAN இயற்கை பேரழிவால் பாதிக்கபட்ட அனைவருக்காகவும் வேண்டி..,
    for more jobs to
    PSC- மாற்றுத் திறனாளிகள்- குரூப் IV சர்வீஸ்- வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
    http://saigokulakrishna.blogspot.com/2011/03/tnpsc-psc-iv.html

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!